Header Ads



''பெத்த புள்ளைய காப்பாத்த தெரியலையே''

இந்தியா - கோவை, போதை மயக்கத்தில் ரோட்டில் தாய் விழுந்து கிடந்த நிலையில், தாய்ப்பாலுக்காக தவித்து குழந்தை அழுதது பார்ப்பவர்கள் மனதை, பதைபதைக்க வைத்தது.

கோவை லங்கா கார்னர் பகுதியில் நேற்று மாலை 3.00 மணியளவில் பெண் ஒருவர் மயங்கிக் கிடந்தார். அவர் அருகில், ஒரு வயதுடைய குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து திகைத்தனர். குழந்தை அழுவதை கண்ட சிலர், மனமிறங்கி அருகில் சென்று பார்த்தபோது, மதுவாடை அடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த பெண்ணை எழுப்ப முயன்றனர். ஆனால், அவர், அளவு கடந்த போதையில் தத்தளித்து கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் தாய்க்கு மயக்கம் தெளியவில்லை. குழந்தை தாயிடம் பால் குடிக்க முயற்சித்தது. ஆனால், குழந்தையால் முடியாமல் போகவே, தொடர்ந்து கதறி அழுதது. அருகிலிருந்த சிலர், குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்தனர். பாலை குடித்த குழந்தை, சிறிது நேரம் அமைதியாக இருந்தது. 

நீண்ட நேரமாகியும், தாய் போதையில் இருந்து மீளவில்லை. கூட்டத்தை கண்டு, குழந்தை மிரண்டு அழத்துவங்கியது. ஒரு மணி நேரத்துக்கு பின், தாய் எழுந்து உட்கார்ந்தார். அவரால் எழுந்து நடக்கவோ, குழந்தையை அரவணைக்கவோ, முடியவில்லை. 

குழந்தையின் நிலையை பார்த்த அந்த வழியே சென்றவர்கள், ""எத்தனையோ பேர், குழந்தை இல்லாமல் கோவில், குளம் என சென்று வருகின்றனர்... பெத்த புள்ளைய காப்பாத்த தெரியலையே'' என, பரிதாபப்பட்டனர்.


2 comments:

  1. மது அருந்துபவனுக்கு 40 கசையடி என்பது இஸ்லாம் கூறும் சட்டம். இது அமுல்படுத்தப்பட்டாலன்றி மதுவை ஒழிக்க முடியாது. மது ஒழிப்புத் தினம், மது எதிர்ப்புத் தினங்களால் எதுவும் நடக்கப்போவதில்லை. இப்பெண்ணோ தன் பிஞ்சுக் குழந்தையைக் கூட பட்டிணியில் வாட வைத்து போதையில் இருந்துள்ள மனித மிருகம்.

    ReplyDelete
  2. Riyadh,

    எய்தவன் இருக்க அம்பை நோவதுதானே உங்கள் இயல்பு.

    ஏழைகள் புரியும் குற்றங்களுக்காக கசையடித் தத்துவங்களை உதிர்ப்பவர்கள் ஆடம்பர ஹோட்டல்களிலும் மாளிகைகளிலும் பொலீஸ்காவலுடன் தண்ணியடிப்பவர்களை இதுவரை என்ன செய்திருக்கின்றீர்கள்?

    அவர்களைப் பாதுகாத்துப்பேணிவரும் இந்த ஏழை - பணக்கார முதலாளித்துவ சமூகக்கட்டமைப்பையும் அந்தக் கட்டமைப்புகள் அப்படியே தொடர்ந்து இருப்பதற்கு முட்டுக்கொடுத்துவரும் ஆன்மீகத்தையும் கேள்வி கேட்பதில்லையே.

    இதுமட்டும் என்ன நியாயம்?

    இவ்வளவு ஏன் பட்டம்பெற்றதைக் கொண்டாட 250 கோடி ரூபா செலவில் டிஸ்னிலாண்டில் வெள்ளைக்காரிகளுடன் குடித்துக் கும்மாளமிட்டாரே நமது இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சவூதி இளவரசருக்கு எத்தனை கசையடிகள் கொடுக்கப்பட்டன?

    இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பாரபட்சமாய் கருத்துச்சொல்லும் உங்களுக்கு எத்தனை கசையடிகள் தருவது?

    ReplyDelete

Powered by Blogger.