மாகாண முறைமை வெள்ளை யானையாக இருந்தால்கூட அதனை கொன்றுவிட முடியாது
13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு வெள்ளை யானையாக இருந்தால் கூட அதனை நாம் கொன்றுவிட முடியாது. அதனை வைத்து நாம் வேலை வாங்கப் பழகிக் கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
13ஆவது சட்டத்திருத்தம் பற்றி முடிவெடுக்கும் பாரிய பொறுப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவே இதுபற்றி இறுதி முடிவெடுக்கும். நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் இதில் கலந்து கொண்டு பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு உதவ வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப்பிரிவு பொறுப்பாசிரியர்களையும் அலரிமாளிகையில் சந்தித்த போது தெரிவித்தார்.

அடடா!
ReplyDeleteநெல்லிக்காயின் கசப்பின் அடியிலே மிஞ்சியிருக்கும் கடைசித்துளி இனிப்பைப்போல உள்ளதே இந்தக்கூற்று...? ஆனால் அதுகூட இதயசுத்தியுடன் உள்ளதா என்பதிலேதான் பிரச்சினையே உள்ளது.
அப்போ 13 ஆவது திருத்தச்சட்டம் 99 வீதம் மாற்றப்பட்டு விட்டது என்பதுதான் இவரது வாக்குமூலம்.
ReplyDelete