கொழும்பு மேயரின் கவனத்திற்கு..! (படங்கள் இணைப்பு)
(ஏ.எல்.)
கொழும்பு, மருதானை தெமட்டகொட வீதி (SCHOOL LANE) பாடசாலை ஒழுங்கையிலுள்ள மாளிகாவத்தைப் பிரதான பாதைக்குச் செல்லும் வழியில் அமைந்திருக்கும் புகையிரத பாதைக்குக் கீழ் அமைந்துள்ள சுரங்கம் போன்ற பாதை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தப் படாமல் அப்படியே விடப்பட்டிருப்பது குறித்து வாகனச் சாரதிகளும் இவ்வழியாகப் போக்குவரத்துச் செய்பவர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
இப் பாதை ஆயிரம் வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட ஒரு சுரங்கப் பாதை போன்று காட்சியளிக்கின்றது.
இப்பாதையில் நீர் வடிந்தோட முடியாமல் அசுத்தமான நிலையில் அப்படியே தேங்கிக் கிடப்பதாகவும், பாதை இருள் சூழ்ந்திருப்பதாகவும். பகலில் கூட இப்பாதையால் செல்லும் வாகனங்கள் வெளிச்சம் காட்டியே செல்லவேண்டியிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகரம் நவீன முறையில் முன்னேற்றம் அடைந்து வரும் இக்கால கட்டத்தில் இங்கு இப்படியும் ஒரு அசிங்கமான பாதையா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. இப்பாதை நவீனப்படுத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்படுகின்றது.


அடுத்த தேர்தல் காலம் வரட்டும் அப்பொழுது இதனை புனருத்தாபனம் செய்து தருவதாக வாகக்குருதி அளிக்கிறேன்.
ReplyDeleteஇப்படிக்கு
கொழும்பு மாயர்