Header Ads



பள்ளிவாசல் முன் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் - ஊர்மக்கள் தடுத்துநிறுத்தினர்

(அம்மார்)

குருநாகல் தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்தினுடைய மின் கட்டண அதிகரிப்பு எதிராக மேற் கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்தை ஊர்வாசிகள் மற்றும் பள்ளி ஜமாஅத்தினர் சேர்ந்து தடுத்து நிறுத்தியதால் இன்று மாலையில்  தெலியாகொன்ன பிரதேசத்தில் ஒரு பதற்ற நிலை தோன்றியது.

மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று மாலையில் தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு  முன்னால் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக ஆர்பாட்டம் மேற்கொள்ளத் தயராக இருந்த போது  ஊர்வாசிகள் திரண்டு வந்து ஊர்வாசிகள் எவரும் பங்குபற்றாத நிலையில் வெளிப்பகுதிகளிலிருந்து வந்து பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்  செய்யத் தேவை இல்லை எனவும் இதற்கு தாங்கள் உடந்தை இல்லை எனவும் கோரி  தடுத்து நிறுத்திய இந்தச் சந்தர்ப்பத்திலேயே இரு  தரப்பினருக்குமிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அதனைத் தொடர்ந்து குருநாகல் பொலிஸார் உடனடியாக வருகை அங்கு தந்து தற்போது நிலமையைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.