Header Ads



நாட்டின் எப்பகுதியும் சிங்களவர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ தனித்துவமாக இருக்கக்கூடாது

'எல்லா சமூகத்தினரும் வாழ்வதற்கு வடக்கு மாகாணம் தாமதமின்றித் திறந்து விடப்பட வேண்டும். அனைத்து மக்களையும் கொண்டதாக வடக்கு மாகாணத்தை உருவாக்க வேண்டும் என்று  பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போருக்குப் பிந்திய சூழலில் மக்கள் மத்தியில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு இது மிகவும் முக்கியமானது.  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலும், காணிகளை வாங்கும் உரிமையை சிங்களவர்கள் இழந்து விடக்கூடாது. 

வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் சிங்கள மற்றும் முஸ்லிம் அரச பணியாளர்களும் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். 

இந்த விடயத்தை ஜனாதிபதிக்கு அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளேன். இந்தநிலைமை குறித்து  விளக்கியுள்ளேன்.  போருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்கம் குறித்துப் பரப்புரை செய்பவர்கள், மக்களிடையே பிணைப்பை உருவாக்க வேண்டும். 

வடக்கு மாகாணம் ஏனைய இனங்களுக்கு இன்னமும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.  இந்தநிலை நீடிக்கும் வரை பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் களமாகவே அது இருக்கும்.  வடக்கு கிழக்கில் இருந்து பல தமிழ்பேசும் மக்கள் கொழும்புக்கும், சுற்றுப் புறங்களுக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் நகர்ந்துள்ளனர். 

இருந்தாலும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்த பின்னர், அவர்களை சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லும்படி கேட்கவில்லை.  அதுபோலவே, ஏனையவர்களும் நாட்டின் எந்தப் பகுதியிலும் வாழக் கூடியதாக இருக்க வேண்டும். 

அண்மையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தமிழ் பொறியாளர் ஒருவரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கொழும்பின் சுற்றுப்புறத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்குப் பொறுப்பாக உள்ள அவரது பிரதிப் பொறியாளரும், தமிழ்பேசும் அதிகாரி தான்.  அவர்கள் இங்கு எந்த தொந்தளவும் இன்றி பணியாற்ற முடிகின்ற போது, ஏனைய இனத்தவர்களுக்கு எதற்காக வடக்கில் நியமனங்களை வழங்கக் கூடாது. 

விடுதலைப் புலிகள் சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் வடக்கு மாகாணத்தை விட்டு விரட்டினர்.  விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியான சவால்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்ற போதிலும், வடக்கு மாகாணத்தை சிறப்பு நிலையில் வைத்திருப்பது போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆபத்தானது. 

வடக்கு மாகாணம் தமிழர்களுக்குத் தனித்துவமானதாகேவோ, அதுபோல நாட்டின் எந்தப் பகுதியும் சிங்களவர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ தனித்துவமானதாகவோ இருக்கக் கூடாது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. போடாங்கோ........

    ReplyDelete
  2. Hi Friends,

    வெளிப்படையாக பார்க்கும்போது ஏதோ நியாயமான பேச்சு போலத்தோற்றமளித்தாலும் அதன் உள்ளே மறைந்திருக்கும் நோக்கம் கபடம் மிக்கது.

    சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லீம் மக்களும் தலைமைத்துவமும் மேலும் கவனமாகச் செயற்பட வேண்டிய தருணம் வந்துவிட்டதைத்தான் இது காட்டுகின்றது.

    "நரிகள் அகிம்சை தத்துவம் பேச ஆரம்பித்தால், நமது கோழிக்குஞ்சுகளை மேலும் பத்திரப்படுத்திக்கொள்வதே உத்தமம்"

    ReplyDelete
  3. ஜெஸ்லி,

    நான் இந்த மனிசனோட பேச்சை கணக்கெடுப்பதே இல்லை,, அவ்வளவும் அயோக்கியத்தனம். இதில முக்கியமான விடயம் என்னவென்றால் நாம் இனிமேலும் இதுபோன்ற தவறுகளை பண்ணக்கூடாது இவர்களை நிராகரிப்பதில் உறுதியாக இருக்கவேண்டும், தெரியாத பாமரர்களுக்கும் செய்தியை எடுத்துச்சொல்லவேண்டிய கடமை நமது மட்டுமல்ல இன்றைய கட்டாய தேவை

    ReplyDelete

Powered by Blogger.