Header Ads



பாலியல் வேட்டையாடும் மத்தியகிழக்கு நாட்டு தூதுவர்கள்

(Arab News + ரமீஸ் அப்துல் கையூம்)

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தூதுவர்கள் சிலர் தங்களது நாட்டுபெண்களுடன் தகாத முறையில் நடந்துள்ளதுடன், பின்னர் அவர்களை ஆதரவற்ற நிலையில் விட்டுள்ளனர்.இதனால் அப்பெண்கள் வெறுப்புடன் கூடிய கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அப்பெண்களில் அநேகமானவர்கள் வக்கீல்களை நாடி இவ்விடயமாக நுண்ணாய்வு செய்யும்படி வற்புறுத்தியுள்ளனர். ஏனெனில் அவர்கள் மீது கூறப்பட்ட இந்த அவதூறானது, வோல்டன் பெல்லோ இனால் வெளியிடப்பட்ட அறிக்கையை  விட மிகைப்படுத்தப்பட்டதாகும்.

பெல்லோ குறிப்பிட்ட சிரியா, ஜோர்தான், குவைத் ஆகிய 3 நாட்டச்சேர்ந்த தூதுவர்கள் இவ்வகையான பெண்களிடம் மன்றாடுகிறார்கள்.அவர்களை தவறாக  பாவித்த குற்றத்திற்காக கைமாறாக அவர்களுக்கு வீடு திரும்பும் விமானச்செலவினை பொறுப்பேற்பதாகவும்  அல்லது தொடர்ந்து விபச்சாரத்திற்கு பயன்படுத்துவதாகவும்  தெரிவித்துள்ளனர்.

சிரியாவின் டமஸ்கஸிலுள்ள கிம், ஜோர்டானின் அம்மானினுள்ள மேரியே அந்தோனியும் குவைத்தின் வெளிநாட்டு பணியாட்களின் காரியாலயத்தில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும்  ப்லாஸ் மார்குவஸ் உம் இந்த  கொடுரச்செயலில் ஈடுபட்டதை பெல்லோவினால் இனங்காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெல்லோ வெளியிட்ட அறிக்கையையடுத்து, வெளிநாட்டு செயலாளர் அல்பேர்ட் டெல் ரொசாரியோ இந்நாடுகளின் தூதுவர்களை வரவழைத்து இக்குற்றம் சம்பந்தமாக கலந்துரையாடினார் 

சவூதி அரேபியா, கத்தார், ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம்,பஹ்ரைன், எகிப்து, லிபியா, லெபனான் ஆகிய நாட்டு தூதுவர்களையும் அழைத்து கலந்தாலோசித்ததாக  டெல் ரொசாரியோ கடந்த வியாழன் தெரிவித்தார்.

இந்த 11 நாடுகளின் தூதுவர்களையும் உடனடியாக நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதுடன் இந்த பாலியல் குற்றம் சம்பந்தமாக பேசப்படும் என DFA இன் பேச்சாளர் ராஉல் ஹெர்னாண்டஸ் மனிலா மீடியாவிற்கு தெரிவித்தார்.

"உண்மை நிலையை அறிய  நாம் எமது தூதுவர்களை பல முன்னெடுப்பு நிகழ்வுகளில் பங்குபற்றவைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை கூட்டாக  உடற்சாகபப்டுத்துதல், அவர்களை சாட்சி கூற முன்வருமாறு அழைப்பதுடன் அவர்களது சாட்சியங்களையும் புகார்களையும் உள்வாங்கவேண்டும் " என அவர் தெரிவித்தார்.

றியாத் தூதுவர் இஸ்ஸதீன் தாகோ அவர்களை அரபு செய்தி தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் கிட்டவில்லை.

"தங்களது பாதுகாப்பு உறுதிசெய்யப்ப்படுமானால் சவூதியிலுள்ள    பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்கள் தங்களது பிரதிநிதிகளினாலேயே துஷ்பிரயோகம் செய்யப்படுவதை எடுத்துச்சொல்லவும் தமது புகார்களை தெரிவிக்கவும்  முன்வரவுள்ளனர்" என மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் புலம்பெயர்ந்தோர் ஊழியர்களின் ஒருங்கினைப்பாளர் ஜோன் லியோனார்ட் மொண்டடிரோனா தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் அதிகார சபைகள் எங்களுக்கு தீங்கேதும் ஏற்படாவண்ணம் பாதுகாப்பை நிச்சயப்படுத்தி, மீண்டும் நாட்டுக்குள் பாதுகாப்புடன் திரும்புவதை உறுதி செய்வார்களாயின் நாங்கள்  சத்தியகடதாசி மூலம் உறுதிப்படுத்தப்பட்ட புகார் ஒன்றை வழங்கவுள்ளோம் என  OFW (OVERSEAS FILLIPINO WORKERS)  சேர்ந்த பாதிக்கப்பட்டோரில் ஒருவரும் மற்றும் இரு நபர்களும்  தெரிவித்ததாக மொண்டடிரோனா குறிப்பிட்டார்.

குற்றங்சாட்டப்பட்டு விசாரிக்கப்படாமலிருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு முற்று முழுதான தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும், ஏனென்றால் அம்மக்களுக்கு உதவியும் பாதுகாப்பும் செய்யவேண்டிய இவர்கள் மாற்றமாக நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர் என ஜோன் இம்ப்ரோகோ தெரிவித்தார்.

"ராஜதந்திரிகள் இவ்வாறான மிகக்கடுமையான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவது மிகுந்த கவலையளிக்கிறது" என முகப்பதிவு புத்தகத்திழுள்ள பில் அம் என்ற பெயருடைய ஒருவர் குறிப்பிட்டிருந்தார் 

கடந்த நவம்பர் மாதம் வீட்டு வேலையாளிடம் தகாத முறையில் நடந்த பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான குவைத் தூதுவர் அண்மையில் அழைக்கப்பட்டு அவரிற்கு எதிரான குற்றங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.