கிழக்கு மக்களின் அபிலாஷைகளை மதிக்கும் ஆளுநரே தேவை
கிழக்கு மாகாண சபையின் ஆளுநருக்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள முறுகல்நிலை காரணமாக கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் ஸ்தம் பிதமடையும் நிலையைஎதிர்நோக்கியுள்ளன.
கிழக்கு மாகாணசபை நிர்வாகச் செயற்பாடுகளில் ஆளுநர் மேற்கொள்ளும் அநாவசியமான தலையீடுகள் காரணமாக மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளது நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி கடந்த செவ்வாயன்று நடைபெற்ற மாகாண சபை அமர்வினை ஆளும்கட்சி அமைச்சர்கள், மற்றும் உறுப்பினர்கள் பகிஷ்கரித்துள்ளனர்.
நாட்டில் வேறு எந்த மாகாண சபைகளிலுமில்லாத அளவில் ஆளுநர் ஒவ்வொரு விடயங்களிலும் தலையிட்டு வருவதாகவும் இதனால் மக்களது அபிலாசைகளைத் தம்மால் நிறைவேற்ற முடியாதி ருப்பதாகவும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் இருக்கும்போது அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களப் பணிப்பாளர்களை அழைத்து மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதுதொடர்பாக அமைச்சர்களுக்கு எதுவும் தெரிவிக்கப் படுவதில்லை. இதுதவிர மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளது தொகுதிகளுக்குச் செல்லும்போது அவர்களுடன் எவ்விதத் தொடர்புகளுமில்லாது ஆளுநர் போய்வருவதாகவும் ஆளும்கட்சி உறுப்பி னர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மாகாண சபையில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மற்றும் தீர்மானங்கள்கூட பல மாதங்களாக அமுல்படுத்தப்படாதிருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆளும்கட்சி உறுப்பினர்கள் அட்டவணைப்படுத்தியுள்ள ஆளுநர் மீதான குற்றச்சாட்டுக்களைப் பார்க்கும்போது கிழக்கு மாகாண சபையில் இரு வகையிலான நிர்வாகம் நடக்கின்றதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கின்றது.
யுத்த காலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட தற்போதைய ஆளுநர் இன்றும் யுத்தகால மனோ நிலையில் செயற்படுகின்றாறா என்ற கேள்வியை எழுப்பத் தோன்றுகின்றது. இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமமாக வாழ்கின்ற ஒரு மாகாணமாக கிழக்கு மாகாணம் திகழ்கின்றது. முழுநாட்டுக்கும் முன்மாதிரி காட்ட வேண்டிய இந்த மாகாண சபையில் இன்று பனிப்போர் ஒன்றே நடந்து கொண்டிருக்கின்றது.
நாட்டின் ஏனைய மாகாண சபைகளில் ஆளுநர்கள் முதலமைச்சருடன் இணைந்து சீரான நிர்வாகத்தை முன்னெடுக்கிறார்கள். கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட நியதிச்சபை சட்டம் ஒன்று ஐந்து மாதங்களாகியும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படாது கிடப்பில் கிடப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் கழிந்தும் மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் தாமிருப்பதாக ஆளும்கட்சி உறுப்பினர் கள் தெரிவித்துள்ளனர். கடந்தவாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற மகாநாடொன்றில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் அரசின் மூத்த, முக்கிய அமைச்சர்களிடம் தாம் எதிர்நோக்கியுள்ள அவலநிலை பற்றி விளக்கியுள்ளனர்.
உருவாகியுள்ள சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பாக்குவெட்டியில் சிக்கிய பாக்கு போன்ற நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுமளவுக்கு மாகாணத்தின் நிர்வாக நடவடிக்கைகள் மோசமாகியுள்ளன. மக்கள் அபிலாஷைகளுக்கு மதிப்பளிப்பதா, ஆளுநரிற்கு தன் இஷ்டப்படி பணிகளைத் தொடர அனுமதிப்பதா என்பது குறித்து ஆட்சியாளர்கள் உடன் தீர்மானம் எடுத்து கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளைச் சீராக்க வேண்டும்.
கிழக்கு மாகாண மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்கிய மக்கள் ஆணையை அரசு மதித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களது அபிலாஷைப்படி செயற்பட இடமளிப்பது அவசியமாகும். வடக்கும், கிழக்கும் நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போன்று சிவில் ஆளுநர்களை நியமிப்பதன் மூலம் இப்பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வுகாண முடியும் என்பதனைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

கிழக்கு மாகாண மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எங்கே ஆணை வழங்கினார்கள்.?
ReplyDeleteதேர்தல் முடிவுகளில் 4000 கள்ள வாக்குகள் ஹறாமாகச் சேர்க்கப்பட்டேதான் முன்னாலிருந்த அமீரலி கூட இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டார்.
மாத்திரமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ஒரேயொரு ஆசனத்தையும் ஈவிரக்கமில்லாமல் திருட்டுத்தனமாகப் பிடுங்கிக் கொண்டார்கள்.
இப்படியெல்லாம் முறைகேடாக அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை ஆட்சியில் எவ்வாறு முறையான நல்லாட்சி அமையும்?
'நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்' எப்போது அதன் ஹலாலான வாக்குகளால் அச்சபைக்குள் உள்வாங்கப்படுமோ அன்றுதான் அங்கு நிம்தியான ஆட்சி மலரும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Hi Friends,
ReplyDeleteமகாபாரதத்தில், தனது அரசகுமார மாணவனாகிய அர்ஜுனனை மிஞ்சிய வீரனாக ஏகலைவன் இருப்பதைக் கண்ணுற்றுத் துணுக்குற்றார் துரோணர்.
"உன்னுடைய கட்டை விரலை எனக்கு குருதட்சணையாகத் தந்துவிடு!" என்று அவர் கேட்டபோது சிறிதும் தயங்காமல், தான் வில்வித்தை புரிவதற்கு அவசியமான விரலை உடனடியாகவே துண்டித்துக் கொடுத்தான் அப்பாவி ஏகலைவன்.
நவமணியின் கட்டுரையாளர்கள் வேண்டுமானால் துரோணர்கள் போன்று சாமர்த்தியசாலிகளாக இருக்கலாம். ஆனால் கிழக்கு மாகாண ஆளுனர்கள் ஒன்றும் ஏகலைவன்கள் போல அப்பாவிகளல்லவே.