விரிவுரையாளருக்கு கத்திக்குத்து - திறந்த பல்கலைக்கழகம் பொலிஸ் கட்டுப்பாட்டில்
நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. திறந்த பல்கலைகழகத்தின் சட்டபீடத்தைச்சேர்ந்த பெண் விரிவுரையாளர் ஒருவரை மாணவர் ஒருவர் தாக்கியதை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த விரிவுரையாளர் கையில் வெட்டுக்காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறையொன்றில் வைத்தே குறித்த விரிவுரையாளரை மாணவன் கத்தியால் வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதற்றத்தையடுத்து திறந்த பல்கலைகழகத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. tm
கேட்பதற்கு இனிமையான செய்தியாக இருக்கின்றது நமது நாடு சரித்திரம் காணாத சரிவை நோக்கி செல்கின்றது. எப்போது மக்கள் பொங்கி எழப்போகின்றார்களோ தெரியாது..
ReplyDelete