Header Ads



ஜம்மியத்துல் உலமா சபையும், முஸ்லிம் காங்கிரஸும்

(SAFRAN BIN SALEEM)

அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை அரசியலுக்குள் இழுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எத்தனிப்பதாக அவர் வழங்கிய செவ்வி மூலமாக விளங்குகின்றது. நாட்டில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ள 13 ஆம் சீர்திருத்தத்தில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை தலையிட வேண்டும் என கோறுவது வேடிக்கையாகவே உள்ளது. அவ்வாறு அவர்கள் தலையிட வேண்டுமெனின், நீங்களும் உம்மை போன்றோரும் நாங்கள் தான் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என கூறிக் கொண்டு எமது வாக்குகளை பெற்றுக் கொண்டு ஏன் பாராளுமன்றம் செல்ல வேண்டும்?

ஹலால் விடயத்தில் மும்முரமாக செயற்பட்ட ஜம்மியதுல் உலமா 13 ஆம் சீர்திருத்தத்தில் மௌனம் காத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கூறுகிறார். ஆம் அது உண்மை தான். ஹலால் விடயம் என்பது அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால் பொறுப்பேற்று செயற்படுத்தப்பட்ட ஒரு விடயம். அதனால் ஹலால் சம்பந்தமான பிரச்சினை இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போது அவர்கள் அப்பிரச்சினையை  தீர்க்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஆனால் 13 ஆம் சீர்திருத்தத்த பிரச்சினாயில் முடிவு காண வேண்டியது அரசியல் வாதிகளான உங்களை போன்றவர்களது பொறுப்பாக காணப்படுகிறது.

13 ஆம் சீர்திருத்தத்தில் ஏற்படுத்தவிருக்கும் மாற்றத்தில் சிறுபான்மை சமுகம் பாதிக்கும் என்பதால் அது குறித்து குரல் கொடுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை நன்றியுணர்வுடன் நினைவு கூறுகின்றேன். அதே வேளை இதுபோன்று  சிறுபான்மை சமுகத்தை பாதிக்கும் திவிநெகும திட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதையும் ஞாபகப்படுத்துவது பொறுத்தமானது என நினைக்கிறேன். இது இவ்வாறிருக்க தற்போது 13 ஆம் சீர்திருத்த விடயத்தில் ஜம்மியதுல் உலமாவையும் இணைக்க விரும்புவது எந்த அளவு ஏற்றுக் கொள்ள முடியும்.

2000 ஆம் ஆண்டு வரை எம்மை பிரதிநிதித்துவப் படுத்திய தலைவர்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவையோ அல்லது இதர சன்மார்க்க அமைப்புகளையோ அரசியலுக்குள் இழுக்க வில்லை. மாறாக அவர்களிடம் தூர நோக்கு, அரசியல் சாணக்கியம் என்பன காணப்பட்டன. இதனால் அவர்கள் முஸ்லிம் சமுகத்துக்கு அதன் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் வெற்றியும் கண்டார்கள்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவும் எமது அரசியல்வாதிகளை மார்ரக்க விழுமியங்களுக்குட்பட்டவாறு நெறிப்படுத்துவதோடு எமது சமுகம் முகங் கொடுத்துள்ள சவால்களை வொன்றெடுக்க அவர்களை இணைத்துக்கொண்டு முயற்சிப்பது காலத்தின் தேவையாகும்.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அவர்களே உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்

கண்டி மாவட்ட முஸ்லிம் மக்களது வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அவர்களே ! கண்டி நகர மக்களது சுமார் 150 வருடகால உரிமை ஒன்று(மாடறுக்கும் உரிமை) பறிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் இழக்கப்பட்ட உமக்கு வாக்களித்த அம்மக்களது உரிமையை பெற்றுக்கொடுக்க உம்மாலான முயற்சிகளை எடுப்பீர்களா?.

ஜப்னா முஸ்லிமில் வெளியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் வழங்கிய செவ்வி இதோ      http://www.jaffnamuslim.com/2013/06/blog-post_7487.html

16 comments:

  1. Hakeem is alone fighting for this 13th matter. So somebody should support him. This might be a big issue for muslims in future.so better ACJU speak abt this.Insha Allah All We have dua for this issue.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஹக்கீம் அவர்களே,

    பாடசாலையில் "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று சொல்லித்தந்தார்கள்.

    ஆனால் நீங்களோ நடுக்கடலில் இறங்கி கப்பலை தள்ள உலமா சபையை கூப்பிடுகிறீர்களே ?

    இதில் வேடிக்கை என்னவென்றால் ..........

    கப்பல் சொந்தக்காரர்கள் - வாக்குப்போட்ட முஸ்லிம்கள்
    கப்பலில் பயணிப்பவர் - முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்
    கப்பலின் மாலுமி - நீங்கள் என நீங்களே சொல்கிறீர்கள்

    இதில் உலமா சபைக்கு என்ன பங்கு இருக்கு காக்கா ?

    அதுதான் எனக்கு புரியல. ஒருவேளை புரிந்தால் நானும் ஒரு கட்சிக்கு தலைவர் ஆகலாமோ ?

    காக்கா நீங்கள் இப்படி அறிக்கை விட யோசிப்பதை, சமூகத்துக்காக பாதியாவது யோசித்திருந்தால் எங்கள் பிரச்சிணைகள் விடிஞ்சிருக்கும் இல்லாவிட்டால் கிழிஞ்சிருக்கும் .......................?

    ReplyDelete
  3. ஜமிய்யதுல் உலமா ஏற்கனவே தனது சொந்தப்பிரச்சினையான ஹாலால் விடயத்தில் மிகவும் சங்கடமானதொரு நிலையிலே சிக்கி ஏதோ இறைவன் உதவியால் ஒரு வழியாக தாம் மனிதர்களை நேர்வழிப்படுத்தும் தலைமைப்பொறுப்பில் இருப்பதை நிருபித்துவிட்டார்கள், ஆனால் தலைவர் ஹக்கீமுடைய கூற்று என்னவோ பலரீதியாக சிந்திக்கும் அளவிற்கு உள்ளது. ஜமிய்யதுல் உலமா சபையை மற்றவர்களின் வம்புக்கும் வசைக்கும் இழுக்கவேண்டுமென்று இவர் சொந்தமாக நினைக்கின்றாரா அல்லது வேறு யாருடைய கயிற்றையாவது விழுங்கிவிட்டாரா? அல்லது இவருடைய புத்தி கெட்டுப்போய் விட்டதா 13 ஆவது சட்டத்திற்கும் ஜமிய்யதுல் உலமாவுக்கு சம்மந்தமே இல்லையே ஏன் இவர் அது சம்மந்தமாக ஜ்.உ வை பேசச்சொல்கின்றார். இது நகைச்சுவை என்பதா? கவலைக்குரியது என்பதா? இல்லை பைத்தியகாரத்தனம் என்பதா?

    ReplyDelete
  4. ஜமிய்யதுல் உலமாவை இந்த சாக்கடை அரசியலுக்கு வலிந்து இழுப்பது தவறான விடயம் குறிப்பாக ஹகீமைப்போன்ற மண்குதிரை நம்பி இறங்கினால் ஜமிய்யதுல் உலமாவை அழித்து ஒழிக்க நினைக்கும் பொது பல சேனாவுக்கு மேலும் ஒரு துரும்பு கிடைத்த மாதிரி.
    ஹகீம் அவர்களே முடிந்தால் இறுதிவரை பல்டி அடிக்காமல் உங்களின் 13 ம் திருத்தம் தொடர்பான நிலைப்பாட்டில் இருந்து உங்கள் சுயரூபத்தை காட்டுங்கள் பாப்போம்.

    ReplyDelete
  5. yes Ahamed I agree with you.
    on the Grees Boothaya, BBS/Halal issues SLMC and other muslim Mps where blinking that's why ACJU came action even we had more than 20 MPs in parliament and in Ruling party.

    now the 13 th amendment should be handled in parliament. then all this MPs liking the bigs's are they sleeping or if they talked about this they can lose the benefits thats why pulling the ACJU.

    let ACJU it self. no need to talk about the 13th amendment.

    ReplyDelete
  6. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சியாகும் அதனை நாம் ஆதரித்து மேலும் மேலும் வலுவாக்கி , வளமாக்கி எமது எதிர் கால முஸ்லிம் சந்ததியினருக்கும் , எனைய்யவர்களுக்கும் உரிமைகளை வென்றெடுப்பதர்க்காக எமது எதிகால சந்ததியினரிடம் ஒப்படைப்பதில்தான்
    எமக்கு வெற்றி இருக்குகிறது .( இன்ஷா அல்லாஹ் )
    முஸ்லிம் கட்சிகலே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து ஒரே தலைமையில் எமது உம்மத்துக்கு உங்களின் அமானிதத்தை நிறைவேற்றுங்கள்
    .

    ReplyDelete
  7. அகில இலங்கை ஜம்மிஅதுல் உலமா உருவாக்கப்பட்டது எதற்கு என்றால் எமது இலங்கை முஸ்லிம்களை எம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வால் இறக்கி அருளப்பட்ட வேததின்பாலும் நபி சல்லல்லாஹு அலஹிவசல்லம் அவர்களின் வாளிகாடல்களின் பிரகாரமும் நேரிப்படுத்துவதர்க்காகவும் , முஸ்லிம்களின் மார்க்கம் சம்மந்தமான தேவைகளை அந்த அந்த சந்தர்ப்பங்களில் செய்வதர்க்காகவுமேயாகும் .

    ReplyDelete
  8. NEENGAL RAUF HAKEEMIN KAYYALOOOOO.....

    ReplyDelete
  9. கோட்டாவுக்கு பொதுபல சேனா இருக்கும் போது
    முஸ்லிம் காங்கிரசுக்கும் ஹக்கீமுக்கும் ஜம் உலமா இருக்கிறதுல என்ன தப்பூன்னு கேக்கிறன்
    மொஹிதீன்

    ReplyDelete
  10. I do not know Mr RH where he was when accor halal problem he did not give any public statement regarding halal as they leaders of the Muslim community,if they give little support to acju openly today we could had to have halal, but all politicians are try to save thire seat and stomach,

    ReplyDelete
  11. ஹக்கீம் அவர்களே! உங்களின் பெய் கதைகளையும் கள்ள நாடகங்களையும் கேட்டு கேட்டு மக்களுக்கு பழகிவிட்டது////////உங்கள் அரசியல் நாடகதுக்கு ஜம்மியதுல் உலமாவையும் இழுக்கபார்கிரீர்களா

    ReplyDelete
  12. இப்னு மசூத் அவர்களே...!
    இதுவரை நாம் வழங்கிய வாக்குகளுக்கு இந்த முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்துக்கு செய்த பணி என்ன? பெற்றுத் தந்த உரிமைகள் என்ன? இலங்கை அரசியலில் முஸ்லிம்களை மந்தைகளாக ஆக்கிய பெருமை அவர்களுக்கு சாரும், இதற்காகவா நீர் இன்னும் அவர்களை ஆதரிக்க சொல்கிறீர், உம்முடைய கருத்தும் ஹகீமின் கருத்தும் ஒன்றாய் இருக்கிறதே...
    வெட்கப்படவேண்டிய காலகட்டத்தில் குள்ள நரிகூட்டத்துக்கு குடை பிடிக்க நினைப்பது உமது அறியாமையின் மடமையா.
    முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கட்சியே தவிர அது நமது மார்க்கமல்ல அதனை வழிபட...

    ReplyDelete
  13. What did Jamiyattul Ulama had done for you so far under the name of religion ??? Halal certification did not make any sense until they had issued it to non consumer items like paint brush...etac etc... Do these people have sense ??? Halal certificate for paint brush ...Come on. ACJU is always biased towards politics and based on politics. There have been situations where certain MPs decided the Eid. That much politics inside ACJU.
    what did Muslim Congress or Muslim leaders had done for your progress. Just building some construction or building ??? Will it do their commitment to the Muslim society...

    I really doubt muslim leaders scares All Mighty Allah swt (asthagfirlahul aliyyul aleem if Im wrong)...If they do they will never isolate them by parties, territory, view, vission...

    Halal, 13 th amendmend etc...all will be nothing if these muslim mps, acju, sltj all work together...But unfortunately due to few mistakes All Mighty Allah swt is testing all Sri Lankan muslims with lots of problems.

    All mighty Allah swt is enough to save us and he is my and every muslims Guardian....

    ReplyDelete
  14. Talking about 13 amendment is not only a political matter because it is about minority rights. ACJU do not need to be involved in political matter, but it can handle the Muslims' and minority's issues where ever it is rises whether its from 13 or something else.

    ReplyDelete
  15. முளிம்களின் ஒற்றுமையில் தான் வெற்றி இருக்கிறது வேற்றுமையை ஊக்குவிப்பவன் சைத்தானின் agent

    ReplyDelete
  16. நமக்குள்ளேயே இவ்வளவு வேற்றுக்கருத்தும் அறியாமையும் இருக்கும் போது மாற்றானை குறைசொல்லவதில் அர்த்தமே இல்லை. முதலில் ஒரு சமுதாயத்திற்கு வெற்றி வேண்டுமானால் ஒற்றுமையாக ஒரு கொடியின் கீழ் நின்று நியாயமாகவும் உண்மையாகவும் போராடினால் கண்டிப்பாக வெற்றியுண்டு.. நமக்குள்ளேயே இத்தனைகூட்டமும் இத்தனை முரண்பாடுகளும் இருக்கும் போது நம் இலக்கை அடைவது சந்தேகமே இல்லை நோ சான்ஸ். இப்போ தேவை என்னதெரியும் அனைவரின் ஒற்றுமையும்தான்....

    ReplyDelete

Powered by Blogger.