Header Ads



தனியார் பஸ் நடத்துனர்களின் செயற்பாடுகள் தெடர்பில் பயணிகள் விசனம்

(எம்.எம்.ஏ.ஸமட்)

தனியார் பஸ் நடத்துனர்களின் செயற்பாடுகள் தெடர்பில் பொதுப் போக்குவரத்துப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இது குறித்து பயணிகள் தெரிவித்ததாவது,

கொழும்பிலும் அதன் நகர்புறங்களிலும் இ.போ.ச பஸ்களை விட தனியார் பஸ்களே அதிகளவில் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. இருப்பினும், தனியார் பொதுப்போக்குவரத்து பஸ் நடத்துனர்களின் நடத்தைகள் விசனத்தை ஏற்படுத்துவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். ஒரு சில நடத்துனர்கள் கடமையில் இருக்கும்போது வெற்றிலை சப்பிக்கொண்டு பயணிகளுடன் பேசுவதனால் அறுவருக்கத்தக்கதொரு நிலையை பயணிகளுக்கு ஏற்படுவதாகவும் இன்னும் சில நடத்துனர்கள் பயணிகளுடன் வேண்டத்தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் உபயோகிப்பதாகவும் பயணிகள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன். சுpல தனியார் பஸ் நடத்துனர்கள் பயணிகளிடமிருந்து பெறும் கட்டணங்களின் மீதித் தொகையை வழங்குவதில்லையெனவும் மீதித் பணத்தை வழங்குவதற்கு குறித்த நடத்துனர்களிடம் சில்லரைக் காசுகள் இருந்தும் அவற்றை உடன் வழங்காது பொடுபோக்குக் காட்டுவதாகவும் இதனால் ஒரு சில பயணிகள் மீதித் பணத்தை வாங்காது மறந்து தங்களுடைய இறங்கவேண்டிய இடத்தில் இறங்கிவிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய நடத்துனர்களின் வேண்டத்தகாத நடத்தைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுகின்றனர்.

இதேவேளை, பொதுப் போக்குவரத்து பஸ் மற்றும் ரயிலில் பிச்சை எடுப்பதற்கும் பொருட்களை  விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தடை உத்தரவை கவனத்தில் கொள்ளாது சம்பந்தப்பட்ட தரப்பினர் இத்தகையை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுவருவது பயணிகளுக்கு அசௌகரித்தை ஏற்படுத்துவதால்; இக்குறித்த செயற்பாடுகள் தொடர்பிலும் உரிய அதிகாரிகள் கவனத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வது அவசியமென சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.