Header Ads



கல்முனை வைத்தியசாலையில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்படுமா..?

(யு.எம்.இஸ்ஹாக்)

வைத்தியசாலை என்பது நோயாளிகளை சுகதேகிகளாக ஆக்குகின்ற சேவையை செய்கின்ற ஓர் இடமாகும். அரசியலுக்கோ தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கோ வைத்திய சாலைகள் இயங்குவதில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல வைத்திய சாலைகளின் செயற்பாடுகள் அரசியல் தலையீடு உள்ளதாகவும்,இனப் பாகுபாடு உள்ளனவாகவும் காணப்படுவதால் நோயாளிகளுக்கு சேவை செய்வது தவிர்க்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் நிறைந்த இடமாக வைத்தியசாலைகள் மாறி வருகின்றன.
இவ்வாறானதொரு நிலைதான் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலைக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தொடரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றதையும் வைத்திய அத்தியட்சகர்கள் இடமாற்றப்பட்டு புதிய அத்தியட்சகர்கள் நியமிக்கப் பட்டதையும் நாம் அறிந்ததே.

இதன் அடிப்படையில் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் புதிய அத்தியட்சகராக டாக்டர் ஜெயசிங்க என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அத்தியடசகராக கடமை புரிந்த வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் காத்தான்குடி வைத்திய சாலைக்கு இடமாற்றப்பட்டதையடுத்து அந்த வெற்றிடத்துக்கு அம்பாறை வைத்தியசாலை அத்தியட்சகரான ஜெயசிங்க பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கு நியமனம் செய்யப்பட்டு சமீபத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

நூறாண்டு வரலாறு கொண்ட கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை பிரதேசத்தில் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு அளப்பரிய சேவைகளை செய்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வைத்திய சாலையின் பணிப்பாளர்களாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே கடமையாற்றி வந்துள்ளனர். எனினும் சில வருடங்களாக அவர்களை இடமாற்ற வேண்டும் என்ற கோசங்களினால் வைத்தியசாலையில் நிர்வாக சீர் கேடுகள் இடம் பெற்றதையும் அனைவரும் அறிய முடிந்தது.

கடந்த 2010 இல் வைத்திய அத்தியட்சகராக கடமை புரிந்த டாக்டர் எஸ்.இராஜேந்திரனை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என பல குற்றச் சாட்டுக்களை தெரிவித்து சிலரால் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டு அவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார். அந்த வெற்றிடத்துக்கு வைத்திய அத்தியட்சகராக டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் நியமிக்கப்பட்டதன் பின்னர் சிறிது காலம் பிரச்சினைகள் இன்றி வைத்தியசாலை செயற்பாடுகள் சீராக இயங்க தொடங்கியது. எனினும் மீண்டும் இரண்டு வருடங்களின் பின்னர் அதே குழுவினர் டாக்டர் ஜாபிரையும் இடமாற்ற வேண்டும் என அதே பாணியில் தொடர் ஆர்ப்பாட்டங்களை செய்து அவரையும் இடமாற்றம் செய்துள்ளனர். தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் பிரதேசத்தில் உள்ள வைத்திய சாலைக்கு அதே இனத்தை சேர்ந்த ஒருவர் வைத்திய அத்தியட்சகராக  இருக்கக் கூடாதென நினைத்தா இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் செய்து வைத்திய அத்தியட்சகர்கள் இருவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என எண்ணங் கொண்டவர்களின் உள் நோக்கங்கள் பல தற்போது அம்பலத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. இதற்கு வைத்திய சாலையில் கடமை புரியும் அதிகாரிகளும்,ஊழியர்கள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர். வெளிநோயாளர்களை பார்வையிடும் சில வைத்தியர்களுக்கும், கடமை நேரத்துக்கு முன்னதாக வீடு செல்லும் சில தாதியர்களும்,ஊழியர்களும் அவ்வாறு சென்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு பெற்று வந்தவர்களுமே நிர்வாக முடக்கத்தை ஏற்படுத்த இவ்வாறான செயற்பாட்டில் இறங்கியுள்ளனர். இதற்கு உடந்தையாக சில தமிழ் அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

சிறுபான்மை சமுகங்களின் உரிமைக்காகவும் அவர்களது விடிவுக்காகவும் குரல் கொடுக்கும் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் கூட சிறுபான்மை வைத்திய அத்தியட்சகர்களை இடமாற்றம் செய்யவேண்டும் என்ற விடயத்தில் விடாப்பிடியாக இருந்தமை வருந்ததக்க விடயமாகும்.  இதனால் வைத்திய சாலையில் தமிழ் முஸ்லிம் உறவுக்கு கூட பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கடமை புரிந்த வைத்தியர்களை இடமாற்றம் செய்ய முயற்சி செய்தவர்கள் அவர்கள் தவறு செய்தவர்களாக உறுதிப்படுத்தப் பட்டிருந்தால் மேலும் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரை அந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யத் தவறிவிட்டு வேட்டி கட்ட கனவு கண்டு கோவணத்தையும் கையிழந்த நிலைக்கு இன்று கல்முனை வைத்தியசாலையின் நிலை மாறியுள்ளது.

புதிதாக கடமையேற்றுள்ள வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜெயசிங்க முன்னயவர்கள் விட்ட இடத்திலிருந்தே கடமைகளை செய்யத் தொடங்கியுள்ளார். பலருக்கு வரவுப் பதிவேட்டில் சிவப்புக் கோடு போடத் தொடங்கியுள்ளார். நிர்வாகம் என்றால் என்னவென்பதை கற்றுக் கொள்ள அம்பாறை வைத்தியசாலைக்கு கல்முனை வைத்தியசாலையில் கடமையாற்றுபவர்களை பயிற்சிக்கும் அனுப்பி எடுத்து வருகின்றார்.  இப்போது இவரையும் பிடிக்காத நிலையொன்று வைத்தியசாலையில் தோன்றி வருவதாக சில ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அங்கு கடமையாற்றும் சிங்கள வைத்தியர்களும், தாதியர்களும் வைத்திய அத்தியட்சகரிடம் கோரிக்கையொன்றை முன் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வைத்திய சாலையில் வழிபாட்டுக்காக கோயிலும், பள்ளிவாசலும் உள்ளது நாங்கள் வழிபட பௌத்த ஆலயமொன்றை வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்குமாறு கேட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறு பௌத்த ஆலயம் நிர்மாணிக்கப்படுவதற்கு வைத்திய அத்தியட்சகர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் சிறுபான்மை இன வைத்திய அத்தியட்சகர்களை இடமாற்றம் செய்ய ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பெரும் பான்மை இன வைத்திய அத்தியட்சகரையும் இடமாற்றம் செய்ய முன் வருவார்கள். அந்த நேரத்தில்தான் அவர்கள் செய்த தவறு மற்றவர்  பல்லை விட நமது முரசு நமக்கு மேலானது என்ற எண்ணம் தோன்றும்.

4 comments:

  1. காலகாலமாக இருந்துவரும் பள்ளிவாசல்களும், கோயில்களும், புண்ணியபூமி என்றபெயரிலும் விஸ்தீரணப்பணி என்ற பொய்பெயரிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதே வேளை தமிழ் முஸ்லிம்கள் வாழும் இடங்களில் தேவையில்லாமல் குழப்பங்களை உண்டு பண்ணுமளவிற்கு புத்தர்சிலைகள் அமைக்கப்படுவது வன்முறையின உண்டாக்கும் இது கொஞ்சம் கொஞ்சமாக பெளத்தர்களை குடியமர்த்தி அதன்மூலம் வரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவே தயாராகும் தூர நோக்கு எமக்கு தென்படுகின்றது. இது அரசாங்கத்தின் தூர நோக்கான செயலாக் கருதமுடியாது துவேசத்தின் உச்சக்கட்டத்தினையே வெளிக்காட்டுகின்றது. இந்த அரசாங்கத்தினை ஆதரிக்கும் மக்களுக்கு இதுபோன்ற சோதனைகள் தேவைதான்.

    ReplyDelete
  2. ஆஹா ஆஹா எது துவேசம்
    ஜாபிரின் மாற்றத்தின் காரணத்தை சொல்லவா
    ஜாபிர் பதவிக்கு வந்ததும் மடுவத்தை ஆஸ்பத்திரி (உங்கட அஸ்ரப் வைத்தியசாலை ) எப்படி முன்னேறியது . கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு வந்த உபகரணங்கள் எப்படி நடந்து போய் மடுவத்தை ஆஸ்பத்திரியில் குடிஏறியது எண்டு சொல்லவா
    ஜாபிரின் தில்லாலங்கடி விளையாட்டையும் சொல்லவா
    எங்களுக்கு வேட்டியும் வேண்டாம் கோவணமும் வேண்டாம்
    எங்கள் கோவிலும் உடைக்கப்படட்டும் .பௌத்த விகாரையும் வரட்டும்
    எங்களுக்கு கவலையில்லை ஏனென்றால் இது எங்களுக்கு புதியதுமில்லை .
    ஆனால் உங்கள் பள்ளிவாசல் உடைக்கப்படுமென்றால் அது மட்டும்
    எங்களுக்கு போதும்.
    உங்களை அழிக்க நாங்கள் எந்த எல்லைக்கும் போகத்தயார்

    ReplyDelete
  3. சகோதரர் Kishore!

    நல்ல சந்தோசமா இருக்கிங்க போல, இப்படித்தான் கடந்த காலத்திலும் துள்ளி கால் உடைந்த கதை மறந்ததோ? கொஞ்சம் நினைத்துப் பாருங்க, எல்லாம் சரியாய் போய் விடும். உங்களுக்கு சுகம் கிட்டட்டும்!

    ReplyDelete
  4. Kishore!!

    உங்களுக்கு வேட்டியும் வேண்டாம் கோவணமும் வேண்டாம் ஏனென்றால் உங்களுக்கு மானம் பெரிதுமில்லை மற்றவர்களின் உணர்வுகள் பெரிதுமில்லை எல்லாவற்றையும்விட மற்றவர்கள் அவதிப்படுவதில் உங்களுக்கு அவ்வளவு மனத்திருப்தி மகிழ்ச்சி அல்லவா? இவைகள்தான் ஒரு மனிதனை தோல்வியை சந்திக்கவைக்கும் செயற்பாடுகள். என்னாலும் சொல்லமுடியும் பலரின் தில்லாலங்கடியை ஆனால் மற்றவனைக்கணக்கெடுப்பதற்குப்பதிலாக நான்கு விடயங்களைத்தெரிந்துகொள்வதில் ஆரவமெடுப்பேன். காலம் பொன்னானது. ஒவ்வொரு நொடிப்பொழுதிற்கும் நாம் கணக்குக்காட்டவேண்டிய கட்டாய சூழ் நிலையில் வாழ்கின்றோம். இவைகளப்புரிய உமக்கு நாட்கள் எடுக்கும்.

    ஆமாம் எங்கட அஸ்ரப்தான் அது எல்லோருக்கும் என்றுதான் செய்தார் பொறாமைக்கண்கொண்டு பார்த்தால் உங்கள் கையிலிருப்பதைத்தவிர உமது தாய் தந்தையரின் கையிலிருபது கூட உங்களுக்கு அப்படித்தான் தெரியும் ஏனேன்றால் உம்மிடம் மனிதர்களுக்குரிய பண்புகள் இருக்கவேண்டிய இடத்தில் அசிங்கமான பண்புகள் இருக்கின்றன என்பதையே சுட்டிக்காட்டவிரும்புகின்றீர்கள். உங்களைப்போல மன நிலையைத்தராமல் ஓரளவேனும் நல்லதையே எண்ணி நல்லதையே செய்யவேண்டுமென்றும் நம்மைப்போலவே அனைவரும் என்றெண்ணும் மனப்பான்மையை எமக்குத்தந்த வல்ல இறைவனுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.

    கோயில்கள் உடைக்கப்படட்டும் விகாரைகள் வரட்டும் அதில் உமக்கு கவலையில்லை. ஆனால் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உடைக்கப்படவேண்டும் எவ்வளவு அழகான பேச்சு இந்தப்பேச்சின் பின்விழைவுகள் என்னவென்பதை நீங்கள் ஏற்கனவே அனுபவித்திருப்பீர்கள் இதுபோன்ற எண்ணத்தினால் எப்போதுமே வெற்றி கிடைக்காது. சகோதரரே சொல்லவேண்டுமானால் நான் உங்களு மாதக்கணக்கில் சொல்வதற்கு என்னிடம் விடயமுண்டு ஆனால் உம்மைப்போன்ற கீழ்த்தரமான எண்னம் கொண்டவர்களிடம் நான் பேசவிரும்புவதில்லை இருப்பினும் உமது கருத்துக்கு பதில் தரவேண்டிய கட்டாயத்திலுள்ளேன் என்பதானால்தான் பேசுகின்றேன்.

    விடயத்திற்கு வருவோம்: உண்மையில் நாம் சொல்லவந்தது என்னவென்றால் கிளைகளாய் சமுதாயங்கள் சங்கமித்து அழகான ஆறுகளாய் ஓடிக்கொண்டிருக்கும் இதுபோன்ர இடங்களுக்கு உம்மைப்போன்ற சாக்கடைகள் வந்து கலக்கவேண்டாம்!!! என்பதே எமது அன்பான வேண்டுகோள். உம்மால் இவைகளைப்புரிந்துகொள்ள முடியாது என்பதுவும் எமக்குதெரியும் இருப்பினும் சொல்லவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம். உமது விரிவுரையோ பின்னூட்டமோ எமக்குத்தேவையில்லை நாம் உம்மிடம் வேண்டிக்கொள்வது இதுபோன்ற பின்னூட்டங்களில் கலந்துகொள்ளவேண்டாம் என்பதையே..

    ReplyDelete

Powered by Blogger.