Header Ads



கிறிஸ்தவ சஞ்சிகைகளை விநியோகித்தவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

பௌத்த,அடிப்படைவாத அமைப்பான ராவண பலயவினால், கிறிஸ்தவ சஞ்சிகைகளை விநியோகித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  கொழும்பு நகரில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஜெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதப்பிரிவினர், தமது சமய சஞ்சிகைகளின் சிங்கள மொழிப் பிரதிகளை முல்லேரியா பகுதியில் விநியோகித்துக் கொண்டிருந்த போதே ராவண பலயவை சேர்ந்த பிக்குகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். 

கிறிஸ்தவ மதப் பரப்புரைகளை மேற்கொண்டவர்களை வளைத்துப் பிடித்த, ராவண பலயவின் தலைவர் சத்ததிஸ்ஸ தேரர், மற்றும் பௌத்த பிக்குகள், அவர்களை முல்லேரியா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

ராவண பலயவின் தலைவர் சத்ததிஸ்ஸ தேரர் முல்லேரிய காவல் நிலையத்துக்குள் வைத்தே, கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர்களை பலமுறை எச்சரிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. 

அதேவேளை, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மதப் பரப்புரையாளர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். pp

No comments

Powered by Blogger.