Header Ads



பிரான்ஸில் முக்காடு அணிந்த பெண்ணுக்கு நடந்த அக்கிரமம் - வயிற்றில் கரு கலைந்தது

(Tn) பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியான ஆர்ஜன்டியுலில் முக்காடிட்டு பர்தா அணிந்த கர்ப்பணிப் பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரம் 21 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீது பட்டப்பகலில் சிறு கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் பெண்ணின் கரு கலைந்துள்ளது. முக்காடிட்டு வந்த பெண்ணின் பர்தாவை அகற்றி அவரது முடியை வெட்டி எறிந்துள்ளனர். இதன்போது அந்த கும்பல் இஸ்லாமிய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நான்கு மாத கர்ப்பிணியான மேற்படி பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் ஹொஸ்னி மாடி ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக் கணக்கானவர்கள் ஆர்ஜன்டியுல் நகர மையத்தில் கூடி நீதியை நிலைநாட்டும்படி கோஷம் எழுப்பியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள நகர மேயர் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தமது நகரில் இடமில்லை என கூறியுள்ளார். ஆனால் இந்த கும்பல்கள் நகரின் சன நெரிசல் நிறைந்த பகுதிகளில் பட்டப் பகலில் இந்த தாக்குதல்களை நடத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குடியிருப்பாளர்கள் கூறியுள்ளனர். எனினும் பாரிஸ் புறநகர் பகுதியில் பாசிச மற்றும் இனவாத குழுக்களின் தாக்குதல்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. இதில் பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள் மீது இந்த தாக்கு தல்கள் கட்டவிழ்த்து விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. இதில் யார் தீவிரவாதி இவைகளை யார் தட்டிக் கேட்பார்கள்

    ReplyDelete

Powered by Blogger.