இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
(NF) பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை அதிகரித்துள்ள ஏழு நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
37 வீத பெண்கள் தமது துணைவரால் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மியன்மார், கிழக்கு திமோர், இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது உலகளாவிய ரீதியில் தொற்று நோயை போன்று பரவிவருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் உள்ளிட்ட வன்முறைகளை எதிர்நோக்குவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் கொலை செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கையை கருத்திற்கொள்ளும்போது 38 வீதமான பெண்கள் தமது துணைவரால் கொலை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.
மன அழுத்தம் உள்ளிட்ட வேறு சுகாதார பிரச்சினைகளே அநேகமான பெண்கள் கொலை செய்யப்படுவதற்கான காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
சட்டம் ஒளுங்கு எந்த நாட்டில் சீராக இருக்கின்றதோ அதுபோன்ற நாடுகளில் இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே நடக்கின்றன. எவ்வகையில் நோக்கினாலும் இதற்கான காரணத்தை அந்தந்த நாட்டின் தலைவர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும்.
ReplyDelete