ஓமான் நாட்டிலே விசித்திரமான ஒரு திருமணப் பண்டிகை..!
ஓமான் நாட்டிலே விசித்திரமான ஒரு திருமணப் பண்டிகையை அல் பாடி (Al Badi Investment Company) எனும் முதலீட்டுக்கான நிறுவனம் ஒழுங்கு செய்துள்ளது.
ஜூன் மாதம் 27ஆம் திகதி வடக்கு பத்தினா மாவட்டத்தின் (North Batinah)சகம் எனும் இடத்தைச் சேர்ந்த 106 ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடாத்தத் திட்டமிட்டிருக்கின்றது குறித்த நிறுவனம்.இதுவரை 122 ஜோடிகளது விண்ணப்பங்களை பெற்றிருப்பதாக நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்குழுவின் தலைவர் காலித் சைப் அல் பாதி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 106 மணமக்களும் எதிர்வரும் 21ஆம் திகதி அழைக்கப்பட்டு அவர்களது பெயர்கள் அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களை வழங்குவதுடன் திருமண நாளினது நிகழ்ச்சி நிரலையும் வழங்கப்படும்.மணமக்களது மாவட்டத்திலிருந்து இத்திருமண நிகழ்வை கண்டுகளிக்க 12,000இலிருந்து15,000 வரையானவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர் அதற்குரிய ஆயத்தங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.
சகம் பொது மைதானத்திலே நடைபெறவிருக்கின்ற இக்கோலாகல விழாவன்று அசர் தொளுகையினைத்தொடர்ந்து ஹமாசியா ,அய்யாலா (hamaasiya,Ayyaala) என்றழைக்கப்படும் ஓமானின் பாரம்பரிய நடனங்கள் இடம்பெறும்,மகரிப் தொழுகையத்தொடர்ந்து பொது மைதானத்திலே அமைச்சர் ஒருவரால் இராப்போசனம் வழங்கப்படும்.
இராப்போசன விருந்தைத்தொடர்ந்து ஏற்பாட்டுக்குழுவினரால் மணமக்களுக்கு பரிசு வழங்கப்படும்.மேலும் பல கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கிய வரலாற்று புகழ் பெற்ற இவ்விழாவை மஜான் எனும் ஓமானின் தொலைக்காட்சி அலைவரிசை நேரடி ஒளிபரப்புச்செய்ய அனுமதிக்கப்ட்டிருக்கின்றது.
Post a Comment