தெல்தோட்டைப் பிரதேச பொது நூலகமும், பொறுப்பற்ற நிர்வாகிகளும்..!
(தெல்தோட்டையிலிருந்து ஜெஸீம்)
தெல்தோட்டைப் பிரதேச பொது நூலகமானது பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்நூலகம் தெல்தோட்டைப் பிரதேச மக்களினதும், மாணவர்களினதும் கல்வி வளர்ச்சிக்கு ஓரளவு பங்களிப்பினை நழுகி வருகிறது. கல்விச் சமூகத்தின் கண்களாக பார்க்கப்பட வேண்டிய நூலகம் பொடுபோக்கான நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது கவலைக்குரிய அம்சமாகும்.
அண்மைக்காலமாக தெல்தோட்டைப் பிரதேச பொது நூலக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். குறித்த நேரத்திற்கு நூலகம் திறக்கப்படாமையினாலும், எவ்வித முன்னறிவித்தலும் இன்றி குறித்த நேரத்திற்கு முன்பதாகவே மூடப்படுவதினாலும் வாசகர்கள் பாரிய பிரட்சினைகளை எதிர்க்கொள்கின்றனர். அத்தோடு வார நாட்களில் கூட திறக்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்க அம்சமாகும். குறிப்பாக திங்கள், செவ்வாய், வெள்ளி தினங்களில் அதிகமாக பூட்டுடனேயே நூலகத்தை காண முடிகிறது. தூர இடங்களில் இருந்து வரும் வாசகர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் காட்சியை அவ்வப்போது காணக்கிடைக்கிறது. அவர்கள் செலவழித்து வரும் பணம், நேரம், முயற்சி என்பவற்றை பூச்சியத்தால் பெருக்க வேண்டிய துரதிஷ்ட நிலைக்கு தள்ளப்படுதின்றனர்.
தெல்தோட்டை வாழ் மக்களினதும், மாணவர்களினதும் நலனை கருத்திற் கொண்டு இந்நூலகத்தின் தொடந்தேர்ட்சியான செயற்பாட்டை தொடர்ந்து முன்கொண்டு செல்ல உரிய அதிகாரிகள் முன்வர வேண்டிக்கொள்வதோடு, இதற்கு தகுந்த தீர்வுத்திட்டத்தை பெற்றுத்தரவும் தெல்தோட்டை வாழ் மக்களின் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.

உண்மை பல முறை அவசர வின்னப்பமொன்றை பத்திரிகையொன்றில் பெற சென்ற எனக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.பின்னர் வின்னப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ReplyDeleteஅரசியல் செல்வாக்கு உள்ளவர் குறித்த நு◌ாலக பொறுப்பதிகாரியாக இருப்பதால் யாராலும் எதுவும் செய்ய முடியாத நிலமை காணப்படுவது உண்மை...