Header Ads



பௌத்த இனவாத குழுக்களை பகைத்துக் கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பு..!


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பௌத்த மதவெறி பிடித்த காவிவுடை கடும்போக்கு காரர்களால் முஸ்லிம்களின் உடமைகளும், பொருளாதாரங்களும் அழித்து தீயிட்டு சேதப்படுத்துவதை இந்த நாட்டின் ஆளும் கட்சியும், பிரதான எதிர் கட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக  மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இறைச்சிக்காக கால்நடைகளை அறுப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற ஒரு போலியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு திட்டமிட்டவகையில் முஸ்லிம்களின் உடமைகளை பௌத்த காவிவுடையனிந்த காடையர்களாளும் அவர்களது அடிவருடிகளாளும் சேதப்படுத்தி தீயிட்டு கொளுத்துவதை மனிதநேயமுள்ள எவரும் அனுமதிக்க முடியாது. 

அண்மைக்காலமாக பௌத்த இனவாதக் குழுக்கள் பௌத்த தர்ம கேட்ப்பாடுகளுக்கு அப்பால் முஸ்லிம் சமூகத்தின் மத கலாச்சார உரிமையையும் பொருளாதாரத்தையும் இலக்கு வைத்து செயற்பட்டு வருகின்றனர.; இவர்கள்  இறைச்சிக்காக முஸ்லிம்கள் கால்நடைகளை அறுப்பதை தடைசெய்வதாக கூறி இன்று பள்ளிவாயல்கள் உடைப்பு, பர்தா களைவு, பாங்கு சொல்லத்தடை, வியாபாரம் செய்வதில் தடை, பாடசாலை சீருடையில் தடை, ஹாதி நீதிமன்றதிற்கு எதிர்ப்பு, அரசியல் ரீதியாக முஸ்லிம்களின் உரிமைகளுக்கு முட்டுக்கட்டை என பல்வேறு திட்டமிட்ட செயற்பாடுகளை மிகவும் சுதந்திரமாக மேற்கொண்டு வருகின்றனர் இச்செயற்பாடுகளுக்கு இந்த நாட்டு அரசியல் கலம் வழிவகுத்து நிற்பதுடன் பாதுகாப்பு தரப்புக்களின் ஆசீர்வாதமும் முழுமையாகவுள்ளது. 

இந்த நாட்டில் வாழும் வேறு எந்தவொரு இனத்திற்கும் இல்லாத சட்டங்களும் சலுகைகளும் பௌத்த இனவாத குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்தவொரு இனமும் தங்களது நியாயங்களை ஜனநாயக ரீதியான செயற்பாட்டின் மூலம் வெளிப்படுத்தி நியாயம் கேட்க முடியாது. உடனே பாதுகாப்புத்துறை பதறியடித்துக் கொண்டு படைபட்டாளங்களுடன் வந்திறங்கி தடுத்து நிறுத்தி விடுகின்றனர். 

ஆனால் பொதுபல சேனா, சிங்கள ராவவைய, ஜாதிக ஹெலஉறுமய போன்ற பௌத்த இனவாதக் குழுக்கள் தாங்கள் விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் விரும்பிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தவும் ஊர்வலமாக சென்று அடுத்த மதத்தவர்களின் உடமைகளையும், பள்ளிவாயல்களையும், வர்தக நிலையங்களையும் முற்றுகையிட்டு தீவைக்கவும் முடிகின்றது இது இறைச்சிக்காக கால்நடைகளை அறுப்பதற்கு எதிரான நடவடிக்கையல்ல  இந்த நாட்டு முஸ்லிம்களின் அரசியல், வாழ்வியல், பொருளாதார வளர்ச்சி மீது கொண்ட காழ்ப்புனர்சியே ஆகும்.

இன்று முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இவ்வாரான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை ஆளும்தரப்பு அரசாங்கம் தனது அரசியல் இலாபத்திற்காக பௌத்த இனவாத குழுக்களை பகைத்துக் கொள்ளாமல் ஓரக்கண்ணால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து வருகின்றது.

அடுத்தாக இந்த நாட்டில் தேவையற்ற எத்தனையோ விடயங்களுக்கெல்லாம் மூக்கை நுழைத்து கோமனத்தை கழட்டி தலைப்பாகையை கட்டிக் கொண்டு தம்பட்டம் அடித்து அறிக்கைகளும் ஆர்ப்பாட்டங்களும் நடாத்தும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்த நாட்டில் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று அறிக்கை விடுவது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கின்றது. 

அத்தோடு இந்த நாட்டில் இறைச்சிக்காக கால்நடைகளை அறுப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற ஒரு பிரேரணையை முதன்முதலாக கண்டி மாநகர சபையில் சமர்ப்பித்து தீர்மாணம் எடுக்கச் செய்ததுடன் ஏனைய சில உள்ளுராட்சி சபைகளிலும் அவ்வாரானதொரு தீர்மாணத்தினை எடுக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சியே இவ்வாறு இந்த நாட்டின் ஒரு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பல்வேறு அநீதிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த நாட்டின் ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் துனைபோகின்றது.
  
இவ்வாறு ஒரு இனத்தை அடக்கி அடிமைப்படுத்துவதற்கு  துணைபோவதன் மூலம் ஆளும் கட்சி தனது அரசியல் இருப்பை பாதுகாத்து கொள்ள முடியாது அதுபோன்று பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தனது சரிந்துபோன அரசியல் செல்வாக்கை பௌத்தர்களிடமிருந்து தூக்கி நிறுத்துவதற்கு பௌத்த இனவாதிகளின் அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும்  துனைபோகின்றது. எனவும் தெரிவித்தார்

1 comment:

  1. என்னதான் ஆட்டம்போட்டாலும் வெற்றிலையின் கதை இதோட முடிகின்றது. ஏற்கனவே யானைக்கு வைத்த ஆப்பு இன்னும் எழும்பி நடக்கவே முடியல. அரசாங்கம் மக்களோட ஒத்துபோகணும் இல்லையென்றால் வாழ்க்கையில் நிமிந்து நிற்கமுடியாது. ஆனால் சும்மா சொல்லக்கூடாது அதெல்லாம் தெரிஞ்சிதான் வெற்றிலை பெட்டியை புள்ளா நெரப்பிட்டாங்க இனி என்ன வந்தாலும் பரம்பரை பரம்பரையாய் சொத்து இருக்கின்றதே. ஆனால் அந்த வரிசையில் சந்திரிகா அம்மையார் பரவாயில்லையோ?

    ReplyDelete

Powered by Blogger.