Header Ads



அபாயாவும், நிகாபும் இலங்கைக்கு பொருத்தமற்றது - கலாநிதி அமீர்அலி

(நேர்காணல் - அபயன்)

'இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் சீதோசன நிலைக்கேற்ப ஆடைகளை அணிவார்களாயின் இனக் குரோதங்களுக்கும் இன முறுகல்களுக்கும் இடமில்லாது இருந்திருக்கும்' என அவுஸ்திரேலிய முர்டொச் பல்கலைக்கழக வருகை தரும் விரிவுரையாளரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.சி.எல். அமீர்அலி தெரிவித்தார்.

கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொண்டு வரும் வெறுப்புப் பிரச்சாரங்களை எதிர்நோக்குவது எப்படி என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தே கலாநிதி அமீர் அலி இதனைத் தெரிவித்தார்.

காத்தான்குடியைச் சேர்ந்த அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கலாநிதி அமீர் அலி குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த போது நவமணிக்களித்த பேட்டியிலே இதனைத் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அண்மைக்காலமாக அதிவேகமாக அதிகரித்து வரும் அபாயா மற்றும் முகத்தை மறைக்கும் நிகாப் போன்ற ஆடைகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு பொருத்தமற்றவை. அவை அராபியர்களின் தேசிய உடை. அரபு நாடுகளின் வெப்ப தட்ப நிலைக்கேற்பவே அவ்வாடை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை இலங்கையில் வலிந்து புகுத்துவதாலும் புகுத்தியதாலுமே முஸ்லிம் என்ற தனி அடையாளத்தின் மீதும் முஸ்லிம் பெண்கள் மீதும் பெரும்பான்மை சமூகம் வெறுப்புக் கொள்ளவும் சந்தேகக்கண்ணோடு நோக்குவதற்கும் ஏற்ற சூழல் உருவாகியது என்று நான் துணிந்து கூறுவேன்.

நவமணி சார்பில் அவரைப் பேட்டி கண்ட போதே மேற்கண்ட கருத்துக்களை அவர் முன் வைத்தார்.

பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் கறுப்பு அங்கியை அணிந்து கொண்டு ஒரே இடத்தில் கூடும் போது அது ஏனைய சமய மக்களின் கண்களை உறுத்துகின்றது. அவ்வாறே ஆண்களுடைய பெரிய தாடியும் ஜுப்பாவும் பெரும்பான்மையினரின் உள்ளத்தில் பாதிப்பை அல்லது பொறாமையை ஏற்படுத்துகின்றன. இவை முன்னர் இருந்ததைபோல இலங்கை சீதோஷண நிலைக்கேற்ற ஆடைகளாக அமைந்திருப்பின் இந்த இனக் குரோதங்களுக்கும் இன முறுகல்களுக்கும் இடமில்லாது இருந்திருக்கும். அரபு நாடுகளல்லாத ஏனைய நாடுகளில் (ஆசிய, ஐரோப்பிய நாடுகளில்) அந்தந்த நாட்டு கலாசார சூழ்நிலைக்கேற்பவே உடைகள் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். உலகிலேயே அதிக சனத்தொகை கொண்ட முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் வாழும் மக்கள் அந்த நாட்டு பாரம்பரிய ஆடைகளையே அணிகின்றார்கள். அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. இதனை நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். 

இந்த இடத்தில் இப்போது ஒரு கேள்வி எழுகிறது. நாங்கள் யார? என்பதே அக்கேள்வி. நாங்கள் இலங்கை முஸ்லிம்களா? முஸ்லிம் இலங்கையரா? உண்மையில் முஸ்லிம் இலங்கையர்களாக வாழ நாங்கள் தவறி விட்டோம். பொதுவான ஒன்றுகூடல்களின்போது கூட நாம் ஒதுங்கி நிற்கின்றோம்.

அந்த நாட்களில் தென்னிலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் அந்நியோன்யமாக வாழ்ந்து வந்தனர். முஸ்லிம்களின் சமையலறைக்குள் கூட ஒரு சிங்களப் பெண் இருப்பாள். வடக்கு கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல் வாழ்ந்து வந்தனர். முஸ்லிம்களது பெருநாள் திருநாள் நல்ல நாட்களில் தமிழர்களும் கணிசமாகக் காணப்படுவர். அவ்வாறே தமிழர்களின் பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற விசேட நாட்களில் முஸ்லிம்களை அழைத்து விருந்து வைப்பர். இன்று இவையெல்லாம் எங்கே? ஒருவருக்கொருவர் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை ஏன் உருவானது? இதனை உருவாக்கியவர் யார்? சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

நோன்பு காலங்களில் முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படுவது நமக்குக் கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதம் என்று கூறிக் கொண்டிருக்கிறோம். இது வரப்பிரசாதமல்ல, நமது கல்விக்குக் கிடைத்த சரிவு என்றே நான் கருதுகின்றேன். இதன் மூலம் நாம் தனித்து நிற்கின்றோம். ஏனைய கல்வி முறைகள், கல்வித்திட்டங்களில் இருந்தும் நாம் விலகி நிற்கின்றோம். அவர்கள் படிக்கும் போது நாங்கள் துõங்குகின்றோம். அவர்கள் ஓய்வெடுக்கும் போது நாம் படிக்கின்றோம். இது ஒரு முரண்பாடாகும். கற்றல் முறையின் சீரின்மையை இது காட்டுகின்றது.

இலங்கையைப் பொறுத்த வரை முஸ்லிம் பெண்களின் உரிமை என்ன? இங்குள்ள பெண்களுக்கு உயிர் வாழும் வரை பள்ளிவாசலுக்குள் இடமளிப்பதில்லை. ஆனால், இறந்த பிறகு பள்ளியில் கொண்டுபோய் வைக்கிறார்கள். என்ன நியாயம் இது? ஏனைய நாடுகளில் பெண்கள் பள்ளிக்கு செல்கின்றார்கள். தொழுகின்றார்கள். பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கின்றார்கள். (குறிப்பு - தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் பரிபாலன சபைத் தலைவர் ஒரு பெண்).

அது மட்டுமல்லாது, எமது பள்ளிகளில் ஏனைய மதத்தவரை நுழைய அனுப்பதில்லை. மலேசியாவிலுள்ள பள்ளிகளினுள் எவரும் நுழையலாம். அங்கேயுள்ள பள்ளிகள் ழுணீஞுண ஏணிதண்ஞு களாகும்.

ரசூலுல்லாஹ் அவர்கள் மதீனா நகரில், நஜ்ரான் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாயலில் கிறிஸ்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது தொழுகைக்கான நேரம் வந்தது. நபிகளார் அப்போது கிறிஸ்தவர்களைப் பார்த்து கூறினார்கள். நீங்கள் தொழுங்கள் நாங்களும் தொழுகிறோம்.

இன்றைய ஜும்ஆப் பிரசங்கங்கள் பத்தாம்பசலித் தனமானவை. மௌட்டீகமயமானவை. அரைத்த மாவையே வாராவாரம் அரைக்கின்றார்கள். புதிய நடைமுறைகளை புதிய வழிமுறைகளை பிரச்சினைக்கான மாற்று வழிகளைப் பேசுவதில்லை. உண்மையில் அவ்வாறு பேசுவதற்கு டிரஸ்டி அனுமதிப்பதுமில்லை. 

மாடுகள் அறுத்தலுக்கான தடை பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கலாநிதியிடம் கேட்ட போது,

உண்மையில் மிருக வதையை எல்லோருமே கண்டிப்பர் என்று கூறிய அமீர் அலி, அவுஸ்திரேலியாவில் ஒரு டொக்யூமென்டரி படம் பார்த்தேன். ஒரு மாட்டை அறுத்த பின்னரும் அது இறக்காததால் அதனை அடித்துக் கொல்லுகின்றனர். அதனைப் பார்த்த மற்றொரு மாடு நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கவே பரிதாபகரமாக இருந்தது. இங்கே மாடறுத்தலைத் தடை செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் பேசப்படுகின்றது. ஏனைய மிருகங்கள் பறவைகள் கொல்லப்படுதல் ஜீவகாருண்யத்தில் அடங்காதா என்ன?

மாட்டை அறுத்து மாட்டிறைச்சியை  வீதியோரங்களில் பகிரங்கமாகத் தொங்கவிட்டு காட்சிப்படுத்தல் பயங்கரமானது. ஏனைய மதத்தவதைத் துணுக்குறச் செய்வது என்றும் கூறினார்.

புத்தரின் போதனையில் கூறப்படுகின்ற தர்மம் சரணங் கச்சாமி எனப்படுவதின் பொருள் என்ன? எஹ்து நஸ்ராத்தல் முஸ்தகீன் என்பதின் பொருள் என்ன? சிந்தித்துப் பாருங்கள். எல்லா மதங்களும் என்ன கூறுகின்றன. ஊர் முழுக்க உள்ள பள்ளிகளிலெல்லாம் ஒலி பெருக்கி மூலம் அதான் கூறத் தேவையில்லை. ஒன்றிரண்டு பள்ளிகளில் கூறினால் போதும்.

நமது நாட்டைப் பொறுத்தவரை உலமாக்களின் சமூகப் பங்களிப்பு மிகக் குறைவு. பொதுவாகவே உலமாக்கள் எல்லோருமே  அறிஞர்கள் அல்லர். பெரும்பாலானோர் பத்தாம் பசலிகளாகவே இன்னும் இருக்கிறார்கள்.

குர் ஆன் கூறும் இல்ம் குர் - ஆனுக்குள்ளே மட்டும் இல்லை. அது வெளியிலும் இருக்கிறது. சீனா சென்றாயினும் சீர் கல்வியைத் தேடு என்ற வாக்கு வெறும் கல்வியை மட்டும் குறிப்பதாக கருதக்கூடாது. அவர்களது தொழில்நுட்பத்தையும் கற்று வருதல் என்பதே அதன் மறைபொருளாகும். சீனர்களிடம் காகிதம் செய்தல், பீங்கான் செய்தல் போன்றவற்றைக் கற்று வரலாம்.

இல்ம் எனப்படுவது இருவகைப்படும். ஒன்று ஆகிறத்துக் கல்வி மற்றையது உலகக் கல்வி. ஹக்கன் யகீன்  என்பது இறைவனுக்கு உரியது. ஐனுல் யகீன் என்பது தொட்டு, முகர்ந்து சுவைத்து அறியும் கல்வியாகும். இல்முல் யகீன் என்பது காரணா காரியங்கள் மூலம் கண்டறிந்து கற்கும் கல்வியாகும்.

ஸ்பெயின் நாட்டில் ஒரு வருடத்தில் செய்யப்பட்ட மொழி பெயர்ப்புக்கள் அப்பாசியரின் வீழ்ச்சிக்குப் பின்னர் அராபிய உலகம் இதுகாலவரை செய்ததேயில்லை.

இன்றைய உலகு வெறும் நுகர்வோர் உலகமாக மாறி விட்டது. தேடல், திரட்டல் எதுவுமே இல்லை. கயிற்றின் சுருக்கை எமக்கு நாங்களே போட்டுக் கொண்டுள்ளோம். கயிற்றை இழுக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி. இவ்வாறு உணர்ச்சிகரமாகக் கூறினார் கலாநிதி அமீர் அலி.

107 comments:

  1. this stupid he is thinking only his pocket where he was get islamic studies from budist monks'? some of stupid educational certificate holders they believing world . im asking them 2 show Islamic way on them personal life no need them advice 2 our society. v need sir sithy lebbe , rasik fareed,Dr.Kaleel,dp jaya . in our muslim society there have more culprit certificate holders they don't know them work and responsible for them society but showing us professional's and idea .we need real knowledgeable persons who following islam on his base way not 4 supporting beams .

    ReplyDelete
  2. such a shme that these politicians representing with our votes talking against us and our community... its our fundemental right to wear what we want .. if expopsing womens body is their rights why not coveing it isnt..

    ReplyDelete
  3. கலாநிதி அவர்களே இஸ்லாம் சொன்ன வழிமுறைகள் முழு உலகத்திற்கும் பொருததமானது என்பது உங்களுக்கு புரியாமல் போனதில் ஆச்சரியமில்லை. உங்களுக்கு புரியவில்லை அல்லது முடியவில்லை என்றால் வாயையும் ????? யும் பொத்திட்டு இருங்க. சும்மா கமெண்ட் அடிக்காதிங்க.

    ReplyDelete
  4. Islame theryatha metkulaha naduhalin pichchai theenyil valarthvanukkidayellam neenkal yenappa peaddi kaankireehal...Ivnuhalappola aadkal naal sella sella australia makkalai pontru bravum jaddiyum poaddale pothum yentru sonnalum aaacharyappaduvathatkillai....Yetho Kalnithi yentra avanukku yellam therium yentru ninaithukondirukkiranuhal..muddalhal

    ReplyDelete
  5. dear ameer you first of all study islam and then talk about islamic dress, because you might have married to a non muslim that why you are opposion islamic way of dress. or who ask you come and comment this type of unislamic way of talk. you have know that a monks from eastern province recommeded the way and how decent about hijab and nikab when we compare with that budhist monks you are realy againt muslim way of dress. forther you keep open your family member face and hair dress buity .

    ReplyDelete
  6. please anybody give a good reply to these bugger.

    ReplyDelete
  7. ஊரிலுள்ள பள்ளிகளிலெல்லாம் பாங்கு சொல்லத் தேவையில்லை. ஒன்றிரண்டு பள்ளிகளில் சொன்னால் போதும் எனும் நீங்கள் பிறந்த மண்ணில் ஒவ்வொரு மின்சாரக் கம்பங்களிலும் ஒலி பெருக்கி வைத்து அதான் சொல்லும் நடைமுறை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  8. this guy already issued such issue few years back.its possibly that the teaching of prophaet sal is not suitable for current era.one matter is he linked with some jews.other matter is nawamani is a useless news provider.they should recognize the enemy of muslim.they cant hurt muslims by publishing this type of news.because they portriate as muslim voice.

    ReplyDelete
  9. don't comment our muslim poeple's
    bcz
    allah always save

    ReplyDelete
  10. Islam fit for whole universe, but, it may not to this Dr.!

    ReplyDelete
  11. who is this ameer ali he has no base in Islamic studies he is talking about the situation for the dress,abaya is easiest and comfortable dress for women not like jeans or salwars and we have to dress to satisfy allah only not the human, and every community should respect others rights and culture. in sri lanka the dress not the problem they have a different ideas to put our people down from all the sectors specially in the business, and they keep the dress and halal system as rout for their gall. allah may give ameer ali enough time to study correct Islam and correct situation in sri lanka.(engineering not a qualification to talk about the islam.)

    ReplyDelete
  12. Yaar inda alippullai edaittan koorawaruhiraan muslim pengal andanda naattu muraippadi aadai aniya wenduma alladu al Quran al hadeesin adippadayil aadai aniya wenduma maanga m??????n arebiyarhalin udaya nikaab arabu naattu paalaiwana kadum weyil abaaya nikaab aniya poruttamaanada waaikku wandawaittan indru iwanpondrorukku maarkkam !!??? Kalanidippatram dr sir mervin silvawukkum taan irukkiradu Jaffna Muslim idu pondra madattanamana seydihalukku ean mukkiyattuwam kodukkiraarhal enbadu pudirahawe irukkiradu iwan kootruppadi merkulahil waalum Muslim pengal arai kurayyahawaa aadai Aniya wendum idutaan modern islama !!!???? Ondru mattum urudiyaaha solla wendum dajjaalhalin (mahaa poyyarhal) waruhai aarambamaahi wittadu

    ReplyDelete
  13. Ameerali
    Are you taking in the Islamic view or western view? Middle East climate is hotter than, Sri Lanka. Why you did not mention about Islamic dress code mentioned in the Quran.
    We know how you are living in Australia how your family members behaving there. You son is living western life with western girls, abused his power for sex. One of the reported cases is here.
    http://islammonitor.org/index.php?option=com_content&view=article&id=3718:ameer-alis-son-involved-in
    http://www.watoday.com.au/wa-news/curtin-lecturer-implicated-in-sexformarks-scandal-with-students-20100902-14p4g.html
    There may be more unreported cases, western country non-Muslims don’t take these serous. Do you want us also live like you and your family members?
    My humble request from media, please don’t take any Islamic ruling from the people like him. He can talk about economy not Islam. Publishing these type of statement confuse Muslims and will help anti-Islamic organizations to support their claims.
    Some other fathwas given by him
    http://www.abc.net.au/radionational/programs/religionreport/dr-ameer-ali/3351462
    http://www.theaustralian.com.au/news/nation/prophet-not-perfect-says-islamic-scholar/story-e6frg6nf-1111112308065

    ReplyDelete
  14. சகோதரர் ஒரு பொறுப்பற்ற முறையில் எந்தவித இஸ்லாமிய அடிப்படை அறிவுமற்றவர் போல் கூறியுள்ளது கவலையளிப்பதாகவும் வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.

    உங்களது கூற்று முஸ்லிம்களின் உரிமைகளை மலினப்படுத்துவதாகவும் ஒரு தனிமனித சுதந்திரத்துக்கு ஊறு விளைவிப்பதாகவும் உள்ளது. வேற்று மதத்து சகோதரர்களும் அரசியல் தலைவர்களும் முஸ்லிம்களின் உருமைக்காக குரல்கொடுக்கும் போது. ஒரு முஸ்லிம் ஆகிய நீர்....!!! அதுவும் பெயருக்கு முன்னாள் ஒரு கலாநிதி யையும் வைத்துக் கொண்டு இப்படி தறுதலையாக பேசுவதை நிறுத்திக் கொள்வது உமக்கும் நல்லது சமூகத்துக்கும் நல்லது.

    ReplyDelete
  15. Habeeb Jamaldeen Ineiththulle links kalei copy panna koodiya vasathiyai jaffnamuslim.com block panniyullethu. so ithu kuriththu jaffnamuslim.com kavenam edukkavum. And request to habeeb jamaldeen if you can please forward those links to my email: thasneemnext@gmail.com. Jazaakkallah!

    ReplyDelete
  16. Ameer Ali you are such a scum in our society, We live in Australia with all rights, we wear habaya and hiqab and men grow beard, there's no issue about that. In Sri Lanka as a Democratic country we all should have the freedom to choose what we wear and which ideology to follow. None can interfere in others matters.

    We never tell anyone else to wear any dress.

    ReplyDelete
  17. கலாநிதிக்கு சரியாக இஸ்லாம் தெரியாது போலும் தேவையென்றால் சொல்லித்தாரோம்.....

    ReplyDelete
  18. Padichi koodinaal ippaditthaan.shaithaanum periya arivaali thaan.arivu irundhu podhaadhu.thelivum irikka veandum.

    ReplyDelete
  19. muthlil islam padikk solunke allhvidm pathil solladum

    ReplyDelete
  20. நாம் இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு புரிய வைப்பதுக்கு பதில் இவர்கள் போன்ற படித்த முட்டாள்களுக்கு மார்க்கம் என்றால் என்ன என்பதை புரிய வைக்க வேண்டும் ... அடிப்படை இஸ்லாமிய அறிவே இல்லாத இவனை போன்றோர் இருக்கும் வரை எம் சமுகதிக்கு என்றுமே விடிவே இல்லை

    ReplyDelete
  21. கலாநிதி அமீர் அலி அவர்கள் இது வரை காலமும் இல்லாத அளவில் ஏன் முஸ்லிம் பெண்கள் இலங்கையில் அபாயாவும் நிகாபும் அணிகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவை முஸ்லிம் உடைகள் என்றால் இதுவரை காலமும் இலங்கை முஸ்லிம் பெண்கள் அபாயாவும் நிகாபும் அணியாமல் மார்க்கத்துக்கு விரோதமாகவா வாழ்ந்தார்கள்?

    இந்தோனேசியாவில் வாழும் முஸ்லிம்கள் அபாயவும் நிகாபும் அணியாதபடியால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா?

    இலங்கை முஸ்லிம்கள் சிங்களவருடனும் தமிழருடனும் முன்னர் ஒற்றுமையாக வாழ்ந்தது போல இனியும் வாழ வேண்டும் என்று கலாநிதி அமீர் அலி விரும்புகிறார்.

    ReplyDelete
  22. ஒருவர் எத்தனை படித்தாலும் அவர் தனது மார்க்கத்தை அறிந்து கொள்ளாது விட்டால் அவரை அறிவுடையோன் என்று கூறிவிடமுடியாது. அபுல் ஹகம் (அறிவின் தந்தை) கூட என்று அடைமொழியால் அழைக்கப்பட்டவன் தான் பின் நாளில் அபூஜ‍ஹ்ல் (மடைமையின் தந்தை) என்று அழைக்கப்பட்டான் ஏனெனில் அவன் மார்க்கத்தை விளங்கிக் கொள்ளவில்லை. அதுபோல்தான் இந்த கயவனும். எத்தனை கலாநிதிப்பட்டம் பெற்றாலும் அவனை அறிவுடையோன் என்று கூறிவிடமுடியாது.

    ReplyDelete
  23. when problems Coming , then Muslims Can Identify many Munaafik ( Allah will Show to realize who they are )

    ReplyDelete
    Replies
    1. Sadaqta ( u said the truth ) i 100% agreed with u

      Delete
  24. are you alwright? i hope you are not in good condition...please check your body with your doctor..fool mid your own business.."Spring Onion"

    ReplyDelete
  25. Assalamu Alakkum

    Mr; Ameer ali Kalviyap patri pesura neenga Innum Islamiyakkalviya Padikkillangrathu Vethanaya Irukku.
    Neengal kurippitta indonesiyavil Pegal Jeens,Teesert,Athu Haramana Udai Ithukooda Ungalukku THeriyathe sar Thayavuseythu Hijap Ptri innum Vilakkam Thevai Kalanithi? Avarkale
    munnetraththukku Idamundu.

    ReplyDelete
  26. அமீர் அலி அவர்களே
    நீங்கள் சொல்லுவதிலிருந்து எமக்கு ஒன்று புரிகிறது.
    உங்களுக்கு பொருத்தமான ஆடை காவி உடைதான்.
    இஸ்லாமும்- அதன் கலாசாரமும் வேறு வேறு அல்ல.
    முழு உலகிற்கும் பொருத்தமான மார்க்கம் இஸ்லாம் என்பதை முதலில் உணர்ந்துகொள்ளும்....

    ReplyDelete
  27. you ameer ali, dont open your mouth in matters which you are not aware of. You do not know islam, we know how you behaved at the university with the girls, duleena, mallika etc. You promised to marry them and cheated those innocent.u escaped to Australia to save your skin and now u have become a mufthi.If you came to srilanka to see your house at dehiwela, pls see that and leave without commenting about islam and muslims. you say that covering was done in arabia to protect from heat, u should know that people remove the dress in summer and they do not cover. Did you not see the muslims living fully covered in Sydney, Canberra and Melbourne.
    Please look after your son who is going to become a christian flirting with many non muslims.

    ReplyDelete
  28. எவ்வலவோ ஆலிம்கள் , முப்திகள் இருக்க அவுஸ்திரேலிய காட்டுக்குள் இருந்து வந்து இலங்கை முஸ்லிம்களுக்கு மார்க்க சட்டம் சொவது கியாம நாளின் அடையாளமாகும் .

    ReplyDelete
  29. அவர் ஒரு முஸ்லிம் என்றால் கட்டான்குடியில் உள்ள உலமாக்களிடத்தில் அது சம்மந்தமாக கேட்டு , படித்து , ஆலோசித்ததன் பின்னர் அல்லவா மார்க்கத்தின் சரியான சட்டத்தை சொல்லிருக்க வேண்டும் . அமீர்அலி நம் நாட்டு ஆலிம்களையும், முஸ்லிம்களையும் மதிப்பவராக இருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன் , அவரின் கருத்தை வாபஸ் பெறவேண்டும் .

    ReplyDelete
  30. இந்த தம்பிக்கு அல்லாஹ் நல்ல புத்திய குடுக்கவேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம். தம்பிட பேர் முஸ்லிம் பெயர்போல இருக்கு முஸ்லிம் குடும்பத்தில பிறந்தவர்போல இருக்கு. ரொம்ப தப்பு..

    ReplyDelete
  31. Hi Friends,

    திரு. அமீர் அலி அவர்கள் கூறிய கருத்துக்கள் சிலவற்றில் உடன்பாடுகள் இல்லாதபோதிலும் இத்தனை வெளிப்படையாக நமது இஸ்லாமிய விடயங்களை அவர் துணிந்து அலசியிருப்பதை நிச்சயம் வரவேற்கவே வேண்டும்.

    ஒரு பண்டமோ கருவியோ செயன்முறையோ சித்தாந்தமோ அல்லது வேதாந்தமோ அது எவ்வளவுதான் புனிதமானது என்று மாய்ந்து மாய்ந்து போற்றப்பட்டாலும் இன்றைய உலக நடைமுறைகளுக்கு ஒவ்வாததாக இருக்குமாயின் அது சமூகத்திலிருந்து சத்தமேயில்லாமல் மறைந்துவிடும். காலப்போக்கிலே அருங்காட்சியத்திலோ அல்லது வரலாற்று ஆவணங்களிலோ வேண்டுமானால் அவற்றை தூசுதட்டி அடுத்த தலைமுறையினரின் பார்வைக்கு வைத்திருக்க முடியும்.

    இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் கூறமுடியும்.

    இலங்கை போன்ற பல்லின மக்கள் ஒன்றாகச்சேர்ந்து வாழும் நாடுகளை ஒரு சவூதி அரேபியாவாகவோ அல்லது ஈரானாகவோ மானசீக கற்பனை செய்தபடி இஸ்லாமிய கடும் கோட்பாடுகளை மக்கள் மீது நிர்ப்பந்தித்துக்கொண்டு வாழ முடியாது.

    தவிரவும் அரேபியப் பாலைவனத்தில் தோன்றிய இஸ்லாம் அனைத்து கலாசாரத்தையும் பின்பற்றும் மக்களுக்கும் முழுமையாகப் பொருந்திப்போகும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. பல அம்சங்கள் அறவே பொருந்தாதபோதிலும் அவற்றை விடாப்பிடியாக நிர்ப்பந்திக்கவும் மூர்க்கமாக வலியுறுத்தவும் நினைக்கும் இஸ்லாமியக் கடும் கோட்பாட்டாளர்களுக்கு இறுதியில் ஏமாற்றங்களே காத்திருக்கும்.

    இதற்கு கலாநிதி அமீர்அலி அவர்களின் இலங்கையிலே நிலவும் தற்போதைய குழப்பமான சூழல் பற்றிய இந்தக் கட்டுரையும் இதற்குக் கிடைத்துவரும் நாகரீகக்குறைவான பின்னூட்டங்களுமே முதற் சகுனம்.

    ReplyDelete
    Replies
    1. அமீர் அலி எவ்வலவு பொத்தின

      Delete
  32. புண்ணாக்கு.. இவர் மாதிரி நாலு பேர் இருந்தா செத்த கத... இவர ஆஸ்திரேலியாவுக்கு பெக் பண்ணிட்டு வேலைய பாருங்க போஸ்.....

    ReplyDelete
  33. அவுஸ்திரேலியாவில் ரூபட் மேடொக் எனப்படும் பிரபல ஒரு சியோனிசவாதியின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமைபுரியும் இக்கலாநிதி அண்மையில் ஜாமியுல் பலாஹ் அரபிக்கல்லூரிக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

    ஜாமியுல் பலாஹ் அரபிக்கல்லூரி பல உலமாக்களை உருவாக்கி இஸ்லாத்தை அதன் தூய நிலையில் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் ஒரு பிரதான நிறுவனமாகும்.

    பேராசிரியர் அமீர் அலி அவர்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தவறுகள் விடக்கூடிய சராசரி மனிதன்தான் என்று அவுஸ்திரிலியாவில் வெளியிட்ட கருத்து ஒரு சர்ச்சையை கிளப்பியதுடன் அவுஸ்திரிலியாவைச் சேர்ந்த பிரபல உலமாக்களினால் அவர் வன்மையாகக் கண்டிக்கப்பட்டார்.

    எனவே இவ்வாறான இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான கருத்துகளை வெளிப்படையாக வெளியிட்ட ஒருவர் நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய நேரடி வழிகாட்டலின்கீழ் தமது வாழ்கையை அமைத்துக்கொண்ட ஒரு முழுமையான மனிதர் என்ற அடிப்படைக்கருத்தை சமூகத்தில் ஆழமாக விதைத்துவரும் ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது எம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

    ReplyDelete
  34. This guy is really anti Islamic guy. Pls remove his article and give him proper reply. Everybody knows that he is not Muslim.

    ReplyDelete
  35. மேற்கத்தைய கல்வி முறை உருவாக்கும் அதி உச்சகட்ட அமீர் அலி போன்ற
    புத்தி ஜீவிகளது இஸ்லாம் பற்றிய தெளிவும் பார்வையும் இவ்வாறுதான் இருக்கும்!

    ஏனெனில் அதன் கல்வி வெறும் உலக அமிசங்களையும் வாழ்வியல் விவகாரங்களையும் மனித சிந்தனை அடிப்படையிலும், மத ஒதுக்கல் சிந்தனை அடிப்படையிலும் ஒழுங்குபடுத்துவதால் இத்தகைய மத ஒதுக்கல் சிந்தனைகளை கட்டி காத்து சமூகத்தை வடிவமைக்க முற்படும் புத்தி ஜீவிகள் இஸ்லாத்தை நோக்கும் இந்த விடயம் ஆச்சரியத்தை தரவே செய்யும்.

    ReplyDelete
  36. முகத்தை மூடுதல், நோன்பு காலங்களில் பாடசாலை மூடுதல், பள்ளி வாசல்களில் பெண்கள் அனுமதி, ஜூம்ஆ பிரசங்கங்கள் மற்றும் உலமாக்களின் சமுக பங்களிப்பு போன்ற விமர்சனங்களில் சற்று நியாயம் இருந்தாலும் ஏனையவற்றில் சரியான ஞானம் தங்களுக்கு இல்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  37. கணம்... அமீர் அலி அவர்களே...

    கலாநிதி என்பதற்காக எதையும் கூறிவிட முடியாது. எங்கேயோ இருந்து கொண்டு இவ்வாறான முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்பு விளைவுக்கும் விஷக்கருத்துக்களை கூறிவிட்டு நீங்கள் இருந்துவிடுவீர்கள்.. ஆனால் இங்குள்ள முஸ்லிம்களுக்கே பெரும் பாதிப்பு அதனால்....

    பொது பல சேனா போன்ற முஸ்லிம் விரோத சக்திகள் உருவாவதற்கு முதற்காரணமே உங்களைப் போன்றவர்கள்தான்!!!!

    இஸ்லாமும் தெரியாது இஸ்லாத்தையும் பின்பற்றாது முஸ்லிம் என்ற பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு நீங்கள் செய்யும் ஈனச் செயல்கள் உங்களது உண்மையான அறிவை புடம் போட்டுக்காட்டகின்றன... கலாநிதி என்ற இறுமாப்பு உங்களை மார்க்கப்பற்றை இழக்கச் செய்து விட்டதா அமீர் அலி அவர்களே!!!!

    ReplyDelete
  38. There is no necessity for Muslim ladies of our country to wear clothes which you like. Try to take others duas and avoid collecting their baduwas.

    ReplyDelete
  39. கலாநிதி காகா ஒங்குட மனைவியும் மகளும் அவுஸ்ரேலியாவில் திறந்த மேனியுடன் உலாவருகிறார்கள் என்பதற்காக ..... அதை இலங்கை முஸ்லீங்களிடன் திணிக்க வேண்டாம்......... மார்க்கம் உலகிற்கொன்றே ....... நாடுகளுக்கல்ல ........ எப்படித்தான் கலாநிதியானீர்களோ........ மீண்டும் கலிமா சொல்லி இஸ்லாத்திற்கு வாருங்கள் ....... நல்ல மௌலவி ஒருவரை சந்தித்து இஸ்லாம் மார்கத்தை படியுங்கள்.......

    ReplyDelete
  40. Dangerous !!!!!!!!!!!!! Ameer aliyai mannittu widalam paawam madattanamaaha edayyo ulariwittu ippo taane adatku waruttappattu kondu iruppan ! Aanaal awanayum awanadu komaalittanattayyum erumai maadiri sarikandirikkum inda ( jassly ,critic ,aman )pondrorin Unami uruwam welichchattukku wandirukkiradu ?!,!?! Iwarhal islamiya peyaril islattai alikka seeraliyum yahoodihalin adiwarudihal

    ReplyDelete
  41. Dangerous !!!!!!!!!!!!! Ameer aliyai mannittu widalam paawam madattanamaaha edayyo ulariwittu ippo taane adatku waruttappattu kondu iruppan ! Aanaal awanayum awanadu komaalittanattayyum erumai maadiri sarikandirikkum inda ( jassly ,critic ,aman )pondrorin Unami uruwam welichchattukku wandirukkiradu ?!,!?! Iwarhal islamiya peyaril islattai alikka seeraliyum yahoodihalin adiwarudihal

    ReplyDelete
  42. Mohideen Ahamed Lebbe,

    கலாநிதி அமிர்அலி அவர்களது கருத்துகள் தொடர்பாக எனது பின்னூட்டத்துடன் இதுவரை வெளியிடப்பட்டுள்ள பின்னூட்டங்களிலே உங்களுடையதுதான் ஓரளவு பண்பாகவும் நாகரீகமாகவும் எழுதப்பட்டுள்ளது.

    அதனால்தான் பதில் கூற விரும்புகின்றேன்.

    கலாநிதியாகி ஒருவர் பணிபுரியும் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் ஒரு சியோனிசவாதி என்ற தகவல் மட்டுமே, அவரையும் அவரது கருத்துக்களையும் நிராகரிப்பதற்கு போதுமானதா..?

    அப்படிப் பார்த்தால் நம்மில் எத்தனையோ இஸ்லாமியர்கள் முஸ்லீம்களை துச்சமாக எண்ணும் போக்குடைய பிற மதத்ததைச் சேர்ந்தவர்களைத் தலைவர்களாகவும் மேலாளராகவும் கொண்ட அமைப்புகளிலும் நிறுவனங்களிலும் பணிபரிகின்றார்கள். அதற்காகவே அவர்களது சிறந்த கருத்துக்களை நீங்கள் ஒதுக்குவீர்களா என்ன?

    முஹம்மது (ஸல்) அவர்கள் தவறுகள் புரியக்கூடிய சராசரி மனிதன்தான் என்பதை அவர்களே பல தடவை தனது வாழ்க்கைக் காலத்தில் ஏற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறியவில்லையா?

    ஒருமுறை பேரீத்தம்பழ விளைச்சலை அதிகரிப்பதற்காக பூக்களை செயற்கையாக மகரந்தச்சேர்க்கைக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்த அரபிகளைப் பார்த்து, 'அவ்வாறு செய்ய வேண்டாம்' என்று தடுத்தார்கள். அதன்படியே விட்டுவிட அவ்வருடம் விளைச்சல் மிகவும் பின்னடைவானது. நஸ்டமடைந்த அரபிகள் வருத்தத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்து வினவியபோது, "இதனை நான் ஒரு தூதராக உங்களுக்கு கூறவில்லை. சராசரி மனிதனாகத்தான் எனது அபிப்பிராயத்தை சொன்னேன். சராசரி மனிதனாக நான் கூறுவதெல்லாம் இறை கட்டளையாகாது. எனவே நீங்கள் மீண்டும் உங்கள் வழமையான முறையில் விளைச்சலைப் புரியலாம்" என்றார்கள்.

    இதைப்போல பல சம்பவங்களைச் சொல்ல முடியும்.

    பொதுவாக முஸ்லீம்களாகிய நாம் அனைவருமே உளரீதியாக ஒருவிதமான ஆன்மீக மாயைகளினால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றோம். அது எம்மை அறிவுபூர்வமாக செயற்படுவதிலிருந்து காலம் காலமாக விலக்கியே வைத்திருக்கின்றது.

    கதாநாயகிக்கு வில்லனால் ஆபத்து நேரும்போது எப்படியும் கதாநாயகன் வந்து காப்பாற்றுவான் என்று காத்திருக்கும் எம்ஜியார் காலத்து தமிழ்சினிமா ரசிகர்களைப்போல ஆன்மீகத்தைப் பற்றிய பிம்பங்களை அளவுக்கு மீறி ஊதிப்பெருப்பித்து நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

    அவற்றை யாராவது துணிந்து சுட்டிக்காட்டினால் கண்ணை மூடிக்கொண்டு வெகுண்டெழுந்து சேறுபூசி நமது பலவீனங்களை மறைக்க முயற்சிக்கின்றோம்.

    ஆனால் இவையெல்லாம் எத்தனை காலத்திற்கு?

    ReplyDelete
    Replies
    1. தம்பி பேரீஷ்ஷம் மர மஹரந்த சேர்க்கை இச்லாமிய சட்டமா .. என்ன தம்பி கதைக்கிர

      Delete
  43. உண்மையான ஒரு முஸ்லிம் இஸ்லாதுக்காக (சுவர்க்கத்துக்காக ) தனது உயிரையும் தியாகம் செய்வான் .

    ஈமானில் பலகீனம் உள்ளவனே காபிர்களுக்கு அஞ்சுவான் தனது மார்க்கத்தையும் விட்டுக்கொடுப்பான் .

    ReplyDelete
  44. jesly.
    பின்னூட்டங்கள் பார்க்கும்போது 40 பேரும் மேற்குறிப்பிட்டவரின் மார்க்க அறிவு பற்றி குறையாகத்தான் கூறியிருந்தார்கள் அதுமட்டுமல்ல அவருடைய கூற்று பிழையாகத்தான் இருக்கின்றது என்பதில் எனக்கும் சந்தேகமில்லை, ஆனால் இஸ்லாம் சம்மந்தமாக நீங்கள் தெரிந்து வைத்துள்ள விடயம் அனைத்தும் மிகவும் தவறானது நீங்கள் பெண்ணுரிமைக்காகப்போராடவேண்டுமென்றால் உங்களை யாரும் தடுக்கவில்லை தாராளமாகப்போராடலாம் ஆனால் இஸ்லாமியப்பெண்ணின் பெயரொன்றை வைத்துக்கொண்டு இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் குறைகூறிக்கொண்டிருப்பதை நிறுத்திக்கொள்ளவது மிகவும் நல்லது, நீங்கள் கூறியதுபோல ஏற்கனவே உங்களுக்கு கிடக்கப்பெற்ற மின்னஞ்சல்கள் இதுபோன்ற காரணங்களுக்கத்தான் இருக்குமென்பது தெளிவாகப்புலப்படுகின்றது. அதன்பின்பு அப்படிக்கூறிவிட்டார்கள் என்று ஆண்களை குறைகூறாவேண்டாம். நீங்கள் நினைப்பதுபோல ஆண்கள் இருக்கவேண்டுமென்பது உங்கள் தவறு.
    முதலில் நீங்கள் இஸ்லாத்திற்குள் வரவேண்டும் அதன்பின் இஸ்லாத்தில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன, உங்களது சொந்தவாழ்க்கையில் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதற்காக அதே கோணத்தில் எல்லாவற்றையும் நோக்குவது நியாயமானதாக் தென்படுகின்றதா உங்களுக்கு? நீங்கள் சரியென்ற காரணத்தால் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணவேண்டாம்.
    இஸ்லாம் மார்கம் ஆணாதிக்கமானது பெண்களை அடக்கிவாழச்சொல்கின்றது என்றகருத்துக்களை நீங்கள் யார்மூலம் தெரிந்து கொண்டீர்களோ ஆச்சரியமாக இருக்கின்றது, பணிவுக்கும் அடக்கத்திற்கும் இன்னும் வித்தியாசம் உங்களுக்கு புரியவில்லையா? உங்கள் பிரச்சினைகளைச்சொன்னால் எங்களால் முடிந்ததைச்செய்வோம். அதைவிட்டுவிட்டு பெண்கள் உரிமைக்காக குரல்கொடுக்கின்றேன் என்ற பெயரில் ஆண்களை குறைகூறிக்கொண்டே இருப்பதுவும், இஸ்லாத்தைப்பற்றி தரக்குறைவாகப்பேசுவதும், அவ்வளவு நாகரீகமாகத்தென்படவில்லை எனக்கு, முதலில் இஸ்லாத்தை குறைகூறவேண்டாம் அதற்கு உங்களுக்கு எதுவித அருகதையும் கிடையாது. அதை நான் வன்மையாகக்கண்டிக்கின்றேன்.ஏற்கனவே நீங்கள் சந்தித்த நாகரீகமற்றவர்களின் வரிசையில் என்னையும் ஆக்கிவிடவேண்டாம்.ஆகவே உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தால் நன்மைபெறவேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன் அதைவிட்டு நீங்கள் குழ்ப்பவாதியாகவோ குறைகூவியாகவோ இருக்க ஆசைப்பட்டால் எங்களால் ஒன்றும் சொல்வதற்க்கில்லை அது உமது இரத்தத்திலே கலந்துவிட்டபின் அதற்கு பரிகாரம் ஒன்றுமில்லை.

    ReplyDelete
  45. iver unmail oru muslim illai label muslim

    ReplyDelete
  46. Simply an intellectual prostitute

    ReplyDelete
  47. Allah sollum padi vaalvathu kashtam maathiri thoonalaam. Nabi (sal) pinpattuvathu kashtamaaha thoonalaam islaathil shila poriththam atrathu enru thoonalaam. Athu IMAAN ILLEY ENBATHAN ARIKURI.
    ivar sollum shilathil unmey irunthaalum ivar thapu shollum alavukku thappilley.
    MUSLIM MUSLIMAAHA VAALUM POOTHU SHOOTHANEY THAAN. ANAAL VETRI NICHCHAYAM. SUVARKAME KUULI.

    ReplyDelete
  48. he is another abdullahpayilwan

    ReplyDelete
  49. இவ் உலக வாழ்க்கை, உண்மையான நிரந்தரமான மறுமை வாழ்க்கையைத் தயாரிப்பதற்காகத் தரப்பட்ட சொற்ப காலப் பகுதியும் ஒரே ஒரு சந்தர்ப்பமுமாகும் அது முஃமின்களுக்கு சிறைச்சாலை. ஆகவே எமது வாழ்க்கைக் காலத்தை வீணாக்கி விடாது முதலில் ஈமானையும் அத்துடன் இஸ்லாமிய வரையறைகளையும் கற்று செயற்படுத்தி வெற்றியை அடைந்து கொள்ள வேண்டும். இவர் யஹூதிகளால் உருவாக்கப்பட்ட பொருளியலில் மேதையாக இருக்கலாம். இஸ்லாமிய அறிவில் பத்தாம் பசலிதான்

    ReplyDelete
  50. Dear Brs..If u recall your/my umma's dress code 10 or 15 years back, they wore only sari...v wont call them that they violated d Islamic rules !! and they built very good name n relation as well with others. Islam needs this discipline. Now what happen... dress-code is there; relationship is not there, hence problems every corner. v always forget our strength n foresight opportunities ...

    ReplyDelete
  51. Mr.Ameer Ali neenga firts kufur kalima solli alla munnilai thawba seiya vendum
    mulumayaga islathai padikka vendum .

    ReplyDelete
  52. மார்க்கத்தை விற்று பிழைக்கும் கோடாரிக்காம்பு.இவன் போன்றவர்கள் நாட்டுக்கு வராமல் தொலைந்து விடுவது சமுகத்துக்கு செய்யும் பெரும் நன்மையாகும்.

    ReplyDelete
  53. Renees MHM,

    40 பேரும் எழுதியிருப்பது போலத்தான் நானும் எழுதவேண்டுமா? அப்படி எழுதினால்தான் என்னை ஏற்றுக்கொள்வீர்களா என்ன?

    இஸ்லாமிய விடயங்களிலே பல முரண்பாடுகள் இருக்கின்றன எனும்போது அதுபற்றிய தேடல்களை நிகழ்த்தக்கூடாது பேசக்கூடாது எழுதக்கூடாது என்று சட்டம் போடுவதற்கு முதலிலே நீங்கள் யார்?

    இப்படியான மிரட்டல்களை இடுவதற்குரிய உரிமையை யார் உங்களுக்கு தந்தது?

    இஸ்லாம் என்பது ஒன்றும் உங்களுக்கு மட்டும் மொத்த குத்தகைக்கு தந்திருக்கும் ஒன்றல்ல. நீங்கள் உங்களுடைய வசதிக்காக சிலாகித்துக் கொண்டிருக்கும் அம்சங்களைத்தான் நாங்களும் போற்றி எழுதவேண்டுமென்ற கட்டாயமில்லை.

    இஸ்லாமிய விடயங்களை யாராவது கேள்விக்குட்படுத்துவதை நீங்கள் விரும்புவதில்லை. உடனே அவர்கள் மீது கண்ணைமூடிக்கொண்டு சேற்றை வாரியிறைப்பீர்கள். அதுவும் ஒரு பெண் விமர்சித்தால் அதில் எத்தனை நியாமிருந்தாலும் பொறுக்காது உங்களுக்கு.

    இப்போது நீங்கள் கூட எனக்கு வருகின்ற அவதூறு மின்னஞ்சல்களை நியாயம் என்று கூறியிருக்கின்றீர்கள். அவ்வாறு கூறியிருப்பது ஏறத்தாழ நீங்களும் அவர்களிலே ஒருவராகி விட்டதுபோலத்தான்.
    ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எல்லோருமே உங்களுக்குத் தெரிந்தவற்றுக்கு அப்பால் சிந்திப்பதற்கு பயப்படுகின்றீர்கள் அல்லது விரும்பாதிருக்கின்றீர்கள். உங்களையும் மீறி சிந்திப்பவர்களை முடிந்தவரை இழுத்துப்பிடிக்கின்றீர்கள். தடைபோட முயல்கின்றீர்கள்.
    தன்னைக் கட்டுப்படுத்துவதற்கு என்றே திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள சமூகப் பொறிமுறை ஒன்றைப்பற்றி சுதந்திரமாக சிந்திப்பதற்கும் தேடுவதற்கும் ஒரு மனிதனுக்குள்ள உரிமையை ஏன் தடுக்க வேண்டும்?

    இஸ்லாமிய உணர்வு என்பது ஜும்மாவிலும் மார்க்க உபன்னியாசங்களிலும் வாரா வாரம் கூறப்படும் விடயங்களை காதில் வாங்கி அதற்குள் மட்டுமே சிந்தித்துக்கொண்டு குண்டுச் சட்டிக்குள்ளே குதிரையோட்டுவது அல்ல.

    அல்லது 'தேவன் மீண்டும் உயிர்த்தெழுவார்' என்று சிலர் ஓயாமல் ஜபிப்பது போல வெறுமனே 'இஸ்லாம்.. இஸ்லாம்' என்று மூச்சுக்கு மூச்சு வரட்டுத்தனமாய் சொல்லிக்கொண்டிருப்பதுமல்ல.

    இன்றைய உலக நடைமுறைக்கு இஸ்லாமிய அம்சங்கள் எவ்வாறு பொருந்திப்போகின்றன என்பதை தர்க்கரீதியாக சிந்தித்து கலந்துரையாடல் புரிந்து தேவையானல் விவாதித்து தெளிவு காண்பதும் தேடலிலே ஈடுபடுவதும்தான் உண்மையான உணர்வாக இருக்க முடியும்.

    இதை நாங்கள் புரிய நினைப்பது தவறா?

    வெட்டியாய் படுத்திருப்பவர்களுக்கு எழுந்துகொள்ள முயற்சிப்பவர்கள் மீது சிறிது எரிச்சல் வரத்தான் செய்யும். அதற்காக வாழ்க்கை முழுவதும் நாங்கள் எழாமலே இருக்க முடியமா என்ன?

    ReplyDelete
  54. Islaaattai pinpatruwadu unmayana muslimgalukku kastamaaha tondadu nayawanjaharhalukku taan kastam enawe ippo pala nayawanjaharhal ambalattirku wandu wittarhal. ( hi friends jassly ) pondra pengalai awarhalin muhattai kaluwi wida pala aangal wilittuk kondu irukkirarhal enbadai enni perumaip paduhiren (salmaan rushdiyin karuttukkalai sarikanum nayawanjaharhal koottam ) Allah jassly pondrorukku tahunda paadam puhattuwaanaha aameen

    ReplyDelete
  55. Mohammad Safraz,


    உறக்கத்திலே பிதற்றுபவரைப்போல 'நயவஞ்சகம்' 'அம்பலம்' என்றெல்லாம் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றீர்களே தவிர நமது இஸ்லாத்தை என்போன்றோரிடமிருந்து காப்பாற்றுவதற்கு உருப்படியாக ஏதாவது பதிலடி எழுதுகிறீர்கள் இல்லையே.


    இறைவன் உங்களுக்கு அறிவைத்தந்திருக்கின்றான். தமிழ்மொழியில் எழுதக்கூடிய ஆற்றலையும் தந்துள்ளான். இஸ்லாத்தை காக்கும் உணர்வையும் அளவுக்கு மிகமிக அதிகமாகவே வழங்கி வைத்திருக்கின்றான்.


    இவ்வாறு எல்லாவற்றையும் அவன் கொடுத்திருக்கும்போது, அவற்றையெல்லாம் பயன்படுத்தி என்போன்ற 'இஸ்லாமிய நயவஞ்சகர்க'ளுடன் (உங்கள் அபிப்பிராயப்படி) தர்க்கரீதியாக விவாதித்து நமது இஸ்லாத்தை காப்பாற்றுவதை விட்டு ஏன் இப்படி 'அல்லாஹ் பாடம் புகட்டுவான்' என்று சாபம் தந்துவிட்டு கோழைபோல ஓடி ஒளிய நினைக்கின்றீர்கள்.


    வெட்கமாக இல்லை...?


    சரி, நாளை மறுமையிலே, "ஏய் சப்ராஸ், நான் உனக்கு கம்ப்யூட்டர் தந்தேன்... ஐடி தந்தேன்.. மொழியறிவு உட்பட சகல ஆற்றலையும் தந்திருந்தேன். நீ ஏன் அதையெல்லாம் பயன்படுத்தி ஜெஸ்லியாவை விவாதித்து தர்க்க ரீதியாக மடக்கி, உனது பின்னூட்டத்தின் மூலம் ஜாப்னா முஸ்லீம் வாசகர்களையும் தெளிவுபடுத்தி, இஸ்லாத்தைக் 'காப்பாற்றாமல்' கடமையைப் புரியாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததாய்..?" என்று நமது எல்லாம் வல்ல அல்லாஹ் கேட்க மாட்டானா தம்பீ....? விடை கூறுவதற்கு முடியுமா உங்களால்?


    இந்த கேள்விக்கும் ஏதாவது பிடி சாபமிட்டு மறையாமல் பதில் கூறுங்கள்.

    ReplyDelete
  56. apppa comments will hit the record.happy to read the comments. only 5% supporting ameer ali.i need not to comment that commentators.majority opposing.so ameer ali learn lesson.may allah save him from falling into salman rusdi/thaslima nasreen list.allah keep these two guys keep for lesson.human think that he his a strong person.if so can he win from death.can he save his rooh escape from the body.

    ReplyDelete
  57. jess....
    I think you read salman rushdi's and thaslima nazreen's [Bangladesh] books often. firstly I think its better for you to go to a mufthi and learn the maarka [sattangal].if you do not know the maarka [sattangal],please do not write like this.if you want to write like this and become famous, there is no problem ,you can do as
    you wish.if you write like this you will be put to a place where you really belong.

    ReplyDelete
  58. kalanithi ameer ali avarhalee usuppethi usuppethiyae comments ellaam ranakalamaaha aakittingalae. oru thulli peruwellam enpaarhalae. kuttayayi kulappuwathartku sariyana aalthan.

    ReplyDelete
  59. jesslya jessly ninga sollura matiri arabiya balaivanathula tontrina islam ella samuhathukkum poruntha kudiya markam islam illa enda vera entha markam endu sollunga ongada comment quran vasanathukke maruthala irukke allah islamiya markatha porunti kondu athe marumai nalukkuriya kataisi markamahavum vajjittan allah da ariva vita onakku arivu kudaya allah pathuhappanaha

    ReplyDelete
  60. Jessly.

    இஸ்லாத்தை நீங்கள் நினைப்பதுபோல் வழைத்தும், நெழித்தும் உங்கள் சுயதேவைக்காகவும் உங்கள் மனம்போன போக்கிற்கெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும், சுய ஆசைகளுக்காகவும், இன்பங்களுக்காகவும் நீங்கள் நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கு இஸ்லாம் ஒன்றும் உங்கள் விட்டிலிருந்துவந்த கற்பனைக்கதையல்ல. இறைவன் மனிதனைப்படைத்து மனிதன் இப்படித்தான் வாழவேண்டுமென்று இலகுவாகவும், அழகாகவும் இறைவன் சொல்லியுள்ளான். அல் குர் ஆனில் அடிக்கடி சிந்திக்கக்கூடிய மனிதர்களுக்கு என்று சொல்லப்பட்டுள்ளதே அதை நீங்கள் இஸ்லாத்துக்கு வரும்போது இன்ஸா அல்லாஹ் பார்க்கலாம். இன்று எத்தனையோ பிரபல்யங்களும் அறிஞர்களும், ஏன் இஸ்லாத்திற்கு எதிராக கொடிபிடித்தும் கோசமிட்டும் திரிந்தவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்களே அதில் முரண்பாடு இருந்ததால்தானா? இஸ்லாத்திற்கு இன்று சோதனைகளும் பிரச்சினைகளும் வந்துள்ளதற்குக் காரணம் முதலாவது இஸ்லாமியர் என்ற பெயரில் வேற்றானுக்கு பணத்திற்காகவும் வேறுகாரணங்களுக்காகவும் தன்னை முளுமையாக விற்று உயிருடன் வாழும் பிணங்களும். இரண்டாவதாக இஸ்லாத்தின் மீது பொறாமைகொண்ட இன்னுமொரு பாரிய கூட்டத்தின் பொறாமைகண்ணோட்டமே முக்கிய காரணமாகும். இதில் காசுக்காக தன்னை முளுமையாக விற்ற ஜடங்களுக்குத்தான் நான் முதலாவது இடத்தை வழங்கியுள்ளேன். காரணம் தன்னினத்தை தன் சமுதாயத்தை சீர்குலைக்கும் குழப்பவாதிகளாக தங்களுக்குள்ளேயே வாழும் ஒருசிலர் அவர்களின் தேவைகளுக்காக வேற்றானின் அசிங்கங்களைக்கொண்டுவந்து தாமும் அதற்கு அசைந்ததுடன் அமைதியாக வாழும் சமுதாயங்களிடம் தூவிவிட்ட துரோகிகள்தான் அவர்கள். அது ஒருபுறமிருக்க, நான் எவ்வளவு அழகாகச்சொல்லி இருந்தபோதும் நீங்கள் அதை நாகரீகமாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள் கடினமாக கண்டிப்பதற்கும் மிரட்டுவதற்கும் சம்மந்தமே இல்லை ஆனால் நான் மிரட்டியுள்ளதாக ஆவேசப்பட்டிருக்கின்றீர்கள். பாவம் உங்களைப்போன்ற பெண்கள். காரணம் அனேகமாக உங்களைப்போன்ற பெண்களை எல்லோரும் தூற்றுவார்களே தவிர வாழ்த்தார்கள் உங்கள் நிலையில் உங்களுக்கு சரியென்று தென்படுவது எப்படி அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியும்? அது உமது அறியாமையே!! எப்போது ஒரு மனிதன் தன்னை பெரும் அறிவாளி என்று எண்ணி செயல் படுகின்றானோ அப்பொது அவன் அடி முட்டாள் ஆகிவிட்டான் என்பது உங்களுக்கு நல்ல உதாரணமாக எடுத்துக்குற விரும்புகின்றேன்.

    முடியவில்லை எனது பின்னூட்டம்....

    ReplyDelete
  61. காலநிதி அவர்களே ஐரோப்பியர்கள் குளிருக்கு கோட் சூட் உடுக்கு பட்ட வெயிலில் நீங்க கோட் சூட் உடுங்களேன் அல்லது அவ்வாறு உடுப்பவர்களுக்கு இதை செல்லுங்களேன்
    நான் நினைக்கிறேன் பொது பல சேன உண்மையான சில முஸல்மான்கள அவர்களின் ஐரோப்பிய பயணத்தில் சந்தித்ததாக செல்றாங்க அவங்க இந்த காலவதி போன்றவர்களாக இல்லை இவரும் அதில் ஒருவராக இருக்கலாமோ எனறு நான் நினைக்கின்றேன்

    ReplyDelete
  62. Dear Jesslya,

    nenga Isam a padinga, ungaluku Islam nda na ndu thariyathu, ungada awasiyathitku etra mathiri Islam markatha matra muyatchi seiyya wenam.... Nenga Singala School ka pona, Illati Convent School pona... markam konjam kooda illla... ungala olunga veetakkal valakkalla..
    that is the problem....

    ReplyDelete
  63. engo pohirargal ange enna matram thelivu irukka pithatral

    ReplyDelete
  64. engo pogirargal ange enna matram thelivu irukka pithatral

    ReplyDelete
  65. If there is no "THAQWA" with his knowledge his knowledge is equal to "Shaytan's" knowledge who is very intelligent and who leads the people in the wrong path. So my dear brothers and sisters you can easily understand what is behind Mr. Ameer Ali's article.

    ReplyDelete
  66. Renees MHM & Other Friends,

    இதுவரையில் இந்தப்பகுதியிலே என்னுடைய பின்னூட்டங்களுக்கு எதிர் பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. ஆனால் ஒன்று, அவர்களிலே பலர் நான் கூறிய விடயங்களுக்கு பதில் தருவதற்கு மாறாக ஒன்றில் சாபமிடுவது அல்லது இஸ்லாத்தைப் படியுங்கள் என்றும் போதிப்பதுமாக மட்டுமே இருக்கின்றார்கள்.

    அஸ்லம் சியாம்,

    உங்களைத் தேர்ந்தெடுத்து பதில் கூறுவதற்குக் காரணமுள்ளது. நீங்கள் மட்டுமே 'அரேபிய மண்ணில் தோன்றிய இஸ்லாம் உலகின் எல்லாப் பிரதேசங்களுக்கும் கலாசாரத்திற்கும் பொருந்தவில்லை என்றால் வேறு எந்த மதம் பொருந்தும்?' என்று குறைந்தபட்சம் ஓர் உருப்படியான வினாவையாவது முன்வைத்திருக்கின்றீர்கள்.

    இதற்குப் பதிலளிப்பதற்கு முன்பு ஒன்று கேட்கின்றேன்.

    உங்களுக்குப்போலவே எனக்கும் இஸ்லாம்தான் பின்பற்றும் மதம். அது நான் என்னுடைய பிறப்பால்-பெற்றோர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மதம். எப்படி நமது பெயர்கள்கூட நாம் விரும்பி வைத்துக்கொண்டதில்லையோ அதுபோலத்தான் பிறப்பால் பெற்றுக்கொண்ட நமது மதமும் நாம் நமது சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையிலோ நமது கல்வியறிவு உலக அறிவின் அடிப்படையிலோ தெரிவு செய்து கொண்டதல்ல. முஸ்லீம் பெற்றோர்களுக்குப் பிறந்த காரணத்தால் நாம் முஸ்லீம்கள். அவ்வளவுதான்!

    இதில் மதம்மாறி வந்தவர்களை விட்டுவிடுங்கள்.

    உங்களையும் என்னையும் போல பிறப்பால் இஸ்லாத்தைக் கொண்டிருக்கும் முஸ்லீம்களிலே எத்தனை வீதமான பேர் உலகிலுள்ள அத்தனை மதங்களையும் அவை பற்றிய நூல்களையும் தகவல்களையும் கற்றுத்தெரிந்து அவற்றையெல்லாம் ஒரே மேஜையில் பரப்பி, ஐயந்திரிபற அலசி ஆராய்ந்து, அவற்றிலே மிகச்சிறந்த மதமாக இஸ்லாத்தை தேர்வு செய்து பின்பற்றுகின்றோம் என்று கூறுங்கள் பார்ப்போம். உங்களால் கூறமுடியாதல்லவா? சரி, நான் சொல்கின்றேன்.
    உண்மையைக் கூறினால் அப்படியானவர்கள் ஒரு வீதத்திற்கும் குறைவானவர்கள்தான்.

    நீங்கள் நம்பினாலும் நம்பாதிருந்தாலும் கேலிசெய்தாலும் கூட கவலையில்லை; அந்த ஒருவீதமானவர்களுக்குள் நானும் ஒருத்தி என்பதை போதுமான அடக்கத்துடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

    உலகிலுள்ள மதத்தினுள் இஸ்லாம்தான் சிறந்தது என்பதிலே எனக்கு எந்தவிதமான சந்தேகமுமில்லை. ஆனால் எல்லாவற்றிலும் சிறந்த இஸ்லாம் மதத்தினுள்ளே காணப்படும் முரண்பாடான விடயங்கள்தான் பிரச்சினையே.

    குறிப்பாக, வறியவர்களின் உழைப்பைச் சுரண்டிவாழும் வசதிபடைத்த வர்க்கத்திற்கு ஒரு எடுபிடிபோல செயற்பட்டு, இந்த ஏற்றதாழ்வு சமூகத்தை அப்படியே மாறாமல் வைத்திருப்பதற்கு உதவும் ஏனைய மதங்களைப்போலவே இஸ்லாமும் உதவிபுரிந்து கொண்டிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

    அதுபோலவே மனிதர்களில் இயற்கையான உடலமைப்புத் தவிர மற்றைய அனைத்து தேவைகளிலும் உணர்வுகளிலும் ஒரேபோல இருக்கும் ஆண் பெண் இருபாலாரிலே ஆண்கள் பெண்களை அடக்கியாளத்தக்க வகையிலே இஸ்லாத்தின் அடிப்படைக் கட்டுமானங்கள் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இறைவன் ஆணுமல்லாத பெண்ணுமல்லாதவன்; எல்லோருக்கும் பொதுவானவான் என்றால் எப்படி ஏழை-பணக்காரன் மற்றும் ஆண்-பெண் விடயத்திலே இத்தனை பாரபட்சமாக அவனால் இருக்க முடியும் என்பதுதான் எனது கேள்வி.

    இறைவனின் சட்டங்கள் ஏழைகளையும் பெண்களையும் முறையே அவர்கள் சுரண்டப்படுவதிலிருந்தும் அடக்குமுறைக்குள்ளாவதிலிருந்தும் மீள்வதற்கு வழிபுரியாமல், சமரசம் செய்து கொண்டு அப்படியே வைத்திருப்பதற்குத்தான் என்றால், எப்படி அவை பொதுவானவையாகவும் நீதியானதாகவும் இருக்கமுடியும்.

    சரி, இறைவன் நீதியில்லாதவனாக இருக்கவே முடியாது என்றால் இஸ்லாத்தின் சட்டங்கள்தான் எங்கேயோ யாராலேயோ தமது நலன்களுக்கேற்றபடி கபடமாக மாற்றப்பட்டு இடைச்செருகலுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதைத் தேடுவதுதான் அறிவுள்ள உண்மையான முஸ்லீம்களின் தேடலாக இருக்க வேண்டும்.

    அதைவிட்டுவிட்டு, அறிவுபூர்வமாக சிந்தித்து இஸ்லாத்தை அணுகிக் கேள்விக்குள்ளாக்குபவர்களை ஆண்களென்றால் "சல்மான் ருஸ்தி" பெண்கள் என்றால் "தஸ்லீமா" என்று கூறிவிட்டு கடந்து செல்வது கோழைத்தனம்.

    அது,"மீசை வைத்தவரெல்லாம் பாரதி தாடிவைத்தரெல்லாம் தாஹுர்" என்று கூறுவதைப்போன்று முட்டாள்தனம் கலந்த கோழைத்தனம்.

    தவிர, சொல்வதையெல்லாம் அப்படியே நம்பிக்கொண்டு பூம்பூம் மாடுகள்போல தலையாட்டிக்கொண்டிருப்பதல்ல உண்மையான இஸ்லாம்.

    ReplyDelete
  67. A KIND LETTER TO
    DR. A.C.L. AMEER ALI
    B.A (HONS.) (CEY), M. PHIL (LONDON), PH.D. (WAUST) - SENIOR ACADEMIC, BUSINESS SCHOOL, MURDOCH UNIVERSITY, WESTERN AUSTRALIA.

    WE ARE PROUD OF YOU AS YOU ARE A WELL-KNOWN MUSLIM EDUCATED PERSON WHO BELONGS TO KATTANKUDI, A MUSLIM VILLAGE OF SRI LANKA.

    MAY ALLAH BLESS YOU TO BE MORE PERFECT IN ISLAM!
    YOUR CRITICISM ON ABOUT SRI LANKAN MUSLIMS DRESS, SPECIALLY MUSLIM WOMAN’S DRESS (HABAYA, BURKA) SHOULD BE EXPRESSED DISAPPROVAL OF AGREEING AS YOUR OWN MISCONCEPTIONS RELATED TO THIS MUSLIM WOMAN’S DRESS.

    YOUR NEGATIVE ATTITUDES ON MUSLIM DRESS ARE SEEN TO HAVE PERSONAL IMAGINATIONS WITH SEVERE CONSEQUENCES.
    YOUR LIFE IS SPENT WITH A MULTICULTURAL FASHION. SO YOUR PERSONALITY TREND IS BUYING MORE ADJUSTMENTS ACCORDING TO THE OTHER COMMUNITIES’ CULTURES. SO ACCORDING TO THESE PERSONAL ADJUSTMENTS, YOU’VE VIEWED SOME NEGATIVE THOUGHTS.

    AS A RESULT YOUR SOME RECENT OUT PUT REVIEWS ON HOLY QURAN (QUR’AN NEEDED TO BE INTERPRETED FOR A MODERN AUSTRALIAN CONTEXT) AND OUR PROPHET MOHMMED (SAL) (PEACE BE UPON HIM) ( MUHAMMAD OF MECCA WAS AN IMPERFECT HUMAN BEING) THESE EXPRESSIONS WERE MADE BY YOUR NEGATIVE THOUGHTS ACCORDING TO YOUR PERSOANAL ADJUSMENTS. SEE
    (http://kattankudi.info/2010/08/15/புர்கா-நிகாப்-போன்ற-உடைக/#more-7821)

    YOUR RECENT DARK EXPRESSION GIVEN TO NAVAMANI NEWS ON ABOUT SRI LANKAN MUSLIMS SPECIALLY WOMAN’S DRESS MUST BE LIGHTED ACCORDING TO QURANIC VERSE 24:31 WHICH CLEARLY SAYS ALL THE MUSLIM WOMAN IN PROTECTING THEIR LIFE OF DISCIPLINE.

    “AND TELL THE BELIEVING WOMEN TO REDUCE [SOME] OF THEIR VISION AND GUARD THEIR PRIVATE PARTS AND NOT EXPOSE THEIR ADORNMENT EXCEPT THAT WHICH [NECESSARILY] APPEARS THEREOF AND TO WRAP [A PORTION OF] THEIR HEADCOVERS OVER THEIR CHESTS AND NOT EXPOSE THEIR ADORNMENT EXCEPT TO THEIR HUSBANDS, THEIR FATHERS, THEIR HUSBANDS' FATHERS, THEIR SONS, THEIR HUSBANDS' SONS, THEIR BROTHERS, THEIR BROTHERS' SONS, THEIR SISTERS' SONS, THEIR WOMEN, THAT WHICH THEIR RIGHT HANDS POSSESS, OR THOSE MALE ATTENDANTS HAVING NO PHYSICAL DESIRE, OR CHILDREN WHO ARE NOT YET AWARE OF THE PRIVATE ASPECTS OF WOMEN. AND LET THEM NOT STAMP THEIR FEET TO MAKE KNOWN WHAT THEY CONCEAL OF THEIR ADORNMENT. AND TURN TO ALLAH IN REPENTANCE, ALL OF YOU, O BELIEVERS, THAT YOU MIGHT SUCCEED.” (24:31)

    HERE ONE THING YOU SHOULD UNDERSTAND DR. AMEER ALI !!!!!!!!!!!!!!!!!

    OUR LUST (WE ARE HUMAN BEING) IS NEVER CHANGED DUE TO PLACES. MALE LUST COMES OUT WHENEVER HE FEELS THROUGH WOMAN WHOSE BODY VIEW IS EXPOSED THROUGH THE MALE SEX HORMONES.
    WHY?????????????????????????????????

    MALE SEX HORMONES ARE CALLED ANDROGENS. THE MAIN ANDROGEN IS TESTOSTERONE, AND AN ADDITIONAL ANDROGEN IS DIHYDROTESTOSTERONE. HERE TESTOSTERONE IS SECRETED MAINLY BY THE TESTES, BUT ALSO A LITTLE BIT BY THE ADRENAL CORTEX. IT STIMULATES MALE SEXUAL FEELING BY MEANS OF A WOMAN’S SIGHT. SO WOMAN’S SIGHT SHOULD BE COVERED.
    SO HERE YOU CAN NOT SAY MUSLIM DRESS CAN BE DIFFERENT PLACE TO PLACE BECAUSE HUMAN MALE SEXUAL FEELING CAN NOT BE CHANGED AS HIS TESTERONE IS SECRETED UNTIL HE DIE.

    PLEASE JUST THINK YOUR SON, DR. NASRUL AMEER ALI’S SEXUAL APPROACH. SEE HERE
    (HTTP://ISLAMMONITOR.ORG/INDEX.PHP?OPTION=COM_CONTENT&VIEW=ARTICLE&ID=3718%3AAMEER-ALIS-SON-INVOLVED-IN)

    WHY DOES ISLAM ORDER ALL THE MUSLIM WOMEN TO COVER THEIR NEEDY BODY PARTS?????????

    HERE ISLAM EXPERT WOMAN’S DRESS IS FOR THE WOMAN’S PERFECTION; NOT FOR COUNTRIES’ CLIMATIC AND MULTICULTURAL SITUATION.

    ReplyDelete
  68. Dear sister Jesslya, I am sorry for the way i commented, but when I saw your comments to people who criticized your intentions and comments... I thought I should give u a proper reply... Please read the below and come back with a proper reply...
    I publish this article as two parts as it is lengthy...

    (Part 1)

    உலக மதங்களிலுள்ள வேத புத்தகங்களின் அடிப்படையிலும், தத்துவங்களின் அடிப்படையிலும் பண்டைய காலந்தொட்டே பெண்கள் சமூகத்தில் இழிவானவர்களாகக் கருதப்பட்டு வந்தனர்.

    பெண்களுக்கு ஆண்மா உண்டா இல்லையா என திருச்சபைகள் ஆய்வு செய்த போது!
    கணவன் இறந்தால் மனைவிகள் உயிர் வாழ தகுதியற்றவர்கள் என அவர்களை கனவனின் உடலோடு சேர்த்து எரித்த போது!
    பெண் குழந்தை பிறந்தால் அது துரதிருஷ்டம் என்றும் தங்களுக்கு இழுக்கு என்றும் அவர்களை உயிருடன் புதைத்து வந்த போது! (இன்றளவும் இது சிலரிடையே தொடர்கிறது)
    உலகின் வீழ்ச்சிக்கு பெண்கள்தான் மூல காரணம் என கிரேக்க தத்துவம் கூறிய போது!
    பெண்களுக்கு சொத்துரிமை இல்லை! ஆண் வாரிசு இல்லையென்றால் மட்டுமே பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என சில வேத வசனம் கூறுகின்ற போது! (எண்ணாகமம் 27:8)
    மனிதனின் முதல் பாவத்திற்கு காரணம் பெண்ணே எனவும் அதனால் பெண்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என சில வேத வசனம் கூறுகின்ற போது! (ஆதியாகமம் 3:16)
    பெற்றோர்களே தங்களின் புதல்விகளை அடிமைகளாக விற்கலாம் என சில வேத வசனம் கூறுகின்ற போது! (யாத்திராகமம் 21:7-8)
    பெண் குழந்தை பிறந்தால் அது “பெரிய இழப்பு” என்று சில வேத வசனம் கூறுகின்ற போது! (Ecclesiasticus 22:3 From New Jerusalem Bible)
    பெண்கள் அசுத்தமானவர்கள்! அதனால் ஆண்கள் அவர்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் என சில வேத வசனம் வலியுறுத்தும் போது! (வெளி 14:4)
    ஒரு பெண், ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தால் 7 நாட்கள் தீட்டுபட்டிருக்க வேண்டும்! அதே நேரத்தில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் 14 நாட்கள் தீட்டுபட்டிருப்பாள் என்று கூறி பெண் இனத்தையே இழிவு படுத்துகிறபோது! (லேவியராகமம் 12:2-5)
    ஒருவரின் மனைவியை அவன் கண் முண்ணாலேயும், பொதுமக்ககள் மற்றும் சூரியனுக்கு முன்னிலையிலும் அடுத்தவர் அனுபவிக்க சில வேத வசனம் ஆணை பிறப்பிக்கும் போதும்! (II சாமுவேல் 12:11-14)
    பெண்கள் சபைகளிலே வாய் மூடி மௌனமாக இருக்க வேண்டும்! சந்தேகங்கள் இருப்பினும் கேள்விகள் கேட்காமல் தத்தம் கனவன்மார்களிடத்தில் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் என்று சில வேத வசனம் கட்டளையிடுகின்ற போது! (I கொரிந்தியர் 14:34-35-புதிய ஏற்பாடு)
    போரிடும் ஒருவருக்கு அவருடைய மனைவி உதவி செய்தால் உதவி செய்த மனைவியின் கைகளை வெட்டுமாறு சில வேத வசனம் கட்டளையிடும் போது! (உபாகமம் 25:11-12)
    பெண்களையும், சிறுவர் சிறுமியர் மற்றும் குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்க சில வேத வசனங்கள் ஆணையிடும் போது! (நியாயாதிபதிகள் 21:8-12)
    பெண்களை விபச்சாரிகளாகவும், அடிமைகளாகவும் நினைத்திருந்த போது! மேலும் மேற்கத்திய சமூகம் இன்றளவும் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கின்ற போது!
    தங்களின் சரக்குகளை சந்தையிலே விற்பதற்கு விளம்பரத்திற்காகப் பயன்படுத்தும் கவர்ச்சிகரமான காட்சிப் பொருளாக பெண்களைப் பயன்படுத்துகின்ற போதும்!

    ReplyDelete
  69. Dear sister Jessly Please find the continuation of the first part... (Part 2) and part 3 will follow....

    இஸ்லாம் மட்டுமே,

    பெண்களும் ஆண்களைப் போலவே கடவுளின் படைப்புகள் என்று கூறியது!
    பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உரிமைகள் இருக்கிறது என்று கூறியது!
    பெண்களை கண்ணியப்படுத்தி கவுரவித்தது!
    பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கியது!
    ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமை அளித்தது!
    பெண்கள் தங்களின் சொத்துக்களைத் தாமே நிர்வகித்துக்கொள்ளும் அதிகாரம் வழங்கியது!
    இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாதவர்கள், தரமிழந்த தங்களின் கொள்கைகளை தாங்கிப் பிடிக்க இயலாதவர்கள் மற்றும் தங்களுடைய வேதங்களின் அடிப்படையில் பெண்களை தாம் இழிவு படுத்தியதையும் மேலும் இன்றளவும் தங்களுடைய வேதப் புத்தகங்களின் மூலம் பெண்கள் இழிவு படுத்தப்படுவதையும் மறைத்து விட்டு, பெண்களை கண்ணியப்படுத்தி கவுரவித்துக் கொண்டிருக்கும் தூய இஸ்லாத்தின் மீது அவதூறு கூறுகின்றனர்.

    ஆனால் சத்திய இஸ்லாமோ இவர்களின் இத்தகைய பொய் பிரச்சாரங்கள் எல்லாவற்றையும் மீறி அவர்கள் பெரும்பாண்மையாக இருக்கின்ற அவர்களுடைய நாடுகளிலேயே படுவேகமாக, அதுவும் குறிப்பாக பெண்கள் மத்தியிலே அதி வேகமாக வளர்கின்றது. காரணம் இஸ்லாம் என்பது இந்த வையகத்திலிலுள்ள ஆண், பெண் அனைவரும் ஈடேற்றம் பெற ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமாகும். அதனால் தான் ஆண், பெண் சமத்துவ மிக்க இந்த சத்திய இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி பெண்களின் படையெடுப்பு நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    மனிதர்கள் அனைவரும் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்தே படைக்கப்பட்டார்கள்: -

    அல்லாஹ் கூறுகிறான்: -

    மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்-குர்ஆன் 49:13)

    மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:1)

    பெண் குழந்தை பிறந்தால் அதன் மீது வெறுப்புக் கொள்ளக் கூடாது என்கிறது இஸ்லாம்!

    அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? (அல்-குர்ஆன் 16:58-59)

    நெருங்கிய உறவினர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பங்கு உண்டு: -

    அல்லாஹ் கூறுகிறான்: -

    பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். (அல்-குர்ஆன் 4:7)

    அடிமைப் பெண்ணுக்கு கூட கல்வி கற்பித்து, திருமணம் செய்வித்து அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம்!

    ‘தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைக்கிறவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

    ReplyDelete
  70. Dear sister Jessly here is the continuation of part 2....



    இறைவனின் மன்னிப்பு மற்றும் நற்கூலி ஆண், பெண்களுக்கு பொதுவானது, அதில் பாகுபாடு இல்லை: -

    அல்லாஹ் கூறுகிறான்: -

    நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் – ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்-குர்ஆன் 33:35)

    ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்-குர்ஆன் 16:97)

    ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்-குர்ஆன் 4:124)

    ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; ‘உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்’ (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு. (அல்-குர்ஆன் 3:195)

    சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!

    ReplyDelete
  71. Jesslya jessly,

    இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்ததால் மாத்திரம் இஸ்லாத்தை பின்பற்றிதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை
    இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை
    இறவனின் வசங்களை சிந்தித்து ஏற்றுக்கொள்ளவே இஸ்லாம் அழைக்கிறது.
    ஆனால் ஒன்று, இஸ்லாத்தை அது உண்மையான மார்க்கம் என்று ஏற்றுகொண்டால் அதிலே பூரணமாக நுழைந்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் அதிலே குறை இருக்கிறது என்றால் இஸ்லாத்திற்கு வெளியே நின்று அதனை ஆராய்ச்சி செய்யுங்கள் அல்லது விமர்சியுங்கள் அதுதான் பகுத்தறிவாளர்களுக்கு அழகு.
    அதைத்தான் இஸ்லாமும் வரவேற்கிறது.

    "நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.2:85"

    நானும் ஒரு முஸ்லிம் என்று அடையாளபடுத்திக் கொண்டு இஸ்லாம் மனிதர்களுக்கு ஏற்ற மார்க்கமல்ல என்றும் அது பாலைவன கொள்கை என்றெல்லம் விமர்சிப்பது அழகல்ல அறிவுடமையும் அல்ல‌..
    .
    இஸ்லாத்தில் பெண்கள் பற்றிய சட்டங்கள் மேலோட்டமாக பார்க்கும் போது அடக்குமுறை மாதிரி தெரிந்தாலும் ஆழமாக சிந்தித்தால் இஸ்லாத்தை விட எந்த மார்க்கமோ கொள்கையோ பெண்களுக்கு கண்ணியமுன் பாதுக்கப்பும் தர முடியாது இதற்கு அலை அலையாய் இஸ்லாத்தை ஏற்றுவரும் மேலததேய பெண்கள் சிறந்த எடுத்துக் காட்டு .
    இஸ்லாமிய பெயரை வைத்து கொண்டு இஸ்லாத்தை உங்களை போன்றவர்கள் விமர்சிறப்பதால் இஸ்லாத்திற்கு எந்த பாதிப்பும் வரபோவதில்லை.
    ஆனால் உங்களை விட பல மடங்கு பெண்ணுரிமை என்ற பெயரில் இஸ்லாத்தை விமர்சித்தவர்களின் விமர்சனுங்கலுக்கெள்ளம் எத்தனையோ அறிஞ்சர்கள் தெளிவான விளக்கம் அளித்து விட்டர்கள் அவற்றை எல்லாம் படிக்காமல் அல்லது படிக்க மனமில்லாமல் இவ்வார சமூக தளங்களில் விமர்சனங்களை ஆள்ளி இறைக்கின்றீர்கள்.
    உங்கள் விமர்சனுங்களுக்கு அளிக்க இங்கே பதில் அளிக்க படவில்லை என்பதால் நீங்கள் சொலவதெல்லாம் சரி என்று ஆகிவிட போவதில்லை
    இஸ்லாம் கூறுவதை போல் அழகிய முறையில் ஒரு பொது மேடையில் விவாதிக்க அழைத்தால் நீங்கள் வரப்போவதுமில்லை.

    கீழே உள்ள லிங்க் இல் பென்கள் பற்றியஇஸ்லாத்தின் சட்டங்களை முடிந்தால் சென்று தெளிவு பெறுங்ககள்
    அல்லா நாடியோருக்கு வழிகாட்டுவான் அவனது வழியை விட்டு பிறழ்ந்தவர்கலுக்கு உதவுவோர் யாருமில்லை

    http://onlinepj.com/pengal/

    ReplyDelete
  72. Mohamed Uwais & Mohamed Shifas,

    நான் இறுதியாக எழுதிய பின்னூட்டத்திற்கு பதில் கருத்துக்கள் வழங்கியமைக்கு உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்.


    மொஹம்மட் உவைஸ்

    ஒருவிடயம் தொடர்பாக கலந்துரையாடும்போது அல்லது விவாதிக்கும்போது இருதரப்பினருக்குமிடையிலே கருத்து மோதல்கள் உண்டாவது இயல்பு.

    அத்தகைய மோதல் விதண்டாவாதமாக மாற்றமடையாமல் உண்மையைத் தேடுவதாக அமைய வேண்டுமானால் அங்கே, 'நான் சொல்வதை நீ நம்பு' அல்லது 'எனது கருத்துக்கள்தான் உத்தமம் அதை நீ ஏற்றுக்கொள்ளாதது உனது குற்றம்' என்பது போன்ற மறைமுகமான தொனி (hidden tone) இருப்பது இருக்கக் கூடாது.

    'எனது கருத்தை ஏற்றுக்கொள்ளும் வரையிலே நீ எனக்குப் பிடித்தமானவனல்ல' என்ற பாணியிலே விவாதிப்பது ஆரோக்கியமான தேடலுக்கு கொண்டு சேர்க்காது.

    உங்கள் விளக்கம் முழுவதும் இந்தத் தொனியே நிரம்பியுள்ளது. 'ஜெஸ்லியா இப்படிப் பட்டவள்தான்' என்ற முன்முடிவோடு எழுதிக்கொண்டிருந்தால் இதை உங்கள் கருத்தாடலை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?


    மொஹமட் சிபாஸ்,


    நீங்கள் பெண்கள் தொடர்பான வேதநூல்களிலிருந்து பல தகவல்களை வழங்கியிருந்தீர்கள். உங்களுடைய முயற்சிக்காக நன்றி கூறும் அதேவேளை அவை எனது கேள்விக்கு பதிலாக அமைந்ததா என்பதிலேதான் பிரச்சினையே.

    "சூரியனை பூமி வட்டப்பாதையிலே சுற்றுகின்றது" என்று கற்பிக்கின்றார் ஒரு ஆசிரியர். அதிலே குறைபாடு உள்ளது சந்தேகப்படும் ஒரு அறிவியல் மாணவன், "இல்லை ஐயா, பூமியின் பருவகால மாற்றங்களை வைத்து அவதானிக்கும்போது அது சூரியனை நீள்வட்டப்பாதையில் அல்லவா சுற்றிவரவேண்டும்?" என்று அவரிடத்திலே கேள்வியெழுப்புகின்றானென்று வைத்துக் கொள்ளுங்கள்.

    அதற்கு ஆசிரியர், "நீ என்னுடைய பாடத்தில் குறைகாண்கின்றாயே.. சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்பு பூமியை சூரியன் சுற்றிவருகின்றது என்று அல்லவா கற்பித்திருக்கின்றார்கள்...? அவர்களோடு ஒப்பிடும்போது என்னுடைய பாடம் சிறந்தது அல்லவா?' என்று விடையளித்தால் எப்படியிருக்கும்.

    அதுபோலத்தான் உள்ளது உங்கள் விளக்கமும்.

    ஏனைய மதங்களைவிட இஸ்லாம் சிறந்தது என்று நான்தான் ஏற்கனவே கூறிவிட்டேனே. அப்படியிருக்க வேதாகாம எண்ணாகாம மேற்கோள்கள் அவசியமில்லை. ஏனைய மதங்களை விட சிறந்த மதமான நமது இஸ்லாமிய மதச் சட்டங்களிலே ஆண்கள் பெண்களுக்குரிய வாரிசுச் சொத்துரிமை உட்பட பல விடயங்களிலே காண்பிக்கப்பட்டிருக்கும் பாரபட்சத்தைத்தான் நான் கேள்விக்குட்படுத்தியிருந்தேன்.

    அதற்குரிய பதிலை நீங்கள் இன்னும் தரவில்லை.
    பதிலாக குர்ஆன் வாக்கியங்களையே மேற்கோள் காட்டிக்கொண்டிருக்கின்றீர்கள். அவையும் நாம் விவாதிக்கும் விடயத்திற்கு தெளிவில்லாதபடி உள்ளன என்பதே உண்மை.

    மற்றது, ஏழைகள் மீதான சுரண்டல் பற்றிய விடயத்தை நீங்கள் தொடவே இல்லை. அதை வெகுகவனமாகத் தவிர்த்து விட்டீர்கள் போல.

    மற்றையது, அடிமைகளை விடுவிப்பது பற்றி...

    அதுபற்றி சில மேற்கோள் வாக்கியங்களை தந்திருக்கின்றீர்கள். அடிமைகளை விடுவித்தமை தனித்தனிச் சம்பவங்களாக நல்லவிடயங்கள்தான். ஆனால் அடிமை முறையை முழுமையாக ஒழித்துக்கட்டுவதற்குரிய சமூகத்திட்டங்கள் எதையும் ஏற்பாடு புரியாமல் அடிமைகளை வாங்கி விடுவிப்பது என்பது சிறந்த ஒன்றா என்ன?

    நுளம்புகள் பெருகும் இடங்களை ஒழித்துக்கட்டாமல், ஒவ்வொரு நுளம்பாகத் தேடிப்பிடித்து அடித்துக் கொல்வது போன்றதுதான் இந்த அடிமை விடுவிப்பும்.

    ஆக மொத்தத்திலே சிபான், நீங்கள் காயம் உள்ள இடத்தை கவனமாகத் தவிர்த்துவிட்டு வேறு எங்கோ மருந்தைத் தடவிக்கொண்டிருக்கின்றீர்கள்.

    எனக்கும் உங்களைப்போல நமது மார்க்கத்தை சிலாகித்து வானளாவப் புகழ்ந்து கொண்டிருக்கத்தான் ஆசையாக உள்ளது. ஆனால் அப்படிச் செய்வது ஒரே வீட்டிலுள்ள நமது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் புரியும் அற்ப ஒத்தாசைகளுக்கெல்லாம் நன்றி கூறிக்கொண்டிருப்பதைப்போல சங்கடமாக இருக்கின்றது.

    ReplyDelete
  73. நான் கூறியவைகளில் எந்த மறைமுக தொனியும் இல்லை ஒரு கொள்கை பற்றிய
    ஒரு சிறந்த கருத்துரையாடலோ அல்லது விவாதமோ செய்வதாயின் அக்கொகை பற்றிய அவரவர் நிலைப்பாடு சரியாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

    இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கம் அதிலே எந்த குறையும் இருக்க முடியாது அதிலே ஒரு குறை இருந்தாலும் அது உண்மை மார்க்கமாகாது. அப்படி இருக்க நான் இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம் ஆனால் அதிலே பிழை இருக்கிறது முட்டால்தனம் இருக்கிறது பெண்களுக்கு அநீதி இழைக்கபடுகிறது என்று முன்னுக்கு பின் முரணான உங்கள் வாத்தத்தையை தான் நான் குறை காண்கிறேன்.

    இஸ்லாத்தில் ஒன்றை ஏற்று ஒன்றை நிராகரிப்பது என்பது கிடையாது முழுமையாக உணர்ந்து முழுவதுமாக சிந்தித்து ஏற்று கொள்ளாதவரை யாரும் உண்மை முஸ்லிமாக முடியாது. இஸ்லாத்திற்கே உரிய தனித்துவம் அது.

    இஸ்லாம் உண்மை மார்க்கம்தான் ஆனால் அதிலே உள்ள சட்டங்கள் நியாயமற்றவையாக உள்ளது போன்று எந்த ஒரு முஸ்லிமுக்கும் தோன்றலாம் அப்போது அந்த சட்டங்களை பற்றி நடுநிலையோடும் இறைவன் அநீதியான சட்டங்களை அளிப்பவன் அல்ல என்ற உறுதியோடும் ஆராய்ந்து அதன் நியாயங்களை உணர்ந்து கொள்வான்.

    ஆனால் உங்கள் நிலைப்பாடு அப்படியல்ல இஸ்லாத்தின் பல சட்டங்கள் மனித சமூகத்திற்கு அநீதி இழைப்பதாகவும் எந்த வகையிலும் நியாயமற்ற கொள்கைகள் இம்மார்க்கத்தில் இருப்பதாகவும் உறுதியாக விமர்சிக்கும், பகுத்தறிவாளர்களின் மத விரோத கருத்துக்களையெல்லாம் சரி கண்டு உங்கள் வலை தளத்தில் பரப்பும் நீங்கள் நானும் ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொள்வதைதான் நான் விமர்சிக்கிறேன்.


    "நான் இந்த மார்க்கத்தில் பிறந்து விட்டாலும் இஸ்லாம் இறைவனின் மார்க்கமல்ல அதிலே அநீதியான சட்டங்கள் நிறைந்திருக்கின்றன என்பதுதான் எனது நிலைப்பாடு என்று தெளிவாக இஸ்லாம் பற்றிய உங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்லிவிட்டு உங்கள் விமர்சனங்களை ஒவ்வொன்றாக எந்த சட்டம் எப்படி அநீத் இழைக்கிறது என்ற வாதங்களை தெளிவாக முன்வையுங்கள் அப்புறம் இஸ்லாம் கூறும் அழகிய முறையில் விவாதிப்போம். இன்ஷா அல்லாஹ்.

    உங்கள் விமர்சனங்களை விட பல்லாயிரம் மடங்கு விமர்சனங்களுக்கெல்லாம் விடை கொடுத்திருக்கிறது இந்த மார்க்கம் உங்களை விட பன் மடங்கு நாத்திகம் மற்றும் பெண்ணூரிமை வாதம் பேசியவர்களை எல்லாம் தன் பக்கம் ஈர்த்திருக்கிறது

    ஆனால் முஸ்லிம் எனற (போலி) போர்வைக்குள் இருந்து கொண்டு இந்த மார்க்கத்தை மட்டமாக விமர்சிக்க வேண்டிய தேவை என்ன?

    ஜெஸ்லியா இப்படிபட்டவள்தான் என்ற மனநிலையில் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை ஆனால் என் கொள்கை இதுதான் என்று தெளிவாக கூற வேண்டியது நீங்கள்தான்.

    இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.2:14

    இந்த வசனத்தில் கூறப்பட்டிருப்பவர்களை போன்றவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாமல்லவா?

    இஸ்லாத்தை முழுமையாக நம்பும் ஒருவருக்கு வரும் சந்தேகங்களையும் இஸ்லாம் இறை மார்க்கமல்ல என்று உறுதியாக வாதிக்கும் நாத்திகனுக்கும் வெவேறு கோணங்களில் ஆதாரங்களை தெளிவு படுத்தலாம் ஆனால் உங்களை எங்கே வைப்பது?

    ஒரு கொள்கை உண்மயாக இருக்கும் அல்லது பொய்யாக இருக்கும் இரண்டுமாக இருக்க முடியாது உண்மை என்று ஏற்று கொள்கிறேன் என்று கூறிவிட்டு பொய் என்று வாதிக்கும் ஒருவருடன் எந்த கோணத்தில் விவாதிப்பது???

    'எனது கருத்தை ஏற்று கொள்ளாத வரை நீ எனக்கு பிடித்தமானவனல்ல" என்ற நிலைப்படல்லாம் இஸ்லாத்திற்கும் இல்லை எனக்கும் இல்லை.


    "பாலைவனத்தில் தோன்றிய மதம் அனைத்து கலாச்சார மக்களுக்கும் பொருந்தி போகாது " என்ற உங்கள் கோட்பாடும் "இஸ்லாம் தான் நான் பின்பற்றும் மதம்" என்ற உங்கள் கூப்பாடும் ஒன்றுக்கொண்று நேர் முரன் இல்லையா உங்கள் பகுத்தறிவிற்கு??

    எல்லா மக்களுக்கும் எல்லா கலாச்சாரத்திற்கும் பொதுவான மார்க்கம் என்ற இஸ்லாத்தின் அடிப்படையான நிலைப்பாட்டை எவ்வாறு உலக மக்களுக்கு புரிய வைப்பது என்று ஒரு முஸ்லிம் சிந்தித்து செயல்பட முடியும் ஆனால் "பாலைவனத்தில் தோன்றிய மதம் அனைத்து கலாச்சார மக்களுக்கும் பொருந்தி போகாது " என்று ஒரு நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துவிட்டு நானும் ஒரு முஸ்லிம் என்று எப்படி நீங்கள் சொல்ல முடிகிறது?


    பூசி முழுகாமல் வெளிப்படையாக பேசுவதுதானே சிறந்த கருத்தாடலுக்கு சிறந்தது..

    பெண்கள் சொத்துரிமை மற்றும் ஏழைகள் மீதான சுரண்டல் பற்றிய உங்கள் விமர்சனங்கள் தெளிவாக இல்லை.. எந்த்தெந்த சட்டங்கள் அவ்வாறு உள்ளன??

    அடிமைகள் பற்றிய விமர்சனத்திற்கான விளக்கம் கீழே உள்ள லிங் கில் பார்க்கலாம்:

    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/107/

    ReplyDelete
  74. Dear sister Jesslya,
    Please read the article and come back to me... (Part 1)

    இஸ்லாம் ஒரு பரிபுரண வாழ்க்கைத்திட்டம். மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான வழிகாட்டல்களையும் அது வழங்கியிருக்கின்றது.

    இன்று உலகலாவிய ரீதியில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும், பெண்கள் சுதந்திரமாக வழிப்படுத்தப்பட வேண்டும், பெண்களின் மகத்துவம் பேணப்பட வேண்டும்,பெண்களுக்கு பாலியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அண்களுக்கும் பெண்களுக்குமிடையில் பால்நிலைத்துவம் பேணப்பட வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்ப்ப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

    இவர்களது பேண்ணுரிமைப்போராட்டம் வெறும் வெற்று கோஷங்களாகவும், இஸ்லாத்தை காழ்ப்புணர்வுடன் விமர்சனம் செய்வதாகவுமே அமைந்திருக்கின்றன. இவற்றின் மூலம் சிறந்த ஒரு தீர்வை எட்ட முடியாது என்பது யதார்த்த புர்வமான உண்மையாகும்.

    பெண்ணின் பெருமையை நிலைநாட்டி, பெண்ணின் மகத்துவத்தை பேணிய ஓரே மார்க்கம் இஸ்லாம் என்றால் அது மிகையாகாது. இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னர் பெண்ணுரிமை பற்றி பேசியுள்ளது.

    ஜாஹிலிய்யாக்காலத்தில் முற்று முழுதாக பெண்ணுரிமை மறுக்கப்பட்டு பெண்கள் போதைகளாகவும் பெண்கள் போதைகளாகவும், வெறும் சடப்பொருளாகவும், போகப் பொருளாகவும் கருதப்பட்டனர். பெண்குழந்தைகள் பிறந்தால் உயிருடன் புதைக்கப்பட்டனர். பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது. இவ்வாறு பெண்ணடிமை சாசனம் எழுதப்பட்டு பெண்கள் மிருகங்களை விட கேவலமாக வழிநடத்தப்பட்டனர்.

    “அவர்களில் ஒருவருக்குப் பெண் குழந்தை குறித்து நன்மாரயனம் கூறப்பட்டால் அவன் கோபத்தை விழுங்கியவனாக அவனது முகம் கறுப்பாகி விடுகிறது. அவனுக்கு கூறப்பட்ட நன்மாராயனம் தீங்கென்பன (தெனக் கருதிய)தனால் சமூகத்தை விட்டும் தலைமறைவாகிக் கொள்கின்றான். அவமானத்துடன் இதை வைத்துக்கொள்வதா? அல்லது அதை மண்ணில் புதைத்து விடுவதா (என சிந்திக்கின்றான்) அறிந்து கொள்ளுங்கனள்! அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிக்க் கெட்டது. (அன்நஹ்ல் 58,59)

    இந்த ஜாஹிலிய்ய கால சிந்தனையை இஸ்லாம் துகள் துகளாக்கி பெண்களுக்கான உரிமையை வழங்கியுள்ளது. அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் அல்குர்ஆனிலும், அஸ்ஸீன்னாவிலும் பரவிக்காணப்படுகின்றன

    “ஈமான் கொண்டோரே! பெண்களை பலவந்தமாக நீங்கள் உரித்தாக்கிக் கொள்வது உங்க்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் பகிரங்காமான ஏதேனும் மானக்கேடான செயலைச் செய்தாலேயன்றி அவர்களுக்கு நீங்கள் வழங்கியவற்றில் சிலதைப் பறித்துக் கொள்வதாக அவர்கள் துன்புறுத்தாதீர்கள். அவர்களுடன் நல்ல முறையில் வாழ்கை நடத்துங்கள் நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக் கொள்ளுங்கள்) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்க்க் கூடும்.” (அன்நிஸா 19)

    ReplyDelete
  75. Dera sister Jesslya (Part 2)

    ஒரு பெண்ணை பாதுகாத்தல், பராமரித்தல், செலவு செய்தல், அவளுக்குறிய சொத்துரிமையை வழங்குதல் அவளுடைய பாதுகாவலர் மீது கடமை என்பதே இஸ்லாத்தின் விதியாகும்.

    தண்டனைக்குறிய விடயங்களில் கூட ஆணுக்கும், பெண்ணுக்கும் சமவுரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது என்பதை பின்வரும் அல்குர்ஆனிய வசனங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன.

    “திருடனும் தருடியும் செய்த்தற்குக் கூலியாகவும், அல்லாஹ்வின் தண்டனையாகவும் அவ்விருவரின் கைகளில் நீங்கள் துண்டித்துவிடுங்கள் அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்,ஞானமிக்கவன்.” (அல்மாயிதா 38)
    இன்னும் இஸ்லாம் கல்வி கற்பதனை ஆண், பெண் இரு பாலாருக்கும் சரிசம்மாகவே விதியாக்கியுள்ளது. அதற்கு பின்வரும் நபிமொழி சான்றாகும்.
    “அறிவை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடைமையாகும்” (அல்ஹதீஸ்)

    மேலும் அல்குர்ஆனில் கிட்டத்தட்ட பத்து அத்தியாயங்களிள் பெண்ணுரிமை, பெண்களுடன் தொடர்புடைய சகல அம்சங்களையும் அதளிவு படுத்துகிறது. அன்நிஸா, அத்தலாக் ஆகிய அத்தியாயங்களின் பெரும் பகுதி பெண்ணுரிமை பற்றியே பேசுகிறது. இன்னும் அல்பகரா, அல்மாயிதா, அன்நூர், அல்முஜாதலா, அல்மும்தஹினா, அத்தஹ்ரீம் போன்ற அத்தியாயங்கள் பெண்ணின் மகத்துவத்தை பரைசாற்றுகின்றன.

    இஸ்லாம் ஒரு பெண்னை சடப்பொருளாக பார்க்காமல் முழு அறிவு சிந்தனை, தெளிவு உணர்ச்சியுள்ள உயிராக அடையாளப்படுத்துகிறது. உதாரணமாக ஸஹாபி பெண்மனிகளை பார்க்கின்ற போது அவர்களிடத்தில் வேகம், விவேகம், துணிவு, வீரம், அற்றல், ஆளுமை காணப்பட்டன. அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் ஹதீஸ் கலை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். ஸஹாபி பெண்மனிகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள்.

    மேலும் ஒரு ஆணை விட சில குறிப்பிட்ட விடயங்களில் இஸ்லாம் பெண்னை பொருப்புதாரியாக அடையாளப்படுத்தியுள்ளது. உதாரணமாக தனது பிள்ளைகளை வளர்த்தல், வீட்டையும் தனது கணவருடைய சொத்துக்களை பாதுகாத்தல் போன்றனவாகும்.

    இஸ்லாம் மறுமை வாழ்க்கையில் கூட ஆண் பெண் இருபாலாருக்கும் சமஉரிமைகளை வழங்குகின்றது. என பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது. “ இன்னும் ஆனாயினும் அல்லது பெண்ணாயினும் எவர் ஒண்மையாகவே விசுவாசங்கொண்டு நற்கருமங்களை சொய்வாராயின் அத்தகையோர் சுவனத்தில் பிரவேசிப்பார்கள் அவர்கள் அற்ப அளவும் அநீதி செய்யப்பட மாட்டாரட்கள். (அன்னிஸா 124)

    “உங்களில் ஆண் பெண் இருபாலாரிலும் எவர் நன்மை செய்த போதிலும், நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிட மாட்டேன் ஏனென்றால் உங்களில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்த போதிலும் சலர் மற்ற சிலரில் உள்ளவர்கள்தான். ஆகவே கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை” (ஆல இம்ரான்195)

    இவ்வாறே இஸ்லாம் ஆரம்பம் மதல் இறுதிவரை ஆண்ஈ பெண் இரு பாலாரையும் சரிநிகர்சம்மாய் மதித்து சம உரிமை வழங்கியுள்ளது. என கூறின் மிகையாகாது.

    ReplyDelete
  76. Dear sister Jesslya.. (Part 3)


    இஸ்லாத்தில் பெண்களின் பொருளாதாரம் சார் உரிமைகள்
    இஸ்லாம் ஆண்களுக்கு பொருளாதாரம் சார் உரிமைகளை வழங்கியிருப்பது போலவே பெண்களுக்கும் அவ்வாறான உரிமைகளை வழங்கியிருக்கிறது. இதனைப் புரிந்து கொள்வதன் மூலம் பெண்கள் தொழில் புரிவது தொடர்பான நிலைப்பாட்டை சரியாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் தொழில் புரிதல், சம்பாதித்தல் என்பது பொருளாதாரத்தோடு தொடர்புபட்டது. எனவே, பொருளாதார உரிமைகள் தொடர்பான அடிப்படைகளை விளங்கிக் கொள்வதனூடாக இது பற்றிய தெளிவைப் பெற முடியும்.



    வாரிசுச் சொத்து பெறும் உரிமை
    இஸ்லாம் பெண்களுக்கு வாரிசுச் சொத்தில் பங்கு வழங்குகிறது என்பதே பெண்ணுக்கு இஸ்லாம் சொத்துரிமையை கொடுத்திருக்கிறது என்பதைக் காட்டுவதற்குப் போதுமான சான்று. ஆண் எவ்வாறு சொத்துக்களை வைத்துக் கொள்வதற்கு, அவற்றிற்கு உரிமையுடையவனாக இருப்பதற்கு அனுமதி பெற்றிருக்கின்றானோ அவ்வாறே பெண்ணும் சொத்து செல்வங்களின் சொந்தக்காரியாகத் திகழ்வதற்கு அனுமதி பெறுகிறாள். எனவே, வாரிசு சொத்தில் பங்கு பெறும் பெண் தனிப்பட்ட ரீதியில் தனக்கென்று சொத்துக்கள், பொருட்களை வைத்திருப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது.

    ஒரு பெண் மகளாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக, சகோதரியாக சிலபோது பெரிய தாய் (பெரியம்மா), சிறிய தாய் (சாச்சி) போன்ற நிலைகளில் வாரிசுச் சொத்தில் பங்கு பெறுகிறாள். வாரிசுச் சொத்தில் பங்கேற்கும் உரிமையையும் வாரிசாகப் பெற்ற சொத்தை உடைமையாக்கிக் கொள்ளும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது.

    ஜாஹிலிய்யாக் காலத்தைப் பொறுத்தவரை இதற்கு நேர்மாற்றமான நிலை காணப்பட்டது. ஆண் இறந்து விட்டால் அவர் விட்டுச் சென்ற சொத்துக்களும் அவர்களுடைய பெண்மக்களும் பண்டங்களோடு பண்டங்களாகப் பகிர்ந்தளிக்கப் பட்டனர். பெண்களைப் போகப்பொருளாக மாத்திரம் பயன்படுத்திவந்த நிலையை மாற்றிய இஸ்லாம் பெண்ணுக்கு வாரிசுச் சொத்தில் எந்தளவுதூரம் பங்கு வழங்கியுள்ளது என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.


    'பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பங்குண்டு. அவ்வாறே பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர் விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பங்குண்டு (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே. (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பங்காகும்.' (அந்நிஸா: 07)

    ReplyDelete
  77. Dear Sister Jesslya (Part 4)

    'உங்கள் பிள்ளைகளில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்று கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால், ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும். இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் அவரது பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால், இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். உங்கள் பெற்றோர்களும் குழந்தைகளும் இவர்களில் யார் நன்மையளிப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். எனவே, (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.' (அந்நிஸா: 11)



    எனவே, வாரிசுச் சொத்தில் ஓர் அங்கமாகக் கருதப்பட்ட பெண்ணை வாரிசுச் சொத்தில் பங்கு கொள்ளும் நிலைக்கு இஸ்லாம் மாற்றியது. வாரிசுச் சொத்தில் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட, பண்டத்தோடு பண்டமாக பகிர்ந்தளிக்கப்பட்ட பெண் வாரிசுச் சொத்தில் பங்கேற்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டாள். பல்வேறு நிலைகளில் வாரிசுச் சொத்தில் பங்கேற்கும் உரிமையை அவள் பெறுகிறாள். எனவே, ஆண் சொத்துக்களை வைத்திருக்க உரிமையைப் பெற்றிருப்பது போலவே பெண்ணும் சொத்துக்களை வைத்திருப்பதற்கான உரிமையைப் பெறுகிறாள்.

    உதாரணமாக, கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு குறைந்த பட்சம் அவரது சொத்தில் 1ஃ8 பங்கு கிடைக்கிறது. அதே போல மகள் என்ற நிலையில், சகோதரி என்ற நிலையில் மற்றும் பல நிலைகளில் அந்தப் பெண்ணுக்கு வாரிசுச் சொத்தில் பங்குபெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

    இஸ்லாம் பெண்களுக்கு வாரிசுச் சொத்தில் பங்கு வழங்கிய போதும் அது ஆணின் பங்குக்குச் சமமானதாக அமைவதில்லை;ளூ இந்த வகையில் வாரிசுரிமையில் பெண் புறக்கணிக்கப்படுகின்றாள் என்றொரு குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. உண்மையில் இஸ்லாமிய ஷரீஆ பெண்ணுக்கு வழங்கியுள்ள சொத்துரிமை தொடர்பான முழுமையான பார்வை இல்லாதவர்களே இக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இஸ்லாம் நான்கு சந்தர்ப்பங்களில் மட்டுமே பெண்ணை விட ஆணுக்கு சொத்துப் பங்கீட்டில் அதிகமாக வழங்குகின்றது. ஏனைய சந்தர்ப்பங்களில் பெண் ஆணுக்குச் சமமான பங்கை அல்லது ஆணை விட அதிகமான பங்குகளைப் பெற்றுக் கொள்வதை அவதானிக்கலாம். முப்பதிற்கும் அதிகமான சந்தர்ப்பங்களில் வாரிசுரிமைச் சட்டத்தில் பெண் ஆணுக்குச் சமனாக ஆணை விடக் கூடுதலாக சொத்தில் பங்கு பெறுகின்றாள் என்ற உண்மையை ஆழமாகப் பார்க்கின்ற போது புரிந்து கொள்ள முடிகின்றது. ஒரு குடும்பத்தின் அனைத்துச் செலவினங்களும் ஆணிண் மீதே சுமத்தப்பட்டுள்ளது. குடும்பச் செலவுகளைப் பெண் பொறுப்பேற்றல் வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்ப்பதில்லை. இதனால் தான் சில சந்தர்ப்பங்களில் இஸ்லாம் ஆணுக்கு பெண்ணை விட சில பங்குகளை அதிகமாக வழங்குகின்றது.

    ReplyDelete
  78. Abu Jeza,

    Mohamed Uwais ஸிடம் கேட்ட வினாவுக்கு Abu Jeza என்பவர் பதிலளித்திருக்கின்றீர்கள். அப்படியானால் இருவரும் ஒரே நபரா அல்லது நீங்கள் உவைஸிற்காக எழுதுகின்றீர்களா?

    Ok,யாராயினும் விடயத்தை மட்டும் கவனித்து பதிலெழுதுகின்றேன்...
    உங்களிடம் மறைமுகமான 'வற்புறுத்தும் தொனி' இருந்ததை இப்போது நீங்கள் மறுத்தாலும் அது உண்மையல்ல என்பதை நமது பின்னூட்டங்களை நடுநிலையான பார்வையுடன் தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள் அறிவார்கள்.

    அதுபோகட்டும், என்னை சரியாக அடையாளப்படுத்துமாறு வேறு கேட்டிருந்தீர்கள். அதன் உள்நோக்கம் யாது? ஜெஸ்லியா 'இஸ்லாமியரா அல்லது நாத்திகரா' என்று ஓர் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கா? அது உடனடியாகவே உங்களுக்குத் தேவைப்படுவதிலுள்ள வசதி என்ன என்பதை நான் அறியலாமா?

    உங்களது அகராதியிலே தனது பிறப்பு மதம் பற்றி சுயவிசாரணை செய்து கொள்ளும் ஒருவர் ஒன்றிலே மதவாதியாக அல்லது நாத்திகவாதியாக இரண்டில் ஒரு முகாமில்தான் இருந்தாக வேண்டுமா நண்பரே?

    சரி, ஒரு முஸ்லீமாக இருந்தால்...
    பின்பற்றும் மார்க்கம் தொடர்பான நியாயமான சந்தேகங்கள் எழுந்தால்... அவற்றைப்பற்றிய விளக்கங்களை அடைய முயற்சிக்காமல், அப்படியே போட்டு அமுக்கிவிடுவதைத்தான் சிறந்த விசுவாசிக்கான அடையாளம் என்றா நீங்கள் எல்லோரும் கருதுகின்றீர்கள்?

    இஸ்லாமியர் ஒருவர் மனதிலே நியாயமான சந்தேகங்களே தோன்றக்கூடதா.. அப்படித் தோன்றினால் அவற்றையெல்லாம் "சைத்தானின் வழிகெடுத்தல்கள்" என்ற ஒரே பைலிலே போட்டு இறுகமுடிந்துவிட்டு உள்ளுறுத்தலுடன் வாழ்வதையா உண்மையான விசுவாசம் என்கிறீர்கள்?

    ஒருவருக்கு தனது மதம் பற்றிய சந்தேகம் எழுந்து விட்டால், உடனே அவர் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு நாத்திகர்களின் முகாமுக்குள்தான் சென்றுவிட வேண்டுமா என்ன? உள்ளிருந்தே உண்மைக்காக போராடும் உரிமை அவருக்கில்லையா கனவான்களே?

    "இஸ்லாத்தை செம்மறியாடுகள் போன்று பின்பற்றாதீர்கள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கூறியிருக்கின்றார்கள்.

    இறைவனின் தூதரே காரணகாரியமின்றி கேள்வியின்றி மௌட்டீகமாக மார்க்கத்தை பின்பற்றுவதை விரும்பவில்லை. இவ்வாறிருக்கும்போது அவ்வாறானவர்களை ஏதோ கொலைக்குற்றம் செய்தவர்களைப் போல ஏன் நோக்குகின்றீர்கள்.

    நியாயமான சந்தேகத்தை கேட்டால், அதுபற்றி நீங்களும் உணர்ந்து அதுபற்றிய உண்மையைத் தேடுவதை விட்டுவிட்டு ஏன் பீதிக்குள்ளாகின்றீர்கள்?

    கேள்வி கேட்பவர்களை எப்படியாவது மடக்கி மட்டந்தட்டி விடுவதிலேயே ஏன் குறியாக இருக்கின்றீர்கள்?

    நாம் எல்லோரும் பயணிக்கும் ஒரு பெரும் கப்பலினுள் ஓரிடத்தில் நீர் புகுவதைக்கண்டதாகவும் கப்பலின் அடியிலே ஓட்டைகள் இருப்பதாக தான் சந்தேகப்படுவதாகவும் மாலுமிகளிடம் ஒரு பயணி கூறினானால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்..?

    அவனையும் அழைத்துக்கொண்டு உரிய இடத்திற்குச் சென்று ஓட்டைகளேதும் உள்ளனவா என்று தேடவேண்டும். அவ்வாறு துளைகள் இருந்தால் அதனைத் திருத்தியமைப்பதற்கான வழிவகைகளைக் கையாளவேண்டும். துளை இல்லையென்றால் நீர்புகுந்தமைக்கான தர்க்க ரீதியான காரணத்தை அந்தப் பயணிக்கு கூறி அவனை தெளிவுபடுத்த வேண்டும்.

    அதுதான் அறிவுபூர்வமானவர்களுக்கு அழகு.

    அதைவிட்டு, "நீ என்ன பெரிய அறிவாளியா? இந்தக் கப்பலையா ஓட்டைகளுள்ளது என்றாய்... எங்களுக்குத் தெரியாததா? இந்தக் கப்பலின் மகிமை தெரியுமா உனக்கு? இந்தக் கப்பலை குறை சொன்னவர்களுக்க என்னவெல்லாம் ஆயிற்று என்று தெரியுமா உனக்கு?" என்று எகிறிக்குதித்து, எல்லோரும் ஒன்று சேர்ந்து அந்தப்பயணியை நையப்புடைத்தால் அல்லது அவரை கப்பலிலிருந்து கடலில் வீசினால் அது சரியாகுமா? அந்தக் கப்பல்தான் ஊர் போய்ச்சேருமா?

    கப்பலுக்கு அடியிலுள்ள ஓட்டைகளைப்பற்றிப் பேசுபவன் கப்பலுக்கு விரோதமானவனாக மட்டும்தான் இருப்பான் என்று நினைப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.

    இதுபோலத்தான் இருக்கின்றது, நண்பரே என்னைப் போன்றோரைப் பற்றிய உங்களைப் போன்றோரின் மனோபாவம்.

    உங்களால் முடிந்தால் இதற்கு மழுப்பாமல் பதிலிடுங்கள்.

    (Note: To Mohamed Shifas: உங்கள் விளக்கத்திற்கும் தேடல் ஆர்வத்திற்கும் நன்றி. உங்களது பின்னாட்டத்திற்கு சற்று தாமதித்து தனியாக பதில் கூறுகின்றேன்)

    ReplyDelete
  79. Mohamed Shifas,

    Part I:

    பெண்களின் சொத்துரிமை தொடர்பாக பல தகவல்களை நீங்கள் வழங்கியிருந்தீர்கள். நன்றி!

    நம்மவர்களிடம் சில வார்த்தைப் பிரயோகங்கள் - அதன் அர்த்தம் புரிகின்றனவோ இல்லையோ - பழக்கதோசமாகிவிட்டன என்பது உங்களது பதிலைப் பார்க்கும்போது மேலும் உறுதியாகின்றது.

    வெற்றுக்கோசம்.. காழ்ப்புணர்வு.. என்று சில சொற்கள் அவை.

    நான் தெரியாமல்தான் கேட்கின்றேன், "உங்களுடைய வருமானம் எப்படி அது உங்களது குடும்பச் செலவுக்கு கட்டுப்படியாகின்றதா?" என்று கேட்டால், உங்களுடைய விடயங்களைப்பற்றி மட்டும்தானே பேசவேண்டும். அத்தோடு சேர்த்து அடுத்த வீட்டுக்காரனின் விடயங்களை ஏன் சம்பந்தமில்லாமல் பேசவேண்டும்?

    இஸ்லாமியச் சட்டங்களில் எவ்வளவு தூரம் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற வினாவுக்குத்தான் பதிலளித்துக்கொண்டிருக்கின்றீர்கள். அதை முழுமையாகவும் தெளிவாகவும் செய்யுங்கள்.

    அதைவிடுத்து உலகளாவிய ரீதியில் பெண்கள் தமது உரிமைக்காகப்போராடுவதை ஏன் இதற்குள் இழுத்துக்கொண்டு நீங்கள் கூறவருவதை தெளிவில்லாமலாக்குகின்றீர்கள்? உலகளாவிய பெண்கள்தான் நமது இஸ்லாமிய வரம்புக்குள் வராதவர்களாயிற்றே. அவர்கள் போராடுவதைத்தான் நாம் ஏற்றுக்கொள்வதில்லையே. பிறகு ஏன் அதை நாம் சீண்டவேண்டும்? அவர்களை விட்டுவிட்டு நாம் நமது விடயத்திற்கு வருவோம்.

    ஜாஹிலியா காலத்துக்கெல்லாம் போனால் இப்போதைக்குத் திரும்பி வரமுடியாது. அதுபற்றியெல்லாம் 1400 வருடங்களாக நிறையப்பேசிவிட்டோம். இன்றைய காலத்துப் பெண்களுக்கு நாம் எவ்வாறு சொத்துரிமை வாரிசுரிமை வழங்கியிருக்கின்றோம் என்பதைப்பற்றிப் பேசுவோம்.

    சரி, விடயத்துக்கு வருவோம். பெண்ணின் சொத்துரிமை குறித்து குர்ஆன் கூறுவதென்ன?


    'உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்கு கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் ..... பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும். இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் அவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு) இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு) .... (குர்ஆன் 4:11)

    ReplyDelete
  80. To Mohamed Shifas:

    Part II:

    .... உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் அவர்களுக்கு பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்கு பாதி பாகம் உண்டு.அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்கு கால் பாகம் தான்.

    ..... உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்கு கால் பாகம் தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் தான்..... (குர்ஆன் 4:12)

    ..... அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. .... அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால் அவள் சகோதரன் அவள் விட்டு சென்ற சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான். (குர்ஆன் 4:176)

    மேற்கண்ட குர்ஆனின் வசனங்கள் கூறுவதை சாராம்சமாக பார்த்தால் ஆணுக்கு வழங்கப்படுவதில் பாதிதான் பெண்களுக்கு. இதில் என்ன சமத்துவம் இருக்கிறது?

    இதற்கு நீங்கள் வேண்டுமானால் ஒரு ஆயத்தப் பதிலைக் கூறுவீர்கள். இஸ்லாம் குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆண்களிடம் வழங்கியிருக்கிறது, அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாகவும் பெண்களுக்கு குறைவாகவும் வழங்குகிறது என்று.

    இன்றைய ஆணாதிக்க உலகம் அப்படித்தான் இருக்கிறது என்பதால், ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால் கூட, பெற்றோர்களையும் உற்றோர்களையும் கவனிக்காமல் புறந்தள்ளும் ஆணுக்கு அதிக பாகம் இல்லாமல் பெண்களுடன் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கொள்வதற்கு ஏதுவாக குர்ஆனில் ஏதாவது வசனம் உண்டா? இன்று பெற்றோரை கவனிப்பதில், பாதுகாப்பளிப்பதில் ஈடுபடும் எத்தனையோ பெண்களையும் குடும்பங்களிலே காணலாம். இது போன்ற குடும்பங்களில் ஆணைவிட பெண்ணுக்கு இரண்டு மடங்கு சொத்து பகிர்ந்தளிக்க முடியுமா நமது குர்ஆன் வசனங்களைக் கொண்டு?

    ஆணுக்கே அதிக பொறுப்பு எனவே அவனுக்கே அதிக சொத்து என்பது நமது சமாளித்தல்களே அன்றி வேறில்லை. இதையும் குர்ஆனே தெளிவுபடுத்தி விடுகிறது. கீழ் வரும் குர்ஆன் வசனம் 4:11 இதைத் தனியாக குறிப்பிடுகிறது.

    ...... இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள். ஆகையினால் அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும். ....

    மகனா? மகளா? நன்மை செய்வதில் யார் நெருக்கமாக இருப்பர்கள் என்று உங்களுக்கு தெரியாது என்றாலும் இது அல்லாஹ்விடமிருந்துவந்த கட்டளை. அதாவது ஆணுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது, அவனே பெற்றோரை குடும்பத்தை கவனிப்பவனாக இருக்கிறான் என்பதால் அல்ல, அல்லாவின் கட்டளை என்பதால் ஆணுக்கு இரண்டு மடங்கு. பெண்ணே பொறுப்பேற்பவளாக இருந்தாலும் ஆணுக்கு இரண்டு மடங்கு தான்.

    இதில் மறுப்பதற்கோ, விளக்கம் சொல்வதற்கோ வழியில்லாத அளவுக்கு ஆணும் பெண்ணும் சமமல்ல என்று குர்ஆன் தெளிவாகவே கூறிவிடுகிறது. நாம்தான் அவற்றுக்கெல்லாம் சமாளிப்பு விளக்கங்கள் தந்து கொண்டிருக்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  81. Mohamed Shifas:

    Part III:

    குர்ஆன் பெண்களுக்கான சொத்துரிமையை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. மஹர் தொகை பெண்களுக்கானது என்பது குர்ஆனின் நிலைப்பாடு. அதாவது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு அளிக்கும் மணக்கொடை மணப் பெண்ணுக்கே சொந்தம். முகம்மது(ஸல்) அவர்களுக்கு அல்லது இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில் மஹர் பெண்ணுக்கு என்பது பெயரளவில் இருந்தாலும் அதை பெண்ணின் தந்தையே அனுபவித்து வந்தனர். (Note: இதுகுறித்து அவசியமானால் தனித்தலைப்பில் விரிவாக பின்னர் எழுதுகின்றேன்) இதை சீர்திருத்தி குர்ஆன், மஹர் பெண்ணுக்கே உரியது என்கிறது. இந்த கிடக்கையிலிருந்து தான் பெண்ணின் சொத்துரிமைக்கான அங்கீகாரம் கிளைத்து வருகிறது.

    மஹரின் நிர்ப்பந்தத்தினால் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கிய இஸ்லாம் மிகக் கவனமாக அது பெண்களிடம் தங்கி விடாமல் மீண்டும் ஆண்களிடமே வந்து சேரும்படியான ஏற்பாட்டையும் செய்திருக்கின்றது.

    குர்ஆன் வசனம் 4:12 ஐ கவனித்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும்.

    கணவன் இறந்த பின்னர் மனைவிக்கு குழந்தை இருந்தால் எட்டில் ஒரு பங்கும் குழந்தை இல்லை என்றால் நான்கில் ஒருபங்கும்; மனைவி இறந்த பின்னர் கணவனுக்கு குழந்தை இருந்தால் நான்கில் ஒரு பங்கும் குழந்தை இல்லை என்றால் இரண்டில் ஒருபங்கும்.

    இதை மேலோட்டமாக பார்த்தால் ஆணுக்கு இரண்டு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கு என்பது போல்தான் தோன்றும் ஆனால் இதனை ஆணுக்கு நான்கு திருமணம் வரை அனுமதி என்பதோடு இணைத்தேதான் பார்க்க வேண்டும்.

    எடுத்துக்காட்டாக, கணவனுக்கும் அவனது நான்கு மனைவிகளுக்கும் தனித்தனியே 100 ரூபாய் அளவுக்கு சொத்து இருக்கிறது என்று கொண்டால், மனைவிகள் இறந்தால் கணவனுக்கு குழந்தைகள் இருந்தால் 100 ரூபாயும், குழந்தைகள் இல்லாவிட்டால் 200 ரூபாயும் மனைவிகளிடமிருந்து கணவனுக்கு சொத்தாக கிடைக்கும். மாறாக கணவன் இறந்தால் மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லாவிட்டால் ரூபா 6.25 ம், குழந்தைகள் இருந்தால் ரூபா 3.12 ம் கணவனிடமிருந்து மனைவிகளுக்கு தனித்தனியே சொத்தாக கிடைக்கும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இதைமட்டும் எவ்வளவு துல்லியமாக சிந்தித்திருக்கிறார்கள் என்பது விளங்குகிறதா?

    இந்த இடத்தில் இன்னொரு கேள்வியும் எழலாம். என்னதான் இருந்தாலும் இஸ்லாம் பெண்களுக்கான சொத்துரிமையை சட்ட ரீதியாக அங்கீகரித்திருக்கிறதல்லவா என்று. இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில் பெண்களுக்கு அறவே சொத்துரிமை இல்லை என்றெல்லாம் கூறமுடியாது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் அடிமைகள் இருந்ததை சில ஹதீஸ்கள் பதிவு செய்திருக்கின்றன.
    ஷீபா நாட்டு அரசியாக ஒரு பெண் திறம்பட ஆட்சி புரிந்ததாக குர்ஆன் கூட குறிப்பிட்டிருக்கின்றது. முகம்மது (ஸல்) அவர்களின் முதல் மனைவியாகிய கதீஜா (ரலி) அவர்கள் சொந்தமாக பன்னாட்டு வர்த்தக நிறுவனமொன்றை நடத்தி வந்திருக்கின்றார்கள். எனவே இல்லாத ஒன்றை புதிதாக இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிவிடவில்லை. நடப்பில் இருந்ததை சில மாற்றங்களுடன் அங்கீகரித்திருக்கின்றது, அவ்வளவுதான்.

    பல்வேறு வகைகளில் பெண்களை அடக்கி ஒடுக்கி ஆணாதிக்கத்தில் அமர்ந்திருக்கும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய சொத்துரிமையின் பின்னணி இது தான். மேலோட்டமான அனுபவ ரீதியான வசனங்களுக்குள் அறிவியலை அடித்து இறக்கிய அனுபவத்தில், ஆண்குழந்தைக்கு பெண்குழந்தையாய் வேடமிடுவது போல ஆணாதிக்கத்தையே பெண்ணுரிமையாய் உருமாற்றிவிட்டார்கள் என்பதைத்தவிர இதில் வேறொன்றுமில்லை.

    இப்போது புரிகின்றதா, இறைவன் நீதமானவனாக இருக்கும்போது இப்படியான பாகுபாடாக அமைந்த சொத்துரிமைச்சட்டங்கள் அவன் காட்டிய மார்க்கத்திலே எப்படி இருக்க முடியும்? இதனால்தான் இஸ்லாம் திட்டமிடப்பட வகையிலே ஆணாதிக்கவாதிகளால் இடைச்சொருகலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றதோ எனும் நியாயமான ஐயம் ஏற்பட்டுள்ளது.

    அவ்வாறு உள்ளாகவில்லை என்பதை தர்க்கரீதியாக நிரூபிப்பதற்கு முடியாதபோது, இதைச் சொல்பவர்களுக்கு 'பிடி சாபம்' தருவதையெல்லாம் நிறுத்திவிட்டு, எங்கெங்கெல்லாம் நமது இஸ்லாம் திரிபுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது என்ற கோணத்தில்தான் அவற்றைத்தேட வேண்டும். அவற்றைக்கண்டறிவதைக் குறிக்கோளாய் கொண்டு நான், நீங்கள் உட்பட உண்மையான இஸ்லாமிய நேசர்கள் அனைவரும் முயன்று பாடுபடவேண்டும். இதுதான் என் போன்றவர்களின் அவா.

    இதுபற்றிய உங்கள் பிரதிபலிப்பை எழுதுங்கள்.


    ReplyDelete
  82. சகோதரி ஜெஸ்லியா (PART 1)

    உங்களுடைய கேள்வி எனக்கு விளங்கவில்லை, நீங்கள் என்ன கூற வருகின்றீர்கள். நான் உங்களுக்கு தந்த விடயங்கள் அல் குரான் இல் சொல்லப்படுபவை மற்றும் ஹதீஸ்களில் வருபவை.நான் உங்களிடம் கேட்கும் கேள்வி, நீங்கள் எதனை அடிப்படையாக கொண்டு இஸ்லாதினை பின்பற்றுகிறீர்கள்? மேலும் ஒரு முஸ்லிமுடைய வால்க்கை எதனை அடிப்படையாக கொண்டு இருக்கவேண்டும் என்று ஏதிர்பார்க்கிறீர்கள்? குரான் கூறும் விடயங்களில் ஏதும் குறை இருக்கின்றது என்பது உங்களுடைய வாதமா? அல்லது குரானில் ஏதும் இடைச்சொருகல்கள் மேட்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது உங்களுடைய வாதமா? அல்லது ஹதீஸ் கிரந்தங்களில் இடைச்சொருகல்கள் மேட்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது உங்களுடைய வாதமா? ஏன் என்றால் எங்களுக்கு இனி ஒரு இறை தூதர் வரப்போவதில்லை, வேறு ஒரு வேதமும் இறக்கி வைக்கப்படப்போவதும் இல்லை. ஆகவே எங்களுக்கு இருக்கும் அத்தாட்சிகள் அல் குராணும் சஹாபாக்கலால் அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களும் தான், மேலும்

    உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும் (குர்ஆன்) ஞானங்களையும் (ஹிக்ம்) நினைவில் வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவுடையோனும் (யாவையும்) நன்கறிந்தோனுமாக இருக்கின்றான். அல்குர்ஆன் 33:34

    மேற்கண்ட இறை வசனத்தில் ‘கிதாப்’ என்ற குர்ஆனைக் குறிக்க இறைவன் கூறிய சொல்லோடு இணைத்து ‘ஹிக்ம்’ என்ற சொல் ஸுன்னாவையே குறிக்கும் என்று எல்லா அறிஞர்களின் முடிவாகும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் பொதிந்துள்ள குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்தில் அருளவில்லை. அதை ஓதிக் காண்பித்து அதன் வசனங்களை மக்களுக்கு விளக்கிக் காட்ட ஒரு தூதர் மூலமாகவே அருளப்பட்டது. குர்ஆனின் கருத்துக்கள் அந்த இறைத்தூதரின் வாழ்விலும், செயலிலும் நடைமுறைப் படுத்தப்பட்டன.

    அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி வினவப்பட்ட போது “அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே விளங்கியது” என அவர்கள் கூறிய பதிலில் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் உள்ள பிணைப்பு தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே குர்ஆனும், ஹதீஸும் ஒன்றில் ஒன்று தங்கி நிற்கும் ஒரு முழுமையான அங்கமாகும்.

    நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுள்ள வேதமும் உங்களிடம் வந்திருக்கிறது அல்குர்ஆன் 5:15

    மேற்கண்ட இறை வசனத்தின் பிரகாரம் கூறுவதானால் குர்ஆனை வாசிக்க விளங்க ஒளியான ஸுன்னா தேவை என்பது விளங்குகிறது. ஹதீஸ்களின் துணையின்றி விளங்க முயல்வது ஒரு இருட்டில் வாசிக்க முயல்வது போலாகும். இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலமாக எவ்வாறு அறிவிக்கப்பட்டதோ அவ்வாறே அவர்கள் அதற்காக கூறும் மார்க்க விளக்கங்களும் வஹீயின் அடிப்படையில் அமைந்தவையாகும். இதையே பின்வரும் வசனம் நமக்கு கூறுகிறது.

    ReplyDelete
  83. சகோதரி ஜெஸ்லியா (PART 2)

    அவர் தம் இச்சைப்படி (எதனையும்) கூறுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டேயன்றி வேறில்லை.. அல்குர்ஆன் 53:3,4

    இன்று ஒரு சிலர் மேலோட்ட எண்ணத்தில் குர்ஆனில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதுவே போதும், ஹதீஸ்கள் பல மாதிரி இருக்கின்றன. பலகீனமான ஹதீஸ்கள் என்கிறார்கள், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்கிறார்கள், எனவே குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்றதா? நான் கட்டுப்படுகிறேன். ஹதீஸைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை… ஆகவே குர்ஆன் மட்டுமே போதும் என்கிறார்கள். அவர்களது சிந்தனைக்கு சிலவற்றை எடுத்துக் கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

    (மூமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள். அல்குர்ஆன் 24:56

    மேற்கண்ட இறை வசனத்தின் மூலமும் இது போன்ற வேறு வசனங்கள் மூலமும் இறைவன் தொழச் சொல்கிறான். ஜகாத்தைக் கொடுக்கச் சொல்கிறான். ஆனால் குர்ஆனில் எந்த இடத்திலும் எப்படி, எத்தனை ரக்அத்துகள் தொழவேண்டும் என்றோ எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டுமென்றோ விளக்கவில்லை. அதை விளக்கும் கடமையை தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்துள்ளான். இதைத்தான் அந்த வசனத்தின் பிற்பகுதியில் “அவனுடைய தூதருக்கு முற்றிலும் வழிபடுங்கள்” என்று இறைவன் கூறுகின்றான். எனவே, நாம் தொழ வேண்டுமென்றால், ஜகாத் கொடுக்க வேண்டுமென்றால் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னா அடங்கிய ஹதீஸ்களைக் கண்டிப்பாகக் கடை பிடிக்க வேண்டும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

    (நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். அல்குர்ஆன் 16:44

    என்ற இறைக் கட்டளைக்கேற்ப குர்ஆனில் குறிப்பிட்டுள்ள தொழுகை, ஜகாத், ஆண் பெண் உறவு, திருமணம், வியாபாரத் தஒடர்பு, சமூக உறவுகள், வாழ்க்கை நெறி முறைகள் போன்ற பலவற்றையும் வார்த்தைகளால் விளக்கியும், செயல்படுத்தி காட்டியும் நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். குர்ஆன் பொதுவாக “தொழுகையை நிறைவேற்றுவீர்களாக!” என்று கட்டளை பிறப்பிக்கிறது. அந்த தொழுகையை நிறைவேற்றும் நேரங்கள், முறைகள், அதன் ரக்அத்துகள், ருகூவு, சுஜூது போன்றவைகள் ஸுன்னாவிலேயே விளக்கப்படுகிறது. அவற்றை ஹதீஸ்களே நமக்கு விளக்கமளிக்கிறது; குர்ஆனல்ல.

    நோன்போடு தொடர்புடைய (அல்பகரா 187) திருவசனம் அருளப்பட்ட போது அதீபின்ஹாதிம் (ரலி) என்ற நபித்தோழர் இதில் குறிப்பிடப்படும் கய்துள் அப்யழு (வெள்ளை நூல்) கய்தில் அஸ்வதி (கறுப்பு நூல்) என்பது இரண்டு நூல்களைக் குறிக்கிறது என்ற கருத்தைக் கொண்டிருக்க ரசூல் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது இரவின் இருட்டையும், பகலின் வெளிச்சத்தையுமே என்று விளக்கமளித்தார்கள். (அதாரம்: ஸஹீஹ் புகாரி, கிதாபுத் தஃப்ஸீர்) குர்ஆனில் ஜகாத் வசனம் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கூறப்படுகிறது. ஒவ்வொரு பொருளிலும் ஜகாத் அளவிடப்படும் முறை, அதன் பங்கீடு பற்றிய விரிவான விளக்கங்களை ஹதீஸ்களிலேயே காண முடிகிறது.

    “உங்களுக்கு வியாபாரத்தை அல்லாஹ் அனுமதித்து வட்டியை ஹராமாக்கினான்” என குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் எல்லா வகையான வியாபாரத்தையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதையும் மதுபானம், பன்றி இறைச்சி, ஏமாற்றி விற்கும் வியாபார முயற்சிகள் ஆகியவைகளை அனுமதிக்கப்படாத வியாபாரங்கள் என்று ஹதீஸ்களே தெளிவு படுத்துகின்றன.

    திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள். அல்குர்ஆன் 5:38

    திருட்டுக் குற்றத்திற்காக திருடியவர்களின் கரத்தைத் துண்டித்து விடும்படி குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஆனால் இதில் வலக்கரம்தான் முதலில் வெட்டப்பட வேண்டும் என்ற விளக்கத்தை ஹதீஸ்களிலேதான் காணப்படுகிறது. ஒரு கவசத்தின் பெருமதியை விட குறைந்த பெறுமதியுள்ள ஒரு பொருளைத் திருடியதற்காக ஒருவரின் கரம் வெட்டப்படக்கூடாது; புத்தி சுவாதீனமற்றவர்கள்; குழந்தைகள் மேலும் பழங்கள், உணவுப் பண்டங்களைத் திருடிய குற்றத்திற்காக ஒருவரின் கரம் துண்டிக்கப்படக்கூடாது. ஒருவரின் கை மணிக்கட்டு வரைதான் துண்டிக்கப்பட வேண்டும்; முழங்கை வரை அல்ல என்ற விவரங்களை ஹதீஸ்களிலே காண முடிகிறது.

    ReplyDelete
  84. islathai pathi eluthuwathartku neengal ellam mufthihalalla. naai(dog) welayai naai partkavaentum.summa wayauum s....... pothikittu erunga.samuthayathai kulappum kullappawathihala neengal. iruukkavendiya idathil irunthukondal ellam sawukkiyame. islam theryathwarhalin karuthai thyawu seithu comments eil podawendam.owwaruwarum paiyhiyam pidicha na... mathiri erukkanga.

    ReplyDelete
  85. சகோதரி ஜெஸ்லியா (PART 3)

    குர்ஆனில் அந்நிஸா சூராவில் 11,12,176 வசனங்களில் வாரிசுரிமை பற்றிய விதிகளையும், சூரா பகராவில் 226 முதல் 237 வரையிலும் ஸூரா அத்தலாக்கின் 1 முதல் 5 வரை உள்ள வசனம் விவாகரத்து பற்றிய சட்டங்களை ஹதீஸ்களின் துணையின்றி முறையாக விளங்குவதோ செயல்படுவதோ எந்த வகையிலும் முடியாத ஒன்றாகும். குர்ஆனில் பொதுவாக கூறப்படும் இது போன்ற சட்டங்களையும் கடமைகளையும் நபி (ஸல்) அவர்களின் விளக்கம் நிறைந்த ஹதீஸ்கள் அல்லவா நமக்கு விரிவாக விளக்குகின்றன.

    ஃபர்ளு தொழுகைக்கு முன் பின் சுன்னத் தொழுகைகள், தஹிய்யதுல் மஸ்ஜித், பெருநாள் தொழுகை, ஜனாஸா தொழுகை, இஸ்திகாரா, லுஹா போன்ற தொழுகைகளின் குறிப்புகள் குர்ஆனில் இல்லை. இவையெல்லாம் ஹதீஸ்களிலே காணப்படுகிறது. இப்படி… குர்ஆனை விளங்க குர்ஆனில் கூறப்பட்ட இறைக்கட்டளையை நிறைவேற்ற ஹதீஸ்களே மிக முக்கியம் என்பதை எடுத்துக் கூறுவதானால் இக்கட்டுரை மிகமிக நீண்டு விடும்.

    (நபியே!) நீர் கூறுவீராக நீங்கள் எனக்கு வழிப்பட்டு நடப்பீர்களேயானால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான். அல்குர்ஆன் 48:16

    அல்லாஹ்வுக்கும் (அவனது) தூதருக்கும் வழிபடுங்கள், அன்றியும் நீங்கள் செய்பவற்றை யெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனே. அல்குர்ஆன் 58:13, 3:33

    (மூஃமீன்களே) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜக்காத்தை கொடுங்கள்; மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள். அல்குர்ஆன் 24:56

    எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52

    மேலும் மார்க்கத்தை விளங்க குர்ஆன் மட்டும் போதும் என்பவர்கள் உண்மையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பல குர்ஆன் வசனங்களை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை உணர வேண்டும். மேலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் குர்ஆனையே மறுக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

    மேலும் ஹதீஸ்களில் பலவீனமானை; இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் நுழைந்து விட்டன; யூதர்கள் சதி செய்து நுழைத்து விட்டார்கள்; ஆகவே ஹதீஸ்களை எடுக்க முடியாது என்று கூறி அவற்றை மறுப்பதும் அறிவுக்கு பொருத்தமற்றச் செயலாகும். இறைவனின் பெயரால் பல மூட நம்பிக்கைகளும், அனாச்சாரங்களும், ஏமாற்று வேலைகளும் நுழைந்து விட்டன; இடத்தரகர்களான ஒரு சிரு கூட்டம் பெருங்கூட்டமான மக்களை ஏய்த்துப் பிழைக்க வழி ஏற்பட்டு விட்டது; அதனால் அந்த இறைவனே இல்லை என்று கூறி ஒரே இறைவனையும் மறுக்கும் நாஸ்திகம் பேசும் அரைக் கிணறு தாண்டுகிறவர்களுக்கும், பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் காரணம் காட்டி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லை. இவர்களும் அரைக்கிணறு தாண்டுபவர்களே என்பதை உணர வேண்டும்.

    இடைத்தரகர்களை ஒழித்துக்கட்டி சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் அமையப் பாடுபடுவது எந்த அளவு அவசியமோ அதே போல் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தெளிவாக அடையாளம் கண்டு அவற்றை நிராகரிப்பதோடு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை எடுத்து நடக்க முன்வர வேண்டும்.
    மேட்கூரப்பட்டவைகளில் இருந்து உங்களுக்கு விளங்குவது என்ன? நீங்கள் எதில் குறை காண்கிறீர்கள்? யார் மேல் உங்களுக்கு கோபம்? இடைச்சொருகல்க்ளை மேட்கொள்வோர்கள் யார்?

    ReplyDelete
  86. Jesslya jessly

    இஸ்லாத்தை பற்றிய முழுமையான தெளிவும் இல்லாமல் வரலாறும் தெறியாமல் தான் நீங்கள் விமர்சிக்கின்றீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது..


    இஸ்லாம் ஒரு பூரணமான மார்க்கம், அதிலே எந்த குறையும் இல்லை, இறவனுடைய வசங்களை ஆராய்ந்து அது இறைவனால் இறக்கப்பட்ட வேதம் தான் என்று உறுதியான பின்னர் அதை ஏற்கும் ஒருவர் அதிலே சந்தேக‌ங்கள் எழும் போது அவற்றை ஆரய்ந்து புரிந்து கொள்ள முயற்சிப்பதில் தவறில்லை ஆனால் தனது அறிவிற்கு அதை புரிந்து கொள்ள முடியாவிட்டால் தனது மட்டுபடுத்தப்பட்ட அறிவிற்கு இது புரியவில்லை ஆனால் இறைவ்னின் கட்டளைகளில் எந்த வித அநீதமோ பாகுபாடோ இருக்காது என்ற நிலைப்பாட்டை தான் எடுக்க முடியும்.

    அல்லது எனது அறிவு பூரணமானது இறைவன் தான் குறையுள்ளவன் என்று சொல்பவர்கள் இஸ்லாத்தை அது இறை வேதமல்ல என்று மறுத்து வெளியே நிற்கலாம். இஸ்லாத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை.


    உங்கள் விமர்சனங்கள் ஒரு முஸ்லிமுக்கு வரும் சந்தேகங்களாக அல்லாமல் இஸ்லாம் குறையான மார்க்கம் என்ற முடிவோடு விமர்சிப்பதாகவே இருக்கிறது அதற்கு உங்கள் வசங்களும் உங்கள் தளத்திலே உள்ள வார்த்தைகளும் சாட்சி..

    "பாலை வன கொள்கை எல்லா கலாச்சாரத்திற்கும் பொருந்தாது"

    "இஸ்லாம் நடப்பிலிருக்கும் ஏனைய மதங்களுடன் ஒப்பிட்டால் சிறப்பானதே,

    ஆனால் அது ஏனைய மதங்களைப் போலவே எப்போதோ காலவதியாகிவிட்டது."

    எல்லாவற்ருக்கும் மேலாக 1400 ஆண்டுகளுக்கு முன் சிந்தித்து எழுதி வைத்ததுதான் குர் ஆன் என்று மொத்தமாவே குர் ஆன் மனிதர்களால் எழுதப்பட்டது என்பது மாதிரி எழுது கிறீர்கள்.

    இப்படி தீர்மானமே எடுத்து விட்டு என் சந்தேகங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் என்ற உங்கள் கோஷம் வெறும் வேஷமே!

    மயக்கத்திலிருப்பவர்களை எழுப்பலாம் ஆனால் நடிப்பவர்களை எவ்வளவு முயற்சித்தாலும் எழுப்ப முடியாது

    உங்கள் கேள்விகளுக்கு வரிக்கு வரி பதில் அளிக்க முடியும்..பதில் அளிப்போம் ஆனால் உங்கள் போலி வேஷத்தை முதலில் கழையுங்கள்..

    என்னை பொறுத்த வரை இஸ்லாம் இறை மார்க்கமல்ல என்பதுதான் எனது நிலைப்பாடு என்று வெளிப்படையாக சொல்லுங்கள்..அதைதான் வெவேறு வார்த்தை களில் சூஷகமாக சொல்லிக் அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லிக் கொண்டிடருக்கின்றீர்கள்..



    ReplyDelete
  87. சகோதரி ஜெஸ்லியா (PART 4)

    இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும். பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும் பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் நிலையில் - இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது என்ற நிலையில் - ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.
    இஸ்லாம் மார்க்கத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை.

    அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களுக்கே கூடுதல் சுமை. இஸ்லாமியச் சமூக அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது கூடுதலான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண் தனது மனைவிக்கு உணவும், உடையும், உறைவிடமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான். ஒரு பெண் தன் கணவனுக்காக இதைச் செய்ய வேண்டியதில்லை. ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான். குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள். தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் தூரத்து, நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சிரம தசையிலிருக்கும் போது அவர்களையும் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது. பெண்களைப் பொறுத்த வரை இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது. இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமின்றி ஏனைய சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் காணலாம். இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை குறை கூறக் கூடியவர்கள். யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும் யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும் வழங்குவது எந்த விதத்தில் அநீதியாகும்?

    ReplyDelete
  88. சகோதரி ஜெஸ்லியா (PART 5)

    ஒரு ஆண், வாரிசுரிமை மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது கடமைகள் உள்ளன. ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது. தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பது தெளிவு! பெண்ணின் சொத்து அன்னியருக்குச் சேரும். ஒவ்வொரு மனிதனும் தனது சொத்துக்கள் தன் மரணத்திற்குப் பிறகு தன் இரத்த சம்மந்தமுடையவர்களுக்குச் சேர வேண்டுமென விரும்புகிறான். தன் குடும்பத்திற்குள்ளேயே அந்தச் சொத்துக்கள் செலவிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான். இந்த விருப்பத்தில் நியாயமும் இருக்கின்றது. எல்லா மனிதரும் விரும்பக் கூடிய இந்த விருப்பம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது நிறைவேற்றப் படுவதற்கு வாரிசுரிமைச் சட்டத்தில் இந்தப் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், மனைவியும் சில சகோதர சகோதரிகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சகோதர சகோதரிகள் மிகவும் ஏழ்மையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அவனது மரணத்திற்குப் பின்னர் அவனது மகளுக்குச் சேரும் ஒரு பங்கு அவனது இரத்த பந்தங்களுக்குச் செலவிடப்படாது. அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேரும். அந்த மகள் தனக்கே அதை வைத்துக் கொள்ள முடியும் என்றாலும் கணவனுக்காக அனைத்தையும் வழங்கி விடுதல்' என்ற பலவீனம் இல்லாத பெண்கள் அரிது. கணவனின் நலனுக்காகக் காதுகளில் கழுத்துகளில் கிடப்பதைக் கூட கழற்றிக் கொடுப்பவர்களைக் காண்கின்றோம். இந்த பலவீனத்தினால் அவளுக்குக் கிடைக்கின்ற வாரிசுச் சொத்துக்கள் தாமாக இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன. அந்த மகனுக்குக் கிடைத்த இரு மடங்குச் சொத்துக்கள் தந்தையின் இரத்த சம்மந்தமான உறவுகளுக்காகவும், அவனையும் அவளையும் பெற்ற தாய்க்காகவும் செலவிட ஏற்ற வகையில் இறந்தவனின் குடும்பத்தையே சுற்றி வருகின்றன. இறந்தவனின் இயல்பான விருப்பம் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு விடுகின்றது. இந்தக் காரணத்தைச் சிந்திக்கும் போது ஆண்களுக்குச் சிறிது அதிகமாக வழங்குவதில் எந்த அநியாயமும் இல்லை என்பதை உணரலாம். பெண் கைவிடப்பட்டால் பிறந்த வீடு தான் அவளைப் பாமரிக்க வேண்டும். பெண்கள் பலவீனர்களாக இருப்பதனால் அவர்களுக்குக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று முஸ்லிமல்லாதார் கூறுகின்றனர். பெண்கள் பலவீனர்களாக இருப்பதும் அவர்களின் பங்கைக் குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று நாம் கூறுகிறோம். அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கணவனாலும், கணவனது குடும்பத்தினராலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற சொத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். எடுத்துக் கொள்ளப்படுவது கூட பிரச்சனையில்லை. எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அவள் தள்ளப் பட்டும் விடலாம். இந்த நிலையில் அவளது வருங்காலப் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? அவள் பிறந்தகம் தான் வந்தாக வேண்டும். அவளது உடன் பிறந்தவன் தான் அவளையும் பராமரிக்க வேண்டும். அவளை விடச் சிறிது கூடுதலாக அவன் பெற்றிருந்தால் தான் உடன் பிறந்தவள் மீது பச்சாதாபம் ஏற்பட முடியும். அவளைத் தொடர்ந்து பராமரிக்க முடியும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பங்குகள் என்று பிரிக்கப் பட்டால் 'பாதிச் சொத்தைப் பெற்றுச் சென்றாளே? எனக்குக் கிடைத்தது போன்று தானே இவளுக்கும் கிடைத்தது? இவளை ஏன் நான் கவணிக்க வேண்டும்' என்ற எண்ணம் சகோதரர்களுக்கு ஏற்பட்டு அவள் புறக்கணிக்கப்படுவாள்.

    ReplyDelete
  89. சகோதரி ஜெஸ்லியா (PART 6)

    ஆண் இரண்டு பங்கைப் பெற்றிருந்தால் நம் சகோதரிக்குக் கிடைத்தது போல் இரு மடங்கை நாம் பெற்றுள்ளோம். எனவே சகோதரியையும் இந்த இக்கட்டான நேரத்தில் நாம் தான் கவணிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெண்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக அமையும். சொத்தைப் பெருக்குவதில் ஆண்களின் பங்கு அதிகம். பெரும்பாலும் சொத்துக்களைப் பெருக்குவதில் ஆண்களே உறுதுணையாக உள்ளனர். ஒரு தந்தைக்கு ஒரு மகனும் மகளும் இருந்தால் அந்தத் தந்தைக்குச் சொந்தமான நிறுவனங்களில் தந்தைக்கு உறுதுணையாக ஆண்களே இருக்கின்றனர். சொத்து பெருகுவதில் ஆண்களுக்கே அதிக உழைப்பு உண்டு என்பதும் பாரபட்சம் காட்டப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும். பெரும்பாலும் பெண்கள் தந்தையின் சொத்து வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதில்லை. யார் சொத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாக பாகங்கள் வழங்குவதை அநியாயம் என்று எப்படிக் கூற முடியும்? தந்தையிடமிருந்து அதிகம் பெறுவது பெண்களே. உணவு, உடை போன்ற செலவினங்கள் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் சம அளவில் செய்யப்பட்டாலும் இதர வகையில் பெண்களுக்கென்று ஆண்களை விடக் கூடுதலாக செலவு செய்யப்படுகின்றது. ஒரு தந்தைக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தால் அந்த மகளுக்காக அந்தத் தந்தை ஆபரணங்கள், நகைகள் என்று செய்து போட்டு அழகு பார்க்கிறார். இவை வெறும் அழகு சாதனங்கள் மட்டுமல்ல. பெரும் சொத்துக்களாகவும் உள்ளன. வசதி படைத்தவர்கள் தங்கள் பெண்களுக்காக இலட்சக் கணக்கிலும் வசதியே இல்லாதவர்கள் பல ஆயிரங்களுக்கும் நகைகள் செய்து போடுகின்றனர். இது அந்தப் பெண்களின் சொத்தாகவே ஆகி விடுகின்றது. இது தவிர திருமணத்தின் போது மகளுக்காகச் சீர் என்று பல சாதனங்களையும் தந்தை வழங்குகின்றார். தந்தையின் சொத்தில் ஆண்கள் அனுபவிப்பதை விடக் கூடுதலாக பெண்கள் அனுபவிக்கிறார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள சொத்துக்களில் தான் இரண்டுக்கு ஒன்று' என்ற விகிதாச்சாரம் பேணப்படுகின்றதேயன்றி தந்தை உயிருடனிருக்கும் போது பெண்களே அதிக அளவில் பெற்றுக் கொள்கிறார்கள். இது போன்ற நியாயமான காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதை நாம் உணரலாம். 2.8.2001 தினமணி நாளேட்டில் (சென்னை பதிப்பு) 'சொத்தில் சமபங்கு! கடமையில்?' என்ற கட்டுரை வெளியானது. சுதந்திர தயாகான் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சத்தை சிந்தித்தால் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டம் எவ்வளவு அறிவுப்பூர்வமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கட்டுரையின் முக்கியப் பகுதி இதோ... ...'எனவே, சொத்தில் சம உரிமை என்பது அதிசயிக்கத்தக்க ஒரு விஷயம் அல்ல. எனினும் சொத்தில் சம உரிமை கொடுக்கப்படும் போது, கடமையிலும் பெண் குழந்தைகள் பங்கு கொள்கிறார்களா என்பது ஆராய வேண்டிய ஒன்று. ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நல்ல வரண் பார்த்து, ஒரு லட்சத்திற்கு நகை, ஒரு லட்சம் திருமணச் செலவு எனப் பெற்றோர் மணம் முடித்து வைக்கிறார்கள். பேறு காலம் பார்த்து, விருந்துக்கு அழைத்து, விடுமுறைக்கு அழைத்து மகிழ்விக்கின்றனர். பின், ஆண் பிள்ளைகளுக்கு கொடுப்பது போல், பணம், வீடுவாசல் என சொத்திலும் சம பங்கு அளிக்கின்றனர்.அவ்வாறு செய்யும் பெற்றோர், வயதான காலங்களில், முடியாத காலங்களில், பெண் பிள்ளைகளுடன் சென்று தங்கி, அவர்கள் கண்காணிப்பில் இருக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே. கிடைத்த வரை பெற்றுக் கொண்டு, கொடுத்தவர்களுக்கு முடியாத காலங்களில் அவர்களைக் கவனிக்க வேண்டிய கடமை மகனுக்கு மட்டுமே என்ற நடைமுறை மாற வேண்டும். தன் மனைவி வீட்டில் சகலமும் அனுபவிக்கும் மருமகன், தன் மாமனார், மாமியாரை, அவர்களின் வயதான காலங்களில் தம்முடன் வைத்துப் பராமரிக்க முன் வரவேண்டும். 'உரிமை மகளுக்கு கடமை மகனுக்கு' என்ற நிலை வரும் போது மகனும் மருமகளும் சற்று சோர்வடைவதில் வியப்பில்லை.

    ReplyDelete
  90. சகோதரி ஜெஸ்லியா (PART 7)

    ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். சொத்தில் சம உரிமை பெறுவதால், தம் சகோதரியும் பெற்றோரைக் கவனித்தால் என்ன? என்று சகோதரர்கள் நினைப்பது இயற்கை. சகோதரிகளுக்கும், பெற்றோருக்கும் கடமை செய்ய மாத்திரமே ஆண் மகன் என்ற நிலை மாற வேண்டும். உரிமையில் சமம் எனில், கடமையிலும் சமபங்கு வகிக்கப் பெண் குழந்தைகள் நிர்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. முதியோர் இல்லங்கள் பெருகுவது ஒருவேளை, பெண் குழந்தைகளுக்கு உரிமை (மட்டும்) சமபங்கு கொடுக்கப் படுவதால் ஏற்பட்ட கால மாற்றத்தின் விளைவோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.' இவ்வாறு அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் கூறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் அமுல் படுத்தப்பட்டால் இந்த தீய விளைவுகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க இயலும். 'பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு' என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது. பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் காட்டப்படும் இந்த வித்தியாசம் முற்றிலும் நியாயமானதே! அறிவுக்குப் பொருத்தமானதே!

    ஆகவே நீங்கள் மேட்கூரப்பட்ட விடயங்களையும் உங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  91. Jesslya jessly

    அறியாமை காலத்தில் பென்களுக்கு சொத்துரிமை இருந்ததாக நீங்கள் கூறுவது வரலாறு பற்றிய உங்கள் அறியாமையே பெண்களுக்கு ஆன்மாவே இல்லை என்று கூறிய சமுதாயம் அது சில செல்வந்த பெண்கள் வாழ்ந்தார்கள் என்பதற்காக அச்செல்வத்தை சொத்து பங்கீடு மூலம் தான் அவர்கள் பெற்றார்கள் என்பது உங்கள் யூகம்தான்
    வரலாற்றை யூகிக்காமல் தேடி படியுங்கள்.

    இஸ்லாத்தில் பெண்களுக்கான சொத்துரிமை பற்றிய உங்கள் விமர்சனங்களுக்கான பதில்கலை கீழே பாருங்கள்

    Part 1

    இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும். பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும் பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் நிலையில் - இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது என்ற நிலையில் - ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.

    இஸ்லாம் மார்க்கத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை. இஸ்லாம் மார்க்கம் தான் முதலில் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியது. இஸ்லாம் மார்க்கம் வந்த பின்பு கூட பல நூற்றாண்டுகளாக முஸ்லிமல்லாத சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததில்லை. பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று சமீப காலத்தில் தான் நமது நாட்டில் சில பகுதிகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக அரசு பெற்றோர்களின் சொத்துக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவிலான உரிமை உண்டு என்று கருணாநிதி ஆட்சியின் போது சட்டமியற்றியது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது. அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ReplyDelete
  92. Part 2

    அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களுக்கே கூடுதல் சுமை. இஸ்லாமியச் சமூக அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது கூடுதலான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண் தனது மனைவிக்கு உணவும், உடையும், உறைவிடமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான். ஒரு பெண் தன் கணவனுக்காக இதைச் செய்ய வேண்டியதில்லை. ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான். குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள். தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் தூரத்து, நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சிரம தசையிலிருக்கும் போது அவர்களையும் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது. பெண்களைப் பொறுத்த வரை இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது. இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமின்றி ஏனைய சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் காணலாம். இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை குறை கூறக் கூடியவர்கள். யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும் யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும் வழங்குவது எந்த விதத்தில் அநீதியாகும்? ஒரு ஆண், வாரிசுரிமை மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது கடமைகள் உள்ளன. ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது. தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பது தெளிவு!

    ReplyDelete
  93. Part 3

    பெண்ணின் சொத்து அன்னியருக்குச் சேரும். ஒவ்வொரு மனிதனும் தனது சொத்துக்கள் தன் மரணத்திற்குப் பிறகு தன் இரத்த சம்மந்தமுடையவர்களுக்குச் சேர வேண்டுமென விரும்புகிறான். தன் குடும்பத்திற்குள்ளேயே அந்தச் சொத்துக்கள் செலவிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான். இந்த விருப்பத்தில் நியாயமும் இருக்கின்றது. எல்லா மனிதரும் விரும்பக் கூடிய இந்த விருப்பம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது நிறைவேற்றப் படுவதற்கு வாரிசுரிமைச் சட்டத்தில் இந்தப் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், மனைவியும் சில சகோதர சகோதரிகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சகோதர சகோதரிகள் மிகவும் ஏழ்மையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அவனது மரணத்திற்குப் பின்னர் அவனது மகளுக்குச் சேரும் ஒரு பங்கு அவனது இரத்த பந்தங்களுக்குச் செலவிடப்படாது. அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேரும். அந்த மகள் தனக்கே அதை வைத்துக் கொள்ள முடியும் என்றாலும் கணவனுக்காக அனைத்தையும் வழங்கி விடுதல்' என்ற பலவீனம் இல்லாத பெண்கள் அரிது. கணவனின் நலனுக்காகக் காதுகளில் கழுத்துகளில் கிடப்பதைக் கூட கழற்றிக் கொடுப்பவர்களைக் காண்கின்றோம். இந்த பலவீனத்தினால் அவளுக்குக் கிடைக்கின்ற வாரிசுச் சொத்துக்கள் தாமாக இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன. அந்த மகனுக்குக் கிடைத்த இரு மடங்குச் சொத்துக்கள் தந்தையின் இரத்த சம்மந்தமான உறவுகளுக்காகவும், அவனையும் அவளையும் பெற்ற தாய்க்காகவும் செலவிட ஏற்ற வகையில் இறந்தவனின் குடும்பத்தையே சுற்றி வருகின்றன. இறந்தவனின் இயல்பான விருப்பம் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு விடுகின்றது. இந்தக் காரணத்தைச் சிந்திக்கும் போது ஆண்களுக்குச் சிறிது அதிகமாக வழங்குவதில் எந்த அநியாயமும் இல்லை என்பதை உணரலாம். பெண் கைவிடப்பட்டால் பிறந்த வீடு தான் அவளைப் பாமரிக்க வேண்டும். பெண்கள் பலவீனர்களாக இருப்பதனால் அவர்களுக்குக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று முஸ்லிமல்லாதார் கூறுகின்றனர். பெண்கள் பலவீனர்களாக இருப்பதும் அவர்களின் பங்கைக் குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று நாம் கூறுகிறோம். அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கணவனாலும், கணவனது குடும்பத்தினராலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற சொத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். எடுத்துக் கொள்ளப்படுவது கூட பிரச்சனையில்லை. எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அவள் தள்ளப் பட்டும் விடலாம். இந்த நிலையில் அவளது வருங்காலப் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? அவள் பிறந்தகம் தான் வந்தாக வேண்டும். அவளது உடன் பிறந்தவன் தான் அவளையும் பராமரிக்க வேண்டும். அவளை விடச் சிறிது கூடுதலாக அவன் பெற்றிருந்தால் தான் உடன் பிறந்தவள் மீது பச்சாதாபம் ஏற்பட முடியும். அவளைத் தொடர்ந்து பராமரிக்க முடியும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பங்குகள் என்று பிரிக்கப் பட்டால் 'பாதிச் சொத்தைப் பெற்றுச் சென்றாளே? எனக்குக் கிடைத்தது போன்று தானே இவளுக்கும் கிடைத்தது? இவளை ஏன் நான் கவணிக்க வேண்டும்' என்ற எண்ணம் சகோதரர்களுக்கு ஏற்பட்டு அவள் புறக்கணிக்கப்படுவாள். ஆண் இரண்டு பங்கைப் பெற்றிருந்தால் நம் சகோதரிக்குக் கிடைத்தது போல் இரு மடங்கை நாம் பெற்றுள்ளோம். எனவே சகோதரியையும் இந்த இக்கட்டான நேரத்தில் நாம் தான் கவணிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெண்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக அமையும். சொத்தைப் பெருக்குவதில் ஆண்களின் பங்கு அதிகம். பெரும்பாலும் சொத்துக்களைப் பெருக்குவதில் ஆண்களே உறுதுணையாக உள்ளனர். ஒரு தந்தைக்கு ஒரு மகனும் மகளும் இருந்தால் அந்தத் தந்தைக்குச் சொந்தமான நிறுவனங்களில் தந்தைக்கு உறுதுணையாக ஆண்களே இருக்கின்றனர். சொத்து பெருகுவதில் ஆண்களுக்கே அதிக உழைப்பு உண்டு என்பதும் பாரபட்சம் காட்டப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும். பெரும்பாலும் பெண்கள் தந்தையின் சொத்து வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதில்லை. யார் சொத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாக பாகங்கள் வழங்குவதை அநியாயம் என்று எப்படிக் கூற முடியும்?

    ReplyDelete
  94. Part 4

    தந்தையிடமிருந்து அதிகம் பெறுவது பெண்களே. உணவு, உடை போன்ற செலவினங்கள் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் சம அளவில் செய்யப்பட்டாலும் இதர வகையில் பெண்களுக்கென்று ஆண்களை விடக் கூடுதலாக செலவு செய்யப்படுகின்றது. ஒரு தந்தைக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தால் அந்த மகளுக்காக அந்தத் தந்தை ஆபரணங்கள், நகைகள் என்று செய்து போட்டு அழகு பார்க்கிறார். இவை வெறும் அழகு சாதனங்கள் மட்டுமல்ல. பெரும் சொத்துக்களாகவும் உள்ளன. வசதி படைத்தவர்கள் தங்கள் பெண்களுக்காக இலட்சக் கணக்கிலும் வசதியே இல்லாதவர்கள் பல ஆயிரங்களுக்கும் நகைகள் செய்து போடுகின்றனர். இது அந்தப் பெண்களின் சொத்தாகவே ஆகி விடுகின்றது. இது தவிர திருமணத்தின் போது மகளுக்காகச் சீர் என்று பல சாதனங்களையும் தந்தை வழங்குகின்றார். தந்தையின் சொத்தில் ஆண்கள் அனுபவிப்பதை விடக் கூடுதலாக பெண்கள் அனுபவிக்கிறார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள சொத்துக்களில் தான் இரண்டுக்கு ஒன்று' என்ற விகிதாச்சாரம் பேணப்படுகின்றதேயன்றி தந்தை உயிருடனிருக்கும் போது பெண்களே அதிக அளவில் பெற்றுக் கொள்கிறார்கள். இது போன்ற நியாயமான காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதை நாம் உணரலாம். 2.8.2001 தினமணி நாளேட்டில் (சென்னை பதிப்பு) 'சொத்தில் சமபங்கு! கடமையில்?' என்ற கட்டுரை வெளியானது. சுதந்திர தயாகான் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சத்தை சிந்தித்தால் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டம் எவ்வளவு அறிவுப்பூர்வமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கட்டுரையின் முக்கியப் பகுதி இதோ...

    ReplyDelete
  95. Part 5

    கட்டுரையின் முக்கியப் பகுதி இதோ... ...'எனவே, சொத்தில் சம உரிமை என்பது அதிசயிக்கத்தக்க ஒரு விஷயம் அல்ல. எனினும் சொத்தில் சம உரிமை கொடுக்கப்படும் போது, கடமையிலும் பெண் குழந்தைகள் பங்கு கொள்கிறார்களா என்பது ஆராய வேண்டிய ஒன்று. ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நல்ல வரண் பார்த்து, ஒரு லட்சத்திற்கு நகை, ஒரு லட்சம் திருமணச் செலவு எனப் பெற்றோர் மணம் முடித்து வைக்கிறார்கள். பேறு காலம் பார்த்து, விருந்துக்கு அழைத்து, விடுமுறைக்கு அழைத்து மகிழ்விக்கின்றனர். பின், ஆண் பிள்ளைகளுக்கு கொடுப்பது போல், பணம், வீடுவாசல் என சொத்திலும் சம பங்கு அளிக்கின்றனர்.அவ்வாறு செய்யும் பெற்றோர், வயதான காலங்களில், முடியாத காலங்களில், பெண் பிள்ளைகளுடன் சென்று தங்கி, அவர்கள் கண்காணிப்பில் இருக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே. கிடைத்த வரை பெற்றுக் கொண்டு, கொடுத்தவர்களுக்கு முடியாத காலங்களில் அவர்களைக் கவனிக்க வேண்டிய கடமை மகனுக்கு மட்டுமே என்ற நடைமுறை மாற வேண்டும். தன் மனைவி வீட்டில் சகலமும் அனுபவிக்கும் மருமகன், தன் மாமனார், மாமியாரை, அவர்களின் வயதான காலங்களில் தம்முடன் வைத்துப் பராமரிக்க முன் வரவேண்டும். 'உரிமை மகளுக்கு கடமை மகனுக்கு' என்ற நிலை வரும் போது மகனும் மருமகளும் சற்று சோர்வடைவதில் வியப்பில்லை. ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். சொத்தில் சம உரிமை பெறுவதால், தம் சகோதரியும் பெற்றோரைக் கவனித்தால் என்ன? என்று சகோதரர்கள் நினைப்பது இயற்கை. சகோதரிகளுக்கும், பெற்றோருக்கும் கடமை செய்ய மாத்திரமே ஆண் மகன் என்ற நிலை மாற வேண்டும். உரிமையில் சமம் எனில், கடமையிலும் சமபங்கு வகிக்கப் பெண் குழந்தைகள் நிர்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. முதியோர் இல்லங்கள் பெருகுவது ஒருவேளை, பெண் குழந்தைகளுக்கு உரிமை (மட்டும்) சமபங்கு கொடுக்கப் படுவதால் ஏற்பட்ட கால மாற்றத்தின் விளைவோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.' இவ்வாறு அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் கூறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் அமுல் படுத்தப்பட்டால் இந்த தீய விளைவுகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க இயலும். 'பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு' என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது. பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் காட்டப்படும் இந்த வித்தியாசம் முற்றிலும் நியாயமானதே! அறிவுக்குப் பொருத்தமானதே!

    Reference:

    http://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/pengaluku_pathi_soththu_en/

    ReplyDelete
  96. jessly.

    Mohamed Shifa and Abu Jaza இரண்டு பேரும் உங்களுக்கு சரியான ஆதாராத்துடன் நிருபித்தும் நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்கள் காரணம் எதனை பேர் ஏற்றுக்கொண்டாலும் எனது அறிவிற்கு ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது அதனால் நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்பது உங்களது பிடிவாதம்.
    மற்றவர்களிடம் கேட்கின்றீர்கள் உண்மையைச்சொன்னால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டுமென்று ஆனால் உங்களுக்கு வேண்டாமா அந்தப்பக்குவம்? . கேட்ட கேள்விகளுக்கு பதிலைத்தருவதை விட தேவையில்லாத விடயங்களுக்குள் ஏன் நுழைகின்றீர்கள் என்று கேட்கின்றீர்களே நான் கேட்ட கெள்வி ஒன்றுதான் அதெற்கென்ன பதிலே தரவில்லையே!! உங்ளால் முடியவில்லையா? அல்லது புத்திசாலித்தனமாக நழுவிட்டோமென்ற எண்ணமா? எனது கெள்வி இஸ்லாத்தில் முரண்பாடு இருப்பதனால்தானா உலகில் எத்தனையோ பேர் இன்று இஸ்லாத்த உண்மையான மதமாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
    ஆதாரமில்லாமல் ஆரம்பத்தில் உங்கள் மனதில் ஆழமாகப்பதிந்த விடயங்கள் சிலவற்றை ஆதரங்களைக்கண்டும் உங்கள் மனம் ஏற்கமறுக்கின்றது. இதைவிட விளக்கிச்சொல்லவேண்டுமா? இவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் ஆதாரங்களுடனும் சொல்லப்பட்டவிடயங்களை நீங்கள் புறக்கணித்துவிட்டு நீங்கள் சொல்வதைத்தான் நியாயமென்றும் மற்றவர்களும் இறைவனும் அல் குர் ஆனும் உங்களுக்கு தவறாகத்தெரிகின்றதா? மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லவிரும்புவது என்னவென்றால் இன்னும் சிந்தியுங்கள் வேறு வேறு வழியில் சிந்தியுங்கள் Dr. Sakir Naik உடைய பேச்சுக்களை கேழுங்கள் அல் குர் ஆன தப்சீர் வாங்கிப்பாருங்கள் அல் ஹதிஸ் வாங்கிப்படியுங்கள் அப்போது உங்களுக்கு புரியும் இஸ்லாத்தில் இடைச்செருகல் இருக்கின்றதா இல்லையா என்பது.

    சகோதரர்கள் Mohamed Shifa and Abu Jaza
    உங்கள் இருவருக்கும் இன்னும் புரியவில்லையா jessly இன் நிலைப்பாடு. நான் ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்திக்கொண்டுள்ளேன் எனது பின்னூட்டத்தை. ஜெஸ்லியின் கருத்துக்களிலிருந்து நான் ஒரேவிடயத்தைப்பெற்றுகொண்டேன். சகோதரர்களே முடிந்தளவும் முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  97. நண்பர்களே,

    இதுவரையிலான நமது பின்னூட்ட பரிமாறல்களை நான் பொறுமையாக மீட்டிப் பார்த்தேன். நான் கூறியவற்றையும் எனக்குக் கூறப்பட்டவற்றையும் பார்த்தபோது விவாதம் ஓர் இலக்கின்றி அல்லாடிக்கொண்டிருப்பது புரிகின்றது.

    ஆயினும் நமக்குக் காலம் காலமாகப் பழகிப்போன விடயங்களை வித்தியாசமான கோணங்களிலும் கூட நோக்க முடியும் என்பதற்குரிய சில துணிச்சலான முன்னெடுப்புகளை நமது வாசகர்கள் புரிந்து கொள்ள உதவியிருக்கும் என்பது தவிர, இதனை இனியும் தொடர்வதிலே அர்த்தமில்லை என்பதால் இத்தோடு முடித்துக்கொள்வது நலம் என்று தோன்றுகின்றது.

    எனவே இறுதியாக சில விடயங்களைக் கூறிவிடுகின்றேன்:

    ஒரு பொது ஊடகத்திலே இடம்பெறும் விவாதம் ஒன்றிலே மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாதிருப்பதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோடு மட்டும் சம்பந்தமானது அல்ல. அந்தக்கருத்துக்கள் எவ்வளவுதூரம் உண்மையானவை மற்றும் நடுநிலையானவை என்பதையும் பொறுத்ததுதான்.

    'நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஏற்றுக்கொள்கின்றீர்களில்லையே' என்று பிலாக்கணம் வைப்பதற்குப்பதிலாக உங்கள் கருத்துக்கள் எவ்வளவு தூரம் எதிர்தரப்பு முன்வைத்த வினாக்களுக்கு பொருத்தமான பதிலாக அமைந்திருந்தது என்பதையும் பரிசீலித்திருக்கலாம்.

    நான் எனது ஆரம்பப் பின்னூட்டமொன்றிலே இரு எளிமையான கேள்விகளை முன்வைத்திருந்தேன். இதுவரை நீங்கள் பத்திபத்தியாக அடைப்புக்குறிகளோடு எழுதிக்கொண்டிருக்கின்றீர்களே தவிர அவை அவ்விரு வினாக்களுக்கும் அருகிலே கூட நெருங்கவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.

    அதற்குக் காரணம் யாதெனில்..

    பெண்களுக்கு சமவாய்ப்பு என்பது, இன்றுள்ள -இடைச்செருகலுக்குள்ளா யிருக்கும் வாய்ப்புள்ளது என்று கருதப்படும்- குர்ஆனிலே கிடையாது. அத்தகைய குர்ஆனுக்குப் பக்கபலமாகவுள்ள ஹதீஸ்களாலும் கூட குர்ஆனின் வசனங்களிலே அப்பட்டமாகத்தெரியும் ஆணாதிக்க மேலாண்மையை மழுப்புவதற்கு முடியாதுள்ளது என்பதுதான் உண்மை.

    மற்றையது, இன்றுவரை ஏழைகளைச் சுரண்டிக்கொழுக்கும் பணக்காரர்கள் பற்றிய வினாவுக்கு விடையே கிடையாது. 'அடிமைகளை வாங்கி விடுவிப்பது' போன்ற சமரசங்கள்தான் அதற்கும் தீர்வாக பொத்தாம் பொதுவாய் சொல்லப்பட்டிருக்கின்றது. சுரண்டலை ஒழித்து வறுமையை இல்லாதொழிப்பதை விடுத்து இரு வர்க்கங்களையும் அப்படியே நிலைபேறாக வைத்துக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள்தான் கூறப்பட்டுள்ளன.

    அதாவது ஏழை ஏழையாகவே இருந்தால்தான் பணக்காரர்கள் சுகபோகமாய் வாழலாம் கூடவே தானம் தருமம் அமல்களும் புரியலாம்.

    ஏழைகளாய்ப் பிறந்தவர்கள், அந்த ஒரு காரணத்திற்காகவே சுய கௌரவத்தை விட்டுவிட்டு யாசகம் கேட்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் உள்ளார்ந்த செய்தி.

    மற்றையது, பிறதளங்களிலே படித்துப் புரிந்ததை (அது விவாதத்திற்கு அவசியமானால்) அவற்றை உங்கள் சொந்த வார்த்தைகளிலே பொதுவெளிக்கு கொண்டுவந்து விவாதிப்பதற்குப் பதிலாக இணையத்தளச் சுட்டிகளைத் தந்து 'அதைப் படியுங்கள் இதைப்பாருங்கள்' என்று பிறதளங்களின் முகவரிகளைத் தந்துவிட்டு செல்கின்றீர்கள். அது நமது விவாதத்தை படிக்கும் வாசகர்களுக்கு சிரமத்தையும் குழப்பத்தையும் தான் தரும்.

    உண்மைகளை எதிர்கொள்ள முடியாதபோதுதான் தனிப்பட்ட விடயங்களையெல்லாம் அலசித்தாக்கத்தோன்றும். என்னுடைய இணையத்தளத்திலே வெளியிடப்பட்டிருக்கும் அத்தனை ஆக்கங்களுக்கும் கருத்துகளுக்கும் நானே பொறுப்பு என்று நினைப்பதைவிட பத்தாம் பசலித்தனம் வேறு இருக்க முடியுமா?

    நான் மீண்டும் கூறுகின்றேன்..

    ஏதோ நீங்கள் சிலபேர்தான் இஸ்லாத்தின் காவலர்கள் போல உங்களை நீங்களே கற்பனை செய்துகொண்டு மற்றவர்களெல்லாம் அதனை கொச்சைப்படுத்தி அழித்துவிட வந்தவர்களாக நினைத்தபடி உச்சாணிக் கொப்பிலிருந்து பேசாதீர்கள். தரைக்கு இறங்கிவந்து பேசுங்கள்.

    இஸ்லாம் என்பது எவருக்கும் தனியுடைமை கிடையாது. அது உலக மக்களுக்குரியது. குர்-ஆனை உலகப் பொதுமறை என்று வாய்கிழியக் கூறும் நாம் அதன் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொண்டுதான் சொல்கின்றோமா என்று யோசிப்பதில்லை.

    உலகத்திற்கே பொதுவாக வழங்கப்பட்ட ஒன்று குறுகிய சிந்தனைகளோடிருக்க முடியுமா?

    இதை புரிந்து கொண்டாலே போதும் ஏனைய விடயங்கள் எல்லாவற்றையும் சரியான கோணத்தில் பார்க்க உங்களால் முடியும்.

    ReplyDelete
  98. இத்தளத்திற்கு வரும் மாற்று மத சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

    இஸ்லாம் மட்டும் தான் இறை மார்க்கம் குர் ஆன் இறை வேதம் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை அதை கன்னை மூடிக் கொண்டு ஏற்று கொள்ளும் படி அது எங்கும் சொல்ல வில்லை. நடு நிலையோடு குர் ஆனை வாசித்து ஆராய்ந்து ஏற்று கொள்ளும் படியே அது அழைக்கிறது..

    47:24. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
    4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.


    குர் ஆனை நடு நிலையாக நின்று படியுங்கள் மேலோட்ட மாக பார்க்கும் போது சில அம்சங்கள் உங்கள் அறிவிற்கு பிழையாக தோன்றலாம் அவ்வாறான விடயங்களை இஸ்லாமிய அறிஞர்களிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேளுங்கள் இன்றைக்கு எத்தனையோ இனையதளங்களில் நீங்கள் தொடர்பு கொண்டு விளக்கங்கள் கேட்கலாம்.

    அல் குர் ஆனும் நபிகளாரின் ஆதார பூர்வமான அறிவிப்புகளும் தான் உண்மையான இஸ்லாம் ஆகவே அவற்றை வைத்து மட்டும் இஸ்லாத்தை எடை போடுங்கள் சில முஸ்லிம்களின் நட வடிக்கைகள் குர் ஆனுக்கு முரணாக இருப்பதால் இஸ்லாம் ஒரு போது அவ்வாறு ஏவ வில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.

    நேர் வழி என்பது ஒன்றுதான் அதை தேடி ஆராய்ந்து புரிந்து ஏற்று கொண்டு பின்பற்றுவதுதான் வெற்றிக்கு ஒரே வழி!

    ReplyDelete
  99. சகோதரர்களே!

    இங்கே இதுவரை இடப்பட்டுள்ள பின்னூட்டங்களில் உள்ள நியாயங்களை ஏதோ ஒரு கொள்கையின் பால் மூளை சலவை செய்யப்படாமல் நடுநிலையாக நின்று சிந்திப்பவர்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள்.

    மானுடத்திற்கு சிறந்த சட்டம் என்று ஒரு காலத்தில் போற்றி புகழப்பட்ட எத்தையோ மனிதர்களால் இயற்றப்பட்ட‌ சட்ட்ங்களும் கொள்கைகளும் பின்னொரு காலத்தில் ஒட்டு மொத்த‌ மனிதர்களாலேயே தூக்கியெறியப்பட்ட எத்தனயோ வரலாறுகளை நாம் பார்க்க முடியும்.

    மனிதனின் அறிவு அப்படித்தான் ஒரு குறுகிய வட்டத்திற்குள்தான் சிந்த்திக்கும் ஆனால் இந்த பிரபஞ்சத்தையும் மானுடத்தையும் படைத்த ஒருவனால் மட்டுமே எக்காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான நியாயமான சட்டங்களை ஏற்ற முடியும். ஒரு காலத்தில் அல்லது ஒரு சிலருக்கு அதன் நியாயங்கள் புரியவில்லை என்பதற்காக அந்த சட்டங்கள் அநீதியானவையாகிவிடாது.

    இங்கே வாதடப்பட்ட பெண்களுக்கு சமவுரிமை தான் சிறந்தது என்ற கொள்கையும் அப்படித்தான் மனித சமூகத்திற்கு அதுதான் சிறந்தது என்பது அவர்கள் அறிவுக்கு படும் விடயம் ஆனால் இறைவனின் சட்டத்தில் உள்ள நியாயங்களை எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் அதை புரிந்து கொள்ள மாட்டர்கள் ஏன் என்றால் எங்கள் அறிவுதான் சிறந்தது என்ற மமதையும் ஆணவமும்.

    இப்படியானவர்களால் இறைவனின் மார்க்கத்தை புரிந்து கொள்ள முடியாது ஏன் என்றால்

    "2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்."
    "2:6. நிச்சயமாக இறைவனை நிராகரிப்போரை நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
    2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு."

    குர் ஆன் என்பது அதிலே முரண்பாடில்லை இடைச் செறுகல் இல்லை என்பதுதான் அது இறைவேதம் என்பதற்கு அத்தாட்சி! அப்படி இருக்க தனது அறிவிற்கு சரியாக தெரிகிற ஒரு கொள்கைக்கு முரணாக குர் ஆன் பேசுகிறது என்பதற்காக குர் ஆனிலே இடைச்செறுகள் இருக்கிறது என்று முஸ்லிம் எக்காலத்திலும் வாதிட மட்டான். அப்படி வாதிடுபவர்கள் முஸ்லிமாக இருக்க முடியாது.

    பகுத்தறிவாதிகள் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் உறுதியான முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையிலே குழப்பங்களை ஏற்படுத்த எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் போனபின் (விவாத மேடைகளிலே மூக்குடைபட்டு போய்) குறுக்கு வழியாக தேர்ந்தெடுத்திருக்கும் ஒரு வழிதான் முஸ்லிம் பெயர்களில் இஸ்லாத்தை விமர்சித்து இஸ்லாமியர்களே குர் ஆனை மறுக்கிறார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சி..

    அதில் ஒரு அங்கமாக அல்லது இந்த சமூதாயத்திலே பிறந்து அந்த கூட்டத்திற்கு பலியாடாகிய ஒருவராக "Jesslya Jessy " என்ற இந்த நபரை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்!

    "6:123. மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை."


    இங்கே எழுதப்பட்ட பின்னூட்டங்கள் இவர் இஸ்லாத்தை விளங்கி கொள்ள வேண்டுமென்பதை விட இத்தளத்திற்கு வரும் நம் சகோதரர்கள் இப்படியானவர்களின் போலி வாதங்களில் வீழ்ந்து விடக்கூடாதென்பதற்காக தான்.

    பின்னூட்டங்களினூடாக விவாதிக்க கூடிய விடயமல்ல இது. இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் நாட்கனக்காக விவாத மேடைகளில் விவாதிக்க கூடியளவு விபரப்பரப்புள்ள அம்சம். அதனால் தான் பிற இணையதள்ங்களின் இனைப்புகள் கொடுக்க வேண்டியேற்படுகிறது..இதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்...

    "இந்த வலைப்பூவிலே என்னுடையதும் எனது நண்பர்களிடம் எனக்குப் பிடித்தமானவையுமான ஆக்கங்கள் பல இடம்பெறுகின்றன. " என்ற மேற்கோளோடு தனது தனிப்பட்ட தளத்தில்
    எழுதப்பட்டுள்ள வார்த்தைகளோடு எனக்கு உடன்பாடில்லை என்று ஒருவர் சொல்வதுதான் பத்தாம் பசலித்தனம் என்பதையும் வாசகர்கள் நன்குணர்ந்து கொள்வார்கள்!

    உலகத்திற்கே பொதுமறையாக வந்த குர் ஆன் உங்கள் சிற்றரிவிற்கு புரியவில்லை என்பதற்காக இடைச்செறுகலுக்குள்ளாகித்தான் இருக்க‌ வேண்டுமா???

    ReplyDelete
  100. Abu Jeza,

    மிக்க நன்றி அபூ ஜீஸா,

    இதுவரை நான் எத்தனையோ பிரயத்தனத்துடன் விபரித்துக்கொண்டு வந்த சாத்தியமான இடைச்செருகல் பற்றிய விளக்கங்களை கடைசியாக நீங்கள் எழுதிய பின்னூட்டத்தில் உங்களையறியாமலே வெகுசுருக்கமாக தந்துவிட்டீர்கள் தெரியுமா?

    புரியவில்லை...?

    '..அவர்கள் இந்த குர்ஆனை வெகு (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்...'(குர்-ஆன் 4.82)

    அதாவது இராமாயணம் போல என்னால் கூறப்பட்ட ஒரு விடயத்தை இரண்டுவரி திருக்குறள்போல மற்றவர்கள் அறிவதற்குத் தந்துவிட்டீர்கள். மிக்க நன்றி!

    (Note: But one thing; You've made me to write an additional comment to my final one)

    ReplyDelete
  101. Dear Ranees MHM

    நீங்கள் சொல்வது உண்மை. நான் என்னுடைய பின்னூட்டங்களை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். நான் இவ்வளவு நாளாக எனது பின்னூட்டங்களை வளங்கிய காரணம் இஸ்லாம் பற்றிய நமது சகோதரர்களின் எண்ணங்களை பார்க்கும்போது மனதிற்கு கவலையாக இருந்ததால் தான். அது தவிர நாங்கள் முஃப்திகளோ அல்லது அறிஞர்களோ இல்லை. சாதாரண இஸ்லாமியன் தான். மேலும் எங்களுடைய உம்மத் இற்காக எல்லாம் வல்ல அல்லாஹ் வை பிரார்திக்கிறேன், இவர்களுக்கு ஹிதாயத் இணை வலங்க வேண்டும் என்று..

    ReplyDelete
  102. Jesslya Jessly,

    அல்குர் ஆன் இறைவேதம் என்பதையும் அதிலே இடைச்செறுகலுக்கான சாத்தியம் அனுவளவும் இல்லை என்பது சத்தியம்.

    10:37. இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை."

    ஆனால் இதை நடு நிலையோடும் சத்தியத்தை தேடும் தூய்மையான எண்ணத்துடனும் அதை ஆரய்ந்து சிந்திப்பவர்கள் நன்குணர்ந்து கொள்வார்கள். அவ்வாறு நம்பிக்கை கொள்பவர்களுக்குதான் குர் ஆன் நேர்வழி காட்டும்

    "(திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.7:203"


    மனமுரண்டாகவும் ஆணவத்துடனும் வீண் தர்க்கம் செய்பவர்களுக்கு குர் ஆன் வழிகாட்டாது..எனவே அதன் சத்தியத்தை அவர்களால் புரிந்து கொள்ளமுடியாது.

    22:3. இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்."

    2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்."

    எனவே இறைவனின் மார்க்கத்தில் வீண் தர்க்கம் செய்து அதிலே குறை தேடுவோருக்கு குர் ஆன் நேர்வழி காட்டாது அவார்களுக்கு குரான் முரண் பாடாகத்தான் தோன்றும் அவர்கள் தங்கள் மன இச்சைதான் சரியான மார்க்கம் என்று அதையே வழி படுவார்கள்!

    இவ்வாரணவர்கள் தங்கள் உயிர் தொண்டைகுழியை அடையும் இறுதி தருவாயில் சத்தியம் எது என்பதை அறிந்து கொள்வார்கள் அப்போது அவர்களின் ஞானம் எந்த பிரயோசனத்தையும் அவர்களுக்கு தரபோவதில்லை!!!

    ReplyDelete
  103. 1- Jesslya Jessly.

    2- Mohamed Shifa.

    3- Abu jeza.

    கலிமாச்சொல்லி தொழுது வணக்கங்களில் ஈடுபட்ட உண்மையான முஸ்லிமான ஒருவர் எப்போதும் தரும் உதாரணங்களைப்பார்த்தாலே அவருடைய மனதில் என்ன உள்ளது என்று புரிந்துவிடும். இராமாயணமும்,திருக்குறளும், எம்.ஜி.ஆரும் ஒருக்காலும் ஈமானியமுள்ள ஒருவரின் வாய்களிலிருந்து உதாரணமாக் வராது நாம் இங்கு வாதாடிக்கொண்டிருப்பது மார்க்கம் சம்மந்தமாக தவிர இலக்கிய விருந்தல்ல.
    கடைசியாகச்சொல்லுகின்றேன் jesslya jessly என்ற பெயரில் உலவும் உங்கள் பெயரைக்கண்டு ஒரு முஸ்லிம் பெண் என்று நினைத்துவிட்டார்கள் எனது சகோதரர்கள், நீங்கள் பெண்வேசமிட்ட ஒரு ஆண் என்று சில சகோதர்கள் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருந்தார்கள். யோசிக்கும் முறையைவைத்து இது ஒரு பெண்ணாகத்தான் இருக்கும் என்றெண்ணுகின்றேன், பெண்ணின் சிந்தனை முறை அப்படியே இருக்கின்றது. அறிவுசாரதுறையில் ஒருசில பெண்களும் இடத்தைப்பிடுத்துள்ளார்கள் என்றும் ஜெஸ்லியா என்ற பெண் ஒரு அறிவாளியென்றும், வீட்டிலடங்கிக்கிடக்கும் பெண்களுக்கு விதிவிலக்கானவரென்றும் ஒரு கணம் எண்ணத்தோன்றிற்று, இருப்பினும் காலப்போக்கில் உமது எழுத்து நடைகண்டு நாம் ஒருபோதும் அதுபோன்றே தீர்மானிக்கவில்லை. காரணம் எப்போதும் ஒரு அறிவாளி நான் சொல்வது நியாமென்று வாதாடியதில்லை, நான் சொல்வதுதான் சரியென்ற மமதையுடன் நடந்ததில்லை, நான் தான் அறிவு படைத்தவன் என்ற எண்ணத்துடன் அனைவருக்கும் அறிவுறுத்துவதுமில்லை. மாறாக எந்த அறிவாளியாயினும் அடக்கமாகவே பேசுவான், செயல்படுவான். ஜெஸ்லியாவின் நிலைப்பாடு என்னவோ உம்மைப்பொறுத்தளவு நீர் எல்லாவற்றிலும் திறமைசாலியென்ற மமதையும் அத்துடன் மற்றவர்களுக்கு அறிவுரைசொல்லவேண்டுமென்ற எண்ணமே தவிர மற்றவர்கள் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஜெஸ்லியா என்ற பெயருடைய மனிதத்திடம் மருந்துக்குக்கூட இல்லையே என்பதுதான் வேதனை ஏனேனில் இதுதான் உம்மிடம் உள்ள தோல்வியின் படிகளாக அமையப்போகின்றது. நீங்கள் ஆணாக இருந்தாலும் எமக்கொன்றுமில்லை பெண்ணாக இருந்தாலும் எமக்கதில் ஒன்றுமே இல்லை. ஆனால் உலகமே இன்று அல் குர் ஆனில் எத்தனையோ ஆச்சரியங்களையும் உண்மைகளையும் கண்டு இஸ்லாத்தின் பக்கம் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் மேதைகளும் பிரபல்யங்களும் சாரை சரையாக கூட்டம் கூட்டமாக விரைந்து வந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில் உம்மைப்போன்ற பிற்போக்கு எண்ணம்கொண்டவர்களும் இஸ்லாத்தில்தான் இருக்கின்றோம் என்ற பெயரில் இஸ்லாத்தை தவறாகச்சித்தரிக்கின்ற பலரும் இருக்கத்தான் செய்தார்கள். அது இன்று நேற்றல்ல ஆரம்பம் தொட்டே எமக்கு இருந்தவைகள்தான் உம்மைப்போன்ற சிறுகளைகள் முளைப்பதுவும் அவைகள் காணாமல் போவதுவும் எமக்கொன்றும் புதிய விடயங்களுமல்ல.

    Brother, Abu Jeza

    ஜெஸ்லியாவின் மட்டுப்பட்ட குறுகிய அறிவென்பதை சகோதரர் Abu Jeza நீங்கள் கொடுத்த அதே ”சிந்திக்கவேண்டாமா, முரண்பாடுகளை கண்டிருப்பார்கள்” (4:82)என்ற ஆயத்தை அவர்சொல்வதற்கு ஆதாரமாகவும் யாரும் ஒரு மனிதன்கூட சொல்லாததை இவர் சொல்லிவிட்டார் கேள்வியையே நம்மிடம் மாற்றிக்கேட்டுவிட்டார் இது பார்பதற்கு சிறுபிள்ளைத்தனம் என்பதைத்தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை எமக்கு. அதற்கு அவர் தரும் விரிவுரையைப்பார்த்தீர்களா நீங்களே அல் குர் ஆன் முரண்பாடுள்ளதென்பதை ஊர்ஜிதப்படுத்திவிட்டதாக சொல்லியிருக்கின்றார், இதை நினைக்க நினைக்க சிரிப்பாகத்தான் இருக்கின்றது காரணம் இதுதான் இவரது பிளஸ் பொயிண்டாக எண்ணியிருப்பதுதான் இவரது படு பிற்போக்காக இருக்கின்றது.

    இதை...

    சிறுபிள்ளைத்தனம் என்பதா?
    சிந்திக்கத்தெரியாதத்தனம் என்பதா?
    முட்டாள்தனம் என்பதா? அல்லது உண்மை தெரிந்தும் பொய்யாக்கவேண்டுமென்ற முயற்சியென்பதா?

    Mohamed Shifas..
    இப்போதாவது புரிந்துகொண்டீர்களே, ஜெஸ்லியா இன்றோ நாளையோ profile பெயரை மாற்றிக்கொண்டு ஓடிவிடலாம் காரணம் அவருக்கு அதற்கு ஏற்கனவே அவரின் பெயரிலுள்ள மாற்றங்களும் அவருடைய புகைப்படமும் ஆதாரங்களாகவும் இருக்கின்றன. ஆனால் அவர் உண்மையை பொய்யாக்கும் முயற்சியில் நடந்துகொள்வாராயின் நாம் ஒருபோதும் அதற்குரிய பதிலைக்கொடுப்பதில் தளர்ந்துவிடக்கூடாதென்றும் முஸ்லிம்களுக்குரிய சரியான வழிகாட்டலில் யாவருக்கும் பங்குண்டு என்பதுவும் ஒரு பெண்ணுக்கு சரியான வழியை உரியவர்கள் காட்டத்தவறிய பட்டசத்தில் மார்கத்தில் அறிந்தவைகளை எம்மால் எடுத்துச்சொல்லவேண்டிய கட்டாய கடமையில் பொறுப்புள்ளவர்கள் என்றவகையில் நாம் ஒருபோதும் தவறிவிடக்கூடாது.

    தொடரும்......

    ReplyDelete

Powered by Blogger.