உறுகாமத்தில் முஸ்லிம் வியாபாரியின் வியாபார நிலையத்திற்கு தீ வைப்பு
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற முஸ்லிம் கிராமமான உறுகாமத்தில் உள்ள முஸ்லிம் வியாபாரி ஒருவரின் வியாபார நிலையமொன்று இனந்தெரியாதோரால் நேற்றிரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற கிராமமான உறுகாமம் பிரதான வீதி சந்தியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையமும் கடைக்குள் இருந்த பொருட்கள் உட்பட ஒரு முச்சக்கரவண்டியும், இனந்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத வேலையில் மேற்படி சம்பவத்தில் 'திராவிடன் சேனை' என்ற அமைப்புக்கு தொடர்புள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அண்மையில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் உறுகாமத்தில் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட போது; 'உறுகாமத்தில் இந்திய அரசின் வீட்டுத் திட்டமா அல்லது இஸ்லாமிய குடியேற்றத்திட்டமா?' என்ற இனத்துவேஷ துண்டுப் பிரசுரம் வநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment