இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது..!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கார்டிப் நகரில் நடந்து வரும் 2வது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 35 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பின்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

Post a Comment