கல்முனை இஸ்லாமாபாத்தில் குவாசி நீதிமன்றம் (படங்கள்)
(எம்.எப்.றிபாஸ்)
கல்முனைத்தொகுதியின் அபிவிருத்திக்குழுத் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் முன்னெடுத்துச் செல்லும் ” ஒளிரும் கல்முனை ” வேலைத்திட்டத்தின் மிக முக்கியமான நிகழ்வொன்று இன்று காலை கல்முனை இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றது.
கல்முனைப்பிரதேசத்தைச் சேரந்த கல்முனை , சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை மற்றும் மருதமுனை பிரதேச முஸ்லிம் மக்களின் நீண்டநாள் தேவைகளுள் ஒன்றாகவிருந்த குவாசி நீதிமன்றம் நீதியமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.தவம், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் , கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் , சட்டத்தரணிகளான ஏ.எம்.றகீப் , எம்.எம்.முஸ்தபா , குவாசி நீதவான் அல்ஹாஜ் என்.எம்.இஸ்மாயில் உ்ட்பட பலரும் கலந்து கொண்டனர்.



பொது பல சேன அத்தே ஞானசார தேரர் பதுளை கூட்டத்தில் குவாசி நீதி மன்ற கர்த்தா அதாஉட செனிவிரட்ன என குறிப்பிட்டு அவரை இப்போது மொஹம்மத் அதாஉட செனிவிரட்னஆகி வீட்டார் என்றும் சொன்னார் ...ஆனால் இன்று ஹக்கீம் குவாசி நீதி மன்றம் திறப்பதானது ஊரா கோழி அறுத்து உம்மா பேரில் கத்தம் ஓதுவது போலவே உள்ளது....நீதி அமைச்சராய் இருந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக நீதி கேட்டு வாய் திறக்கமுடியாதவர் ...குவாசி நீதி மன்றங்கள் மூலம் நீதி பெற்று தருவார். ஒளிரும் கல்முனை 51 திட்டத்தில் 24 மணி நேரத்தில் ஒரு திட்டம் பூர்தியாக்கப்ட்டு திறக்கப்பட்டதும் ஆசியாவின் ஆச்சரியமே....?? எஞ்சி உள்ளது 50 திட்டங்கள் தான்.அவையும் துரிதகதியில் நிறைவேறுமா?
ReplyDeleteAlhamthulliah
ReplyDelete