மாட்டிறைச்சி கடைகளின் பக்கம் திரும்பியுள்ள சிங்கள கடும்போக்காளர்கள்..!
ஹலால் பிரச்சினை,பள்ளிவாயல் பிரச்சினை என்று முஸ்லிகளுக்கு எதிராகக் கிழம்பிய பௌத்த தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தற்போது மாட்டு இறைச்சிக் கடைகளின் பக்கம் திரும்பியுள்ளன.
இதன் உச்சகட்டமாக நுவெரெலியா,அனுராதபுரம்,கண்டி போன்ற பிரதேசங்களில் மாடுகள் அறுக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு சில பிரதேச சபைகள்,நகரசபைகள்,மாநகரசபைகள் என்பன துணைபுரிந்துள்ளன.
இத்தடைவிதிப்பின் காரணமாக சட்டரீதியாக விலைகோரல் மூலம் சட்டப்படி இறைச்சிக்கடை நடாத்துவதற்hன அனுமயைப்பெற்ற வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாட்டிறைச்சிக்கடைகளை தடைசெய்யும் சபைகள் அவர்களால் கட்டப்பட்ட இலட்சக்கணக்கான பணத்தை அவர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்.மீளப்பணம் கிடைக்காவிடின் நீதிமன்றத்தை நாடிச்சென்று வெற்றிபெறலாம்.
இறைச்சிக் கடை மூலம் தான் பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் உள்ளுராட்சி மன்றங்களான மா.நகர சபை,நகர சபை,பிரதேச சபை என்பன பெற்றுக் கொள்கின்றன.இப்பணத்தை இழந்தால் பாரிய நிதி நெருக்கடிகளை இச்சபைகள் எதிர் கொள்ளும் என்பது தெளிவான விடயமாகும்.
இலங்கையில் மாட்டிறைச்சி சாப்பிடுவோர் முஸ்லிம்கள் மட்டுமல்ல,கிறிஸ்தவர்கள்,பேகர்கள்,வெளிநாட்டில் இருந்து வரும் உல்லாசப் பயணிகள் போன்றோரும் தாராளமாக சாப்பிடுகின்றனர். முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்படுவது இந்துக்களையோ பௌத்தர்களயே வேதனைப்படுத்துவதற்காக அல்ல .அவர்களின் சமயத்தில் அதற்காக அனுமதியுள்ளது. ஆகவே சாப்பிடுகின்றனர்.
மனிதனுக்கு வேட்டைப்பல் ஏன் படைக்கப்படடுள்ளது என ஆராய்ந்ந விஞ்ஞானிகள் அது இறைச்சி சாப்பிடுவதற்காகத்தான். என்று கண்டுபிடித்துள்ளனர் . உயிர்களைக்கொல்லக் கூடாது என்றால் மாடு அறுப்பதை தடைவிதிப்பது மட்டும் போதாது. ஓவ்வொரு நாளும் கொல்லப்படும் ஆயிரமாயிரம் , கோழிகள். பறவையினங்கள் , ஏனைய முயல், பன்றி ,மான், மரை, அனைத்து வகை மீன் இனங்கள் போன்றவற்றின் கொலையும் தடுக்கப்பட வேண்டும்.
கோழி முட்டையிடுவது நாம் சாப்பிடுவதற்காகல்ல. அதன் இனத்தைப் பெருக்கவே. அதன் முட்டையை நாம் பாவிப்பது பாவமில்லையா ? பசுவில் பால் சுரப்பது அதன் கன்றிட்காகவே அது கதறக்கதற பசுலின் பாலைக் கையாலும,மெசினாலும கறப்பது அப்பாலை சீஸ்,கட்டிப்பால்,டின்பால்,பால்மா எனப்பதனிட்டு அதனை விற்பதும் பாவிப்பதும் பெரும் பாவமில்லயா? இவற்றையெல்லாம் சிந்தித்தால் தெளிவு பிறக்கும்
மாட்டிறைச்சி தடை செய்யப்படுவது முஸ்லிம்களுக்கு பெரும் நன்மையைத் தரும் ஏனெனில் 12வீதமான முஸ்லிம்களுக்கு தொற்றா நோய்களான நீரிழிவு,மாரடைப்பு,கொலஸ்றோல் போன்றன 40 வீதம் கானப்படுகின்றன. மாட்டிறைச்சியை தவிர்ப்பது மிகுந்த ஆரோக்கியமாக இருக்கும் ஹுதைபியா உடன்படிக்கையின் போது வெளிப்படையாக தீமை போன்று கானப்படும் ஆனால உண்மையில் நன்மை எமக்குக் கிடைக்கும் ஆகவே பொறுமையாக நடந்து கொள்வோமாக.

இதுவே சாத்தியமானது. முஸ்லிம்கள் அமைதி காப்போம் இன்ஷா அல்லாஹ் விரைவில் இத்தடையை அவர்களே நீக்கம் செய்வார்கள்.
ReplyDeletereally very good points, thanks Azhar.
ReplyDeletemattu irachi saappiduvathal thaan paaralamantraththilum oru sila Muslim madugal irukkinrana
ReplyDeleteஎமது முஸ்லிம் இறைச்சிக்கடைக்காரர்களும் சட்ட விரோதமான முறையில் மாடுகளை அறுப்பதும் இதற்கு காரணமாகும். ஆகக் குறைந்தது ஒருவருடத்துக்கு மாடுகளை அறுப்பதை நாட்டில் தடை செய்தால் போதும். நிலைமை என்னவாகும் என்பதை அறிந்துகொள்ளலாம். நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய சிக்கல் நிலைமை ஏற்படும். மாட்டிறைச்சி சாப்பிடுவது இஸ்லாத்தில் கட்டாயமாக்கப்படவில்லையே.
ReplyDelete