பாலியல் வல்லுறவுக்காக விரைவில் அரசாங்கம் வீதியொன்றை ஒதுக்கும் - பொன்சேக்கா
பாலியல் வல்லுறவுகளுக்காக நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் விரைவில் பாதை திறக்கப்படும் என ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
பொல்காஹாவல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வறுமையில் வாடும் நபர்கள் புதுவருடத்திலாவது கள்ளு குடித்து விட்டு, 5 சதத்திற்கு சூதாடும் போது, மறு நாள் சிறையில் இருக்க வேண்டிய நிலைமை உள்ளது.
கொழும்பில் தனியான வீதியே கசினோவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சூதாட்டம் நடத்தினாலும் பிரச்சினையில்லை. எது செய்தாலும் பிரச்சினையில்லை.
விரைவில் பாலியல் வல்லுறவுக்காக இந்த அரசாங்கம் வீதியொன்றை ஒதுக்கும். அதற்கும் சட்டத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தில் அதனை நிறைவேற்றும். இதனையடுத்து கொலைகளுக்காக வீதியொன்று ஒதுக்கப்படும் எனவும் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். gtn

அதற்கும் எமது ஸ்ரீ.ல.மு.கா. உட்பட முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்கும்!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Iwan muslimgalin wirodi useless fellow
ReplyDeleteஅப்படிப்பட்ட ஒவ்வொருவரும் இறைவனையும் மறுமையையும் சிந்திக்கட்டும்.மரணம் வேஹு துலைவில் இல்லை
ReplyDelete