Header Ads



கொந்தராத்து கொலையாளி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

முஸ்லிம் வர்த்தகர் சியாமின் கொலையுடன் தொடர்புபட்ட கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாலம்பே தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களினால் இந்த மனு சமர்ப்பிக்கப்ட்டுள்ளது. குறித்த மாணவரைக் கடத்தி தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காலத்தில் வாஸ் குணவர்தன சிரேஸ்ட பொலிஸ்துறை அத்தியட்சகராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தல் தாக்குதல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சட்ட மா அதிபர் ஏன் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக வழக்குத் தொடரவில்லை என மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் விளக்கம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக வழக்குத் தொடர்வதில்லை என்ற தீர்மானத்தை, தற்போதைய பிரதம நீதியரசரும், அப்போதைய சட்ட மா அதிபருமான மொஹான் பீரிஸ் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை தொடர்பான அறிக்கைகளையும் சட்ட மா அதிபர் நிதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டுமென இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. நிபுன தனுஸ்க ராமநாயக்க என்ற மாணவரே சம்பவத்தில் தாக்கப்பட்டிருந்தார்.

குறித்த மாணவர், வாஸ் குணவர்தனவின் புதல்வர் மற்றும் மனைவிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. vi

No comments

Powered by Blogger.