13 ஆவது சீர்திருத்தம் - முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்காது - சற்றுமுன்னர் தீர்மானம்
இன்று திங்கட்கிழமை, 10 ஆம் திகதி, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் வீட்டில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தததிற்கு ஆதரவளிப்பதில்லையெ தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை மு.கா. செயலாளர் ஹசன் அலி எம்.பி. ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
அடுத்துவரும் அமைச்சரவை கூட்டத்திற்கு முன் இதுபற்றி கடிதம் மூலமாக ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஸவுக்கு அறிவிப்பதெனவும் தீர்மானிக்கப்படடுள்ளது.
சமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதில்லையென்ற ஒரே நிலைப்பாட்டிலேயே காணப்பட்டதாகவும் ஹசன் அலி மேலும் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டில் 13 திருத்தத்திற்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட நிலைப்பட்டிலிருந்து ஒருபோதும் கட்சியால் விலகமுடியாதெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அல் ஹம்துலில்லாஹ்! சந்தோசமானதே இதுபோன்ற முடிவுகளினால் உமது தூர்ந்துபோன பெயரை மீண்டும் பெற்றுக்கொள்ள நிறையவே வாய்ப்பிருக்கின்றது ஆனால் அது சாதரணமான காரியமல்ல இன்னும் நிறையவே நீங்கள் மக்களுடன் பகிர்ந்து சில முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது மக்களுடன் கலந்துதான் எந்த அரசியல்வாதியானாலும் முடிவெடுக்கமுடியும்....
ReplyDeleteSaaaaahoooooyaaayow, what a great joke for 2014. Woowa.
ReplyDeletecan we trust him?
ReplyDeleteநம்பமுடியவில்லை...!!!! இன்னும் நாட்கள் உண்டு...!!! இன்னும் நிறைய சமாச்சாரங்கள் நடைபெற உள்ளன...!!! மாகாண சபையே முஸ்லிம்களுக்கு உகந்தது அல்ல என வாதிடுபவர்கள் வெளிப்படுவார்கள்...!!! மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்தாள் அது முஸ்லிம்களுக்கு தமிழர்களால் பெரும் பாதிப்பு வரும் என அறிக்கை விட்டுக் கொண்டு ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பவர்கள் வருவார்கள்...!!! இப்படி பல விடயங்கள் அரங்கேற உள்ளன..!!! பொறுத்திருந்து பாருங்களேன்.
ReplyDeleteஅரசாங்கத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் எம். பி களும் சுய நல கும்பல்களே...!!! கடந்த காலங்கள் இதைத்தான் பறை சாற்றுகின்றது.
கட்சி தீர்மானம் எடுத்து விட்டது.
ReplyDeleteஇனி கட்சிக்குள்ளிருக்கும் தரகர்கள் அரசுடன் திரை மறைவில் பேசுவார்கள். மேலதிக சலுகைகளை வழங்கினால் கட்சியை விட்டு அரசுடன் சங்கமிக்கப் போவதாகவும் தெரிவிப்பார்கள்.
கடைசியில் வாக்கெடுப்புத் தினத்தன்று 'கட்சியைப் பாதுகாக்க' என்று கூறிக் கொண்டு மு.கா. தலைவரும், செயலாளரும் சேர்ந்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்தாலும் ஆச்சரியம் இல்லை. எதற்கும் மக்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Ethirthu waakaliththu wittarkal enru saithi wanthal mattume nambuwen
ReplyDelete