Header Ads



பைபிளை எரித்த எகிப்தியருக்கு 11 வருட சிறைத்தண்டனை

மஹ்மூத் என்பவர் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் தொலைக்காட்சி பிரிவு ஒன்றை நடத்தி வந்தார். இவர் ஒரு சமய போதகராகவும் பணியாற்றி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம், இஸ்லாமிய மதத் தலைவர் நபிகள் நாயகம் குறித்து அமெரிக்காவின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ தொகுப்பு ஒன்று முஸ்லிம் மக்களின் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியது. 

இதனை எதிர்த்து இவரும், இவரது மகனும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை நடத்தினர். அதில், தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, அபு இஸ்லாம் என்று அழைக்கப்படும் அகமது, அங்குள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை நடுவீதியில் எரித்தார். 

இதற்காக கைது செய்யப்பட்ட அவர் மீது வழக்கு விசாரணைகள் முடிவடைந்து, நேற்று அவருக்கு 11 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதே காரணத்திற்காக கைது செய்யப்பட்ட அவரது மகனுக்கும், எட்டு வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருவரும் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2011ஆம் வருடம், அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியைக் கவிழ்த்தபின், இஸ்லாமிய அரசு அமைந்துள்ள எகிப்து நாட்டில் அம்மதத்தை இழிவுபடுத்துவோருக்கு தண்டனை அளிப்பது என்பது சகஜமாக நடைபெறும் ஒரு விஷயமாகும். ஆனால், சிறுபான்மையினராக வாழும் கிறித்துவ மதத்தினருக்கு ஆதரவாக இதுபோல் தண்டனைகள் அளிக்கப்படுவது அரிதான ஒரு செயலாகவே இருக்கின்றது.

6 comments:

  1. இது தேவையற்ற ஒன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் தங்களுக்கும்
    மற்றைய மதத்தை மதிக்கும் பண்பிருப்பதாக காட்டும் வெளிவேடம் இது இவர்களை பற்றி உலகமே அறியும்

    ReplyDelete
  2. இந்த தீர்ப்பு வரவேற்க பட வேண்டிய தீர்ப்பு.

    ReplyDelete
  3. அல்லாஹ்வின் திருப்தியையும் அதனூடாக சுவனத்தையும் இலக்காகக்கொண்டு வாழும் இஹ்வான்களுக்கு அடுத்தவர்களிடம் வேடம் போடும் எந்ததேவையும் இல்லை. welldone dr Morsi

    ReplyDelete
  4. Kishore,

    நீர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உண்மை அதுதான். நீங்கள் உலகசெய்திகள் படிக்காதவர் என்பது புரிகின்றது இன்று எத்தனைபேர் உலகத்தின் பிரபல்யம் வாய்ந்தவர்களும் இஸ்லாத்திற்கு எதிராக பிரளயம் செய்தவர்களும் இன்று இஸ்லாத்தின் உண்மையையும் இஸ்லாமியர்களின் பண்பினையும் ஏற்று இஸ்லாத்தின் பக்கம் அவர்களாகவே ஈர்க்கப்பட்டுள்ளார்கள். இதற்கான காரணம் அவர்கள் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் சம்மந்தப்பட்ட வரலாறுகளையும் அல்குர் ஆனையும் படித்தமையே இதற்கான காரணம் எனபதை உமக்கு இங்கு எடுத்துக்கூற விரும்புகின்றேன்.

    உங்கள் சொந்தப்பிரச்சினைகளைவைத்து சமுதாயத்துடன் முடிச்சுப்போட்டு உங்கள் கருத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது வேடிக்கையாகவும் நீர் கற்றவையின் தரத்தையுமே வெளிக்காட்டுகின்றது. உங்களைப்போல சிலரால்தான் சமுதாயச்சீர்கேடுகள் உண்டாகின்றன, எப்போதுதான் உங்களுக்கு புத்திதெளிந்து எல்லோரும் நன்றாக வாழவேண்டுமென்று நினைக்கின்றீர்களோ அப்போதுதான் நீங்கள் நன்றாக வாழலாம்.
    உம்மைப்போலுள்ளவர்களை நாங்கள் சந்திப்பதொன்றும் எமக்குப்புதிதல்ல. கருத்தூட்டம் மூலம் மட்டுமல்ல நான் பலருடன் நேரடியாகப்பேசியும் உள்ளேன், அத்துடன் உம்மைப்போன்றவர்களே தம் சொந்த சமுதாயத்திற்கு துரோகம் செய்யும் மனப்பாங்குள்ளவர்கள் என்பதை உமது உள்ளேண்ணமே காட்டித்தருகின்றது, ஆக உம்மை யாரும் இங்கு வெற்றிலை பாக்குவைத்தோ உமது கருத்துக்கள் சமுதாயத்திற்கு தேவையென்று நாங்கள் யாரும் எதிர்பார்கவும் இல்லை ஆகவே தயவு செய்து இனிமேல் பின்னூட்டங்கள் செய்து மக்களிடையே அசிங்கத்தை பரப்ப எண்ணவேண்டாம் என்று மிகவும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  5. U must respect other relegions.
    Give respect and take respect.

    ReplyDelete
  6. ok then what about florida church born qur'an n said qur'an is book of terrorism go to you tube n see chack ot mr kisor, swen

    ReplyDelete

Powered by Blogger.