'எனது கைது அநீதியானது' ஆஸாத் சாலி உண்ணாவிரதத்தில் குதிப்பு
நீரழிவு நோயாளியான ஆஸாத் சாலிக்கு அவருடைய வீட்டிலிருந்து 2-5-2013 மதியச் சாப்பாடு எடுத்துச் செல்லப்பட்டுள்ள போதிலும், தனது கைது அநீதியானது என தெரிவித்து அவர் நீர் அருந்தவோ அல்லது உணவு உட்கொள்ளவோ மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தன.
ஆஸாத் சாலியின் உடல் நிலையை கவனத்திற்கொண்டு அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி அவரது குடும்பத்தினரும், அவரது சட்டத்தரணிகளும் குற்றப் புலனாய்து துறையினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்கமைய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்துள்ள வைத்தியர்கள் ஆஸாத்சாலி தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். வைத்திய இதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளார். எனினும் வைத்தியரின் உத்தரவு மீறப்பட்டு, ஆஸாத் சாலி மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 4 ஆம் மாடிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை நீரிழிவு நோயாளியான ஆஸாத் சாலியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமேயானால் அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கமும், குற்றப் புலனாய்வு பிரிவினருமே பொறுப்புககூற வேண்டுமென அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

யா அல்லாஹ் கலிமாவை மொழிந்த முஸ்லிம்களாக இருப்பதுதான் நாங்கள் செய்த பாவமே தவிர வேறொன்றுமில்லையென்பது நீ அறிந்த உண்மையே! எங்கள் ஈமானை இன்னும் வலிமைப்படுதுவதற்கும் நீ எங்களுக்கு உதவிசெய்வாயாக! இந்த நாட்டில் உன்பெயரை மிருகங்கள் மீது வர்ணித்த மக்களுக்கு எதிராகத்தான் நாங்கள் நாங்கள் எங்கள் உரிமைகளைக்கோரி நிற்கின்றோம், யா அல்லாஹ் நீ யாவும் அறிந்தவன் நாங்கள் உன்மீது நம்பிக்கைவைத்துள்ளோம் மேலும் உன்னையே உதவிக்கும் தேடுகின்றோம்! எம்மைப் பாதுகாப்பாயாக! எமது முஸ்லிம்கள் அனைவரையும் காபிர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக! ஆமின்...
ReplyDeleteMahinda Rajapakse's and Gotha's rowdism is well known for all but the majority community made them as their kings...real thugs of Sri Lankan politics..International community should see now how the minority community's voices are oppressed in the country.
ReplyDeleteநீதி துமிந்த சில்வா விடயத்திலும் ஆசாத் சாலி விடயத்திலும் எப்படி செயல் பட்டுள்ளது இதுதான் நெறி தவறாத நீதி,வைத்தயசாலையில் அதுவும் அரசவைத்திய சாலையில் தங்கக்கூட முடியாது, நாம் என்னே செய்யலாம் வெறும் அனாதைகளாக உள்ளோம் எல்லாம் வல்ல இறைவனை இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம் நமது முஸ்லிம் சமூகத்திற்கு நல்ல விடிவு பிறப்பதற்கு
ReplyDeleteWe can see on Friday if all the muslim MPs realy selfish or not. If they join to protest we can say all of them still ok. If not they are nonsense and useless.
ReplyDeletemuslim amaicherkalukku mikavum santhosamaka irukkum.
ReplyDeleteYA ALLAH azaad saali ai sathikararkalin valaiyil irunthu kaappattuvayaka.! Aameen.!
அல்லாஹ்வுக்காக நோன்பிருப்பதைத் தவிர உணவிருந்தும் பட்டினி கிடந்து உடலை வருத்துவது கூடாது. எனவே அவரை உண்ணும் படியும் பருகும்படியும் கூறுங்கள். அல்லது, அல்லாஹ்வுக்காக நோன்பிருக்கச் சொல்லுங்கள். '' சதிகாரர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரன் அல்லாஹ்.'' சரியான நேரத்தில், சரியான விதத்தில் அவனது தீர்ப்பு வெளிப்படும். இன்ஷா அல்லாஹ்...!
ReplyDeleteithu 'president asad sali' kku
ReplyDeletenalla vettiyaha kuuda irukkalaam
ya allah avarai paathukaathu viduvaayaha!!!aamin aamin aamin...
insha allah naam anaivarum asad sali yei
'president asad sali' yenru vilithu kondaal vettiyaha irukkum.
insha allah inrilirunthu muyetsi seivoom...