Header Ads



தீக்குளித்த பௌத்த தேரர் (முழு வீடியோ இணைப்பு)


கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக நேற்றைய தினம் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த பிக்கு தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடலில் 96 சதவீதமான பகுதி கருகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் மோசனமான நிலையில் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமறிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போவத்த இந்தரன தேரர், ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினராவார். 

http://www.youtube.com/watch?v=XMtBikwFvyY&feature=share


இந்த வீடியோ குறித்து ஆங்கில ஊடகத்தைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்த கருத்து இதோ..!

So Swarnawahini knew he was going to set himself on fire? And they make a documentary out of it making it look like the monk was some hero? Look closely at the video you see a child near the monk just as he was pouring petrol on himself. What if that child got hurt? Idiot




4 comments:

  1. So swarnawahini was aware of this incident. Then was it a pre planned one? Police should investigate into this act.

    ReplyDelete
  2. பௌத்த பிக்குவின் இந்த செயல் முன்மாதிரியாக கொள்ளக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய வை சேர்ந்த சோபித தேரர் தெரிவித்துள்ளார்........செய்தி ! இந்த நிகழ்வு இனவெறியின் உச்சகட்டமாகவே நோக்க வேண்டியுள்ளது . இது ஏற்கனவே திட்டமிட்டு சுவர்ண வாகினியின் தயார் நிலையில் வைக்கப்பட்ட கமராவின் முன் மிகவும் சாதுரியமாக காட்சிபடுதப்பட்டது ,மனிதம் செத்துப்போன இந்த நாட்டில் மிருகங்களுக்காக தீக்குளிக்கும் இந்த செயல் இன்னும் பல பௌத்த தீவிர வாதிகளை உருவாக்கிவிடும். சுவர்ண வாகினியின் தேவையும் அதுதான் .தயார் நிலையில் வைக்கப்பட்ட கமராவின் முன் நிகழ்ந்த இந்த தற்கொலைமுயற்சியை தடுத்து நிறுத்தாமல் இந்த பிக்குவின் கடந்த கால இனவாத செயற்பாடுகளை பீடிகையாக, வீர தீர செயற்பாடுகளாக முன்காட்சி படுத்துகின்றார்கள் ,சுவர்ண வாகினியின் இந்தபோக்கு எதிர் காலத்தில் "ரணகளமாக்கிய இலங்கையின்" பங்குதாரர்களாக கருதப்படுவதற்கு தகுதி பெற்றவர்களாக ஆவார்கள் .
    இவ்வாறு பௌத்த போதனைகளுக்கு முற்றிலும் முரணாக பிரபாகரன் பாணியில் தமது இலக்குகளை அடையும் நோக்கில் தீக்குளித்து தன் உயிரை மாய்க்க முயற்சி செய்துள்ளார் . இவரின் கோரிக்கையில் முன்னிலை படுத்தப் பட்டிருப்பது மனிதர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமளிப்பதற்கு பதிலாக மாடுகளின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதமளிக்கப்பட வேண்டும் என்பதாகும் . அரச வெசாக் கொண்டாட்டங்களுக்கு இடையூறாக நாய்கள் தொல்லைகள் அதிகரிப்பால் இதற்கான தீர்வு பற்றி புத்தளை பிரதேச விகாரையொன்றில் கலந்தாலோசிக்கப்பட்டுஅடுத்த நாள் காலையில் 38 தெருநாய்கள் கொல்லப்பட்ட அதே தினத்தில மாடறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இது நடந்துள்ளது . இந் நிலையில் இலங்கையில் நாளொன்றுக்குமூன்று கற்பழிப்புகள் , இரண்டு சிறுவர் துஸ் பிரயோகங்கள் ,18 கப்பம் கோரும் நிகழ்வுகள் ,வாரதிட்கு ஒரு ஆட்கடத்தல் , வாரதிட்கொரு கொலை ,வாரத்திற்கு இரு காணாமல் போகும் நிகழ்வுகள் ,மோசடி மற்றும் ஊழல் காரணத்தால் வீண் விரயமாகும் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 9% மான நிதி ,மாதத்திற்கு மூன்று வீட்டுகொல்லைகள் , மாதத்திற்கு இரண்டு ஏனைய கொள்ளைகள் நடக்கும் இச்சிறிய நாட்டில் .........மாடுகள் சாகிரதாம் ...மாடுகள் !

    ReplyDelete
  3. Drama...... Drama....... Drama........

    ReplyDelete
  4. இவர் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்கூற முற்பட்டாலும் இலங்கை நாட்டின் ஒரு பிரஜை.ஒரு மதகுரு. ஒரு உயிர் பெறுமதியானது, அது இழக்கப்பட்டுள்ளது.புத்த மதத்தின் போதனைக்கு புறம்பாக வேறு வெறியர்கலால் இவர் மூளைச்சலவை செயப்பட்டுள்ளார். அரசு இதில் கூடிய கவனம் செலுத்தவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.