வாழைச்சேனை மாவட்ட நீதிபதியாக எம்.ஐ.எம்.றிஸ்வி நியமனம்
(அனா)
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக எம்.ஐ.எம்.றிஸ்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக கடமையாற்றி வந்த ஏ.எம்.எம்.றியாழ் நீதிச் சேவை ஆணைக்குழுவின் வருடாந்த இடமாற்றத்தின் ஊடாக இடமாற்றம் பெற்று ஏறாவூர் சுற்றுலா நீதி மன்றத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் பதில் கடமைகளின் நிமித்தம் களுவான்சிக்குடி நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் கடமையாற்றிவந்த நீதிபதி த.கருணாகரன் சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஐ.எம்.றிஸ்வி கல்முனை நீதிமன்றத்தின் நீதிபதியாக கடமையாற்றியவராவார்.

Post a Comment