Header Ads



வாப்பாவை இதற்கு முன் இப்படியொரு கோலத்தில் பார்க்கவில்லை - மகள் உருக்கம்


கைது செய்யப்பட்டு, வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆஸாத் சாலியை அவரது குடும்பத்தினர் இன்று சனிக்கிழமை பார்வையிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆஸாத் சாலியின் மகள் ஆமீனா ஆஸாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறுகையில்,

நானும், உம்மாவும் இன்று எங்களது வாப்பாவை பார்வையிட்டேம். எங்களுக்கு வாப்பாவை பார்வையிட 15 நிமிடங்கள் மாத்திரமே அனுமதி தந்தார்கள். நீங்கள் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை. கொஞ்சம் தண்ணியாவது குடியுங்கள் என்று வாப்பாவிடம் கெஞ்சினோம். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். என்னை அநீதியான முறையில் கைது செய்துள்ளனர். என்னை விடுவிக்கும்வரை தனது இந்த போராட்டம் தொடருமென உறுதிபட தெரிவித்தார்.

என்ற வாப்பாவை இதற்கு முன் இதுபோன்ற ஒரு கோலத்தில் பார்க்கவேயில்லை. எனக்கும், உம்மாவுக்கும் ரெம்ப வேதனையாக  இருந்தது. அவரது தலையில் கட்டு போடப்பட்டுள்ளது. நான் ஏன் வாப்பா  உங்கள் தலையில் கட்டு போட்டுள்ளார்கள் என்று வினவினேன். தனக்கு தலைவலி என்றும் எனவேதான் தலையில் கட்டு போட்டுள்ளேன் என்றும் கூறினார்.

வாப்பாவை விடுவிக்கும் போராட்டம் தொடரும். இதுதொடர்பில் சட்டத்தரணிகள் தஸ்தாவேஜுக்களை திரட்டி வருகின்றனர் எனவும் அமீனா ஆஸாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

6 comments:

  1. "அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனையை அழ்ழாஹ் திரையின்றி - தடையின்றி அங்கீகரிக்கின்றான்."

    உங்களின் தந்தையின் போராட்டம், இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பேச வைக்கும் போராட்டம்.!

    தலைவலி தங்கள் தந்தைக்கு மட்டுமல்ல! சால்வைக்குள் ஒளிந்து வாழும் எல்லா முஸ்லிம் அரசியல் வியாபாரிகளுக்கும்தான். உங்கள் தந்தையாவது வெளியில் தெரியும்படி தலையில் கட்டுப் போட்டிருக்கின்றார். அவர்களோ தங்களின் தலைகளையே மறைத்துக் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

    எதிர்வரும் காலங்களில் எந்த முகத்துடன் முஸ்லிம் சமூகத்திடம் சென்று வாக்குகளை மூட்டை கட்டுவது என்பதுதான் அவர்களுக்குள்ள தலைவலி.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. You don't worry my dear child. ever Allah with us

    ReplyDelete
  3. Iwarathu muyatchikku nichchayam Allah thunai seywan, aththudan unnawirathatthikkup pathilaka nonbu notparaayin nanraka irukkum, ithu allahwidathil iwarudaiya ganniyaththaiyum uyarthum, mudiyumayin yaraawathu iwaridaththil sollungal

    ReplyDelete
  4. where is our justice minster?

    ReplyDelete
  5. அன்பின் ஆமினா அஸாத் ஸாலி அவர்களே!
    அஸ்ஸலாமு அலைக்கும்.
    அல்லாஹ் உங்கள் தந்தைக்கு ஆரோக்கியத்தை வழங்குவானாக. முஸ்லிம் சமூகத்துக்காக அவர் ஆற்றிய சேவை என்றும் மறக்க முடியாதது. முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கண்மண் தெரியாமல் கட்டவிழ்த்தவர்கள் (பொது பல்ல சேனா) நாட்டில் சுதந்திரமாகத் திரியும்போது, நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து குரல் எழுப்பிய உங்கள் தந்தைக்கு நேர்ந்த கதி உண்மையில் தற்போதைய அரசாங்கம் அராஜகப் போக்கைக் கடைபிடிக்கிறது என்பதற்கு சான்றாகும். அல்லாஹ் அனைத்துக்கும் போதுமானவன். பொறுமை செய்து கொள்ள வேண்டுகிறேன் சகோதரியே.
    சகோதரியே! உங்கள் தகப்பன் யாருக்கும் அடங்காது குரல் எழுப்பியது முஸ்லிம்களின் தனித்துவத்தையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கே. இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபைக் கழற்ற வேண்டும் எனக் கொக்கரித்தவர்களுக்கு தக்க பதில் அளித்தவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி குரல் கொடுத்த ஒரு தந்தையின் மகள் நீங்கள். அதனை நீங்கள் சற்று சிந்தித்து செயல்படுமாறும், எவருக்கு முன்னிலையிலும் இஸ்லாமிய ஆடையைக் கடைப்பிடிக்குமாறும் எனது நல்லுபதேசத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

    Ur Brother in islam
    From Riyadh

    ReplyDelete
  6. ஆசாத் சாலியை விடுவிக்க கூறி நாங்களும் உண்ணா விரத
    போராட்டத்தில் ஈடுபட்டாள் நல்லம்

    ReplyDelete

Powered by Blogger.