Header Ads



சீனாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ - உடன்பாடுகளிலும் கைச்சாத்திடுவார்


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 4 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்றிரவு சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

புதிய சீன அதிபர் ஜிஅ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் பெய்ஜிங் சென்றுள்ள மகிந்த ராஜபக்ச, அங்கு சீன அதிபர், சீனப் பிரதமர் லி கிகுயாங், துணை அதிபர் லி யுவான்சாவோ, பாதுகாப்பு அமைச்சர் சாங் வன்குவான், வர்த்தக அமைச்சர் காவோ ஹச்செங் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். 

வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாசாரம், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு, மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்த சீனாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதை மையப்படுத்தியதாகவே ஜனாதிபதி பேச்சுக்கள் அமையவுள்ளன. 

சீனாவில் தங்கியிருக்கும் போது, வரும் 28, 29ம் நாள்களில் நடைபெறவுள்ள பெய்ஜிங் பூகோள சேவை மாநாட்டிலும்  கலந்து கொள்ளவுள்ளார். 

இதற்கிடையே, ஜனாதிபதி சீனப் பயணத்தின் போது, குறைந்தது 10 உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments

Powered by Blogger.