காதி நீதிமன்றத்தில்தான் சட்டவிரோத செயல்களுக்கு அங்கீகாரம் - பொதுபல சேனா
நாட்டில் நீதிமன்றம் ஒன்று இருக்கையில் காதி நீதிமன்றம் ஒன்று தேவையாவென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வியெழுப்பியதுடன் இந்த நீதிமன்றத்தில் தான் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது ஒரு பௌத்த நாடு. இங்கு எல்லா மதங்களுக்கும் கௌரவம் அளிக்கப்படுகின்றது. நாட்டில் நீதிமன்றம் ஒன்று செயற்படுகின்ற வேளையில் ஏன் தனியான காதி நீதிமன்றம் ஒன்று இயங்குகின்றது. அங்கு தான் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றது.
இந்நிலையில் ஒவ்வொரு மதங்களுக்கென்றும் தனியான திணைக்களங்கள் இருக்கின்றன. ஆனால் பௌத்த பிரிவில் அவ்வாறில்லாது சர்வ மத பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ள சர்வ மத அமைப்பு என்ற போர்வையில் பௌத்த மதத்தை ஒருபோதும் சீரழிக்க விட முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.

ya allah, iwanai adakka oru waliyey kattu,
ReplyDeleteநானும் பொது பல சேனாவின் பக்கமே.
ReplyDeleteகாதி நீதி மன்றங்கள் சட்ட விரோத செயல்களுக்கு அங்கீகாரம் அளித்திருந்தால் அவற்றைப் பட்டியலிட்டுக் காட்டி தடை செய்வது பொது பல சேனாவின் மட்டுமல்ல, இந்நாட்டு அனைத்து மக்களினதும் பொறுப்பாகும். எனவே முதலில் இது வரை அங்கீகாரமளித்துள்ள சட்ட விரோத செயல்களைப் பட்டியலிடுங்கள். நானும் இவ்விடயத்தில் உங்களுடன் இணைகின்றேன். விபச்சார விடுதி அனுமதியா? மது விற்பனை அனுமதியா? கொள்ளை, கொலை, ஆள்கடத்தலா? கசினோ சூதாட்டமா? வெள்ளை வேனா? அலசி ஆராய்ந்து அவசரமாக அறிக்கை சமர்ப்பியுங்கள்.
MR Najmudeen jameel...can you proof that?Please dont just say without reason, when our personal issues is not end in our favor is there corruption??? and please tell with proof..
ReplyDeleteஎங்கள் பக்கம் ஊத்தைகள் இல்லை என்பதை இப்படிப் பகிரங்கமாகச் சொல்ல முன்வரக்கூடாது.
ReplyDeleteஉங்களுக்குத் தெரியுமா..? காத்தான்குடியில் காதி நீதிபதியாக இருந்த ஒருவர் அண்மையில் 65,000 ரூபாவை மோசடி செய்து சம்மேளனத்தில் கூட்டம் கூட்டி அவரைப் பதவி விலகச் செய்த சம்பவம்..?
இன்னொரு பெண் சவூதிக்குச் சென்று உழைத்துக் கட்டிய வீட்டை அவளைத் தலாக் சொல்லச் சம்மதித்த கணவனின் பெயருக்கு உறுதி எழுதிக் கொடுக்கச் செய்த கொடுமையை எத்தனை பேர் அறிவீர்கள்.
காதிக்கோடுகளில் சட்டத்திற்குப் புறம்பான எத்தனையோ விடயங்கள் நடக்கின்றன என்பது அப்பட்டமான உண்மையாகும்.
பலசேனாக்களின் கருத்தை ஆதரிப்பதாகவோ, சமூகத்தைக் காட்டிக் கொடுப்பதாகவோ கருதக்கூடாது. பலசேனா வந்ததால்தான் முஸ்லிம்கள் சிந்திக்கவும், ஒற்றுமைப்படவும் ஆரம்பித்திருக்கிறார்கள் என நமது பிரதியமைச்சர்களும், அரசியல்வாதிகளும் அறிக்கைகள் மூலமும் மேடைப் பேச்சுக்கள் மூலமும் நன்றி சொல்லி வருகின்ற காலம் இது.
இறைச்சிக் கடையில் மாத்திரமல்ல.. காதிக்கோடுகளிலும் மாற்றம் ஏற்படவே வேண்டும்.
தாங்கள் விரும்பும் காதி நீதிபதி பதவிக்கு வரவேண்டுமென்பதற்காக சம்மேளனத்தின் கடிதத் தலைப்பையே களவாக எடுத்து நீதி அமைச்சுக்கு சிபார்சுக் கடிதம் கொடுத்த தலைவர்களும், செயலாளர்களும் எமதூரில் ஆதாரமாக இருக்கிறார்கள்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
DEAR JAFFNA MUSLIM ,நான் புவி ரஹ்மதுல்லாவின் கூற்று தொடர்பாக அனுப்பிய பதிலை பதிவேற்றம் செய்யவில்லை .காரணம் புரியவில்லை .சிலர் தங்களை அறிவாளிகளாக நினைத்துக்கொண்டு எழுதுவது சமூகத்தையே கட்டிக்கொடுப்பதாக அமைகிறது .ஆகக்குறைந்தது அதனை நீங்கள் போடாமல் விட்டிருக்கலாம் .
DeleteKaathi neethipathi thappu seythaal athu avar sheyal athanaal shariya sattam piley pool naamum peshakkuudaathu. Neethipathi uulal seythaal avarey ethirppoom kaathi koottey alla.
Deleteவார உரைகல்.....இந்த விடயத்தில் நீங்கள் கூறியதை நான் தனிப்பட்ட ரீதியில் அறிவேன்...சில வேளைகளில் எனக்கே வெட்கமாக இருக்கும் இதை விடவும் எவ்வளவோ அநீதியான பெண்களை பாதிக்கும் செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும்...இமான் இல்லாத எந்த செயலையும் அல்லாஹ் அனுமதிப்பதில்லை .....
ReplyDeleteபுவி ரஹ்மத்துல்லாஹ் ,நீங்க ரொம்ப புத்திசாலி ,போய் பொது பல சேனவில சேர்ந்து காதி நீதிமன்றத்தில நடக்கிற எல்லாத்தையும் சொல்லிகொடுங்க ,உங்களைபோல ஒரு மேதையை தான் bbs தேடுறாங்க
ReplyDeleteKaddi court islathill illade vidayam. so adai naangal seidal islathil bith aththai nulaippadaka maari vidum. kanavan manaivi pirachinaya Quran hadeesh moolamakave theerkapadavendum.
ReplyDeleteThis is not the right Forum to discuss our internal games. This is Era that we are living in that the worst people will appointed as leaders among people who has no fear of Allah SWA. Then, everything is possible. For the sake of few incidents, we can not loose the previlage that our Muslim community enjoyed for centuries with respect and dignity by resolving their internal family matters. However, Now everything is commercialised and most people don't really worried about the Day of Judgement.
ReplyDeleteகாதி நீதிமன்றங்களில் ஊழல் நடக்கின்றத்தென்றால் அது நீதவானில் உள்ள தவறு அதை நாமாகவே நமது உரில் பார்த்துக்கொள்வது நல்லது, தற்போது காதி நீதிமன்றங்கள் தேவையில்லையென்று சொல்வது பொதுபலசேன. நாங்கள் ஒன்றும் சொல்லாதபோதே அவர்கள் நமக்கெதிரான பொய்விவாதங்களை கொண்டுவருகின்றார்கள் நிலைமை இப்படியிருக்க கா. நீ களில் ஊழல்கள் நடக்கின்றன என்பது தெரியவருமானால் அது அரசாங்க சட்டத்தின் முன் கைகட்டி நிற்கும் நிலை ஏற்படும் ஆகவே தற்போதுள்ள பிரச்சினை நமக்குள் இருப்பதல்ல, நமக்கெதிராக எழுந்துள்ளவைகளேதான். அதற்காக நமக்குள் நடக்கும் பிரச்சினைகளை விட்டுவிடுவதாக அரத்தமல்ல உண்மையில் பொதுபலசேன போன்றவர்களின் எழுச்சியின் பின் நாம் அதிகமாகச்சிந்திக்கத்தொடங்கியிருக்கின்றோம் அதேவேளை நம்மிடையேயுள்ள பலகுறைகளும் இனங்காணப்படுகின்றன அவைகளுக்கான தீர்வுகளும் எடுக்கப்படுகின்றன இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் தற்போதுள்ள சங்கடமானதொரு சூழ் நிலையில் நாமாகவே குழப்பவாதிகளுக்கு வழிகளை காட்டிக்கொடுக்கவேண்டியதில்லை. என்பதுதான் எனது வாதம்.
ReplyDelete”புவி ரஹ்மதுல்லாஹ்” வழமையாக அறிவுப்பூர்வமான பின்னூட்டங்களை தருவீர்கள் திடீரென காதி நீதிமன்றம் என்றதும் உணர்ச்சிவசப்பட்டகாரணம் எனக்குப்புரிகின்றது இருப்பினும் அதற்கு வேறு யுக்திகளைக்கையாழ்வது மிகவும் நன்மையை உண்டாக்கும் அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளவேண்டும்.
Najemudeen jameel
”காதிகோர்ட்டில் ஊழல்கள் அதிகம் BBS சொல்வது உண்மை” என்றால் அதற்கு பின் முன் ஒன்றும் இல்லையா, சரி அப்படியே வைத்துக்கொள்வோம் காதி கோர்ட்டில் அல்ல காதி நீதிபதியின் தவறால் ஒருபோதும் நீதிமன்றம் ஊழல் ஆகிவிடாது, நீதிபதியாகத்தகுதி அற்றவரை பதவியில் அமர்த்தினால் அங்கு நீதி கிடைக்குமென்று எதிர்பார்பது தவறு.