Header Ads



காத்தான்குடியில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் (படங்கள்)


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி நகரசபையில் வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்தக் கோரி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தியது.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தின் முன்றலில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரதிநிதிகள்,

· நகரசபை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை பேணுமாறும்,
· நகரசபையின் கேள்விச்சபை மற்றும் நிலையியல்க் குழுவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும்,
· நகரசபையில் தீர்மானம் எடுக்கப்படாத நடவடிக்கைளை தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுவதை நிறுத்துமாறும்,
· அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இடம்பெறுகின்ற நிதி நிருவாக நடவடிக்கைகளில் இடம்பெறுகின்ற மோசடிகளை நிறுத்துமாறும்,
· பள்ளிவாயல்களின் சொத்துக்களை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறும்,
· நகரசபை அமர்வுகளில் ஊடகவியலாளர்களையும் அனுமதிக்குமாறும்,
· நகரசபைச் செயலாளரே! சட்டத்தின் வழியில் நகரசபயை வழி நடாத்தகோரியும், 
 என்ற எட்டு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து அதற்கான சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

இதன்போது காத்தான்குடி நகரசபையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கள் பிரதிநிதிகளான அஷ்ஷெய்க் ALM. சபீல் (நளீமி), சகோதரர் MHA. நசீர் உட்பட சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பலரும் பங்கெடுத்துக்கொண்டனர்.


2 comments:

  1. காத்தான்குடி நகர சபைத் தவிசாளரின் அத்துமீறும் அதிகாரத் துஸ்பிரயோகச் செயற்பாடுகளைக்க் கண்டித்து அவரை உடனடியாக 'டிஸ்மிஸ்' செய்யுமாறு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகத்தினர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைக் கேட்டிருந்தனர்.

    அப்போதே கிழக்கு மாகாண சபை முதல்வர், மாகாண உள்ளுராட்சி அமைச்சர், உள்ளுராட்சி ஆணையாளர் போன்றவர்கள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளரின் விடயத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அரசாங்கத்திற்கு ஆதரவான ஆளுந்தரப்பு என்பதற்காக அவர்கள் பாராமுகமாக இருந்து விட்டார்கள்.

    பல்லாண்டு காலமாக எங்கோ இருந்த வீதிகளை எல்லாம் வேறு இடங்களுக்கு மாற்றி அவ்வீதிகளின் பெயர்களால் மில்லியன் கணக்கான ரூபாய்களை அப்பட்டமாகவே கொள்ளையிட்டுக் கொண்டிருக்கும் ஒரேயொரு நகர சபை நாட்டில் இதுவாகத்தான் இருக்க முடியும்.

    எப்போதோ போடப்பட்ட வீதிகளுக்கும் 'தயட்ட கிருள்ள' திட்டத்தில் வீதிகள் போட்டதாக மீண்டும் திறப்பு விழாவும் நடாத்தி மில்லியன் கணக்கில் சுருட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

    இதற்கெல்லாம் சாட்சியம் தேவையா..? அரச அதிகாரிகள் எங்கும் அலையத் தேவையில்லை. காத்தான்குடிக்கு வந்து என்னைத் தொடர்பு கொண்டால் ஊரெங்கும் ஊர்வலமாக அழைத்துச் சென்று நானே ஆதாரம் காட்டுவேன்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. போதாது,

    இது பாம்புக்கு சட்டை போட்ட மாதிரி, உரிய இடத்தில் களட்டிவிட்டு சென்றுவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.