ஷார்ஜாவில் குழந்தைகளுக்கான வாசிப்புத் திருவிழா
(mudukulathur) ஷார்ஜா எக்ஸ்போ மையத்தில் குழந்தைகளுக்கான வாசிப்புத் திருவிழா ஏப்ரல் 23 முதல் மே 4 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற துவக்க விழாவில் ஷார்ஜா ஆட்சியாளரின் அலுவலக தலைவர் ஷேக் இஸ்ஸாம் பின் சகர் அல் காஸிமி பங்கேற்று ஷேக்கா பதுர் பிந்த் சுல்தான் அல் காஸிமி முன்னிலையில் வாசிப்புத் திருவிழாவினை துவக்கி வைத்தார்.
நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் துவக்க விழாவில் பங்கேற்றனர்.
இக்கண்காட்சியில் 80 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

Post a Comment