பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலையில் மீண்டும் தீ விபத்து
வங்காளதேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் சில வாரங்களுக்கு முன் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கட்டிடம் இடிந்ததில் 780 பேர் பலியானார்கள். இந்த நிலையில் டாக்காவில் மீண்டும் ஒரு ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
டாக்காவில் உள்ள தொழிற்பேட்டையில் இந்த ஜவுளி தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏற்றுமதி ஆடைகள் தயாரிப்பு பிரிவில் ஏராளமானோர் பணிபுரிகிறார்கள். இன்று காலை இங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்போது ஊழியர் வீடு திரும்பிவிட்டனர். ஒரு சிலர் மட்டுமே இருந்தனர்.
தீப்பிடித்ததும் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.
தீயணைப்பு படையினரும் மீட்பு படையினரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களில் ஒருவர் அந்த ஆலையின் நிர்வாக இயக்குனர். மற்றொருவர் உயர் போலீஸ் அதிகாரியாவார்.
ஏற்கனவே நடந்த விபத்தில் ஏராளமானோர் பலியானதால் விதியை மீறி செயல்பட்ட 18 தொழிற் சாலைகளை மூட வங்காள தேச அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment