பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்த தாய், குழந்தைகள் பலி (படங்கள்)
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேனி பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் மீராவோடை ஆற்றில் தனது இரண்டு குழந்தைகளுடன் இன்று திங்கட்கிழமை 27.05.2013 10 .45 மணியளவில் குதித்துள்ளார்.
சம்பவத்தில் அவருடைய இரு குழந்தைகளான இலக்சினி வயது 07 மற்றும் 03 வயதான மீனுஜா ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர். அவர்களுடைய சடலங்கள் மீராவோடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மீராவோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதாக மீராவோடை வைத்தியஅதிகாரி சுஹையிர் தெரிவித்தார்.
இச்சவமானது கனவன் மனைவிக்கிடையிலான குடும்ப பிரச்சினை காரணமாகவே குறிந்த தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருத்து தெரியவருவதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.



niggal sandai poddu kondu pillaik kollwathi edrukkolla mudiyathu
ReplyDeleteinda shiru pillaihal anna kutram sheyzarhal? pillayhalai wittu wittu paayndirukkalamey.
ReplyDeleteplease remove these pictures of children..
ReplyDeletepillaikalai kolai setha kutram thaaikkum .kaaranamaana kanavanukkum athika patcham thookkilidappadavendum
ReplyDeleteival thaaye alla
ReplyDeleteHi Friends,
ReplyDeleteஒருபுறம் மாட்டிறைச்சிக்காக சாகும் துறவிகளும் மறுபுறத்தில் வாழ்வதற்கு வழியில்லாமல் சாகும் தாய்களும் உள்ள விசித்திரமான நாடு நமது நாடுதான் போலும்!
தற்கொலை ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது. அந்த முடிவு நிச்சயமாக உணர்வுபூர்வமானது மட்டுமல்ல பைத்தியக்காரத்தனமானதும் கூட.
அதேவேளை ஒருதாயைவிட தனது பிள்ளைகளை வேறு எவராலும் நேசித்துவிட முடியாது. அவ்வாறான ஒருதாயே தனது பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் சாக நினைப்பதென்றால் அதற்குரிய காரணம் நிச்சயம் இலேசுப்பட்டதாக இருக்க முடியாது. ஏதோ ஒருவிதத்தில் அவளைச் சுற்றியுள்ள உறவுகளோ சமூகமோதான் இத்தகைய விவேகமற்ற உணர்வுபூர்வமான முடிவைத் தேர்வு செய்யவேண்டிய நெருக்கடியை அவளுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இன்றைய குடும்பப் பிணக்குகளிலிருந்து சில நாடுகளின் மறைமுக ஆக்கிரமிப்புகள் வரை அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்வியல் சமூகக் கட்டமைப்புகளும் அதன் காரணமாக எழுந்துள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வும்தான். பசிவர மாத்திரை உண்போரும் பசி தாளாமல் யாத்திரை புரிவோருமாக மனிதர்கள் எதிரும் புதிருமாக இருந்து அவர்களுக்கிடையிலான இடைவெளிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுமிருக்கும் இன்றைய காலத்தில் இப்படியான அவலங்கள் தொடரத்தான் செய்யும்.