Header Ads



அரசாங்கத்தின் வாக்குறுதி மீறல், அரசியல் பழிவாங்கல் - முஸ்லிம் காங்கிரஸ் ஆராயும்


முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருக்கவும், கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கவும், முக்கிய சட்டமூலங்கள் நிறைவேறவும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸுக்கு தற்போதைய அரசாங்கள் பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கியுள்ளது. அவற்றில் பல இதுவரை நிறைவேற்றப்படவில்லை. முஸ்லிம் விரோ இனவாத செயற்பாடுகள் முற்றுப்பெறவில்லை. எமது கட்சி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கூடி பேசவுள்ளது.

இதில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர் எனவும் ஹசன் அலி மேலும் தெரிவித்தார்.

3 comments:

  1. திட்டமிடலும் கைவிடலும். வழமைபோன்று சும்மா கூடிக்கலைவார்கள். வேறு ஒன்றுமே நடைபெறாது.

    ReplyDelete
  2. சார் அவசரம் வேணாம் சார்.நீங்௧ முஸ்லிம்௧ௗ் மீது ெ௧ாண்டுள்ள அன்பு எம௧்௧ு தெரியும். வட௧்௧ுத் தேர்தல் தி௧தி வைத்த பின் வில௧ுங்௧ள். அப்போ உங்௧ள் ௧ட்சி வெள்ளலாம். இழிச்ச வாயர்௧ள் நாம் இ௫௧்௧ிறோம் வா௧்௧ுப் போட

    ReplyDelete
  3. So they're going to release another well directed drama to cheat the northern Muslims once more. Bull chits.

    ReplyDelete

Powered by Blogger.