ஆஸாத் சாலி கைதும், நன்றிகெட்ட முஸ்லிம் தலைமைத்துவங்களும்..!
(ஏ எம் எம் முஸம்மில்)
இந்த வார ஜும்மாஹ் (04/05/2013) தினம் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் சஞ்சலமும், கவலையும் ஒருவகையான எதிர்பார்ப்பும் கலந்த நிலையிலேயே எதிர் கொள்ளப்பட்டது. கடந்த சுமார் ஏழு மாதங்களுக்குsஇந்நாட்டு முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக முடுக்கி விடப்பட்டிருக்கின்ற நெருக்குதல்கள் எமது பூர்வீகத்தை கொச்சை படுத்தியதுடன் நாளைய எமது இருப்பையும் கேள்விக்குறியாகியுள்ளது.
நாம் எதிர்கொண்ட சவால்களை எதிர்கொள்ள ஒரு அமைச்சர் படையே ஒருபக்கத்திலும் , “நாம் தான் இந் நாட்டு முஸ்லிம்களை வழிநடாத்த தகுதியுள்ள ஏகபிரதிநிதிகள்” என்று சொல்லக்கூடிய செல்வாக்கு மிக்க உலமா சபையை மறுபுறத்திலும் பெற்றிருந்தாலும் இன்று எமது அடைவுகள் தலைகீழாக ஆக்கப்பட்டுள்ளது.
* முஸ்லிம்களின் ஹலால் உண்ணும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது அல்லது கேள்விகுரியாகப்ப்ட்டுள்ளது
* திட்டமிட்ட விஷமப் பிரசாரங்கள் மூலம் பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன
* பகிரங்கமாக சிங்கள பொதுமக்களை உசுப்பேத்திவிட்டு முஸ்லிம் வியாபார ஸ்தளமான பெஷன் பக் நிறுவனம் தாக்கபட்டு அதன் சொத்துக்கள் பல அழிக்கபட்டன.
* முஸ்லிம்கள் பள்ளிவாயில்களினூடாக தீவிரவாதத்தை பரப்புகிறார்கள், அக்குரனையிலுள்ள 83 பள்ளிவாயில்கள் ஜிஹாதிய பங்கர்கள் என்று பகிரங்கமாக பொய் கூறி பள்ளிகளை இடிக்கவும் வன்செயல்களை ஏற்படுத்தவும் திட்டமிடுகிறார்கள் .
இந்த வன்முறைகள்ளுக்கு எதிராக நீதியை பெற்று தர முடியாவிட்டாலும் ஆகக் குறைந்தது ஒரு பத்திரிகை அறிக்கையை ஏனும் வெளியிட முடியாதளவு கையாலாகாத ஊனச் சமூகத் தலைமைகளை கொண்டதொரு சமுதாயமாகவே இருந்துவருகின்றோம்.
மேற்சொன்ன பல்பக்க தாக்குதல்களை இந் நாட்டு முஸ்லிம்கள் மீது தொடுக்க பட்டிருக்கும் இவ்வேளையில், இவ்வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பி, எமது பிரச்சினகளை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்கிய, “அசாத் சாலி திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார்” என்ற மன வேதனையுடன், இருந்தவர்களுக்கு, ஏதோ ஒருவகையில் தீர்வுகளை எட்டக்கூடிய அறிவித்தல், ஆலோசனைகள் இன்றைய ஜும்மாவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்தவார ஜூம்மாவிற்கு முஸ்லிமகள் பள்ளிவாயில்களில் கூடினார்கள்.
ஆனால் அநேகமான பள்ளிவாயில்களில் (குறிப்பாக பதுளை ஜும்மா பள்ளிவாயிலில்) எமது எதிர்பார்ப்புகள் வழமைபோல் வெறும் எதிபார்புகளாகவே ஆக்கப்பட்டது. அதைவிட ஆகக் குறைந்தது “இப்படி ஒரு அநீதமான கைது நடந்துள்ளது அதற்காக குறைந்தது அவருக்காக அல்லாஹ்விடம் கையேந்தி ஒரு துவாவையேனும் கேளுங்கள்” என்ற ஒரு வார்த்தையை ஏனும் உதிர்க்காமல் மிகக் கவனமாக தமது வார்த்தைகளை கட்டுபடுத்தி கொண்டார்கள்.
இந் நாட்டில் ஹலால் பிரச்சினையின் மூலமே முஸ்லிம்களை குறிவைத்தார்கள். இப்பிரச்சினையை அடிப்படையாக வைத்தே ஏனைய பிரச்சினைகளை தொடராக தொடுத்தார்கள் . ஆனால் ஹலால் பிரச்சினை எம்மால் உருவாகாக்கப்பட்டதொரு பிரச்சினை என்பதே உண்மையாகும்.
இதை தொடங்கி வைத்தவர்களே “தற்போது குனூத் ஒதுவதட்கான தேவை உணரப்படாததால் இதன் பிறகு ஓத தேவையில்லை” என்ற அறிக்கையோடு ஹலால் பிரச்சினையை முடித்தும் வைத்தார்கள். குறிப்பிட்ட இவ்வறிக்கையால் முஸ்லிம் பொதுமக்கள் கூட “இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு இதன்பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்ற மனோபாவத்திற் குள்ளானார்கள்.
ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுத்துள்ள பொது பல சேனா ஹலால் பிரச்சினை முதல் ஏனைய அனைத்து பிரச்சினைகளையும் மீண்டும் மீண்டும் புதுபித் துகொண்டே செல்கிறார்கள். அவர்கள் கூறிய
* முஸ்லிம் பள்ளி வாயில்கள் ஜிஹாதிய பங்கர்கள் ,
* ஜம்மியத்துல் உலமா அல் கைதவுக்கு நிதியுதவியளிகின்றது,
* முஸ்லிமல்லாதவர்களுக்கு உணவளிக்கும் போது மூன்று முறை உமிழ்ந்து விட்டுதான் உணவளிக்கவேண்டும் என்று அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
* பெஷன் பக் போன்ற முஸ்லிம் வியாபாரஸ்தலங்கள் சிங்கள யுவதிகளை மதமாற்றம் செயப்படும் நிலையங்களாகவும், காம செயல்களில் சிங்களப் பெண்களை ஈடுபடவைக்கும் அந்தபுரங்களாகவும் செயற்படுகின்றன .
போன்ற விஷக்கருதுகளை இதுவரை வாபஸ் பெறவோ, மறுக்கவோ இல்லை. ஆகவே முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள எதிகால ஆபத்து எந்தளவிலும் இதுவரை குறையவில்லை. இந்நிலைமைகளை மாற்றியமைத்து பெரும்பான்மை சமூகத்துடன் இணக்கமான ஒருசூழ்நிலையை ஏற்படுத்தக்கூடிய சாணக்கியமான தொரு தலைமைத்துவம் இதுவரை இல்லாதிருக்கும் நிலையில் , இவ்விடை வெளியை நிரப்பும்வகையில் இச்சமூக கொடுமைகளை எதிர்த்து அநியாயக்காரர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவந்து சகஜ நிலையை ஏற்படுத்த ஓங்கி ஒலித்த குரலான அசாத் சாலிஹின் குரல் இன்று நசுக்கப்பட்டுள்ளது .
ஆகவே இவரின் இந்த அநீதியான கைது விடயமாக, இந் நாட்டு முஸ்லிம் அமைச்சர் படையில் அங்கம் வகிப்பவர்களும், அ ,இ ,ஜ ,உலமவோ உடனடியாக தமது நிலைபாட்டை விளக்கி அறிக்கைகள் விடவேண்டும்.
அவரவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் தமது கருத்துக்கள் அமைந்தாலும் சரி தமது நிலைபாட்டை வெளிபடுத்தவேண்டும். அரசின் கைகூலிகளாக இருந்துகொண்டு தலைகீழான அறிக்கைகளை வெளியிடும் விமல் வீர வன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முசம்மில் போன்ற கோடரிகாம்புகள் போன்றவர்கள் வெளியிடும் கருத்தை கொண்டவர்களாயினும் சரி, இது விடயத்தில் நீதிக்காக குரல் கொடுக்காவிட்டாலும் தத்தமது நிலைபாடுகளையேனும் அவர்கள் வெளியிடவேண்டும்.
அதை விடுத்து அம்நேஸ்டி இன்டர்நசனல், சர்வதேச மனிதஉரிமை சபை, மற்றும் வெளிநாட்டு தூதுவர்களின் அறிகைகளை எதிர்பார்த்திருப்பது நயவஞ்சக தனமான பதுங்கலாகும்.
அதே வேளை பள்ளிவாயில்களை பல வர்ணங்களில் நிறம் பூசுவதும், கலர் கலரான காபட் விரிப்புகளை விரிபதையும், பள்ளி வாயில்களில் தேநீருபசாரங்கள் வழங்குவதையும் மட்டுமே மக்கள் தொண்டாக மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் பண்ணுவதை விடுத்து, இன்று தேசிய ரீதியில் முஸ்லிம்கள் முகம் கொடுத்திருக்கும் பாரிய சவால்கள் பற்றிய தெளிவுகளையும் அவ்வப்போது மக்களுக்கு தெளிவூட்டுவதும், சமூகத்துக்காக குரல்கொடுக்கும் சமூகதலைமைகளுக்காக பாரபட்சமின்றி ஒத்துழைப்பு வழங்குவதும் காலத்தின் தேவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் .

WHERE ARE EVIDENCES TO ARREST HIM? THERE ARE MORE EVIDENCES TO BBS TO BE ARRESTED
ReplyDeleteplease ask to start dua on five times pray------will acju--will do this?????????
ReplyDeleteமுஸ்லின் காங்கிரஸ் தலவர் அடிக்கடி சொல்வாரே ஆப்பிளுத்த குரங்கு என்று அது அவரோட சொந்தக்கதையைத்தான் சொல்வார் அதாவது அவரோட கடந்தகால நிலவரங்கள் எல்லாம் அரசாங்கத்திற்கு நன்றாகத்தெரியும் அதைவைத்துத்தான் அவரை அரசாங்கம் அடக்கிவைத்துள்ளது அரசாங்கம் என்னசெய்தாலும் அதற்கு தலையசைப்பதுதான் இதுபோன்ற தலைவர்களது இன்றைய நிலைமை, அதுவும் அரசாங்கம்தான் சொல்லும் ஆம் என்று தலையசைப்பதா அல்லது இல்லையென்று தலையசைப்பதா என்பதற்குக்கூட நாட்டில் தற்போது யாருக்கும் உரிமையில்லை.
ReplyDeletedon't blame the ACJU they led the community when there where no leaders and you do you know something? that they had to call-off the "Qudooth' because of life threat to individuals of ACJU leaders.
ReplyDeletealso according to my opinion I am not blaming Mr Asad Sally, He is a political loser. he jumped here and there several times.
but we should recognize his voice he took the responsibility when no muslim politicians to talk the problem
வடக்குத் தேர்தல் நெருங்கும் வேளையில் இவர்கள் வாய் திறப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
ReplyDeleteஆஸாத் சாலி அவர்களை விடுவிக்குமாறு அப்போது இவர்கள் ஒரு கோரிக்கை விடுப்பார்கள். அதை அள்ளிக்கொண்டு வடக்குக்குச் சென்று முஸ்லிம் சமூக உரிமை பற்றியும், ஆஸாத் சாலியை விடுவிப்பதற்காகக் கோரிக்கை விடுத்தது பற்றியும் கூப்பாடு போட்டு வடக்கு முஸ்லிம்களின் வாக்குகளை மூட்டை கட்ட முயற்சிப்பார்கள்.
தற்போது அரசாங்கத்துடனுள்ள முஸ்லிம் தலைமைத்துவங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு நன்றி கொன்றிருந்தாலும், அரசாங்கத்துக்கு நன்றி விசுவாசம் உள்ள ..ய்களாகவே இருக்கின்றனர் என்பதை என்னால் மறுக்க முடியாது.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
shut up jameel who is slmc , who is Rauf hakeem all are enterd to poltical for filling thire own poket not for ummah they doing own duty not only slmc but also all who came by ummah votes
ReplyDeleteOverall our stand of Muslim politician and intellectual are right to be silent and handle the issues wisely. Our leaders should be cautious about the situation. The situation and consequences are very serious.
ReplyDeleteBoth the BBS and Azad Sally are the product of Tamil diaspora. It is a clear requirements for Diaspora to create a hating and class among Muslim and Sinhalese. So that the diaspora will turn Muslim towards the Tamil which is the requirements for their Eelam dream and merger of north and East.
The present situation very dangerous, each and every Muslim should be educated about the situation.
Presently diaspora put the the Silk Saree in the throne (Muslim Community). Either way the Silk Saree will get damaged.
There are well paid people here to manipulate news and comments. Please evaluate the situation act wisely.