பிரித்தானியாவிலிருந்து ஒருதொகை இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்
பிரித்தானியாவில் இருந்து எதிர்வரும் மாதங்களில் மேலும் சில இலங்கை தமிழர்கள் நாடுகடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரித்தனிய குடிவரவுத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர், கடந்த 2009ம் ஆண்டு 504 பேரும், 2010ம் ஆண்டு 608 பேரும் 2011ம் ஆண்டில் 865 பேரும் கடந்த 2012 ஆண்டு 717 பேரும் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.
எனினும் எதிர்வரும் மாதங்களில் நாடுகடத்தப்படவுள்ளவர்களின் குறிப்பான எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடர்பில் பிரித்தானிய குடிவரவுத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment