Header Ads



ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணும்வரை ஓயப்போவதில்லை - பொதுபல சேனா அறிவிப்பு


ஹலால் பிரச்சினை இன்னும் முடிவடையவில்லை. அதற்கு தீர்வு கிடைக்கும்வரை பொதுபல சேனா ஓயப் போவதில்லையென அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,


ஹலால் தொடர்பில் நாம் முன்னெடுத்த செயற்றிட்டங்களை சில காரணங்களுக்காக தற்காலிகமாக நிதானமாக செயற்படுகிறோம். ஹலாலுக்கு எதிரான எமது பிரச்சாரத்தை பயன்படுத்தி சிலர் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தமுயன்றனர். முஸ்லிம் வியாபார நிறுவனங்களை தாக்கி சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டனர். ஆகவே எமது ஹலாலுக்கு எதிரான பிரச்சாரங்களை சற்று பிற்போட வேண்டியேற்பட்டது.

அதற்காக ஹலால் பிரச்சினை முடிந்துவிட்டது என்பது அர்த்தமல்ல. ஹலால் விடயத்தில் பொதுபல சேனா தொடர்ந்தும் தீவிரமாக செயற்படும். எமது இலக்கு அடையப்படும்வரை நாம் ஓயப்போவது இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். vi

2 comments:

  1. அப்படியானால் நீ சாவும் வரை இந்த நாட்டில் முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடுவது இல்லை என்று சபதம் எடுத்து இருக்கிறாய் என்று புரிகிறது, நீ ஒன்றை மட்டு ம் புரிந்துக்கோ நீ புரியும் யுத்தம் தனியாக முஸ்லிம்களுடன் மட்டுமில்லை, மாறாக உன்னையும் உன் புத்த பிரானையும், ஏன் முழு உலகத்தையும் படைத்து உன்போன்ற கொடியவர்களுக்குக் உணவு தந்து நீ இறந்ததும் நரகத்திற்கு விறகாக உன்னை வளர்த்து வரும் எல்லாம் வல்ல இறைவனோடு என்பதை மறந்து விடாதே இறுதியில் இறைவன் வெற்றி பெறுகின்றான? அல்லது நீயா என்பதை சற்று பொறுத்துப்பார்.

    ReplyDelete
  2. angel aai utham thua thaan

    ReplyDelete

Powered by Blogger.