Header Ads



பௌத்த தேரர் தீக்குளிப்பு - அரபு ஊடகங்களில் முக்கியத்துவம்

மாடுகளை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலதா மாளிகைக்கு முன் இந்தரன பௌத்த தேரர் தீக்குளித்த சம்பவமானது அரபு ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பிடித்துள்ளது.

அரேபியன்டைம்ஸ் ஒன்லைன், கல்ப் டைமஸ் உள்ளிட்ட ஊடகங்களில் இந்த விவகாரம் செய்தியுடனும், புகைப்படங்களுடனும் வெளியாகியுள்ளது.


2 comments:

  1. உயிர் எல்லோரினதும் ஒன்றுதான் நாட்டில் எதிர்க்கவேண்டிய எவ்வளவோ விடயங்கள் உள்ளன அவைகளை விட்டு மாடு அறுப்பதற்கெதிராகவென்று தீக்குளிக்கவேண்டிய அவசியமில்லை. இவர் தேரரோ இல்லை பொதுபலசேனபோன்ற இயக்கத்தவரோ தெரியவில்லை. உண்மையாக புத்தசாசணத்தை படித்தவர்கள் மிகவும் அமைதியாகவும் யாருக்கும் கெடுதல் நினைக்காமலும் மனதைக்கட்டுப்படுத்தியும் இருக்கின்றார்கள், இதுபோன்ற காரியங்களுக்கு யார் தூண்டுதலாக இருந்தார்களோ தெரியவில்லை. மொத்தத்தில் பாரிய விடயமொன்றை எதிர்த்து இதுபோன்ற காரியங்களை செய்தால் பரவாயில்லை, அனேகமானவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றார்கள் பெளத்தர்களும்கூட இதை யாராவது மறுப்பவர்கள் உண்டா? இல்லவே இல்லை, ஆகவே எந்த வகையில் பார்த்தாலும் இது தீக்குளிக்குமளவிற்கு பாரிய விடயமல்ல அத்துடன் தீக்குளிப்பது ஒன்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமுமல்ல ஏன் தீக்குளிக்கவேண்டும் தன் உயிரை ஏன் மாய்த்துக்கொள்ளவேண்டும் அல்லது நோகடிக்கவேண்டும், தற்கொலைசெய்வதோ தனது உடம்பை வருத்திக்கொள்வதோ யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இது ஒருபோதும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைத்தராது மாறாக இன்னும் பல பிரச்சினைகளையே உண்டாக்கக்கூடயது.

    ReplyDelete
  2. முதலில் அந்த தேரரை காப்பாற்றி பின்னர் பின்னர் சிறையிலடைக்க வேண்டும் மற்றுமல்லாமல் அவரை சரியாக விசாரணை செய்தால் இதன் பின்னணியில் யார் உள்ளார்கள், இவருக்கு மூளைச்சலவை செய்தது யார் என்று தெரிய வரும்..

    எவ்வாறிருந்தாலும் தற்கொலை முயற்சி என்பது சட்டப்படி குற்றம் எனவே இவரை கைது செய்ய வேண்டும்...... மாறாக இவர் உயிரையே தியாகம் செய்ய தயாரானவர் என்று தியாகியாக்கி ...... முஸ்லீங்களுக்காக ஹலாலாக்கப்பட்ட மாட்டு இறைச்சியை இல்லாதொழிப்பாங்களோ தெரியவில்லை.....

    ReplyDelete

Powered by Blogger.