Header Ads



ரவூப் ஹக்கீமை அரசிலிருந்து பிரிப்பதற்கு சர்வதேச அமைப்புக்கள் சதி - விமல் வீரவன்ச



(அஸ்ரப் ஏ சமத்)
நோர்வே நாட்டின் எதிர்கட்சித் தலைவரே பௌத்த மத அதி தீவிர போக்குடைய அமைப்புகளுக்கு நிதி வழங்குகின்றார்.  கொழும்பு மற்றும் தெற்கில் வாழும் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படும்படியே இந் நிதி பௌத்த அமைப்புகளுக்கு வழங்கப்படுகின்றது. சரவதேச நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நோர்வே மற்றும் சர்வதேச நாடுகள் செயல்படுகின்றன. கிழக்குப் பகுதியில்  வாழும் முஸ்லீம் மககளின்  மனப்போக்கினை மாற்றுவதற்கும் அவர்களைத் தூண்டி கிழக்கில் உள்ள மாகாணசபையை ஆட்சியை குழப்பி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தமிழ் தேசிய முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கே இவர்கள் முணைகின்றனர். என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச மாளிகாவத்தையில் நடாத்திய மே தின 0-5-2013 கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரவித்தார். அவர் அங்கு மேலும் தெரவித்தாவது,

இந்த அரசில் அமைச்சராக ஹக்கீம் இருந்தாலும் அவர் தமிழ்த்தேசிய முன்னணியுடனே வடக்கு கிழக்கில் ஆட்சியமைப்பதை விரும்புகின்றார். அவர் ஏற்கனவே  இது சம்பந்தமாக தமிழ் தேசிய முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றார். 

சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையில் இவ்வாறான முரண்பாடுகளை தூண்டி விடுவதன் முலமாக கிழக்கு மாகாண முஸ்லீம் மக்களின் மனதை மாற்றி இந்த அரசில் இருந்து ஹக்கீமை பிரிப்பதற்கும் சர்வதேச அமைப்புக்கள், உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இவ்வாறான சதித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் முலம் தமிழ்த் தேசிய முன்னணியின் மற்றுமொறு ஈழத்தினை உருவாக்க முயல்கிறது. இணைந்த வடகிழக்கில் முஸ்லீம்களுக்கு தென்கிழக்கு அலகு உருவாகும். இந்த சதித்திட்டத்தினை நாம் முறியடிக்க வேண்டும். மாகாணசபை ஆட்சியில் உள்ள 13வது சீர்திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பறிக்கப்படல் வேண்டும். அதன் பின்னரே வடக்கில் தேர்தல் நடைபெறல் வேண்டும். இதனை மீறி அரசு வடக்கில் மாகாணசபை தேர்தலொன்றை நடாத்தினால் எனது அமைச்சுப் பதவியை துறப்பதற்கும் நாம் தயாராக உள்ளளேன். வட கிழக்கை மீட்டவர்கள் எனது சிங்கள இரானுவத்தினராகும். எனவும் அமைச்சர்  விமல் வீரவன்ச தெரவித்தார்.    
    


1 comment:

  1. கெளவள்ளு மீன் சாப்பிடுங்கள் அறிவு வளரும் என்று சொன்னமாதிரித்தான் இருக்கு கதை, அவரவர் கனவு கண்டது கற்பனைசெய்தது எல்லாத்தையுமே இங்கு கொண்டு வந்து கொட்டித்தீர்க்கின்றார்கள்.....

    ReplyDelete

Powered by Blogger.