முஸ்லீம் காங்கிரஸ் நேர்வழியில் செல்லுமா..?
உரிமைகளை வென்றெடுப்போம்!அநீதியை அடியோடொழிப்போம் !!என்றெல்லாம் வீரவசனம் பேசி மக்களின் முன் காலடித்தடம் பதித்த முஸ்லீம் காங்கிரஸ் இன்று ஸ்தம்பித்து நிற்பதேன்? அமைதியாக இருந்து, அநீதிக்கு பச்சைக் கொடிகாட்டி தத்தம் சுயலாபத்திற்கு மட்டும் போராடுகின்றார்களா முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் வாதிகள்? என்ற கேள்விகள் தொடர்ச்சியாக மக்களிடையே எழுந்து கொண்டுதானிருக்கின்றன. இன்று அரசின் பங்காளியாக இருக்கின்ற ஏனைய கட்சிகள் அரசுடன் வாதம் புரியவில்லையா?வாசுதேவ நாணயக்கார,டியு குணசேகர,பேராசிரியர் திஸ்ஸவிதாரண போன்றோரெல்லாம் எப்படி நடந்து கொள்கின்றார்கள்? சும்மா வாய்பொத்தி கைகட்டி எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருப்பதால் தனிமனிதர்களுக்கேயன்றி அவர் பிரதிநிதித்துவம் செய்யும் சமூகத்திற்கு எந்த நன்மையையும் கிடையாது !
"எண்ணித்துணிக" என்ற வாக்கிற்கமைய தலைவருடையதும் அவரது அணியினரதும் எந்தச்செயல்பாடும் இருப்பதாக தெரியவில்லை. முஸ்லீம் மக்களது வாக்குப்பலத்தால் கிடைத்த அரியாசனத்தை மட்டும் காப்பாத்தினால் போதும் என்ற நிலைப்பாடே தலைமைத்துவத்தின் உள்ளத்தில் ஆழப்பதிந்த கருத்தாக புலப்படுகின்றது..
"எந்தவொரு சந்தர்பத்திலும் அரசுக்கு முட்டுக்கட்டையாக அல்லது எதிரியாக மாறமாட்டோம்"என்று கூறுவது இதனை கோடிட்டுக்காட்டுகின்றது. பேரம் பேசுகின்ற ஒரு சக்தி இவ்வாறான அறிக்கையிட்டால் அதன் பேரம் பேசும் பண்பு அற்றுப்போனதாகவே கருதப்படும். மாகாண அமைச்சர் காபீஸ் நசீர் கூறியிருக்கின்றார் "முஸ்லீம் காங்கிரஸ் முற்கூட்டியே முடிவெடுக்காத கட்சி "என்று, ,அவ்வாறெனின் தலைவரது கருத்து இதற்கு எதிர்மாறானதாக தெரிகின்றதே! இதென்ன கேலித்தனமான கூற்று?
நடைமுறையிலிருக்கின்ற அரசுடன் இணைந்த காலத்திலிருந்து இதுவரை சமூகத்திலிருக்கும் பிரச்சினை எவையுமே தீர்க்கப்பட்டதாக தெரியவில்லை,அதேவேளை புதுப்புது சோதனைகளும்,சவால்களும் முளைத்துக்கொண்டுதான் இருக்கின்றன, இன்று பொதுபல சேனா என்ற ஒரு குழு முஸ்லீம்களையும் அவர்கள் பின்பற்றும் இஸ்லாம் மதத்தினையும் அதன் கலாச்சார நடவடிக்கைகளையும் முடிந்தவாறேல்லாம் எதிர்மறையாக விமர்சிப்பதுடன் மட்டுமன்றி எதிர்ப்புச்செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றது.இதற்கெதிராக முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லீம் மக்களது ஆதரவைப்பெற்றவோர் கட்சியின் தலைவர் என்ற தோரணையில் செய்த கைங்கரியம் என்ன? ( செயலாரரின் அறிக்கையைத்தவிர )
தலைவர் ஒன்று கூற செயலாளர் மற்றொன்று கூறுகின்றார் இருவரும் கூறுவதை விட புதிதாக ஒன்றை வேறொருவர் கூறுகின்றார் ஆளாளுக்கு அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.மக்கள் அறிக்கைகளை படித்து படித்து அலுத்துப்போய் விட்டனர். உப்புச்சப்பில்லாத கதைகளை விட்டுவிட்டு முஸ்லீம் காங்கிரஸ் உருப்படியான எதையும் செய்யமாட்டார்களா என்று மக்கள் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல் மேடைகளில் அன்று தலைவர் பேசிய உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களை அவ்வப்போது சிரிப்படைய செய்வதற்காக அவரால் நடிக்கப்பட்ட ஒரு நாடகமேயன்றி வேறேதுமில்லைஎனக்கூறலாம் போல தோன்றுகின்றது. அம்பாறை மாவட்டத்திலே முஸ்லீம்களது காணிகளை நாளுக்கொரு காரணம் கூறிக்கொண்டு வந்தவர்களும் போனவர்களும் துவம்சம் செய்கின்றார்கள்.
அண்மையில் பொத்துவிலில், நாவலாற்றுப்பகுதியிலுள்ள 35 வருடங்களுக்கு மேல் உத்தரவுப்பத்திரங்களையுடைய நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்காணிகளை சில பௌத்த துறவிகளும், வனபரிபாலன உத்தியோகத்தர்களும் இன்னும் சிலரும் சாஸ்திரவெளி பாதுகாப்புப்படை பெரியவரது பாதுகாப்பில் இது பௌத்த விகாரைக்கு சொந்தமான காணி எனக்கூறி அட்டூழியம் செய்துள்ளனர்.இதனைத் தடை செய்ய தற்காலிக நடவடிக்கை மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி அவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.நாட்டின் நீதியமைச்சர் மட்டுமன்றி அரசுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பதாக் நினைத்துக்கொண்டிருக்கும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் என்ன செய்தார்,இது பற்றி பாராளுமன்றதில் ஏதாவது பேசப்பட்டதா? சட்டத்தில் முதுமானியானவர்களுக்கு சமூகத்தை பாதுகாக்க ,பறிபோகின்ற உரிமைகளை தடை செய்ய வக்கில்லையா? ஒருவரது காணியை இன்னுமொருவர் அடாத்தாகப்பிடித்திருந்தால் அதற்குரிய சட்ட நடவடிக்க மூலமே அதனை மீட்டுக்கொடுக்க வேண்டும்,மாறாக நாட்டின்சிவில் நிருவாகத்தில் தலையிட தகுதியற்ற பாதுகாப்புப்படையினர் எங்கனம் துணைபோக முடியும்?
அப்பப்போ! விருந்தாளியாக கிழக்கிற்கு வந்து செல்லும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஏன் இன்னும் முஸ்லீம் மக்களது அபிலாசைகளை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்?அல்லது புரிந்தும் புரியாதவர்போல் நடக்கின்றார? பிற கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள் இன்று எவ்வளவோ செய்கின்றபோது வெற்று வேட்டாகவே இவரது வருகைகளும்,மேடைப்பேச்சுக்களும் இருக்கின்றன? மக்கள் இவர் ஒரு நல்ல செயல் வீரன் என்று சொல்லுமளவிற்கு எதைச் சாதித்தார் எனக்கேட்கின்றனர் . கொஞ்சம் ஓடித்திரியும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பசிலிடம் இருந்து கெஞ்சிப்பெற்ற சொற்பளவு வீதி,கான் கட்டுதல் போன்ற சில சேவைகள் மட்டுமே நடைபெறுகின்றன.
இந்நிலையில் தலைவர் திறப்பு விழாக்களுக்கு மட்டும் வந்து மத்தாப்புச்சிரிப்பும்,மந்தகாசப் புன்னைகையையும் மட்டும் மக்களிற்கு வழங்குவதுடன்,எதுவும் செய்யமுடியாத இக்கட்டான நிலையில் இருக்கின்றோம் என்று கூறிச்செல்கின்றார். அண்மையில் வளத்தாப்பிட்டி யானை வேலி சம்மந்தமாக கூட்டம் கூடியிருக்கின்றார்கள் இதன் பலனாக என்னதான் நடக்கப்போகின்றது என்று பொறுத்திருந்து பாப்போம்.
ஒலுவில் அஷ்ரப் நகர் காணிப்பிரச்சினைக்கு என்ன நடந்தது? அறிக்கைகளும் மகஜர்களும் அவரது குப்பைக்கூடைகளை நிரப்ப பிரச்சினைகளும், பிடுங்கல்களும் எம்மக்களை துரத்துகின்றன பாராளுமன்ற, மாகணசபை உறுப்பினர்கள் பலர் இருந்தும் பலனேதும் இருப்பதாக இல்லை,கூட்டங்ககள் கூடிக்கூடி கலைகின்றனவேயொழிய முடிவேதும் காணப்படுவதுமில்லை .
இந்த அரசுடன் இணைந்ததிலிருந்து முஸ்லீம் காங்கிரஸ் மக்களுக்கு செய்த சேவைகள்தான் என்ன என்று மக்கள் அறிய ஆவலாக உள்ளனர். உணர்ச்சிகளை தூண்டி அதனை முதலீடாக வைத்து வாக்குப்பலம் பெற்ற முஸ்லீம் காங்கிரஸ் குறித்து மக்களது நிலைப்பாடு என்ன என்று அறிய முயற்சி செய்ததா? கட்சியின் அனுமதியின்றி அரசியல் ஆழம் தெரியாத உறுப்பினர்கள் ஈடுபட்ட சமூக விரோத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தது இந்தக்கட்சி?
தலைவர் அழகாக புன்னகையுடன் இருந்தால் மட்டும் போதாது. அடிமட்ட தொண்டன், வாக்களனின் அபிலாசை என்ன என்று உணர்வுபூர்வமாக சிந்திக்க வேண்டும்.யதார்த்தங்களை சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தை துய்த்தறிந்து முடிவெடிக்க வேண்டும், கட்சியின் முக்கியசஷ்தகர்கள் ஊடாக மக்களின் மனப்பாங்கு என்ன என்று கேட்டறிய வேண்டும் , தன்னுள்ளே நியாயத்தை தர்கித்து சுயலாபம் என்ற சட்டையைகழற்றி வைக்க வேண்டும்.சதுரங்க அரசியலில் ஈடுபடாது சார்த்தக அரசியல் செய்யவேண்டும்.முடியா வி ட்டால் கட்சியை விட்டு விலகியிருக்கவேண்டும்.ஏனெனில் கட்சி ஒன்றும் தலைவருடைய சொத்தல்ல இது! இது மக்களது சொத்து அமானிதத்தை பொறுப்பெடுத்தவர் அதைப்பதுகாக்கவேண்டும்.முடியாவிடின் முடியுமானவர்களுக்கு கொடுத்துவிடவேண்டும் முழுவதுமாக அழியும்முன் .
தலைவர் அஷ்ரப் இனது அகாலமரணத்தின் பின்னர் தேன்கூடாக இருந்த இக்கட்சி எத்தனைமுறை திரளாகக்குலைந்தது? அதன் பின்னணியிலுள்ள ஒவ்வொரு விடயத்தினையும் துருவினால் குறிப்பிட்ட சிலரது சுயலாபங்களே முழு முதல் காரணியாக முன்னிற்கின்றன!அவைபற்றி பிறிதொரு கட்டுரையில் குறிப்பிடுகின்றேன்.
முடிவாக, முஸ்லீம் காங்கிரஸ் மக்களது நியாயமான ஏக்கங்களை புரிந்து கொள்ள இன்னும் அவகாசம் இருக்கின்றது. பிரதேச மத்திய குழுக்கள் புனரமைக்கப்பட்டு அவற்றினூடாக அடிமட்ட மக்களது அடிப்படை அரசியல் தேவைகள் மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் குரலாக ஒலிக்க வேண்டும். வாக்குறுதிகள் மட்டும் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாத முஸ்லீம்களது பிரச்சினைகள் செயலளவில் தீர்த்துவைக்கப்பட வேண்டும்.வடமாகாண முஸ்லீம்களது மீள் குடியேற்றத்தில் கட்சி பேதம் பாராது ஏனைய முஸ்லீம் கட்சிகளுடன் தோள்கொடுத்து வெற்றிபெறவேண்டும்.கூர்மையற்றிருக்கும் முஸ்லீம் காங்கிரசின் பேரம்பேசும் சக்தி ஜனநாயகப்பண்புகள் மூலமாக சாணை யிடப்பட்டு நம் சமூகத்திற்கெதிரான விலங்குகளை அது அறுத்தெறிய வேண்டும்.அப்பொழுதுதான் மரம் வேரூன்றியிருக்கும் சமூகம் அம்மரம் உயிர்வாழ தமது ஆதரவுஎனும் நீரூற்றுவார்கள்!
பெற்றோர் பிள்ளைகளை கண்டிப்பதும் புத்திமதி சொல்வதும் பிள்ளையின் மேலுள்ள அன்பினாலேயன்றி வெறுப்பினாலல்ல !

M. I. Umar Ali Averkale Arsiyal Veevchcharikalukku Anray Naal Maddum Than Ninievu Erukkum
ReplyDeleteMattray Naal Maranthu Poiveedum......?
Ethuponroru Upathesam Solluvathai Sevadan Kaathiel Uothuvathu Ponruthan..............?
Mattravandum Makkalai Mattravandum Madyarkalai Alla.....
Manaketta Arasiyal Vaathiekalai Nammpi
Vaakkalietha Makkalien Naanum Oruvan
Unkkal Karuththukkal Makkalmaththiel Poaicheravandum
Than Samukam Thannaithanai Mattrathavarai
(Allahveedam )Eraivanidam Erunthu Uthaviekalai Ethierparkka Mudiayathu
SLMC/Eanaya Muslim Arasiyal Vathiyakal
Makkalien Palavienaththai Nanku Arinthu Vaithullarkal
Makkal Madayarkal Eanpathai
Sornakadda Samukamaka Poiveeddathu Enpathai
Sainthamaruth Nualnilayam Thirappuvilah SLMC Saathanai Padaithuveeddathu
Ennasaithalum Eathuvum Kakkamaddom Enru Nielaikku Makkal Maariveeddarkal
==============Kalmunai Mohamed Fowse===================
Muslim congres soram poivittathu arasiyal labathikkaha
ReplyDelete...வாலை நிமிர்த்த முயற்சித்துள்ளீர்கள். முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteவால் நிமிருமா என்பது சந்தேகமே!
மிளகாயில் உறைப்பு பிரிக்க முடியாமல் இருப்பது போல், சீனியில் இனிப்பு பிரிய முடியாமல் உள்ளதுபோல் ஸ்ரீ.ல.மு.கா.விலும் அரச அமைச்சுச் சுகபோகம் பிரிய முடியாத விடயமே!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
மாற்றீடு பற்றி சிந்திக்காமல் இப்படியே பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. எப்போது கிழக்கு முஸ்லிம்கள் முஸ்லிம் கொங்க்ரசை தூக்கி வீசுகிரார்களோ அப்போதுதான் விடிவு ஏற்படும்
ReplyDeleteWAIT MY DEAR BROTHERS.... WE SHOULD TEACH THEM A VERY GOOD LESSON BY "VOTE" NOT ONLY FOR SLMC BUT ALSO... OTHER "MUSLIM LEADERS" WHO ARE PUPPETS OF THE GOVERNMENT.
ReplyDeleteஇந்த கட்டுரை அருமையிலும், அருமை கட்டுரையாளர் சகோர உமர் அலியின் கட்டுரைக்கும் தமிழ் மொழி நடைக்கு என்னுடைய தனிப்பட்ட கைதட்டல், மேலும், முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அத்தனையும் உண்மையாதான், இன்றைய யதாத்தை உணர வேண்டும்,
ReplyDeleteகாங்கிரஸ் என்ற வாகனம் இப்போது இலங்கையில் காணப்படுகின்ற சிக்கல் நிறைந்த பாதையான ”தாஅட்ட” பக்கில் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதன் சாராதி நினைத்து போல் வாகனத்தை செலுத்த நினைத்தால், அங்கு பயணம் செல்ல முடியாது பாதையில் உள்ள வலைவுகளுக்கேற்றாப் போல் வாகனத்தை பயணம் போக முடியும்.
கட்டுரையாளர் வேரெறுவரிடம் கட்சியை ஒப்படைக்கும்படி கூறுகின்றார். அந்த நபரை முதலில் யார் என்று சொல்லிவிட்டு கட்டுரையை எழுத வேண்டும்.
இப்போதுள்ள மகிந்த மன்னனின் அரசியல் பலத்திற்கு பொருத்தமான முறையில் விமர்சனங்களை தெரிவிக்க வேண்டும்.
இலங்கை வரலாற்றிலேயே விகிதாசா முறைமையின் கீழ் உள்ள ஒரு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள ஒரு அரசனிடம் ஆட்சியில் உள்ள சூழ்நிலையில் உண்மைகளை விளங்க வேண்டும்.
கண்களை குத்திவிட்டு காட்சிகளை தேடும் மடமையான விமர்சனங்களை எழுதுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
கட்சி உடைந்தால் அதன் தலைவருக்கு அதனை திருப்ப திருத்திஎடுக்கவே காலம் போதுமானதாக இருக்கும். மக்கள் பிரச்சினை பார்க்க முடியாது. கடந்த கால அனுபவங்களை அவதானித்துப் பாருங்கள்
நான் ஒரு யதாத்தவாதி, உண்மையை நீங்களே உங்களுக்குள் அலசிப்பாருங்கள்.
ஒரு சிறந்த வைத்தியராக இருந்தால் ஒரு மனிதனுக்கு நோய் நிவாரணி வழங்கும் போது அவனுடைய உடல் நிலமைகளை கவனத்தில் கொண்டு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் செருப்பு கடிச்சி செத்த கணக்கில் சாதாரண மருந்தும் கூட அவனுக்கு நஞ்சாக அமைந்து விடும். இவை தான் இன்றைய சூழ்நிலை சார்ந்த அரசியலும், அனுபவமும்.
PARAGAHADENIYUR AKRAM, கண்டிப்பாக இவர்களுக்கு ஒரே வழி அதுதான் தேர்தலில் இவர்களுக்கு ஆப்படிப்பதைத்தவிர வேறு வழியில்லை மு. கா மட்டுமல்ல இதுபோன்ற கட்சிகள் நிறையவே உண்டு பார்க்கலாம்...
ReplyDeleteஅன்பின் " tamil news " அன்பருக்கு சிறந்த அணுகுமுறையை விமர்சனத்தில் கடைப்பிடித்திருக்கின்றீர்கள்,வாழ்த்துக்கள்!மகிந்தவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை யாரினால் கிடைத்தது? SLMC இன் இணைவினால் தானே?
ReplyDeleteதக அட்ட பள்ளத்தான்கினால் கொழும்புக்கு செல்வதை விட இன்னும் பல ஆபத்துக்கள் குறைந்த மார்க்ர்கங்கள் உள்ளன ,இவற்றையும் தெரிவு செய்யலாம்தானே?என் இந்த வழியால்தான் போவேன், இந்தக்குளிக்குள் தான் விழுவேன் என அடம் பிடிக்க வேண்டும்?
கட்சியை மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றால் போல் வழிநடாத்தவேண்டும் என்பதுதான் எனது கருத்து!ஹாபீஸ் நசீர் கூறியிருக்கின்றார் இவர்கள் சொல்வதையெல்லாம் நாங்கள் என் செவிமடுக்கவேண்டும் என்று.,நான் நிச்சயமாக கூறுகின்றேன் கட்டாயம் கேட்டுத்தான் ஆக வேண்டும்.ஏனென்றால் தமிழரசுக்கு வாக்களித்தவனில்லை உங்களுக்கு கருத்துச்சொல்வது.,உங்களை இந்நிலைக்கு உயர்த்தியவனே கூருகின்றான்கேட்டுத்தான் ஆக வேண்டும். யார் தலைவர் எவர் பொருத்தமென்று நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்,யார் யாரில் என்ன்ன பண்புகள் உள்ளன எந்தப்பன்புகள் உள்ளவர்களை தேர்ந்தால் மக்களுக்கு நன்மை என்று அலசிப்பாருங்க ள் ஆட்களது நடவடிக்கைகளை நாங்கள் வெளிச்சம் போட்டுக்காட்ட்கின்றோம்.
அன்பின் " tamil news " அன்பருக்கு சிறந்த அணுகுமுறையை விமர்சனத்தில் கடைப்பிடித்திருக்கின்றீர்கள்,வாழ்த்துக்கள்!மகிந்தவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை யாரினால் கிடைத்தது? SLMC இன் இணைவினால் தானே?
ReplyDeleteதக அட்ட பள்ளத்தான்கினால் கொழும்புக்கு செல்வதை விட இன்னும் பல ஆபத்துக்கள் குறைந்த மார்க்ர்கங்கள் உள்ளன ,இவற்றையும் தெரிவு செய்யலாம்தானே?என் இந்த வழியால்தான் போவேன், இந்தக்குளிக்குள் தான் விழுவேன் என அடம் பிடிக்க வேண்டும்?
கட்சியை மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றால் போல் வழிநடாத்தவேண்டும் என்பதுதான் எனது கருத்து!ஹாபீஸ் நசீர் கூறியிருக்கின்றார் இவர்கள் சொல்வதையெல்லாம் நாங்கள் என் செவிமடுக்கவேண்டும் என்று.,நான் நிச்சயமாக கூறுகின்றேன் கட்டாயம் கேட்டுத்தான் ஆக வேண்டும்.ஏனென்றால் தமிழரசுக்கு வாக்களித்தவனில்லை உங்களுக்கு கருத்துச்சொல்வது.,உங்களை இந்நிலைக்கு உயர்த்தியவனே கூருகின்றான்கேட்டுத்தான் ஆக வேண்டும். யார் தலைவர் எவர் பொருத்தமென்று நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்,யார் யாரில் என்நீன்ன பண்புகள் உள்ளன எந்தப்பன்புகள் உள்ளவர்களை தேர்ந்தால் மக்களுக்கு நன்மை என்று அலசிப்பாருங்க ள் ஆட்களது நடவடிக்கைகளை நாங்கள் வெளிச்சம் போட்டுக்காட்ட்கின்றோம்.