Header Ads



மாடு வெட்டுவதற்கு எதிராக பிரேணை கொண்டுவாருங்கள் - பௌத்த இனவாத அமைப்புகள்

பௌத்த மதத்திற்கு அடிப்படைவாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தவேளையில், அரசாங்கம் பாராளுமன்றத்தில் அவசரமாக மதமாற்றம், இறைச்சிக்காக மாடு வெட்டல் மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிரான பிரேரணையை கொண்டுவர வேண்டுமென பொதுபல சேனா, மற்றும் சிங்கள ராவய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 
பௌத்தர்களின் உரிமையை பாதுகாக்க முடியாத அரசின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் எதற்காக? பலாக்காய் கொத்தவா? எனவும் அவ் அமைப்புகள் கேள்வியெழுப்பியுள்ளன.
 
சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பௌத்த அமைப்புக்களின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
 
மிருகவதை மற்றும் அடிப்படைவாதத்தால் பௌத்த மதத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உட்பட பல்லேறு கோரிக்கைகளை அமுல்படுத்துமாறு தனது உயிரை போவத்தே இந்திர ரத்தின தேரர் மாய்த்துக் கொண்டுள்ளார்.
 
அவர் பௌத்த மதத்தின் மீதுள்ள பற்றுக் காரணமாகவே உயிரைத் தியாகமாக்கினார். இந்நிலையில் தீயசக்திகள் திரிபுபடுத்தி பல காரணங்களைக் கூறுகின்றன. பௌத்தர்களின் தீர்க்கப்படாத நீண்ட நாள் பிரச்சினை தான் அவர் உயிரைமாய்த்ததற்கு முக்கிய காரணம். இது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம் ஆகும்.
 
நாட்டில் அடிப்படைவாத தலையீட்டால் பௌத்த தர்மத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம் அடிப்படை வாதசெயற்பாடுகளால் பௌத்த தர்மத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை நாம் அடிக்கடி குறிப்பிட்டுள்ளோம். இதில் அனைவரும் அவதானமாக செயற்பட வேண்டும். இதில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
 
இந்நிலையில் இது குறித்து பாராளுமன்றத்தில் அமைச்சரவை மட்டத்தில் விவாதங்களை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட மதமாற்றத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பிரேரணையை கொண்டு வர வேண்டும்.

8 comments:

  1. ஐயா ஞானசாரா எங்குதான் மதமாற்றம் நடக்குது இந்த பிக்குவை வைத்து தொழில் நடத்த திட்டமோ இன்ஷாஅல்லாஹ் உங்களை எல்லாம் அல்லாஹ் பார்துக்கொள்வான் ஹஸ்பியல்லாஹ்

    ReplyDelete
  2. யா அல்லாஹ்! மனிதர்களில் இப்படியும் ஒரு கூட்டத்தைப் படைத்துள்ளாயே! அவர்களின் மூளையில் சிறிதளவும் வேலைசெய்வதில்லையே. போதாக்குறைக்கு அமைச்சராக, மதத் தலைவர்களாக இருக்கின்றனரே. இறைவா! இது எமக்கு பெரும் சோதனையே. நாம் உமது அடியார்கள். நாம் விளங்கப்படுத்தினால் அவர்களுக்கு விளங்குவதில்லையே. நிர்வாணமாக, இறுக்கமான ஆடைகளோடு சுற்றும் பெண்களை ரசித்துக் கொண்டு இஸ்லாமிய ஹிஜாப் ஓழுக்க ஆடையை ஆபாசம் என்கின்றனரே. எத்தனையோ உயிரினங்களை சாப்பிட்டுக்கொண்டே மாட்டை மாத்திரம் அறுக்க வேண்டாம் என்று கூறுகின்றனரே. யா அல்லாஹ் எமது சிறிய அறிவு. நீ அனைத்தையும் சூழ்ந்தறியும் ஆற்றலுள்ளவன். எமக்கு நன்மையானதைத் தருவாயாக, தீயதைத் தடுப்பாயாக. எமக்கு தொடரும் சோதனைகளிலிருந்து விடிவைத் தருவாயாக. அநியாயக்காரர்களுக்கு தீராத நோயொன்றைக் கொடுத்தாவது அவர்களின் வாயை அடக்குவாயாக.

    ReplyDelete
  3. Ivanukalku manitha yurai vida madukalin yuir romba punitham pola

    ReplyDelete
  4. Don't worry muslims, they are under falls hood, sinhala peaples know very wel that bbs is working for mp seats.

    ReplyDelete
  5. ஏன் அவர்கள் அவர்கள் தடை சட்டம் கொண்டுவரட்டுமே ........அதனாலென்ன முஸ்லிம் சமூகம் அழிந்தா விடும்....அவர்கள் தடை சட்டம் கொண்டுவருவதற்கு முன்னர் நாங்களாகவே மாட்டிறைச்சி புசிப்பதிலிருந்து ஓரிரு மாதங்கள் தவிர்ந்து கொண்டால் அவர்களாகவே மாட்டை அறுத்து புசிக்க சட்டம் கொண்டுவந்தாலும் ஆச்சரியமில்லை ...???

    ReplyDelete
  6. ஏன் அவர்கள் அவர்கள் தடை சட்டம் கொண்டுவரட்டுமே ........அதனாலென்ன முஸ்லிம் சமூகம் அழிந்தா விடும்....அவர்கள் தடை சட்டம் கொண்டுவருவதற்கு முன்னர் நாங்களாகவே மாட்டிறைச்சி புசிப்பதிலிருந்து ஓரிரு மாதங்கள் தவிர்ந்து கொண்டால் அவர்களாகவே மாட்டை அறுத்து புசிக்க சட்டம் கொண்டுவந்தாலும் ஆச்சரியமில்லை ...???

    ReplyDelete
  7. ஏன் மசிரு வெட்டுவதைத் தடுப்பதற்கும் நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றைக் கொண்டு வரச் சொல்லாமே.. அப்படியாவது இந்த நாட்டில் இப்படியான தலையில் ஒன்றுமில்லாத 'மொட்டைகள்' ஒழிகின்றதா என்பதைப் பார்க்கலாம்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  8. இது போன்ற இயக்கங்களும் தீவிரவாதிகளும் இல்லாதவரைக்கும் முஸ்லிம்கள் ஒன்று சேர மாட்டார்கள். இது அல்லாஹ்வின் ஏற்பாடு. ஒற்றுமை என்னும் கயிற்றைப்பற்றிப்பிடிக்க இது தான் சந்தர்ப்பம். ஒன்று பட்ட பின் சோதனைகளை எதிர் கொண்டால் சுவர்க்கத்துக்கு வழி கோலும், ஆனால் இனியாவது ஒன்று படவில்லை என்றால் சோதனைகளையும் அனுபவித்து, நரகத்தையும் நோக்கித்தான் போக வேண்டி வரும். எனவே, ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமைப்பட முயற்சி செய்வோமாக.

    ReplyDelete

Powered by Blogger.