இலங்கை - சவூதி அரேபிய அதிகாரிகளிடையே முக்கிய பேச்சுவார்த்தை
சட்டவிரோத பணியாளர்கள் தொடர்பில் சவுதி அரேபியா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் இன்று 11-05-2013 விசேட பேச்சுவார்ததையொன்று நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபிய தொழில் அமைச்சில் நடைபெறவுள்ளதாக அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதரகத்தின் முதன்மை அமைச்சு ஆலோசகர் அனுர முத்துமால தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர், ஜித்தாவிலுள்ள கொன்சியூலர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளனர்.
சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக ரியாத்திலுள்ள சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதரகத்தின் முதன்மை அமைச்சு ஆலோசகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக பத்தாயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் தங்கியுள்ளதாக இலங்கைத் தரப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment