Header Ads



ஆஸாத் சாலியின் உடல் பலவீனமடைகிறது - குடும்பத்தினர் பார்வையிட அனுமதி மறுப்பு


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸாத் சாலியை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸாத் சாலியின் மருமகன் ஆதிப் ராஜா ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் தருகையில்,

ஆஸாத் சாலியின் மனைவி, மகள், மருமகன் ஆகிய எனக்கும் ஆஸாத் சாலியை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிடலாமென எங்களது சட்டத்தரணி கூறினார். இதையடுத்து நாங்கள் அவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை சென்றோம். எனினும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது என்றார்.

இதேவேளை ஆஸாத் சாலி தொடர்ந்து சாப்பிட மறுப்பதால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது குடும்பம் கவலையில் மூழ்கியுள்ளதாகவும் ஆஸாத் சாலியின் மருமகன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மேலும் குறிப்பிட்டார்.

2 comments:

  1. யா அழ்ழாஹ்!

    இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சனைகளை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்டு அதற்காக தன்னுயிரையும் இழக்கத் துணிந்த எமது சமூகத் தலைவனை உன்னளவில் பரஞ்சாட்டுகின்றோம். நீ, பிடரி நரம்பினை விடவும் நெருங்கியிருக்கின்றாய்!

    நீயே அவருக்கு உணவளி! நீயே அவருக்கு உயிரளி!! நாங்கள் அவரைப் பொருந்திக் கொண்டது போல் நீயும் அவரைப் பொருந்திக் கொள்!!

    இந்நாட்டு ஜனநாயக அரசியலின் மனிதாபிமானமற்ற வக்கிரத்தன்மையை நினைக்கையில், ஏன் பிறந்தேன் இந்த நாட்டில் என எண்ணிக் கதறத் தோன்றுகின்றது.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. என்ன இதுதான் உங்க அபிவிருத்தியா உன்மைக்கு குரல்கொடுத்தால் இப்படித்தானா ராணுவம் மதம்பாத்துத்தான் வேலை செய்வார்களே புது பலாயை ஏன் இன்னும் விட்டுவைத்துள்ளீர் பாவம் நீங்கள்

    ReplyDelete

Powered by Blogger.