Header Ads



'இனவாதப் பிரச்சாரம்' முன்னெடுப்புக்களை ஆரம்பிக்க வேண்டிய தருணம்..!

(லதீப் பாரூக்)

அநுராதபுர தர்கா உடைப்பு...

தம்புள்ளை பள்ளிவாயல் தாக்குதல்...

கடந்த வாரம் தப்தர் ஜைலானி பள்ளிவாயலைச் சூழவுள்ள சில பகுதிகள் காடையர் சிலரால் அழிக்கப்பட்டமை...

முஸ்லிம் விரோத பிரசாரங்களில் நடைமுறை வடிவமாக கடந்த இரு ஆண்டுகளில் இவ்விதம் பல்வேறு அசம்பாவிதங்கள் தொடர்ந்தேச்சையாக நடந்தேறி வந்திருக்கின்றன.

பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இப்பிரச்சாரங்கள், முஸ்லிம் சமூகத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கக் கூடியவை. அவ்வாறிருந்தும், ஹெல உருமய, பொது பல சேனா, சிங்கள ராவய உள்ளிட்ட இனவாத அமைப்புக்கள் மூட்டிய இனவாதத் தீ பெரியளவில் பற்றி எரிய ஆரம்பித்த போது, விழித்துக் கொண்ட முஸ்லிம் சமூகம், தற்போது அதனை மீண்டும் மறந்து விட்டதாகவே தெரிகிறது.

சிங்கள சமூகத்தின் மனங்களில் விஷத்தைக் கலந்து, முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி வருகின்ற இக்குழுக்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் தவறி வருகின்ற நிலையில், நாளாந்தக் கூட்டுத் தொழுகைகளில் ஓதப்பட்டு வந்த குனூதும் கூட நிறுத்தப்பட்டுள்ளது. குனூத் நிறுத்தப்பட்ட காரணமும் நிறுத்தியவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

எவ்வாறாயினும், முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பிரச்சாரங்களை முன் கொண்டு செல்வதற்கு ஏதுவான துருப்புச் சீட்டுக்கள் இன்றும் முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்றன. அவை குறித்து மிக சீரியஸாக உலமாக்களும், புத்து ஜீவிகளும், வை.எம்.எம்.ஏ போன்ற பல்வேறு சிவில் அமைப்புக்களும் கவனம் செலுத்த வேண்டியதியதொரு வரலாற்றுத் தேவை இன்று உருவாகியுள்ளது. இடைக் கால ஆலோசனை சபையை ஆரம்பிப்பதற்கான கூட்டத்தின் போது, முஹம்மத் அப்ரார், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற 130 இற்கும் அதிகமான பிரச்சினைகளை அடையாளப்படுத்தி இருந்தார்.

குறிப்பாக அதான் கூறுவதற்காக ஒலிப் பெருக்கிகளைப் பயன்படுத்தல், மாடறுப்பு விவகாரம், முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் போன்றன நீண்ட காலமாக பிரச்சினைக்குரிய அம்சங்களாக இருந்து வருகின்றன. குறைந்தபட்சம் இவை தொடர்பிலாவது, உடனடியாகத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமைப்பாடு இன்று காணப்படுகின்றது.

ஒலிப் பெருக்கிப் பாவணையை அதிகாலை ஐந்து மணிக்கு முன்பு பயன்படுத்துவதற்கான தடையொன்று சிறிது காலத்திற்கு முன்பாக கொண்டு வரப்பட்டமையையும் மறந்து விட முடியாது. மிகச் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்களிலும், ஒலிப் பெருக்கியை மிகையாகப் பயன்படுத்தி, அயலவர்களைத் தொந்தரவு செய்கின்ற வகையில் நடந்து கொள்வது எந்த வகையில் பொருத்தமானது என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சிங்கள சமூகத்தைத் தூண்டுகின்ற மற்றொரு துருப்புச் சீட்டாக, மாடறுப்பு விவகாரம் தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது. பெரும்பான்மையான எமது இறைச்சிக் கடைகள் கல்வியறிவு குறைந்தவர்களினாலேயே நடாத்தப்படுகின்றன. பெரும்பாலும் பரம்பரைத் தொழிலாக இருந்துவரும் இத்தொழில், எதுவித முன்னேற்றமான அம்சமும் இன்றி, அதே பாரம்பரிய முறையிலேயே நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது. கால மாற்றத்தோடு இயைபான மாற்றத்தை இத்துறையில் அவதானிக்க முடியவில்லை.

இதில் ஈடுபட்டுள்ளவர்களை இது தொடர்பில் அறிவூட்டி, மார்க்கத்திற்கு இயைபானதாகவும், நாட்டின் கலாசாரத்திற்குப் பொருத்தமானதாகவும் இறைச்சிக் கடைகளை நவீன மயப்படுத்தி மேற்கொள்வதற்கான தேவை இன்று காணப்படுகிறது.

பெண்களின் ஆடை விவகாரமும் இவ்வாறானதுதான். 1990 களில் முஸ்லிம் பெண்கள் முகத் திரை அணிவது குறித்து ஐக்கிய இராச்சியத்தில் ஆரம்பித்த விவாதங்கள், தொடர்ந்து பிற நாடுகளுக்கும் பரவியது. இது குறித்த அப்போது ஐக்கிய இராச்சிய ஷரீஆ கவுன்ஸில் தலைவராக இருந்த, பிரபல இஸ்லாமிய அறிஞர் செய்யித் முதவல்லி அல்- தர்ஷ் அவர்கள் ஒரு நூலை எழுதியிருந்தார். கலாநிதி மஸ்ஹருத்தீன் ஸித்தீகி அவர்களது அறிமுக உரையோடு, கோலாலம்பூரைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம், இந்நூலை வெளியீடு செய்திருந்தது. அதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'முகத்திரை கடமையானது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது குறித்து விரிவாக நான் மேற்கொண்ட ஆய்வில், கேள்விக்குட்படுத்த முடியாத எந்தவொரு ஆதாரத்தையும் இதற்கு சாதகமாக நான் பெற்றுக் கொள்ளவில்லை. இல்லாவிட்டால், முகத்திரை அவசியமில்லை என்று கூறுகின்ற பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்களின் புலமையைக் கேள்விக்குட்படுத்தியவர்களாக நாம் ஆகி விடுவோம்'.

'ஒரு பெண் பருவம் அடைந்து விட்டால், இதைத் தவிர வேறு எந்த உறுப்பும் வெளித் தெரியக் கூடாது' என்று கூறிய ரஸூல் (ஸல்) அவர்கள் முகத்தையும், மணிக்கட்டுக் கைகளையும் சுட்டிக் காட்டினார்கள் என்பது போன்று வருகின்ற அறிவிப்புக்களை மையமாக வைத்தே இவ்விளக்கம் வழங்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக மற்றொரு அறிஞர் அண்மையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:. 'குர்ஆனோ, சுன்னாவோ குறிப்பிட்டதொரு வடிவத்திலான ஆடையைத்தான் அணிய வேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஆடைக்கான அடிப்படைகளை மட்டுமே அது வழங்குகின்றது. கணவனோ, தந்தையோ கூறுகிறாள் என்பதற்காக அவள் அதனை அணியக் கூடாது. அல்லாஹ்வின் கட்டளை என்பதற்காகவே அவள் அதனைக் கடை பிடிக்க வேண்டும். இது பெண்களைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்படவில்லை. வெறும் பாலியல் பண்டமாக அவள் நோக்கப்படாமல், அறிவும், ஆன்மாவும் உள்ள மனிதப் பிறவியாக அவள் நோக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்ற வகையிலேயே இந்தக் கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதிக்கின்றது'.

இவ்விதம் இந்த விவகாரங்கள் இஸ்லாமிய ஷரீஆவின் நிழலுக்குள்ளும், மறுபுறம் பெரும்பான்மை சமூகத்தில் இருந்து எம்மை முற்றாகத் தூரப்படுத்திக் கொள்ளாத வகையிலும், தீர்ப்பது எவ்வாறு என்று எமது அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இதற்காக சர்வதேச அறிஞர்களின் உதவியையும் பெற்றுக் கொள்ள முடியும்.

பெரும்பான்மை சமூகத்தவர்களின் மனங்களில் விஷத்தைக் கலக்கின்ற வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருகின்ற நிலையில், உடனடியாக நாம் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

3 comments:

  1. Dear Brother, you have mentioned the statements of scholars who says, cover is face is not a must. But do you know there many scholars who says it is mustahab.. please read the evidence of both scholars.

    It is not the matter that face cover is good or bad.. But you have to think sending women out without mahram?

    You approach even though looks nice for how to adjust our self to satisfy the non-muslims, I feel in your approach you do not try to satisfy Allah.

    IF you rememeber a hadees, " Kuffar never be satisfied with you, till you turn into to their religion "

    So think of it.

    ReplyDelete
  2. There's a real need to organize discussions to educate Muslims of all walks of life in every nook and corner of where ever Muslims are living.They must first be educated about their history in the Island,what they did for the country and what the country did for them and what's happening
    today and the closest possible and indisputable reasons.These have to be discussed without
    political or religious bias and purely on the basis of equal citizens.The knowledge of our history
    in the Island is paramount for each and every Muslim to building self confidence on which any
    other measures rest.

    ReplyDelete
  3. Please remove this news from your site. really this statent seems againist to Muslims Ummath. Every muslims Woment must cover the face. I hope the the writer is a begget hypocrite.
    if you have doubt on covering face pls visit http://islamqa.info/en/ref/11774

    ReplyDelete

Powered by Blogger.