தமிழ்-முஸ்லிம் அரசியல் கூட்டும், சாத்தியப்பாடுகளும்
(ஜுனைட் நளீமி)
அன்மையில் இலங்கை முஸ்லிம்களின் அடையாள புருசர்களில்; ஒருவரான சித்தி லெப்பையின் வீடு விற்பனைக்கு என்ற செய்தியும், மறுபுரம் தமிழ் மக்களின் விடுதலைத்தந்தை அமரர் செல்வா அவர்களின் நினைவு நாள் உருவச்சிலை திறப்பும்இ இதற்கிடையிலான சம்பந்தன் ஐயாவின் அறிக்கைகளும் முஸ்லிம் சமூகம் ஒரு அரசியல் பரினாம காலகட்டத்தில் கால் பதித்திருக்கின்றார்களோ என்ற சிந்தனக்கு வித்திட்டது. தமிழின போராட்டத்தை கூர்மைப்படுத்திய தந்தை செல்வாவின் அரசியல் போராட்ட ஒழுங்கினை தலமுறை தலைமுறையாக தமிழ் சமூகம் சுமந்து செல்கின்றது என்பதற்கான வெளிப்பாடே தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது.; அச்சிந்தணை தசாப்தங்கள் கடந்தும் தமிழ் சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கூ கடத்தப்பட்டுக்கொன்டிருக்கின்றது. மறுபுறம் சட்ட சபையில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து 1880களில் 'முஸ்லிம் நேசனில்' போராட்டத்தை ஆரம்பித்து வைத்த அறிஞர் சித்திலெப்பையின் அரசியல் சிந்தணையை முஸ்லிம் சமூகம் அவரது இல்லத்தோடு விற்றுவிட நினைப்பது முஸ்லிம் அரசியலின் பறினாமத்தை சிந்திக்க தூண்டுகின்றது. பேரினவாத அரசியல் கட்சிகள் தம்மை காலாகாலம் கரிவேப்பிலையாக பயன்படுத்தி ஏமாற்றாப்டுவதை உணர்ந்து தனித்துவத்தினூடாக 'தம்மை சார்ந்து நிற்கும'; அரசியல் சானக்கியத்தை ஏற்படுத்தி வழிநடாத்திய மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும முஸ்லிம் சமூகத்தின்; இன்றைய அரசியல் தலைமைகள் 'சந்தர்ப்ப வாதக்கைதிகளாக வாழ்கின்றோம்' என அறிக்கைகளை விட்டு தம்மை நியாயப்படுத்த முனைவது வேடிக்கையானதே. இந்நிலையில் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் அரசியல் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த அவதானிப்பில் இருக்கின்றார்கள் என்பதனை இவர்கள் விழங்கிக்கொள்ளாமலும் இல்லை. பேரம் பேசும சக்தியான விடுதலைப்புலிகளை இழந்த பலகீனத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அரசியலைத்தக்கவைத்துக்கொள்ள ஜீவ மரணப்போராட்டம் நடாத்துவது போன்று முஸ்லிம் அரசியல் தமது பேரம் பேசும் சக்தியினை சோரம் போனதனால் இழந்து இறுப்பதும் சிருபான்மை தொடர்பான குறிப்பாக முஸ்லிம் மீள்வாசிப்பின் அவசியத்தை வேண்டி நிற்கின்றது.
தமிழ் தரப்பு முஸ்லிம் தரப்பும் தமது இனங்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதில் தட்டு தடுமாறியுள்ள இக்காலப்பகுதியில் தமிழ்- முஸ்லிம் அரசியல் கூட்டு பற்றி சிந்திக்கின்ற தேவை இரு இனங்களின் காலத்தேவையாகும்.
ஒரு பெரும்பான்மை உள்ள நாட்டில் இரு சிறுபானமை இருக்கின்ற போது ஒன்றை ஒன்று தமது கட்டுப்பாடிற்குள் வைத்திருக்கும் ஆதிக்க வாதம் இயல்பாக தோற்றம் பெரும் என்பது உலக அரசியல் வரலாற்றில் பொதுமையானது. இதனடிப்படையில் இலங்கை உரிமைப்போராட்டத்தில் தமிழ்தரப்பு மேட்டுக்குடி வர்ண வாதத்தினால் (யாழ்ப்பான வெள்ளாலளர் வாதம்) தமது ஆதிக்க சிந்தனையை முஸ்லிம்கள் மீது திணிப்பதில் வரலாறு நெடுகிலும் கவனமாக செயற்பட்டு வந்துள்ளனர்.
முஸ்லிம்கள் தமிழ் மேட்டுக்குடியினரால் அரவனைத்து குட்டப்படுவது ஒன்றும் புதிதல்ல. இத்தகைய தமிழ்த்தலைமைகள் தமது சுயநல அரசியலுக்காக வர்ணம், சாதியம் பேசி தமது இனத்துக்குல்லும், வெளியிலும் மாற்றுத்தலைமைகள் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக செயற்பட்டனர். இதனால் முஸ்லிம்- தமிழ் உறவு அவர்களது பாசையில் சொல்வது போன்று பிட்டும் தேங்காய்ப்பூவுமாய்த்தான் இருந்து வந்துள்ளது. பிட்டுக்கு தேங்காய் பூ போடுவது தேவை ஏற்படும் போது இலகுவாக பிறித்துவிடவே என்பது தெறியாத ஒன்றல்ல. படித்த மேட்டுக்குடியினருக்கு மாத்திரம் வாக்குரிமை என்ற போது அதனால் பாதிப்படைந்த மலை நாட்டு சிங்களவர்கள் முஸ்லிகள்; என்போர் அனவருக்கும் வாக்குரிமை வேண்டும் என குரல் எழுப்பியதுடன் தமது இன பிரதிநிதிகளை சட்ட சபையில் பிரதிநிதிப்படுத்த முற்பட்ட போது அதனை எதிர்த்த ஜீ.ஜீ.பொன்னம்பலம்; அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகாரத்திற்கு வந்துவிடுவார்கள் என்ற ஆச்சேபனையை வெளிப்படையாகவே அன்று பிரிதானிய அரசிடம் தெரிவித்தமை இதன் வெளிப்பாடேயாகும்.
முஸ்லிம் தரப்பு தமிழ் தரப்பினால் மருதலைக்கப்பட்டதற்கான காரணங்களில் முதன்மையானது முஸ்லிம் தேசத்தையும் தேசியத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இல்லாமையாகும்.
தமிழ்த்தரப்பின் குறுந்தேசிய வாதம், ஆதிக்கவாதம் என்பன முற்றிவிளைந்து இனவாதமாக மாறி ஜனநாயகத்தை கருவருத்து முஸ்லிம்களின் தன்னாதிக்கம், சுயாட்சி, தேசியம் என்பனவற்றை ஏற்றுக்கொள்ளாத மன நிலையே தொடர்ந்தும் முஸ்லிம் தமிழ் உறவை திறை போட்டு வைத்துக்கொன்டுள்ளது.
இவ்விடயம் தமிழ் அரசியததரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அம்சமாகவே அமைகின்றது. ஜீ.ஜீ.பொன்னம்பலம்;; அவர்கள் சட்டசபையிலே முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்ட போது 'இஸ்லாமியத்தமிழர்கள்' என்று கற்பிதம் கற்பித்து முஸ்லிம்களுக்கான தனியான பிரதிநிதித்துவம் தேவை இல்லை என வாதிட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 1939ம் ஆண்டில் சட்டசபை விவாதத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பற்றி பேச முற்பட்ட போது கனிசமான கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குகளையும் பெற்ற தம்பி முத்து 'முஸ்லிம்களுக்கு ஆசனம் வேண்டும் என்று கேட்பதற்கு தமிழர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை' என்று குறிப்பிட்டமையும் முஸ்லிம்கள் தொடர்பான தமிழ் அரசியல் தலமைகளின் நிலைப்பாட்டினை விளக்குகின்றது. முஸ்லிம்கள் ஒரு தேசியம், சுயாட்சி உரிமை கொண்ட தேசிய இனம் என்பதினை விரும்பியோ விரும்பாமலோ தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்திய தமிழ் நாட்டின் உருவாக்கத்தின் போது பேசும் மொழியே அன்றி இனத்துவம் என்ற அம்சம் நோக்கப்படவில்லை. அதனால் சிறந்த சமஷ்டி இந்தியாவில் உருவாகுவதற்கான சாத்தியப்பாடாயிற்று. கனடா சுவீடன், கொசோவோ போன்ற பல நாடுகள் இத்தகைய சிருபான்மை ஒற்றுமைப்போராட்டத்தை வழியுருத்திவெற்றிகண்டதை வரலாற்றில் கானமுடியும்.
தமிழ் அரசியற் தலைமைகள் தம்மிடம் நேசக்கரம் நீட்டிய முஸ்லிம் சமூகத்தை கரை படிந்த கைகளினாலேயே விடைகொடுக்க முற்பட்டிருக்கின்றன என்பதனை சொல்லித்தான் ஆகவேண்டும். 1936ம் ஆண்டுவரை இலங்கை சட்டசபையில் பெரும்பானமை வடகிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளினையும் ஆதரவினையும் பெற்று சட்ட சபைக்கு தெரிவாகி தலைமைகளை தக்கவைத்துக்கொள்ள முற்பட்ட தமிழ் அரசியற்தலைமைகள் அதற்காக முஸ்லிம்களை தம்மோடு அரவணைப்பதாக காட்டிக்கொண்டனர். அடுத்த கனமே இலங்கை சட்டசபையில் 50:50 பிரேரணை முன்வைத்த பொன்னம்பலம் அவர்கள் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றி குறிப்பிடத்தவரியமை முஸ்லிம்கள் சிங்கள அரசியல் தலைமைகளை நோக்கி நகர ஏதுவாகியது என்பதனை டாக்டர் ஆஊஆ கலீல் தெளிவாக குறிப்பிடுகின்றார்.சேர் ராசிக் பரீட் இது பற்றி குரிப்பிடுகையில் '1936ம் ஆண்டை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.இந்த அரச சபைக்கு அன்று நடந்த பொதுத்தேர்தலில் சோனகர்களால் ஒரு பிரதிநிதியாவது அனுப்ப முடியவில்லை. தமிழ் சமூகம் எங்களுக்கு உதவி செய்ததா? மாறாக, குறைந்தது 40000 சோனகர் வாக்காளர்கள் இருக்கும் தொகுதிகளான மன்னார், மட்டக்களப்புத்தெற்கு, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து தமிழ்ப்பிரதிநிதிகளைத்தான் அனுப்பினார்கள். இருந்தும் நாம் தமிழ் அங்கவத்தவர்களை ஒன்றாகவே கருதி வந்தோம்' என குறிப்பிடுகின்றார்.
திம்பு பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம்களை புறந்தள்ளிய தமிழ் அரசியல் தலைமைகளுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் இந்தியாவில் தமது நிலைப்பாட்டை எடுத்து கூறியும் பெங்களுர் ஒப்பந்தம் உள்ளிட பல்வேறு ஒப்பந்தங்கள் முஸ்லிம்களது கோறிக்கைகளை ஏற்று கையெழுத்திட்டு வெளியிட்ட அடுத்தகனமே வீசியெரிப்பட்ட வரலாற்றை எவ்வாறு மறுக்க முடியும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் புறக்கனிக்கப்பட்ட போது காலாகாலம் தமிழின போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் தரப்பு புறக்கனிக்கப்பட்டதை எவ்வாறு தமிழ் தரப்பு நியாயப்படுத்த முடியும். 1960களில் சிங்கள இனவாத அரச நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டியும் அரச அலுவலக பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் முஸ்லிம்கள் தமது ஒத்துழைப்பினை வழங்கிய போதும் அதற்கடுத்து வந்த காலங்களில் தமிழ் கட்சிகள் முஸ்லிம்களின் பிரதிஎநிதித்துவத்தை உறுதிப்படுத்தவே இல்லை என்பது வரலாறு. அதனைத்தொடர்ந்து வந்த புலிகள் பிரேமதாச ஒப்பந்தம் ஜெனீவா பேச்சுவார்த்தை என அடுக்கி கொண்டு செல்லும் துரோகங்கள் எத்தனை எத்தனை. புலிகள் போர ;நிருத்தம் செய்த காலப்பகுதியில் வன்னி சென்ற முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிகளுடனான புறிந்துணர்வு ஒப்பந்தம் எந்தளவு தமிழ் தரப்பால் நிறைவேற்றப்பட்டது. ஜெனீவா பேச்சில் முஸ்லிம் தரப்பு தீர்வு தொடர்பாக பேச முற்பட்ட போது அதனை இங்கு இப்போது பேச முடியாது என தமிழ் தரப்பு தட்டிக்களித்தமையும் பத்திரிகைகளுக்கு முஸ்லிம்கள் 3ம்தரப்பாக பங்கு கொள்வதில் ஆட்சேபனை இல்லை என்று அறிக்கைகள் விட்டதும் தமிழ்த்தரப்பின் நயவஞ்ஞக அரசியலை புடம்போட்டுக்காடடுவதாக அமைந்தது.
தமிழ் முஸ்லிம் இன உறவு விரிசலுக்கான காரணங்களில் மற்றொன்றாக தமிழ்த்தரப்பு முஸ்லிம் தீர்வு தொடர்பாக தெளிவான தீர்வொன்றினை கொண்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக பூரண தெளிவான தீர்வொண்ரினை எவ்வாறு முன்வைக்க முடியாவில்லையோ அதேபோன்று தமிழ்த்தரப்பும் முஸ்லிம் தரப்பு தொடர்பாக சரியன முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை என்பதுவே எதார்த்தமாகும். எஸ். பாலச்சந்திரன் ஓர் தமிழின மூத்த போராளிகளில் ஒருவர். தனது ஆரம்பாகல போராட்ட அனுபவங்கள் குறித்து குறிப்பிடும்போது 'நான் எனது நன்பர்களுடன் யாழ்ப்பானத்தை நோக்கி பயனித்திருந்தேன். வழியில் எம்மை எதிர்கொண்ட 'மாமா' என அழைக்கப்படும் புலிகள் இயக்க உருப்பினர் எம்மிடமிருந்த ஆயுதங்களை களைந்துவிட்டு புலிகள் அமைப்பில் சேரும் படி அழைப்பு விடுத்தார். அதற்கு நாம் முஸ்லிம்கள் தொடர்பாக எல்.ரீ.ரீ.ஈ என்ன தீர்வினை வைத்திருக்கின்றது என கேட்டேன். அதற்கு அவர் தமது தலைமகளிடம் கேட்டு வந்து சொல்வதாக கூறிச்சென்றார். அப்போதய யாழ் தளபதியாக இருந்த கிட்டுவிடம் இதுவிடயம் குறித்து மாமா வினவ தூஷன வார்த்தைகளால் முஸ்லிம் சமூகம் பற்றி திட்டி தீர்த்தனை மாமா வெட்கத்துடன் கூறினார்' எனககுறிப்பிடுகின்றார். வடகிழக்கு இடைக்கால அரசு ஐளுபுயுஇ சுனாமி கட்டமைப்பான P-வுழுஆளுஇ ளுர்ஐசுயுN போன்ற இடைக்கால கட்டமைப்புக்கள் எதிலும்; முஸ்லிம்களின் தனித்தரப்பினையும் சுயாதிக்கத்தினையும் ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் ஏஏறுக்கொள்ள முடியாதென உதரித்தள்ளிய அரசியல் வஞ்சகத்தன்மையே கடந்தகால வரலாறாகும்.
எவ்வாறு இவற்றையெல்லாம் மீறி ஓர் அரசியல் தீர்வொன்றினை எட்டுகின்ற போதும் வடகிழக்கு இணைப்பு தொடர்பான அச்ச உணர்வு தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பில் சிக்கல் தன்மையினையே தோற்றுவித்துள்ளது.
முஸ்லிம் பெரும்பான்மையை கொண்ட கிழக்கு மாகாணம் இணைந்த வடகிழக்கிலே 18மூம் கொண்ட மிகச்சிருபான்மையாக மாறிவிடும் என்ற அச்ச உணர்வும் அதனை நீக்குவதற்கான மாற்று யோசணைகளை இதுவரை தமிழ் தரப்பு முன்வைக்காததும் சிறுபானமையின போராட்டம் தோழ்வி நிலைக்கு காரணங்களில் ஒன்றாகியது.
தமிழ் முஸ்லிம் அரசியல் ஒருமைப்பாட்டின் வரலாற்று சாத்தியப்பாடுகள்.
இலங்கை அரசியலில் சிருபானமைக்கான அரசியல் பாதுகாபினை ஏற்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை தமிழ்த்தரப்பு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லையென்றே கூற வேண்டியுள்ளது. இவ்விரு சிருபான்மை சமூகத்துடனும் சேர்ந்து மூன்றாவது சிறுபான்மையாக மலைநாட்டு சிங்கள சமூகமும் சமஷ்ட்டி பற்றிய ஓர் இனக்கப்பாட்டுக்கு வந்தவேளை தமிழ்க்குறுந்தேசியவாதம் பேசிய அரசியல் தலைமைகளால் இச்சந்தர்ப்பங்கள் சிதரிடிக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் தமிழ் சமூகத்துடன் இணைந்து போவதற்கான சமிக்;கைகளையே என்றும் வழங்கி வந்துள்ளது.
1880ல் சித்திலெப்பை 'முஸ்லிம் நேசன்' பத்திரிகையில் 'சட்ட சபையில் வெள்ளைக்காரர்கள்மாத்திரமே உறுப்பினர்களாக உள்ளனர். பெயரளவில் ஒரே ஒரு சிங்களவர் உள்ளார். சிறுபான்மை இனங்களான தமிழ் முஸ்லிம் இனங்களை பிரதிநிதிப்படுத்தும் எவரும் இல்லை' என்ற கருத்தை தெரிவித்ததினூடாக சிறுபான்மை தமிழ் சமூகத்துடன் சேர்த்தே முஸ்லிம்களது அரசியல் விடிவும் உள்ளது என கருதி இருப்பதனை கானமுடிகின்றது. 'குறைந்தது 40000 சோனகர் வாக்காளர்கள் இருக்கும் தொகுதிகளான மன்னார், மட்டக்களப்புத்தெற்கு, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து தமிழ்ப்பிரதிநிதிகளைத்தான் அனுப்பினார்கள். இருந்தும் நாம் தமிழ் அங்கவத்தவர்களை ஒன்றாகவே கருதி வந்தோம்' என்ற சேர் ராசிக் பரீட் அவர்களின் கூற்று இவ்வுன்மையை தெளிவுபடுத்துகின்றது.
தமிழரசுக்கட்ட்சி தோற்றம் பெற்ற போது தந்தை செல்வாவுடன் இணைந்து முஸ்லிம் அரசியல் தலைமைகள் சிருபான்மைக்கான போராட்டம் நடாத்தியதை எவரும் மறுக்க முடியாது. மறைந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கூட அந்த பாசரையில் வளர்ந்து தமிழினத்தின் மீது நம்பிக்கை வைத்து போராடியவர்களே. தனிச்சிங்கள சட்டம் வந்த பொழுது பெரும்பான்மை முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழுக்கு சம அந்தஸ்த்து கொடுக்க வேண்டும் என்று தமிழ்த்தரப்புடன் இணைந்து குரல் கொடுத்தது முஸ்லிம்களது நேர்மையான அரசியல் போராட்டத்தினை எடுத்துக்காட்டுகின்றது.
புலிகளினால் முஸ்லிம் சமூகம் விரட்டியடிக்கப்பட்டு ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்ட போதும் முஸ்லிம்கள் தமிழர் போராட்டத்தை காட்டிக்கொடுக்காது இணக்காப்பாடான அரசியலுக்கு தமது நல்லெண்ணத்தை என்றும் காட்டியுள்ளனர் என்பதனை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் வெள்ளவத்தை முஸ்லிம் பெண்கள் ஆய்வு மையத்தினின் ஒரு நிகழ்வின் போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு வழங்கிய பதிலிருந்து புறிந்து கொள்ளமுடியும். 'அரசும்- தமிழ்த்தரப்பும் பேசி ஒரு முடிவு எட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்' என்று கேட்கப்பட்ட போது ' நான் ஒரு போதும் தனி அளகு கோரி குழப்ப மாட்டேன்' என கூறிப்பிட்டார். தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் இணைந்த அரசியல் பயனத்தில் 1981ம் ஆண்டு இடம்பெற்ற மாவட்ட நிர்வாக சபைத்தேர்தலின் போது முஸ்லிம்களைப்பெரும்பான்மையக கொண்ட அம்பாறை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க கோரிய போது தமிழர் விடுதலைக்கூட்டணி மறுக்கும் வரை தமிழ்தரப்பு முஸ்லிம்களுடன் இதய சித்தியுடன் நடக்கும் என்றே மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் நம்பி இருந்தார்கள். இவாறு தமிழ் ஈழப்போராட்டம்; துவக்கப்பட்ட காலம் முதல் முஸ்லிம்கள் தமது ஒத்துழைப்புக்களை தமிழ்தரப்பிட்கு பல்வேரு வழிகளிலும் நழ்கி இருக்கின்றனர். எனவே முஸ்லிம்களை அரவனைத்ததான அரசியல் போராட்டத்தை வடிவமைக்க தமிழ் தரப்பு தவரிவிட்டது என்பது எதார்த்தமாகும்.
அண்மைக்காலமாக சிறுபான்மைக்கான அரசியல் ஒழுங்கில் தமிழ் முஸ்லிம் அரசியல் கூட்டு பற்றி பேசப்படுகின்றது. இரண்டு சமூகங்களும்; அண்மைக்காலமாக அநுபவித்து வருகின்ற இருப்புக்கான அச்சுருத்தல்களும் இதற்கு காரணங்களாகியுள்ளன. பௌத்த தேசியவாதம் இனவாதமாக உருப்பெற்றதன் விளைவே இத்தகைய சிந்தணைகளுக்கு முஸ்லிம் சமூகமும் வர காரணமாக இருக்குமென கருதுகின்றேன்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு முஸ்லிம் தரப்பினை நோக்கி தமது வழமையான அழைப்பினை அன்மைக்காலமாக விடுத்துவருகின்றது. அதற்கு மேலாக முஸ்லிம்கள் இலங்கை இனப்பிரச்சிணையில் பாதிப்படைந்த சமூகம் என்பதுடன் முதன் முறையாக முஸ்லிம் தேசியத்தையும் தனித்துவத்தினையும் தமிழ் தரப்பு ஏற்றுக்கொன்டதாக சம்பந்தன் ஐயாவின் கருத்துக்கள் பாராளுமன்றில் இடம்பெற்றுள்ளது வரவேட்கத்தக்கது. புலிகளின் பினாமிகளாக அரசியல் நடாத்திய போது தற்போதய முஸ்லிம் காங்கிரசின் தலைவர் குறிப்பிடுவது போன்று உண்மையிலேயே சந்தர்ப்பவாத கைதிகளாகவேதான் இருந்தார்களோ எனவும் சிந்திக்க தோன்றுகின்றது. என்ற போதும் தமிழ் தரப்பின் இவ்வழைப்பு கள நிலையில் இடம்பெரும் சம்பவங்களை நோக்கும் போது இதய சுத்தியுடன் விடுக்கப்பட்டதா என கேள்விகளை எழுப்புகின்றது. வடக்கில் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டது துன்பியல் நிகழ்வு என கூறிக்கொண்டு முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தை தடுத்து நிருத்த நீதிமன்றம் வரை சென்று நடவடிக்கை எடுக்க செயற்படுவதும், தமக்கு பக்கபலமாக செயற்படும் தமிழ் புளம்பெயர் சமூகத்துடன் முஸ்லிம்களது அங்கீகாரத்தை ஏற்படுத்துவதற்கான எவ்வித முணைப்பு காட்டாமல் செயற்படுவதும், யுத்தத்தினால் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட முஸ்லிகளையும் அபிவிருத்தி திட்டங்களில் பயனாளிகளாக சேர்த்துக்கொளளாமல் அறிக்கை விடுவதும் இன்னும் கேள்விகளாகவே உள்ளது. உதாரணமாக இந்திய வீட்டுத்திட்ட நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களுக்கு அவ்வுதவி கிடைக்க கூடாதென்று கண்டன அறிக்கைகள் விடுவது எத்தகைய இணக்கப்பாட்டு அரசியல் என துளங்கவில்லை. பிரதேச எல்லை மீள்நிர்னயம் தொடர்பில் பெறிந்துறைகள் மேற்கொள்ளப்படு முஸ்லிம்களது பாரம்பரிய பூமிகளை பல விட்டுக்கொடுப்புக்கும் மத்தியில் சில பகுதிகளை மீள பெற்றுக்கொள்வதற்கெதிராக வரலாற்றை திரிவுபடுத்தி இரண்டு இனங்களையும் மீண்டும் ஒரு கலவரங்களுக்கு இட்டுச்செல்ல முனைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உருப்பினர்களையும் என்ன சொல்வது. இவர்கள் அன்று இருந்த சந்தர்ப்பவாத தமிழ் அரசியல் தலைமைகள் போன்று செயற்படுகின்றார்களோ என சில போது என்னத்தோன்றுகின்றது. எனது நல்ல நன்பராக செயற்படும் என் மரியாதைக்குரிய ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உருப்பினர் மட்டக்களப்பு காணி எல்லை மீள் நிர்ணயம் பற்றி குறிப்பிடும்போது 'எனக்கும் தெரியும் அவை முஸ்லிமாக்கள் இருந்த இடங்கள்தான். என்றாலும் இதனை மீண்டும் முஸ்லிமாக்கள் கிட்ட குடுக்க வெளிக்கிட்டா அதனை சிலர் அரசியலாக்கி எங்கட சீட்டும் சிக்கலாகும்' என சந்தர்ப்ப வாத அரசியல் பேசியதும் இன்னும் தமிழ் தரப்பு பற்றிய சந்தேகங்களையே ஏற்படுத்துகின்றது.
இவற்றையெல்லாம் பேசுவதன் மூலம் தமிழ் அரசியல் தலைமைகளை முழுக்க குற்றம் சாட்டுவதோ முஸ்லிம் தரப்பினை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளோ அல்ல. முஸ்லிம் அரசியலும் இலக்கினை கொண்டிராததும் நிர்வகப்படுத்தப்பட்ட வழிநடாத்தல் தூர நோக்கு இல்லாததினாலும் அவ்வப்போது பிழைகளையும் சிறுபான்மை கூட்டு அரசியலில் விட்டுச்சென்றுதான் உள்ளது. அதே போன்று இடது சாரி சிந்தனை கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளும் போராட்ட இயக்கங்களும் முஸ்லிம் தரப்புக்கும் இணைந்ததான தீர்வினை ஏற்றுக்கொன்டிருந்த போதும் அவை தமிழ் மேட்டுக்குடி அரசியல் சிந்தணைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றுப்போன வரலாறுகளும்; உண்டு.
தந்தை செல்வா முஸ்லிம்கள் தொடர்பில் நேர்மையான கருத்தினைக்கொண்டிருந்த போதும் அவரது நியாயமான சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்க முடியாத வகையில் தமிழ் குருந்தேசியவாதம் தமிழ் சமூகத்தில் தமது அதிகாரத்தினை தடம்பதிதுக்கொண்டதொன்றும் மறைக்ககூடிய விடயமில்லை.
நாட்டிற்கு வெளியில் எல்லை கடந்த தமிழீல அரசின் உருவாக்கமோ, அல்லது தமிழ் புளம்பெயர் அமைப்புக்களின் அறிக்கைகளோ இன்றும் முஸ்லிம்களின் தனித்துவத்தையும் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்ளாத நிலையிலஇ; அதன் நிழலராசக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் அங்கீகாரத்திற்கான எவ்வித உந்துதலையும் அவற்றிட்கு வழங்கவில்லை என்பதும் அவதானத்திற்குறியதே.
இத்தகைய சூழ்நிலையில் தமிழ் முஸ்லிம் கூட்டு அரசியல் போராட்டம் என்பது கவனமாக மீள்வாசிப்பு செய்யப்படவேண்டிய காலத்தேவையில் உள்ளது என்பது மறுக்க முடியாதொன்றாகும.; என்ற போதும இருதரப்பு சந்தேகங்கள் நீக்கப்படவேண்டியதும் , தமிழ் தரப்பின் இதய சுத்தியான செயற்பாடும் தமிழ் முஸ்லிம் உறவின் மீள்வாசிப்புக்கான இடத்தை விட்டுக்கொடுக்கும் என கருதுகின்றேன்.
.jpg)
Post a Comment