யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அமைச்சர்கள் றிசாத், டக்ளஸ் நீதிபெற்றுகொடுத்தனர்
யாழ் மாவட்டத்தில் 245 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குமான 328 சமுர்த்தி கள உத்தியோகத்தர்கள் நியமனம் நாளை 01-06-2013 அன்று யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற இருந்த சமயம், யாழ் மாவட்டத்தில் இருந்து நேர்முகத்தேர்வுக்கு தோற்றிய 5 முஸ்லிம் சமுர்த்தி கள உத்தியோகத்தர்களது பெயர் விபரங்களும் நியமனம் பெறுகின்றவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை.
இது குறித்து நேற்று 30-05-2013 அன்று யாழ் மாநகர சபை அமர்விலும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் சட்டத்தரணி றமீஸ், அஷ்கர் ரூமி, ஷரபுல் அனாம் ஆகியோரது தலையீட்டினை அடுத்து, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மற்றும் றிஷாத் பதியுத்தீன் ஆகியோர் குறித்த விடயத்தை நேரடியாக கையாண்டு, மேற்படி 5 உத்தியோகத்தர்களுக்குமான நியமனங்களைப் பெற்றுத்தருதல் என்று தீர்மானித்து அறிவித்துள்ளனர்.
மேற்படி இடையூறு உள்ளூர் அரசியலில் தமிழ்-முஸ்லிம் நல்லுறவை விரும்பாத ஒரு சிலரின் தவறான அணுகுமுறைகளினால் ஏற்பட்டிருக்கும் என யாழ் மாவட்டத்தின் முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் குறிப்பிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் முஸ்லிம்களின் விடயங்களில் மிகுந்த அக்கறையுடனும், நேர்மையாகவும் நடந்துகொள்பவர் என்பதற்கு மேற்படி தீர்மானம் ஒரு எடுத்துக்காட்டு எனவும் குறித்த அரசியல் பிரமுகர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மஹரூப் சித்தி பர்வின்
நஸீரா அப்துல் ஸலாம்
பாதிமா ரிஸ்னா
றிஸானா ஷரப்
முஹம்மத் றிஷாத்
ஆகியோருக்கே நியமனங்கள் வழங்கப்படவிருக்கின்றன

Post a Comment