தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை - கட்டுப்படுத்துவது யார்..?
(ஒலுவிலான்)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பலவிதமான பகிடிவதைகள் நடைமுறையில் உள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையம் கடந்த 18.03.2013 அன்று கட்டுரையொன்று வெளியிட்டிருந்தது. அதிலும் குறிப்பாக மாணவியர்களே அதிகம் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தது. அதனை உண்மைப்படுத்தும் முகமாக 01.05.2013 அன்று அக்கரைப்பற்று முஸ்லிம் பாடசாலையொன்றில் ஒரு பகடிவதை முகாம் (சம்பவம்) முற்றாக 2ம் வருட முஸ்லிம் மாணவியர்களால் நிருவகிக்கப்பட்டு நடைபெற்றிருக்கிறது. ஒருசில ஆண் மாணவர்கள் பார்வையாளர்களாக பங்குபற்றியுள்ளனர்.
இந்த முகாமை நடாத்திய மாணவிகளின் முழு விபரமும் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உள்ளது. எனினும் மாணவிகளின் நலன்கருதி அதனை எமது இணையம் இங்கு பகிரங்கப்படுத்தவில்லை
Management Faculty( all are second year student):
4 ஆண் மாணவர்கள் 1 பெண் மாணவி
Arts Faculty( all are second year student):
5 பெண் மாணவிகள்
Management and Information Technology( all are second year student):
2 பெண் மாணவிகள் (ஒருவர் பள்ளிக்குடியிருப்பை சேர்ந்தவர்)
Faculty of Islamic Studies and Arabic Language( all are second year student):
4 பெண் மாணவிகள்
இவர்கள் அனைவரும் அக்கரைப்பற்றை சேர்ந்தவர்கள்.
இங்கு நடைபெற்ற பகிடிவதைகள் வருமாறு,
1. மாணவிகளுக்கு கோதுமை மாவை கரைத்து முகத்தில் பூசியுள்ளனர்.
2. வேப்பிலையை அரைத்து முகத்தில் பூசியுள்ளனர்.
3. வேப்பிலையை நீரில் கரைத்து பருக கொடுத்துள்ளனர்.
4. மாணவிகளை மேடையில் பாட சொல்லி இன்னொருவர் மைக் பிடிப்பது போலும் இன்னொருவர் வீடியோ எடுப்பது போலும் நடிக்க செய்துள்ளனர்.
5. பலூனை ஊதி வெடிக்க வைத்து மாணவியர்களை ஓடுமாறு பணித்துள்ளனர்.
6. மாணவியர்களை பயிற்சி முகாமில் செய்தது போல் அணிநடை செய்ய பணித்துள்ளனர்.
7. சங்கீத கதிரை போல் ஓட வைத்துள்ளனர்.
8. மாணவிகளை பாடி ஆட பணித்துள்ளனர். மறுத்த மாணவிக்கு அடிக்க எத்தணித்து கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இந்த பகிடிவதை முகாம் நடைபெறபோவதை முன்கூட்டியே பல்கலைக்கழக மாணவ ஆலோசருக்கு ஒரு தந்தை தெரியப்படுத்தியுள்ளார். அவர் இதனை இன்னொரு விரிவுரையாளரை தொடர்பு கொண்டு அறியப்படுத்தி குறிப்பிட்ட பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் அந்த மாணவர்களை கலைந்து செல்லுமாறு பணித்துள்ளார். ஆனால் பல்கலைக்கழக நிருவாகம் இந்த விடயத்தில் எதுவித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காமல் அமைதியாகவே இருந்து வருகிறது.
அது மட்டுமன்றி முன்னர் கட்டுரையில் குறிப்பிட்டது போல
1. கறுத்த ஹபாயாவுடன் old fashion லேஸ் வைத்த ஸ்காப் கறுப்போ வெள்ளையோ மட்டுமே அணிய வேண்டும். அத்துடன் ஸ்காபிற்கு 5 pin குத்த வேண்டும். அதை ஒவ்வொரு நாளும் எண்ணுவார்களாம்.
2. old fashion செருப்பு அணிய வேண்டும். எக்காரணம் கொண்டும் குதி உயர்ந்த் செருப்பு அணியவே கூடாது.
3. எக்காரணம் கொண்டும் குடை பிடிக்க கூடாது. எடுத்து வரவும் கூடாது.
4. மட்டையிலான 5 ரூபா பெறுமதியான பைல் உடன் 2 வெள்ளை பேப்பர் மட்டுமே எடுத்து வர வேண்டும்.
5. ஒரு பேனை மாத்திரமே எடுத்து வர முடியும். அதற்கு முக்கியமாக மூடி இருக்கவே கூடாது.
6. மாணவர்கள் வீட்டிலிருந்து வருவதாயினும் பகலுணவு எடுத்து வர கூடாது. Canteenல் மட்டுமே சாப்பிட வேண்டும்.
7. மாணவிகள் கைப்பை எடுத்து வர முடியாது. காசை கையிலேயே எடுத்து வர வேண்டும்.
8. மாணவிகள் கைலேஞ்சு பாவிக்க முடியாது. போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறையிலேயே உள்ளன.
முக்கியமாக வீட்டிலிருந்து பஸ்ஸில் வரும் மாணவிகளுக்கு பஸ்ஸினுள்ளேயே பகடிவதை கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது. இது குறித்து பெற்றோர் ஒருவர் பிரதி பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடும் செய்துள்ளார். இந்த விடயத்தில் சமூகப் பெரியவர்கள், பெற்றோர்கள், பல்கலைக்கழகம் என்பன உடனடியாக தலையிட்டு உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்பதே எல்லோருடைய விருப்பம்.
(இந்த பகிடிவதை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரும், அவருடைய பெற்றோர் ஒருவர் மூலமாகவும் இந்த விடயங்கள் எமது அறியப்படுத்தப்பட்டன)
குறிப்பு - இதுதொடர்பாக தென்கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் ஜப்னா முஸ்லிம் இணையம் தொடர்புகொண்டு கருத்துக்கேட்க முயன்றபோதும் எமது முயற்சி பயன்தரவில்லை. இதுதொடர்பில் சம்பந்தப்ட்டவர்கள் விளக்கம் தருவார்களாயின் அதனை பிரசுரிக்க எமது இணையம் தயாராகவுள்ளது.

இந்த பகடி வதைமுகாமை நடாத்தியவர்கள் பெண்களா அல்லது பேய்களா? முதலில் நாம் ஒரு முஸ்லீம் சமூகத்தைப் பிரதினிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக மாணவிகள். அவர்களும் கசஸ்டப்பட்டு படித்தது மறந்துவிட்டதா? எந்தப்பாடசாலை என்று விவரம் சொல்லி யிருக்கலாம். அதற்கு அதிபர் எவ்வாறு அனுமதி வழங்கினார் என பார்க்கவேன்டும். அணக்ளின் ஆண்களின் ஆட்டம் முடிந்து வந்திட்டாங்கையா, வந்துட்டாங்க. இவர்களின் தாய் தந்தைக்கு என்ன சொல்லிவிட்டு இந்த இடத்துக்கு இவர்கள் சென்றுள்ளார்கள். அக்கரைபற்றில் அடிபாட்டி ஆண்கள்தான் உன்டென கேள்விப்பட்டோம், பெண்களுமா? வரும் தேர்தலில் கட்சிக்காரர்களுக்கு கொன்டாட்டம்தான், அடிபாட்டி ஆண்களுக்கு பென்சன். இங்கே புது இறக்குமதி. வாழ்க கலாச்சாரம்
ReplyDeleteஇப்படியே பேசிப் பேசி எப்பலனும் கிட்டுவதில்லை. நாலுபேர் உள்ளே நுழைந்து சம்பந்தப்பட்ட பெண்களையும், ஆண்களையும் இழுத்துப்போட்டு வெலு வெலென்று வெலுத்தால் தானாகவே பகிடிவதை பற்றிய பேச்சே நின்றுவிடும். இது தான் ஒரே மருந்து.
ReplyDeletethis is a problem of our muslim girls, if you give freedom, they will reach to the top, and they misbehave worst than other religius women, for that there parents and university management want to deal with them. if they don't obey for it, please take them out of university, it is going to be a good lesson for the rest of the students.
ReplyDeleteeverybody thing afghan style, treatment for this idiots, they think they are on top of the qualifications, this kind of issue comes from low rank university.
ReplyDeleteசமூகத்தின் கண்கள்??????இவர்களும் இவர்களது கல்வியும் நமது முஸ்லிம் சமூகத்துக்கு எந்த வகையில் பிரயோசனமாக இருக்கும் ????
ReplyDeleteதென்கிழக்கு பல்கலை கழகம் இல்லை, இவர்களை , தென்கிழக்கு பல்கலை கழகம் அனுப்பிய பெற்றோர் வெட்கி தலை குனிய வேண்டும் ......
comment panna yaarum university pohlayaaa.... ponavarhal yaarum reply pannunga first
ReplyDeleteநான் இந்த பல்கலைக்கழகத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டவன் அல்ல. இருப்பினும் உண்மையில்இவ்வாறான ஒரு விடயம் நடந்து இருக்குமானால் அது மிகவும் கீழ்த்தரமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும். இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் நான் Director Student Support Service & welfare அதிகாரியை தொடர்பு கொண்ட பொது அவர் கூறினார், “இவ்வாறான ஒரு சிறு ஒன்றுகூடல் ஒன்று ஏற்பாடு செய்யபட்டு இருப்பதனை என்னால் அறியக் கிடைத்து 10-15 நிமிடத்திக்குள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை கலைத்து விட்டதாகவும் கூறினார்”. இங்கு மிகவும் கூர்ந்து கவனிக்கபட வேண்டிய விடயம் என்ன என்றால் அங்கு வந்து இருந்த 1ம் வருட மாணவர்கள் இது பகடிவதை அல்ல சிறு கூட்டமே என்று பல்டி அடிக்கும் போது எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்? மட்டுமல்லாது இந்த 1ம் வருட மாணவர்கள் எவரும் ஏன் பல்கலை நிர்வாகத்துக்கு இதனை அறிவிக்க முற்படவில்லை? உண்மையில் இவ்வாறு அறிவிக்கப்படும் இடத்து அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க காத்திருப்பதாகவும் அறிய முடிகிறது. அவ்வாறு அறிவிக்க வேண்டின் உடனடியாக பல்கலை பல்கலைக்கழக ஒழுங்கு நிலை நாட்டுபவர் (Proctor) Mr. Jabbar (0714911138) அல்லது Director Student Support Service & welfare அதிகாரி (0773081122) உடன் தொடர்பு கொள்ளவும்.
ReplyDeleteஇது எமது சமூகம் எமது பெண்{பேய்}பில்லைகள் கண்ணீரைத்தவிர வர்த்தைகள் வரவில்லை.
ReplyDeleteஎனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை மன்னிக்கவும்...
ReplyDeleteமேலே கூறப்பட்ட அனைத்து பின்னூட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே காரணம் சரியான முறையிலே மரியாதையுடன் சொல்லிப்பார்த்தோம் கேட்கவில்லை ஆகவே Riyad Ksa சொல்வதுபோல நடக்கவேண்டுமென்பதுதான் ஆசையாக இருக்கு என்று நினைக்கின்றேன். காரணம் மேற்படிப்புக்காக சமுதாயத்தை துக்கிவிடவேண்டுமென்பதற்காகவே தாய் தந்தையர் இவர்களை பலகளைக்கழகங்களுக்கு அனுப்புகின்றார்கள் ஆனால் இவர்களோ காடையர்கள் நாங்கள் என்பதை நிரூபித்துக்காட்டுகின்றார்கள் இல்லையென்று மறுத்தால் பகிடி வதையை ஏன் செய்கின்றீர்கள் என்ற சரியான காரணத்தை விபரியுங்கள் அதில் நூற்றிற்கு ஒருவீதம் நியாயம் இருக்கின்றதா பார்ப்போம்.
இதுதானா நீங்கள் பல்களைக்கழகம் சென்று உங்கள் ஊருக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் லட்சணமா? பெண்களா பேய்களா? என்று கேட்கும் அளவிற்கு நிங்கள் உங்கள் தாய் தந்தையர்க்கு பெயரும் பெருமையும் வாங்கித்தந்திருக்கின்றீர்கள். அக்கரைப்பற்றில் ஆண்கள்தான் அடிபாட்டியிலுள்ளார்களென்று கேள்விப்பட்டோம் இப்போது பெண்களும் இறக்கப்பட்டுள்ளார்கள் எனும் கேள்விக்கு உமது பதிலென்ன உங்களுக்கு வெட்கம் வருகின்றதா? சூடு சொறணை உள்ள குடும்பத்தில்தானா பிறந்தீர்கள்? உமது தாய் தந்தையர் உமக்கு உணவுக்குப்பதிலாக ஒன்றும் மலத்தையூட்டி வளர்க்கவில்லையே? அப்படியாயின் ஏனிந்த மிருகத்தனமான செயல்?
நடந்து முடிந்தவைகள் நடந்து முடிந்தவைகளாகவே இருக்கட்டும் நாளைவரும் சமுதாயத்தினருக்கு இதுபோன்ற தவறுகளை நடக்காமல் பாதுகாக்கவேண்டியது அவர்களுக்குரிய அறிவுரைகள் செய்து இக்காரியத்திலிருந்து அவர்களை முற்று முளுதாக தடுப்பதனால்தான் உங்கள்மீது படிந்துள்ள இந்த கறையும் அழுக்கும் உங்களிலிருந்து அகலும் ஆகவே அடுத்த வருடம் வரும் புதியமாணவர்களுக்கு இதுபோன்ற செயல்கள் நடக்காமல் காப்பதற்கு நீங்கள் முளு முயற்சி செய்யவேண்டும் தவறுகளுக்காக நீங்கள் வருந்திக்கொள்ளவேண்டும். *(!!!)
இதுதான் கடைசியாக தென்கிழக்குப்பல்களைக்கழகத்தில் நடக்கும் பகிடி வதையாக இருக்கவேண்டும். இனிமேல் பகிடிவதை நடக்குமானால் அது மிகவும் மோசமான பின்விழைவுகளைச்சந்திக்குமளவிற்கு வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியுள்ளது....
இதுக்குள்ள இவளுகள் இஸ்லாமும் அரபும் படிக்காங்களாம்.....நல்லா சமூகம் உருப்படும்......எங்க அந்த மஜ்லிஸ் தலைவர்... இதுவல்லாம் கண்ணுக்கு தெரியாது.பொம்புள புள்ளகள் தானே... கண்டிச்சா பிறகு அவருக்கு கூட கதக்காம போயிடுங்கள்...இனி ஊராக்கள் பஸ்ஸுக்கு பின்னாடி வருவம்.. எதுமென்றால் உடனடியாக பொலீஸுக்கு சொல்லுவொம்....
ReplyDeleteநன்றி அல்பா பீடா இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றது என்று இவ்வாறான விடயம் நடைபெற்றது என்பதை university சார்பாக உறுதிப்படுத்தியதற்கு...ஆனால் இந்த விடயம் காலை 7.30 மணிக்கே மாணவ ஆலோசகருக்கு அவரது mobile phonukku call பண்ணி தெரிவிக்கப்பட்டும் university staff 1.30 மணிக்கே வந்திருந்தார்.அத்துடன் 1st year மாணவர்கள் mobile phone கொண்டு வர seniorகளால் தடை விதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் கட்டுரையை வாசித்தால் புரியும்.1st year மாணவிகளின் உடை அமைப்பு, நடவடிக்கைகளை கண்டால் இது புரியும். இவ்வாறு இருக்க university management ன் நடவடிக்கைகள் பகிடிவதையை நிறுத்த போதுமானதாக இல்லை. university management privacy maintain பண்ணின் மாணவர்கள் நிச்சயமாக தகவல் தருவர்.
ReplyDeleteragging enpathu niruthta mudiyatha oru cancer bachelor s ellarukkum athu theriyum.... ithula oru comedy ennana administrationla ulla ellarukkum mey athu theriyum athavittu tu avanga kiitaye pooittu niruththa sonna eppidi
ReplyDeletepost my comment as it is. its important
ReplyDeleteநன்றி Oluvil Ooraan. உண்மையில் இது ஒரு சமூகம் சார்ந்த கூட்டு பொறுப்பாகும். மட்டுமல்லாது, இவர்கள் இவ்வாறு உடை அணிந்து/ phone கொண்டு செல்லாமல் வீட்டில் இருந்து செல்லும் போது ஏன் பெற்றோர் இது பற்றி ஏலவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க முடியாது? ஏன் இங்கு comment பண்ணும் பலரும் இது போன்ற தகவல்களை பல்கலை நிருவாக்கத்திற்கு (ஏலவே தந்த இலக்கங்களுக்கு) அறிவிக்க முனைய முடியாது? ஒரு சமூகம் என்ற ரீதியில் நாம் முனைந்தால் இதனை ஒழிக்க முடியும். இங்கு இன்னும் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டும். அதாவது, பல்கலை நிருவாகம் பல்கலைக்கழகத்தின் நிருவாக எல்லைக்குள் மாணவர்களின் செயற்பாட்டை கவனிக்கும், அது Saturday, Sunday & university holidays இல் ஊர் ஊராக அல்லது பஸ்ஸில் சென்று பார்க்கும் பொறுப்பு கொண்டதல்ல என்பதனையும் நாம் கருத்தில் கொள்ளல் அவசியம். இதற்கு ஊர் மக்கள் (இவ்வாறான ஒரு நிகழ்வு நடப்பதை ஏலவே அறிந்தோர்) சேர்ந்து அதனை நிறுத்த ஏன் முயன்று இருக்க முடியாது? ஏன் நாம் எல்லாவற்றிற்கும் பல்கலை நிருவாகதை சாட வேண்டும்? ஊர் மக்களாகிய நாம் சேர்ந்து ஏன் ஒழிக்க முன்வரக் கூடாது? நிருவாகம் privacy யை பேணும் என நான் நம்புகிறேன்.
ReplyDeleteசம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏலவே இது குறித்து பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இது குறித்து எடுத்த நடவடிக்கைகள் மிக குறைவு. இது குறித்து ஏலவே jaffna muslim ல் கட்டுரை வெளியாகியது.தேவை ஏற்படின் நானே இது குறித்து முறைப்பாடு செய்ய உள்ளேன்.இது குறித்து ஒரு தந்தை police உயர் பீடத்திடம் முறைப்பாடும் செய்துள்ளார்.முறைப்பாடு செய்யும் மாணவியின் பெயரை நிருவாகம் வெளியிடின் அம்மாணவிக்கு senior மாணவர்களால் உயிராபத்து கூட ஏற்படலாம்.அதற்காக வேண்டியே நிருவாகத்திடம் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பலன் கிடைக்கவில்லை. அதாரம் வெளிப்படையாக இருந்தும் நிருவாகம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது என்பதே குறிப்பிட்ட தந்தையின் ஆதங்கம்...உங்கள் பிள்ளை இந்த இடத்தில் இருந்திருந்தால்........சிந்தித்து பாருங்கள்....
ReplyDeleteஇதில் பகடி என்ணென்டா, பல்கலைக் கழகத்தில் பகிடி வதயை கட்டுப்படுத்துவது யார்? அப்பிடின்னு இருமாப்பா டைல்ட்டுல போட்டு போட்டு, அக்கரபத்துல நடந்த கேசெ போட்டு கெடெக்கு. அல்ப்ஹா பீட்டா நல்லா கருத்தா பேசுராபொல; பஸ்ஸிலயும், இசுகுலயும், ஊட்டுகயும் நடகுற கேசுக்கு பல்கலைக் கழகம் எப்புடியம்பி பொறுப்பு கூர்ற. இந்த கொமருஹல அவஹட உம்மா, வாப்பாதான் பகிடி வத நடக்குர பாடசாலை முஹாமுக்கு அனுப்பாம இருக்கனும். பஸ்ஸில வேனுமென்டா பொலிஸ் ஒன்ட பாதுகாப்புக்கு அனுப்ப பல்கலைக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என்ன?
ReplyDeletedear brother and sister who is in SEUSL i like to inform u guys that, when ur university going to intake 1st year students plz don't ragging them in ur living place because their parents and other can easily know this issues, and purpose of ragging is not showing that students weakness among others who isn't ur university undergraduates. conversely u guys treat to change them to university behavior and rules that all. only this will happen ur university premises if u can't do it in ur university that is showing ur weakness and fair of ur unity(Muslims')
ReplyDeleteANOTHER impotent, contemporarly other religious' students also mostly entering SEUSL so we have a commitment to show our truth massage and behavior as a Muslim, and also brotherhood.
ragging means is not scold or hit others conversely that is a treatment to guide others so think and do